இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 07-06-2024

Total Views: 11602

 அதில் ஒரளவு வெற்றி பெற அடுத்த முயற்சியாக இட்லி பொடி சாம்பார் பொடி ஊறுகாய் என்று சிறு சிறு பாக்கெட் போட்டு விற்க அதுவும் நன்றாகவே விற்பனை ஆகியது.   சிறிது சிறிதாக மளிகை பொருட்களும் வாங்கி வந்து விற்பனை செய்ய இரண்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. 

  அடுத்த இரண்டு வருடங்களில் சிறு ஒட்டு வீடும் சிறு கடையாக இருந்த இடத்தில் கடையை பெரிதாக கட்டி பின்பக்கம் சிறு மாடி வீடும் கட்டியிருந்தனர். 

   மகளுக்கு இருபது வயது முடிந்த பிறகே அவளின் திருமணமத்திற்கு என்று இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்பதை உணர்ந்தனர் நாராயணன், சிவகாமி தம்பதிகள். 

   அந்த சமயத்தில் தான் சுப்பிரமணியன், ரங்கசாமியும் இணைந்து வந்து பெண் கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தனர்.   நல்ல குடும்பம் என்ற போதும் இரண்டாம் தாரம் என்று தயக்கம் இருந்தது. 

   ஆனால் சாந்தியே  தன் தந்தையிடம் சம்மதம் என்று கூறிவிட்டாள்.   காரணம் சிறு குழந்தை தாயில்லாமல் தவிப்பது அடுத்து தாய் தந்தையை கடன்பட வைக்காமல் இருக்கவும் தன் அண்ணனின் பொறுப்பு இல்லா தன்மையுமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தது. 

   தாய் தந்தை இருவரும் பேசியபோதும் சாந்தி தன் முடிவில் உறுதியாக இருக்க அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்திருந்தாள் சாந்தி. 

   இரண்டு வயது கார்த்திகேயன் அவளுடன் விரைவிலேயே ஒட்டிக்கொள்ள அவனின் மழலை குரலில் அம்மா என்று அழைக்க அதில் தன்னை தாயாகவே உணர்ந்தாள் சாந்தி.  மெல்ல மெல்ல அந்த வீட்டு நடைமுறைகளை சுப்பிரமணியன் சொல்ல அவற்றுக்கு பழகிக்கொண்டு கொஞ்ச நாட்களில் குழந்தையையும் வீட்டையும் நன்றாக பார்த்துக்கொண்டாள். 

   மகளின் திருமணத்தை முடித்து அனுப்பிய பிறகு நாராயணனும் சிவகாமியும் தன் மகனை கடையில் அமர்ந்து வியாபாரம் பார்க்க சொல்ல கோதண்டம் மறுத்துவிட்டான்.  அதற்கு காரணம் அவனின் நண்பர்களே. 

   கோதண்டம் தினமும் பணம் எடுத்து வந்து தங்களுக்கு செலவு செய்வது நின்றுவிடும் என்று கோதண்டத்தை புகழ்ந்து பேசியவர்கள் அந்த மளிகை கடையில் உட்கார்ந்தால் அழுக்கு உடையுடன் தான் இருக்க முடியும்.  இப்படி அழகான உடை அணிய முடியாது  ஊர் சுற்ற முடியாது உன் தந்தை போல் கடைசி வரையில் கடை கடை என்று இருக்க வேண்டும் என்று கூறியிருக்க நண்பர்கள் தனக்கு நல்லதைத்தான் சொல்வார்கள் என்று நம்பி தாய் தந்தை பேச்சை மறுத்து நண்பர்களுடன் வேலை தேடுவதாக கூறிவிட்டான் கோதண்டம். 

   சுப்பிரமணியன், சிவகாமி எவ்வளவே எடுத்து கூறியும் அவர்களின் கடையை பார்த்துக்கொள்ளவில்லை கோதண்டம். 

