இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -49 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 04-06-2024

Total Views: 15749

அவ்வளவு நெருக்கத்தில் நிற்கும் போது அவன் கையையும் சும்மா வைத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. 

மெதுவாக அவளது இடைக்கு சென்று வெற்று வெளீர் இடையை இறுக்கிப் பிடித்துவிட்டான். 

அவன் பிடியில் மங்கையவள் மடிந்துவிட்டாள். அதிர்ச்சியில் கண்கள் இரண்டு நிலைக் குத்த.. அவள் அறியாமல் அவன் வாயில் இருந்த கையை எடுத்து விட்டவன். 

“இதுதான் லாஸ்ட் வார்னிங் இதுக்குமேல இப்படி டிரஸ் பண்ண.. அப்புறம் உனக்காகக் கூடப் பார்க்க மாட்டேன்.” என அங்கிருந்து சென்றுவிட்டான். 

அவன் விட்டுச் சென்றது போலவே அதே இடத்தில் பத்து நிமிடத்திற்கு மேல் நின்றாள். 

நந்தனின் தொடுகைக்கு உள்ளம் பதறுகிறது, உடலோ தீயைக் கண்டு பனியாக உருகி குழைகிறது. என்ன செய்வது எப்படி அவன் தொடுகைக்கு உருகுவதை தடுப்பது என மூளை சிந்தித்துக் கொண்டியிருக்க ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் நின்றாள். 

“ஏய் பூனை உன்னைய எங்கலாம் தேடறது? இங்க தனியா நின்னு என்னத்தை பராக்குப் பார்த்துட்டு இருக்க..” 

“பூன உங்கிட்ட தான் கேக்கறேன்” என அவளது தோளைப் பிடித்து ஆட்டவும், தான் சுயநினைவுக்கு வந்தவள், 

“யுகி” என்றாள். 

“சரியா போச்சி அப்போ இவ்வளவு நேரம் நான் பேசுன எதுமே காதுல விழுந்துருக்காதுல.” 

“ஹா.. விழலையே..என்ன சொன்ன?” 

“சொரைக்காய்க்கு உப்பு இல்ல” 

“சரி போட்டுடலாம்” என்றவள் சிறிது தூரம் நடந்துவிட்டு நியாபகம் வந்தவள் போல். “ஏய் யுகி என்கிட்ட பேசிட்ட கோவம் போய்டுச்சா என்ன?” என்று சந்தோசமாக திரும்பி கேட்டாள். 

அவள் கேட்ட தோரணையைப் பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டான். 

“என்ன நந்துக் கூட அடிக்கடி ட்ரீம்க்கு போய்டறியா? இதெல்லாம் சரியில்ல பூனை, அவன் உனக்கு சரிப்பட்டு வரமாட்டான் அவன் சொல்றான்னு மனசுல ஆசையை வளர்த்துக்காத சொல்லிட்டேன்.” 

“நான் அவரை தான் நினைச்சிட்டு இருக்கேனு உனக்கு யார் சொன்னா.?” 

“யார் சொல்லணும் சின்ன வயசுல இருந்து உன்னையப் பார்த்துட்டு இருக்கேன். உன்னோட சின்ன சின்ன அசைவை வெச்சே நீ என்ன நினைக்கறேன்னு சொல்லிடுவேன் இதை சொல்ல மாட்டனா?” 

“லூசு மாதிரி நீயே எதையாவது யோசிச்சிட்டு பேசிட்டு இருக்காத.” என அங்கிருந்து நகரப் போனவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன். 

“நாங்க விளையாட்டுக்கு அவன் வேண்டாம்னு சொல்லல பூனை, வளவனுக்கும் எனக்கும், நந்துக்கு உன்னைய கட்டி வைக்கிறதுல சுத்தமா விருப்பமில்லை. இப்போ இல்ல எப்போமே அதுக்கு மட்டும் சம்மதிக்க மாட்டோம். எங்களை எதிர்த்து தான் அவனைக் கட்டிக்க முடியும், இதுக்கு மேல சொல்றதுக்கு இல்ல பார்த்துக்கோ.” என கோவமாக சென்று விட்டான். 

யுகி சொன்னதும் நிலாவின் முகம் வாடிவிட்டது. நந்தனை வேண்டாம் என விலக்கிப் போனாலும் அவளை அறியாமலே உள்ளே நுழைபவனை என்ன செய்து தடுப்பது? 

அவனைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று தான் நினைக்கிறாள் எங்கு சுற்றினாலும் அவன் தானே வந்து நிற்கிறான் அவளும் தான் என்ன செய்வாள்? 

