இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே -16 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 07-06-2024

Total Views: 8698

இதயம் - 16

கோபமே அறிந்திடாத வாசு தற்பொழுது கோபமே உருவமாய் அவன் அறைக்குள் அமர்ந்திருந்தான். அவனுடைய கோபம் முழுதும் தன்னை ஏமாற்றி வெளிநாடு அழைத்து வந்த மயில்சாமி மேல் இல்லை, தன்னை ஏமாற்றி குடிக்க வைத்து தன்னை அடைய திட்டமிட்ட தன் காதலி மேல் இல்லை, தான் தவறி நுழைந்த அறையில் இருந்த யாழிசையின் தன்னையும் தான் காதலிக்கும் பெண்ணையும் பிரிக்கும் எண்ணத்தின் மேல் இல்லை. அவன் கோபம் முழுதும் அவன் மேலே. தான் தானே ஏமாறினோம் தன் மேல் தான் தவறு. யோசிக்க தெரியாதவன், முட்டாள், முடிவெடுக்கத் தெரியாதவன், என்று அவனுக்கு அவனே பல பெயர்களை வைத்துக் கொண்டான். 

யாரிடம் கூறி தன் நிலமையினை விளக்கி அழுவது என்று வாசுவிற்கு தெரியவில்லை. தானே ஒரு முடிவு எடுக்கும் மன நிலமையில் இல்லாதபோது தான் யாரிடம் தன் நிலமையை விளக்கி அவர் நமக்கு தீர்வு கூறுவது என்று சிந்தித்தவன் பின் தன்னால் உண்மையாகவே தன் மனதில் இருப்பதை விளக்க முடியுமா என்று தன் மேலே சந்தேகம் கொண்டான். ஏற்கனவே குடித்ததால் ஏற்பட்ட தலைவலி, நடந்தவைகளை ஜீரணிக்க இயலாமல் ஏற்பட்ட தலைவலி தற்பொழுது பலவாறான யோசனைகளின் காரணமாக ஏற்பட்ட தலைவலி என்று தலையை வெட்டி போடும் அளவிற்கு வாசுவிற்கு தலைவலி பின்னி எடுத்தது. தலையை தன் உள்ளங்கையால் அழுத்தி பிடித்த வாசு "ஆஆஆ" என்று கத்தினான். அவனின் அவஸ்த்தையை காணவும் அவனை ஆறுதல்படுத்தவும் அங்கு யாருமே இல்லை. தனிமை வேறு வாசுவை பாடாய்படுத்தியது. இனிமையாக பேசாவிடினும் ஆறுதலாக அஞ்சனா பேசி தன்னை நம்பி இருந்தால் தமக்கு இந்த நிலமை இல்லையே. அனைத்திற்கும் மேலாக அந்த யாழிசை அஞ்சனா வரும் நேரம் தாங்கள் ஒன்றாய் இருப்பது போல் காட்டி நடிக்காமல் இருந்திருந்தால் ஒரு தலைவலி மிஞ்சி இருக்குமே என்று எண்ணினான் வாசு. 