   மகனுக்கு திருமணம் செய்து வைத்தாலாவது மனைவி பேச்சை கேட்பான் என்று அதே ஊரில் இருந்த தங்கள் உறவில் சித்தி கொடுமையில் வாழ்ந்து கொண்டு இருந்த லலிதாவை பெண் கேட்டு சென்றனர். 

    லலிதாவிற்கு திருமணம் செய்து அனுப்பினாள் வீட்டு வேலைகளை செய்ய ஆள் இல்லை என்று அவளின் சித்தி இன்னும் மூன்று வருடங்கள் கழித்து தான் மகளுக்கு திருமணம் செய்வோம் என்று கூறிவிட்டனர். 

    ஆனால் நாராயணனும் சிவகாமியும் இரண்டு குடும்பத்திற்கும் நெருங்கிய உறவினர்களை அழைத்து சென்று பெண் கேட்க இந்த முறை உறவினர்கள் முன் மறுக்கமுடியாமல் போனது. எனவே மகளுக்கு திருமணம் முடித்து ஆறு மாதங்களில் மகனுக்கும் மிக எளிமையாக கோவிலில் திருமணம் முடித்தனர். 

   ஆரம்பத்தில் மனைவியின் முன் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள கடையில் அமர்ந்த கோதண்டம் நாட்கள் ஆக ஆக கடையில் இருக்கும் நேரம் குறைந்தது. 

   மருமகள் தங்கள் மகனை சரி செய்து கடையில் உட்கார வைத்து விட்டாள் என்று நினைத்தவர்களுக்கு நாட்கள் செல்ல மீண்டும் பழையபடி ஊர் சுற்றுவதை எண்ணி கவலை கொண்டனர். 

   இனி மகன் கடையை பார்க்கமாட்டான் என்று புரிந்து கொண்டனர்.   மருமகள் லலிதாவிற்கு கடையில் தாங்கள் செய்யும் வேலைகளை சொல்லி கொடுத்தனர். 

   எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த போதும் கடை கணக்குகளை நன்றாக கற்றுக்கொண்டாள்.  சிறு வயதில் இருந்தே வேலைகள் பழகி இருந்ததால் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கடையில் அமர்ந்த அந்த வேலையையும் கற்றுக்கொண்டாள்.  எங்கெங்கு பொருட்களை மொத்தமாகவும் தரமாகவும் எப்படி வாங்குவது என்பதை அந்த மொத்த வியபாரக்கடைகளுக்கு அழைத்து சென்று பழக்கி விட்டார் சுப்பிரமணியன். 

    அதிக வேலைகள் செய்த போதும் மாமியாரும் சேர்த்து வேலை செய்வதோடு அன்பாக இருக்கவே அவளுக்கு அந்த வேலைகள் கடினமாக தெரியவில்லை. 

  அந்த நேரத்தில் சாந்தி கருவுற்றாள் அனைவருக்கும் மிகு‌ந்த சந்தோஷம் அடைந்தனர்.  அடுத்த இருமாதங்களில் லலிதாவும் கருவுற்றாள்.  

    கார்த்திக்கேயனுக்கு மூன்று வயது முடிந்து மூன்று மாதங்கள் நினறவடைந்த போது சாந்தி சரவணனை பெற்றெடுத்தார். அடுத்த இரு மாதங்களில்  லலிதா இளவரசனை பெற்றெடுத்தார். 

    அனைவரின் வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டு இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் லலிதாவிற்கு கயல்விழி பிறந்தாள். அதற்கு அடுத்த வருடம் சாந்திக்கு அமிர்தவள்ளி பிறந்தாள். 