'அண்ணாவும் யுகி தான் எனக்கு முக்கியம். நந்து எப்போமே என்னய காயப்படுத்திட்டே தான் இருக்காங்க. அவங்களுக்காக என்னை உயிரா நினைக்கிறவீங்களை நான் இழக்க முடியாது இனி அவர் பக்கம் திரும்பாம இருந்துக்கணும்.' என மனதை திடப்படுத்திக் கொண்டு மண்டபத்தின் உள்ளே சென்றாள்.

நிச்சியத்திற்கு பெரிய பெரிய தொழிலதிபர்களும், பெரிய பதவியில் இருப்பவர்களும் வந்திருந்தனர். நந்தனுக்கு கீழ் பணிப்புரிபவர்களும் வந்திருந்தனர். அதில் சரஸ்வதி என்ற பெண் காவலரும் அடக்கம்.

“என்ன மார்த்தி அடுத்தது நந்தனுக்கு தானே. என்ன போலீஸ்மேன் உன் அப்பாவோட தொழிலை செய்வன்னு பார்த்தா போலீஸ் ஆகிட்ட.. நீ முதல தொழில் தொழில்ன்னு சொல்லிட்டு இருந்த..” என நிச்சயத்திற்கு வந்தவர் கேக்க.

“அதுக்கு தான் யுகி இருக்கானே அங்கிள் அவன் தொழிலைப் பார்த்துப்பான்.”

“என்ன தான் சின்னவன் இருந்தாலும் பெரியவன் குடும்பத் தொழிலை பண்ற மாதிரி இருக்காதுல.”

எந்த இடத்திலும் மற்றவர்களிடத்தில் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். அவர்களுக்குள் ஆயிரம் பூசல் இருக்கலாம் அதற்காக அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுப்பானா?

“அப்படிலாம் இல்லை அங்கிள், அவன் என்னய விட பிரமாதமா பார்த்துப்பான்.” என்றவன் தலையைக் கோதிக் கொண்டான்.

இது அவனுடைய மேனரிசம் அடிக்கடி கை தலையை கோத வேண்டும், இல்லையா மீசையை தடவி முறுக்கி வேண்டும். அவன் அப்படி செய்யவும்.

“ஹேண்ட்சம் பாய்டா நீ.. என்னோட பொண்ணைக் கட்டிக்கோன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன். பிடி கொடுக்க மாட்டிக்கிறியே.. கட்டிக்கிறியா நந்தா?” 

“இல்ல அங்கிள் நான் ஆல்ரெடி கமிட்டேட்.” என்றவன் மார்த்தாண்டத்தைப் பார்த்து கண் அடித்தான்.

‘நாலுப் பேருக்கு முன்னாடி அவமானப்படுத்தாம விடமாட்டான் போலையே’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே சிரித்து சமாளித்தார்.

“என்ன மார்த்தி? இவன் என்ன சொல்றான்? நான் எப்போல இருந்து சொல்லிட்டு இருக்கேன். உனக்கு நியாபகம் இல்லையா?”

'இல்லாம என்னடா இவன் என்னய விட்டு வைக்கணுமே தினம் தினம் ஒரு குண்டை தூக்கிப் போட்டு விளையாடறான். என்ன பண்ண சொல்ற?’ என்று உள்ளுக்குள் தான் சொல்லிக்கொண்டாரே தவிர வெளியே ஒரு வார்த்தை வரவில்லை.

“என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுமே பேச மாட்டிக்கிற?”

“அது அவனுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லும்போது..” என ஆரம்பித்தவரை கை நீட்டி தடுத்தவன்.

“நீங்க கேட்டுதுக்காகலா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது அங்கிள். எனக்கு பிடிச்சிருக்கணும். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு.” என முகத்தில் அடித்ததுப் போல் சொல்ல.. மார்த்தாண்டம் பதறி விட்டார்.

“தம்பி நீங்க போலீசா இருக்கலாம் அதுக்காக இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசறது தப்பு. பாருங்க அவர் முகம் எப்படி வாடிப் போயிருக்குன்னு..” என அருகில் இருந்த ஒருவர் சொல்ல, 

அப்படி தான் பேசுவேன் என்பது போல் தெனாவெட்டாக நின்றிருந்தவன் உனக்குலா என்னால பதில் சொல்ல முடியாது என அவரைப் பார்க்க அவர் பார்வையிலையே புரிந்துக் கொண்டவர் தள்ளிச் சென்று விட்டார்.

“நீங்க வாங்க சண்முகம் நிச்சயம் ஆரம்பிக்கப் போறாங்க, அங்கப் போலாம்.” என அவரை பேசி சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

'ஹப்பா முருகா இந்த நிச்சியம் முடியர வரைக்கும் யார் கூடையும் நந்துவை பேசாம பார்த்துக்கப்பா. உனக்காக நடந்தே பாதை யாத்திரை வர்றேன்.' என வேண்டிக் கொள்ள.

