இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 05-06-2024

Total Views: 13735

" டேய் எப்படிடா ஐய்யனார் மாதிரி சுத்திட்டு இருந்தவன் உன்னை பார்த்ததும் இப்படி அமைதியாக ஆகிட்டான்" என்று அன்பு கேட்டான். 

   "இதுதான்டா அவன் உண்மையான குணம்  வெளியே அவன் காட்டுறது மத்தவங்க கிட்டே இருந்து எங்க குடும்பத்தை பாதுகாக்க அவன் போட்டுகிட்ட வேஷம் அந்த அளவுக்கு அவன் மனசில் நன்றி உணர்ச்சியை வளர்த்து  அவனை இப்படி ஆக்கி வச்சு இருக்காங்க இந்த அத்தை. இது எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் இயல்பான வாழ்க்கையை வாழவேண்டியவனை இப்படி பண்ணிட்டாங்க என்று அங்கிருந்த மரத்தின் வேரில் தன் கையை கோபத்தில் வேகமாக குத்தினான். "

   அதை கண்ட முரளி, அன்பழகன் இருவரும் அவனின் கையை பிடித்துக்கொண்டு " டேய் என்னடா இது?... " என்று அதட்டினர். 

  " டேய் விடுங்கடா அவன் இயல்பை தொலைக்க நானும் தானே முக்கிய காரணம்" என்றான். 

   " என்னடா இயல்பை தொலைச்சான் அவனை அப்படியே விட்டு இருந்தா என்ன ஆகியிருப்பான்.  அவன் அப்பா மாதிரி சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையா தான் வளர்ந்து இருப்பான்." 

    "அவராவது நாலு பேர் கிட்ட பேசுவார் இவன் உன்கிட்டவே தயங்கி தயங்கி தான் பேசுவான். ஆனால் இப்ப எவ்வளவு கம்பீரமாக இருக்கான்.  அதட்டி உருட்டியே வேலை வாங்கி இன்னைக்கு அவன் ஒருத்தனே எல்லாத்தையும் கவனிக்கிற அளவுக்கு வந்து இருக்கிறான்." 

  " அவன் இப்படி இருக்கிறது தான் அவனுக்கு நல்லது இன்னைக்கு சொந்தமாக ஒரு தொழில் யார் உதவி இல்லாமல் தனியா நின்னு ஜெயித்து இருக்கான் அதை நினைத்து பெருமை படாமல் இப்படி கையை புண்ணாக்கிட்டு இருக்கிற.  அவன் கிட்ட இப்ப இருக்கிற ஒரு குறை என்ன என்றால் உங்க குடும்பத்தை அவன் தன் குடும்பமா நினைக்காதது தான் அதை மட்டும் சரிபண்ணால் போதும்" என்று அன்பு கூற 

   அவனை அணைத்து கொண்டான் கார்த்திகேயன். 

   " நீ சொல்லுறது தான் சரிடா சீக்கிரம் அவனை சரி பண்ணுறேன்" என்றான்.   மேலும் பேசிக்கொண்டு இருந்தவர்கள் இரவு உணவை அன்பழகனின் ஓட்டலிலேயே முடித்துக்கொண்டு  வீடு சென்றனர். 


    முரளி, அன்பழகன் இருவரும் கார்த்திகேயனின் உடன் சென்று அவனின் தாத்தா வீட்டில் படுத்துக்கொண்டனர்.  நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த பின்னே முரளி அன்பழகன் உறங்கிப்போகினர்.  கார்த்திகேயனுக்கு நீண்ட நேரம் திரும்பி திரும்பி படுத்தவனுக்கு தூக்கம் வராமல் போனது. 

   கட்டிலில் படுத்து இருந்தவன் விழி திறந்து பார்க்க பவுர்ணமிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கவே நிலவு ஒளிவீசிக்கொண்டு இருந்தது.  அதில் அவனின் விழி தெரிந்தாள்.  ஆம் அனைவரும் அவளை கயல் என்று அழைக்க அவனுக்கு எப்போதும் விழி என்றும் அன்பு அதிகமானால் கண்ணம்மா என்று அழைப்பான்.