   சாந்தி திருமணம் முடித்து வந்து பிரசவத்திற்கு கூட தாய் வீடு செல்லவில்லை.  இரண்டு குழந்தைகளும் மாமனார் வீட்டில் இருந்தே பெற்றெடுத்தாள்.  அதன் பிறகும் அதிகமாக தாய் வீடு சென்று வருவதில்லை எதாவது விசேஷங்கள் உறவில் வந்து அழைத்தாள் பிள்ளைகளை கூட அழைத்து செல்லாமல் வீரராகவன் சாந்தி மட்டுமே சென்று வருவர். 

   சாந்தியின் தாய் தந்தைக்கும் வேலை சரியாக இருப்பதால் எப்போதாவது பேரப்பிள்ளைகளை வந்து பார்த்து செல்லுவர். 

   கயல்விழிக்கு ஒன்னரை வயதும் அமிர்தவள்ளிக்கு ஆறு மாதங்கள் ஆன நிலையில் உறவினர் திருமணத்திற்காக சென்று திரும்பிய நாராயணன் சிவகாமி தம்பதிகள் வந்த பேருந்து விபத்திற்கு உள்ளாகி பலர் பலியாகினர்.  அதில் நாராயணன் சிவகாமி தம்பதிகள் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்திருந்தனர்.   இது அந்த குடும்பத்தில் அடுத்த இடியாகி அதிகமாக பாதித்தது லலிதா தான்.  சாந்தி சில நாட்கள் வந்து இருந்து விட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து இயல்பு வாழ்க்கைக்கு சென்று விட்டார். 

   தாய் தந்தை இறப்புக்கு பிறகாவது தனது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சிறிது நாட்களில் மீண்டும் நண்பர்கள் உடன் சொல்ல ஆரம்பித்தான் கோதண்டம்.  

    காலையில் கடை திறந்து கணவனை உட்காரவைத்து விட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வருவதற்குள் கோதண்டம் தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு கடையின் முன்கதவை மூடிவிட்டு சென்று இருப்பார். 

   காலைவேளையில் தான் நிறைய பேர் வந்து பொருட்கள் வாங்கி செல்வர் அந்த நேரத்தில் கடை மூடி வைத்தால்  பொருட்கள் வாங்குபவர்கள்  வேறு கடைக்கு சென்றனர்.  இதனால் வியாபாரம் குறைந்தது. 

    அடுத்து மொத்தமாக பொருட்கள் வாங்கிவர நாராயணன் அல்லது லலிதா சென்று வாங்கி வருவர் இப்போது நேரடியாக சென்று பொருட்கள் வாங்க முடிவதில்லை.  கையில் குழந்தை வைத்துக்கொண்டு சென்று வரமுடியாததால் அந்த மொத்த வியாபார கடைக்கு போன் செய்து வேண்டிய பொருட்களை சொன்னால் அவர்களே கொண்டு வந்து போடும் போது பொருட்களின் விலை அதிகமாக சென்னார்கள் அதுமட்டும் இல்லாமல் பொருட்களின் தரமும் குறைந்ததை கொடுத்தனர். 

    இதனால் வியாபாரம் குறைந்தது வருமானமும் குறைந்தது.  லலிதா கோதண்டம் இருவரிடையே சண்டைகள் வர ஆரம்பித்தன.  காலையில் அவரை கடையில் உட்கார வைப்பதை நிறுத்தவே அவரால் பணம் எடுக்க முடியவில்லை.  மனைவியிடமே பணம் கேட்க ஆரம்பித்தார்.  

   லலிதா தராததால் சண்டைகள் நடந்தது.  இப்படியே ஆறு மாதம் கடந்து இருந்தது கயல்விழிக்கு இரண்டு வருடம் முடிந்து இருக்க இப்போது கொஞ்ச வளர்ந்து விடவே பொம்மைகள் கொடுத்து விளையாட விட்டு விட்டு சில மாதங்களாக செய்யாமல் இருந்த மாவு அரைத்து பாக்கெட் செய்து விற்பதை தொடர்ந்தார். 