அவர் பின்னால் நின்ற நந்துவோ அவரின் வேண்டுதலைக் கேட்டு புன்னகைத்துக் கொண்டான். அது மட்டுமில்லாமல், "நடந்து போனா தான் அதுக்கு பேரு பாதை யாத்திரைப்பா?" என அவரின் காதருகில் சொல்லி செர்க் ஆக வேறு செய்தான்.

“விடுப்பா நந்தா இன்னைக்கு கோட்டா முடிஞ்சிடுச்சி ப்ளீஸ் எனக்காகவாவது அமைதியா இருப்பா.” 

“அதுக்கு நீங்க லஞ்சம் தரணுமே.” 

“போலீஸ்ன்னு நிரூபிக்கிறடா அதுக்காக அப்பன்கிட்டயே லஞ்சமா சரி சொல்லு? என்ன பண்ணனும்?” 

“நான் அமைதியா இருக்கனும்னா எல்லோருக்கும் முன்னாடி எனக்கும் அவளுக்கும் கல்யாணம்ன்னு அனோன்ஸ் பண்ணனும். இல்லனா ஒவ்வொருத்தரையா தேடிப் போய் வம்பு இழுப்பேன். நிச்சியத்துக்கு வந்த யாரும் அப்புறம் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க பார்த்துக்கோங்க.” 

“அதுக்கு நிலாவும், மாப்பிள்ளையும் ஒத்துக்கணுமே..” 

“அவ ஒத்துக்கணும்ன்னு சொல்றதுல நியாயம் இருக்கு, அவன் எதுக்கு ஒதுக்கணும்?” 

“அவர் தானே நிலாவுக்கு அண்ணன்.” 

“நான் கூட தான் ஷாலுக்கு அண்ணன். என்னோட சம்மதத்துலையா இந்த கல்யாணம் நடக்குது.” 

“அதுக்கு தானே தம்பி இவ்வளவு நாள் ஷாலு வெயிட் பண்ணுச்சி. நீயும் சரின்னு..” என்றவர் அவன் பார்வை கூர்மையுடன் தன்னை நோக்கவும், “என்னமோ பண்ணுங்கன்னு சொன்னதுல தானே, இப்போ இவ்வளவு தூரம் வந்துருக்கோம்..” 

“என்னமோ பண்ணுங்கன்னு தான் சொன்னேன் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லல.” 

“டேய் ரெண்டும் கிட்ட தட்ட ஒன்னு தாண்டா ஏண்டா என்னைய போட்டு இம்சை பண்ற?” 

“ரெண்டும் ஒன்னு ஆகாதுப்பா” என பட்டென்று வந்து விழுந்தது வார்த்தைகள். 

“ச்சை இவனை வெச்சிட்டு மனசுல கூட நினைக்க முடியலையே. நந்து அம்மா கூப்பிடற மாதிரி இருக்கு நான் போய் பார்க்கறேன்.” 

“யாரு அம்மா?” 

“உன் அம்மா தாண்டா” 

“என்னோட அம்மா எப்போ உங்களை கூப்பிட்டிருக்காங்க..” 

“இப்போ கூப்பிட்டா டா விடேன். 

“சரி போங்க.. ஆனா உங்க மாதிரி நான் இருக்க மாட்டேன்ப்பா.” 

"என்ன என்னைய மாதிரி?" 

“நீங்க அம்மாவை நடத்துற விதத்தை சொன்னேன்.” 

“ஓ” என்றவருக்கும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது நந்தனின் வார்த்தைகள். 

பிள்ளைகள் தங்களை கவனிக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் இத்தனை வருடங்கள் தங்கள் உறவை புடம் போட்டு காட்டியிருக்கிறோம் என நினைக்கும்போதே சங்கடமாக இருந்தது. 

மனைவியை தள்ளி இருந்தே ரசித்து காலத்தைக் கடத்தியிருக்கக் கூடாதோ, வெளிக் காட்டாத அன்பு நீரில் எழுதிய எழுத்துப் போன்றது. யாருக்குமே தெரியாமலே போய்விடும். தான் பெற்ற பையன் அறிவுரை சொல்லும் அளவிற்கு நடந்திருக்கிறோம் என காலம் கடந்தபின் ஞானம் வந்தது. 

“போங்க அம்மா கூப்பிட்டாங்கனு சொன்னீங்க.” 

“ம்ம்ம்” என்றவர் எதுவும் பேசாமல் வரவேற்பிற்கு சென்று நின்றுக் கொண்டார். 

நந்தனின் கண் அவனவளை தேடியது. 