வாசல் வரை சென்ற பரத் காரில் ஏறும் முன் தன் அண்ணனையும் அவன் இரவு கூறிய நிலம் யாழிசைக்கு தான் என்பதையும் நினைத்து 'என் அண்ணன் நியாயத்து பக்கம் தான் பேசுவான்... சரியானத தான் தேர்ந்தெடுப்பான் ... அவனை இப்போ இந்த நிலமையில தனியா விடனுமா' என்று சிந்தித்த பரத் காரில் இருந்து "நீங்க போய்ட்டு வாங்க நா இங்கேயே இருக்கன்" என்று கூறி இறங்கிக் கொண்டான். "என்ன பரத்" என்று அவினாஷ் கேட்க "இல்லை நீங்க போய்ட்டு வாங்க" என்று கூறிய பரத் வேகமாக உள்ளே ஓடினான். வாசு அறைக்கு முன் சென்று நின்ற பரத் கதவை தட்ட வாசு அழுத்தி பிடித்திருந்த தன் தலையை நிமிர்த்தி மூடிய கதவை பார்த்தான். "கம் இன்" என்று வாசு ரூம் சர்விஸ் என்று நினைத்து கூற பரத் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான். வாசு பரத்தை பார்த்ததும் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு நின்றான். "அண்ணா" என்று பரத் தயக்கத்துடன் அழைக்க வாசு "பேசாத பரத் ... உனக்கு தெரிஞ்சி தான எல்லாம் நடந்துச்சி ... நீ கூட என்னை அசிங்கப்படுத்த எப்படி சம்மதிச்ச" என்று கோபமாக கேட்டான். "அண்ணா ... உன்னையவோ இல்லை யாழிசையையோ அசிங்கப்படுத்தனுன்னு நா ஏன் நினைக்க போறன் ... நிலத்துக்காக உங்க மானத்த நா எப்படி வாங்குவன் ... இதெல்லாம் அந்த மயில்சாமியோட திட்டம் அண்ணா ... இந்த மாதிரி கீழ்தரமா அந்த ஆள் தான் யோசிச்சி செஞ்சிருக்கான்" என்று தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான் பரத். "அவர் ஏன் இதெல்லாம் செய்ய போறாரு ... என்னை அசிங்கப்படுத்தனா அவரோட பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்ன்னு அவர் யோசிக்க மாட்டாரா" என்று வாசு கேட்டான். 

"அவர் அசிங்கப்படுத்த நினைச்சது யாழிசையையும் உன்னையும் இல்லை என்னையும் யாழிசையையும் ... அவங்க ப்ளான்க்குள்ள அவங்களுக்கே தெரியாம நீ நுழைஞ்சிட்ட" என்று பரத் ஆரம்பம் முதல் அனைத்தையும் கூற கூற வாசுவிற்கு மயில்சாமி மீது கொலைவெறியே வந்தது. "அவர் இதுவரைக்கும் செஞ்ச எல்லாமே தெரிஞ்சிருந்தும் நா அமைதியா போறன்னா அது அஞ்சனாவுக்காக மட்டும் தான் ... ஆனா இனி என்னால அவங்களோட போராட முடியாது ... இன்னைக்கே அவங்க உறவுக்கு ஒரு முடிவு கட்றன்" என்று வாசு கோபமாக வெளியில் செல்ல போக பரத் "இல்லை அண்ணா எதா இருந்தாலும் நம்ம சென்னைக்கு போய் பாத்துக்கலாம் இப்போ பொறுமையா இரு" என்று கூறி வாசு கையை பிடித்து தடுத்தான். 

"என்னடா பொறுமையா இருக்க சொல்ர ... இன்னும் நா எவ்வளவு பொறுமையா இருக்றது ... யாருக்காக நா இத்தனை நாள் பொறுமையா இருந்தனோ அவளே என்னை ஏமாத்தி இருக்கா ... அதுக்கு காரணம் கேட்டா என்னை சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கனுன்னு சொல்லுவா ... அப்படி என்னை கல்யாணம் பன்றது என்ன அவ வாழ்க்கையோட லட்சியமா என்ன" என்று கத்தினான். "அண்ணா ... அவங்க வாழ்க்கையோட லட்சியம் உன்னை கல்யாணம் பன்றதுன்னா அதுக்காக உன் விருப்பம் இல்லாம எவ்வளவு எல்லைக்கு வேணா போவாங்களா" என்று பரத் கேட்டான். "டேய் அவளுக்கு நான்னா அவ்வளவு புடிக்கும் டா ... அவ என்னை கல்யாணம் பன்னிகிட்டா கண்டிப்பா எந்த பிரச்சனையையும் பன்ன மாட்டா ... நம்ம வீட்டுக்கு ஏத்த மாதிரி மாறிப்பா" என்று வாசு கூற பரத் அதிர்ந்தான். "அப்போ நீ முடிவு கட்ட போறன்னு சொன்னது கல்யாணத்தை பத்தியா" என்று அதிர்ச்சியுடன் கேட்டான். "ஆமாடா ஏன்" என்று வாசு பரத்தின் அதிர்ச்சி புரியாமல் கேட்டான். 