     கயல்விழியின் முகம் நிலவில் தெரிய "கண்ணம்மா" என்று அவன் உதடுகள் முனுமுனுத்து.  இன்று காலை அவளின் ஸ்கூட்டி வந்த ஒலியைக்கேட்டே சண்முகம் அவளின் வரவை கார்த்திகேயனிடம் சொல்ல அதுவரை அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தவன் வேகமாக அறைக்குள் சென்று சன்னல் புறம் நின்று வெளிப்பக்கமாக பார்த்து கொண்டு நின்றான்.   அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்தாலும் கயல்விழியை சந்திப்பது அவனுக்கு ஒரு சவாலாக இருந்தது. 

 சிறுவயதிலேயே அவளை வறுத்தப்படவிடாதவன் இன்று அவளிடம்  தன் கோபத்தை காட்டி அவளை வறுத்தப்பட வைக்கப்போகிறான்.  அது மட்டுமல்லாமல் நீண்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு தன் கண்ணம்மாவை நேரில் பார்க்கப்போகிறான் அல்லவா அனைத்தும் சேர்ந்து அவனின் மனதில் இனம்புரியாத உணர்வுகள் சுழன்றன. 


    "அத்தான்" என்று ஒரு வார்த்தையே அவனின் அனைத்து எண்ணங்களையும் மறந்து அவளை ஓடிச்சென்று அணைக்க சொன்னது அவனின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும்.  அத்தான் என்ற வார்த்தை அவனுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை அது.   அவனை மட்டும் தான் அவள் அத்தான் என்று அழைப்பாள் அவளின் சொந்த அத்தை மகன் சரவணனை கூட அவள் மாமா என்றுதான் அழைப்பாள்.  அப்படிபட்ட அவனுக்கு மட்டுமே சொந்தமான அந்த வார்த்தையை பத்தாண்டுகளுக்கு பிறகு கேட்கும் போது அவனால் அமைதியாக இருக்க முடியாது தான் இருந்தும் தன்னை கடினமாக்கி நின்று இருந்ததும் இல்லாமல் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. 

    அவளின் முகத்தை பார்த்தால் அந்த கயல்விழியாளின் விழியில் விழுந்து தன்னை தொலைத்து விடுவோமோ என்று தான் பார்க்கவில்லை.  அவளின் அணைப்பு பேச்சு அவனை இளக்கச்செய்தாலும் தான் எண்ணியது ஈடேறும் வரை தன்னை கடினமாக வைத்து இருந்தான். 

   அவனின் தாய் தந்தை தம்பி சென்ற பிறகு அவன் பின்னே அவள் தோட்டத்திற்கும் வந்து அவனிடம் பேசி அணைத்தவளை ஒரு கட்டத்திற்கு மேல்  அவனால் முடியாம‌ல் அவளை அணைத்ததும் இல்லாமல் இதழையும் அணைத்து இருந்தான். 

   அனைத்தையும் நினைத்துப்பார்த்தவனின் நினைவு அவளை முதன்முதலில் பார்த்த நினைவுக்கு சென்றது. 

   அதே நேரத்தில் கயல்விழியும் உறக்கம் வராமல் படுத்திருந்தவள் எழுந்து மெல்ல அறைக்கதவை திறந்து கொண்டு வந்தவள்  கம்பிகளால் மூடப்பட தாழ்வாரத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து கம்பிகள் ஊடே தெரிந்த நிலவை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

   பத்தாண்டு காத்திருப்பு இன்று நிறைவேறியது அல்லவா அவளின் அத்தான் வந்து விட்டான்.  வந்தவன் அவளிடம் வம்பு செய்து அணைத்து அத்துமீறி இதழ் அணைப்பு செய்தது அனைத்தும் சேர்ந்து அவளால் உறங்கமுடியவில்லை. 

    கல்லூரியில் படித்து இருந்தபோதும் நிறைய பேர் காதல் சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால் அனைத்தும் நிராகரித்து தன் அத்தானுக்காக காத்திருந்தாள்.  காதல் உணர்வுகளை பூட்டி வைத்தவளுக்கு அவளின் அத்தான் வந்து பூட்டை உடைத்து விட்டான் அல்லவா தூக்கம் வராமல் காதல் உணர்வில் தத்தளித்துக்கொண்டு இருந்தவளுக்கு பழைய நினைவுகள் மனதில் வந்தன.
  