   அதை தொடர்ந்து ஊறுகாய் மசாலா தூள் இட்லி பொடி என்று பழைய படி செய்ய ஆரம்பிக்கவே இப்போது ஓர் அளவுக்கு வியாபாரம் நடந்தது.   இப்படியே இன்னும் கொஞ்ச நாள் சென்றாள் யாரையாவது உதவிக்கு வைத்து கொண்டு பழையபடி கடையை கொண்டு வந்து விடலாம் என்று இருந்தவருக்கு ஒர் நாள் சிலர் வீட்டுக்கு வந்து வீட்டையும் கடையையும் வாங்கிவிட்டோம்.  இன்னும் பத்து நாளில் வீட்டை காலி செய்யுங்கள் என்று லலிதாவின் தலையில் இடியை இறக்கிச்சென்றனர்.  

    இந்த சில நாட்களாக கணவர் தன்னிடம் பணம் கேட்காததற்கு காரணம் இப்போது தான் புரிந்தது.  இரவு வந்தவரிடம் கேட்ட போது இந்த கடையில் நாள் முழுவதும் வேலை செய்தால் வரும் வருமானத்தை விட வேலை செய்யாமலே நாம் நிம்மதியாக வாழ என் நண்பர்கள் நல்ல வழி சொன்னார்கள் அதான் என் பெயரில் இருந்த அனைத்தும் விற்று விட்டேன் என்றார். 

    இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்த லலிதா பணம் எங்கே என்று கேட்க நண்பர்களுக்கு வட்டிக்கு கொடுத்து இருக்கேன்.  அடுத்த மாதத்தில் இருந்து வட்டி பணம் வரும் அதுவே நிறைய வரும் என்று கூறிவிட்டார் கோதண்டம். 


   தன் கணவனின் பேச்சை கேட்ட லலிதாவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.  சிறு வயதில் இருந்தே சித்தியின் கொடுமையில் வெளியுலகம் தெரியாமல் வளர்ந்தவள்  திருமணத்திற்கு பிறகு மாமியார் மாமனார் சொல்லிக்கொடுத்தபடி செய்து கொண்டு இருந்தாள்.  இப்போது கணவன் என்  சொத்துக்களை விற்று வட்டிக்கு கொடுத்து விட்டேன் என்றதும் தனக்கு கேட்க உரிமை இருக்கா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தாள் லலிதா. 

   அடுத்தடுத்த நாட்களில் கோதண்டமே வேறு வசதியான வீடாக பார்த்து அழைத்து சென்றார்.  வீட்டுக்கு தேவையான பொருட்களையும் அவரே வாங்கி வந்து போட்டார்.  மனைவி பிள்ளைகளை வெளியே அழைத்து சென்று வந்தார். 

   லலிதாவிற்கே கணவன் சொன்னது சரியே என்று தோன்றும் அளவுக்கு சந்தோஷமாக இருந்தனர்.   எப்போதும் வீட்டு வேலை கடை பிள்ளைகள் கவனிப்பு என்று சிறிது நேரம் ஓய்வு கூட இல்லாமல் இருந்தவளுக்கு இப்போது வேலை பளுவும் இல்லாமல் வெளியேயும் அழைத்து சென்று வந்தது சந்தோஷமாக நாட்கள் சென்றது. 

   சாந்தி தாய் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் மாதம் இரண்டு முறை மூன்று முறை கடையில் வைத்து இருந்த போனுக்கு கால் செய்த விசாரிப்பார்.  கடை வீடு விற்றது அவருக்கு தெரியக்கூடாது என்று கோதண்டமே வீட்டின் அருகில் இருந்த கடைக்கு மனைவி பிள்ளைகள் அழைத்து சென்று தங்கையுடன் பேசுவார். 

   இதனால் சாந்திக்கு அண்ணன் அண்ணி நன்றாக இருக்கின்றனர் என்று நினைத்து சந்தோஷப்பட்டார்.  



Leave a comment


Comments


Related Post