மண்டபத்தில் நந்தனின் சேட்டை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, வளவனோ ஷாலினியிடம் இன்னும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அண்ணன் செய்த பிரச்சனையால் தங்கையின் மீது கோவமாக இருந்தான். 

“வளவா ஏன் என்கிட்ட பேச மாட்டிக்கிற? நான் என்ன பண்றேன்?” 

“இப்போ பேசப் போறியா? இல்லையா?” 

“எதுக்கு பேசணும்? உனக்கு உன் அண்ணன் பண்றதுல எதுமே கண்ணுக்கு தெரியல. அவன் என்ன மாதிரி பண்ணிட்டு இருக்கான் பார்த்தில, இன்னைக்கு கூட நாலுப் பேருக்கு முன்னாடி என்னையும் நிலாவையும் அவமானப் படுத்திட்டான். அவன் பண்றதுக்கு நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கறதே பெருசு இதுல பேசலைன்னு கவலை வேற உனக்கு.” கோவத்தில் வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்தது. 

“என்ன சொன்ன சொல்லு? என்ன சொன்ன?" 

அவள் திரும்ப திரும்ப கேட்கவும் தான், கோவத்தில் என்ன சொன்னோம் என புரிந்தது. பெரிய வார்த்தை தான் காதலித்து இருவரும் பல வருடம் காத்திருந்து கை பிடிக்கப்போகும் தருணத்தில் ஒருவர் வாயில் இருந்து இப்படி பட்ட வார்த்தைகள் வருவது மற்றொருவரை அதிகமாக காயப்படுத்தும். ஷாலினியும் காயப்பட்டிருந்தாள். 

"அது ஒரு கோவத்துல சொல்லிட்டேன்." 


“என்ன கோவமிருந்தாலும் இப்படி பேசுவியா?” 

“சரி விடு கோவத்துல உன்னை காயப்படுத்தக் கூடாதுன்னு தான் உன்கிட்ட பேசாம இருந்தேன், லைப்ல ஒரு தடவை நடக்கிற முமெண்டைக் கூட என்னால என் தங்கச்சி வாழ்க்கை அடியோடப் போச்சி, எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கானே. என வளவன் அவன் கவலை ராகமாக ஆரம்பிக்க 

“அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கறதே நான் உனக்கு ஈஸியா கிடைச்சதுனாலே தானே என்னோட அருமை உனக்கு தெரியல. 

“யாருடி சொன்ன ஈஸியா கிடைச்சன்னு.” 

“பின்ன வேற என்ன..? 

“அதான் கோவத்துல சொல்லிட்டேன்னு சொல்றேன்ல.” 

“கோவத்துல என்ன வேணா பண்ணுவான் அது உனக்கும் இடையில நடக்கறது.. அவன்கிட்ட மோத முடியாம என்னைய வெச்சி அவனை பழிவாங்க நினைச்ச உனக்காக வருசக்கணக்குல வீட்டுல அடம்பிடிச்சி பார்த்துக்கோ” 

“என்னடி தங்கச்சி இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல, அடுத்தவனை மிரட்டியே காரியம் சாதிக்க வேண்டியது, தெரியாம சொன்ன ஒரு வார்த்தையை பிடிச்சிட்டு தொங்கற.. அன்னிக்கு நீ கூட தான் உன்னோட அண்ணனை தூக்கி வெச்சி பேசி என்னைய கேவலப்படுத்துனா.. " 

டேய் என்னடா உனக்கு பிரச்சனையா? நீங்க பேசிக்கறதைப் பார்த்துட்டு கீழே மாப்பிள்ளையும் பொண்ணும் சண்டைப் போட்டுக்கறாங்க, என்னனுப் பாருன்னு சொல்றாங்க. என்று யுகி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

“ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்ல. சும்மா பேசிட்டு இருந்தோம். நீ போய் வந்தவீங்களைப் பாரு.” 

“வேற எதுவும் இல்ல தான?” 

“இல்லடா..” 

“அப்புறம் ஏன் அவ மூஞ்சு ஒரு மாதிரி இருக்கு.” 

“அதை அவகிட்டயேக் கேளு” என்றவன் கண்களால் நிலாவை தேடத் தொடங்கி விட்டான். 

“என்னாச்சி ஷாலு.” 

“ஒன்னுமில்லடா நீ போய் வரவீங்களை கவனி.” 

"யுகி பாப்பா எங்க.?" 

“இங்க தானே இருந்தா..” 

“அவக் கூடயே இருடா இல்லனா உன்னோட அண்ணன் அவளை ஏதாவது பண்ணாலும் பண்ணிடுவான்.” 

“ஏய் ச்சீ என்ன இது?” என அண்ணன் தங்கை இருவரும் ஒரு சேரக் கத்தினர்.


Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 3 weeks ago

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕


    Related Post