    இதே சமயம் வீரராகவன் சாந்திக்கு உறக்கம் வரவில்லை தங்கள் மகனை திரும்ப பார்ப்போமா என்று பத்தாண்டுகளாக தவித்தவர்களுக்கு தங்கள் மகன் வந்து விட்டான் என்ற சந்தோஷத்திலும் அவன் வீட்டுக்கு வராதபோதும் இனி தங்கள் ஊரில் இருப்பதே நிம்மதி என்றபோதும் தங்களை அவன் மன்னிக்கவில்லை என்ற வறுத்தமுமாக உறங்கமுடியாமல் தவித்தவர்கள் எண்ணமும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் மனத்திரையில் வந்தன. 

    
  சுப்பிரமணியன் கமலாம்பாள் தம்பதியரின் மகன் வீரராகவன்.  முதல் குழந்தைக்கு பிறகு பதிரெண்டு வருடம் கழித்து மீண்டும் கருவுற்றார் கமலாம்பாள் அந்த காலத்தில் அதிகமான பிரசவங்கள் வீட்டிலே நடக்கும் மருத்துவ வசதிகள் கிராமங்களில் இல்லாததால் வயதான பெண்கள் பிரசவம் பார்ப்பார்கள்.  

   கமலாம்பாளுக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்க்க அதில் குழந்தை இறந்தே பிறந்தது.  அந்த பிரசவத்தில் ஏற்பட்ட பிரச்சினையினால் அதன் பிறகு கமலாம்பாள் நடமாட்டம் குறைந்து போனது.  வசதியானவர்களாக இருப்பதால் அனைத்து வேலைகளுக்கு வேலையாட்களை நியமித்துவிட்டார் சுப்பிரமணியன். 

    வருடங்கள் போகப்போக கமலாம்பாள் உடல் நிலை படுக்கையிலேயே என்று ஆகிவிட்டது.  அதனால் தன் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கி இருபத்தி மூன்று வயது மகனுக்கு தன் நண்பரான ரங்கசாமி மகள் பதினெட்டு வயது 
ஆன கலாவதியை திருமணம் முடித்து வைத்தார். 

   திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கலாவதி கார்த்திகேயனை பெற்று எடுத்தாள்.  கார்த்திகேயனுக்கு ஒன்னரை வயது வரை அந்த குடும்பம் சந்தோஷத்தில் திளைத்து இருந்தது. அதை கெடுப்பது போல் வந்தது அந்த கேடை மழை.

   திடீரென பெய்த அதிகமான கோடை மழையில் வயலில் நீர் தோங்கினால் பயிர்கள் சேதம் அடைந்து விடும் என்று வேலை ஆட்களுடன் ஆண்கள் சென்று விட வீட்டில் சில வேலையாட்களும் பெண்கள் மட்டுமே இருந்தனர். 

    கிராமங்களில் வீட்டுக்குள் பாத்ரூம் இருப்பது இல்லை வீட்டின் பின்பகுதியில் தான் இருக்கும்  மழை நேரத்தில் அங்கு சென்று திரும்பிய கலாவதி  கால் சறுக்கி விழுந்து அங்கிருந்த அம்மிக்கல்லில் தலையின் பின் பகுதி மோதி மயக்கத்திற்கு சென்றுவிட்டார்.  

    நீண்ட நேரம் ஆகியும் கலாவதி வராததை கண்ட வீட்டு வேலை செய்யும் பெண் ஒருத்தி பின் பக்கம் வந்து பார்க்க கலாவதி ரத்த வெள்ளத்தில் இருந்தார். 

   கத்தி கூச்சலிட அனைத்து வேலையாட்களும் வந்து கலாவதியை வீட்டிற்குள் தூக்கிச்சென்று ரத்தம் வழிவதை நிறுத்த முயற்சிக்க சிலர் வயலுக்கு ஓடினர் வீட்டு ஆண்களுக்கு சொல்ல. 

  அவர்கள் வருவதற்குள் வீட்டின் முன் நின்ற டிராக்டர் வண்டியில் தார்பாய்களை கட்டி மழை நீர் உள்ளே வராமல் கட்டி கலாவதியின் ஈரமான உடைகள் மாற்றி வண்டியில் ஏற்றியிருக்க ஆண்கள் வந்ததும் பக்கத்தில் இருந்த டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 

   இருந்தும் அதிகமான ரத்தம் வெளியேறி இருந்ததால் கலாவதியின் உயிர் பிரிந்து இருந்தது.   இப்படி ஒரு சம்பவத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.  சில மணி நேரங்களுக்கு முன் மழையில் நனையாமல் இருக்கச்சொல்லியவள் இப்போது இல்லை என்றால்  இடிந்து போயினர் வீட்டு ஆண்கள். 

    சொந்தங்கள்  ஊர்காரர்களின் உதவியுடன் அனைத்து முடிந்தது. ஒன்றரை வயது பிள்ளையின் அம்மா... அம்மா.. என்ற அழுகுரல்  இன்னும் அந்த குடும்பத்தை நிலைகுலையச்செய்தது என்றால் அடுத்த இரண்டு மாதத்தில் படுக்கையில் இருந்த கமலாம்பாள் இழப்பும் அடுத்த இடியாகியது. 

     என்னதான் வேலை ஆட்கள் இருந்த போதும் ஒன்னரை வயது குழந்தையை வளர்ப்பது கடினமாக இருந்தது.  உறவினர்கள் ஊர்க்காரர்கள் பேசிப்பேசி அவர்களை சிந்திக்க வைத்து குழந்தை வளர்க்க கண்டிப்பாக பெண் வேண்டும் அதனால் வீரராகவனுக்கு மறுமணம் செய்யச்சொல்லவும் தான் சுப்பிரமணியன் ரங்கசாமிக்கு  அந்த எண்ணமே வந்தது அது வரை இழப்புகளை பற்றி மட்டுமே சிந்தித்தவர்கள் இருபத்தி ஆறு வயதில் மனைவி இழந்து குழந்தையோடு இருக்கும் வீரராகவன் நிலை புரிந்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

    ஆரம்பத்தில் மறுத்த வீரராகவனும் பின் தன் மகனுக்காக என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். 

    குழந்தையை பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் நல்லா பெண்ணாக வேண்டும் என்று தேடியவர்களின் கண்ணில் பட்டது தூரத்து உறவு முறையில் இருக்கும் சாந்தி தான். 

   இவர்கள் ஊரில் இருந்து இரண்டு மணி நேர பயணம் செய்ய வேண்டிய தொலைவில் உள்ள டவுனில் சிறு பங்க் கடை வைத்து  இருந்த நாராயணன்  சிவகாமி தம்பதியருக்கு மகன் கோதண்டம் மகள் சாந்தி. 

    வரும் சிறு வருமானத்தில் வாழ்ந்தவர்கள் மகன் படித்து நல்ல வேலைக்கு செல்வான் என்று காத்திருக்க படிக்காமல் நண்பர்கள் உடன் சுற்றியது இல்லாமல் பதிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தும் விட தாய் தந்தைக்கு மிகுந்த ஏமாற்றமே. 

   படிக்கவில்லை என்றாலும் எதாவது வேலைக்காவது செல்லுவான் என்று எதிர்பார்க்க அதிலும் ஏமாற்றம்தான்.  நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டு இருந்தான். 

    அவனை விட ஐந்து வயது சிறியவள் சாந்தி பத்தாம் வகுப்பு நன்றாக படித்து வெற்றி பெற்ற போதும் தாய் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாமல் மேலே படிக்காமல் வீட்டிற்கு முன் தந்தை வைத்து இருந்த சிறிய கடையை பெரிதாக மாற்ற நினைத்து அதன் முதல் படியாக தாயுடன் சேர்ந்து வீட்டிலே இட்லி மாவு அரைத்து விற்றனர். 



Leave a comment


Comments


Related Post