"அண்ணா அவங்க உன்னை ரொம்ப கஷ்டப்படுத்ராங்க ... உன்னை போர்ஸ் பன்றாங்க ... உன்னை ஏமாத்றாங்க அன்ட் உனக்கே தெரியாம ஏதேதோ பன்றாங்க ... எனக்கென்னவோ அவங்க சம்பந்தம் நம்ம குடும்பத்துக்கு நல்லதா படல ... அவங்களோட இன்டன்ஷன் எதுவுமே சரியில்லை... இன்னைக்கு நிலத்துக்காக என்னை பழிகாடா ஆக்க நினைச்சவங்க நாளைக்கு நம்ம குடும்பத்தை எதாவது அவங்க பன்ன மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ... அவங்களை நம்பாதண்ணா" என்று ஆவேசமாக தொடங்கிய பரத் கெஞ்சலுடன் முடித்தான். "பரத் உன் பயம் எனக்கு புரியுது ... முதல்ல நானும் இந்த கோணத்துல யோசிச்சி தான் தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருந்தன் ... ஆனா நீ அதை வேற மாதிரி யோசி ... அஞ்சனா என்னை காதலிக்கிறா ... அவங்க அப்பாக்கு எங்களை சேத்து வைக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை ... நான் தான் கல்யாணம் வேணான்னு அடம்பிடிச்சிகிட்டு இருக்கன் ... என்னை சம்மதிக்க வைக்க தான் அவ இப்படி எல்லாம் பன்றா ... என் கூட வாழனுன்றது தான அவ ஆசை அதை நிறவேத்திட்டா அவ அமைதியாகிட போறா ... அதோட அவ வந்து நம்ம வீட்ல நம்மளோட ஒருத்தியா இருந்துட்டா அவ நம்மள போலவே மாறிட போறா ... அதனால நம்ம சென்னை போனதும் நம்ம வீட்ல இதை பத்தி பேசிடலாம்" என்று வாசு புன்னகையுடன் கூற பரத் தான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான். எல்லா விஷயங்களையும் இரு பக்கமும் இருந்து யோசிக்கும் தன் அண்ணனின் எண்ணம் எவ்வாறு அவர்களுக்கு சாதகமாக யோசிக்க தோன்றுகிறது என்று தெரியாமல் குழப்பத்திலும் வாசு கூறியதை ஜீரணிக்க முடியாமலும் தவித்தவாறு நின்றான். 

"அண்ணா நீ தப்பான முடிவெடுத்திருக்க ... அந்த மயில்சாமி உன்னை ஏதோ காரணத்துக்காக தான் அவர் பொண்ணோட சேர விட்றுக்கான் ... அவனை நம்பறது பாம்புக்கு பால் கொடுக்கற மாதிரி இருக்கு" என்று பரத் எச்சரிக்கை செய்ய வாசு "டேய் ஏன்டா இப்படி அவரை தப்பாவே நினைக்கிற அவர் வெளில எப்படியோ ஆனா அஞ்சனா விஷயத்துல ரொம்ப நல்லவர் டா ... அவர்க்கு நா மருமகனா ஆகிட்டா பொண்ணோட புகுந்த வீட்ட போய் அவர் எப்படி டா அசிங்கப்படுத்த நினைப்பாரு ... தப்பு எல்லாரும் செய்யறது தான் ... அவர் பொண்ணு கல்யாணத்துக்கு அப்பறம் அவரும் கண்டிப்பா மாறிடுவாரு" என்று வாசு கூற பரத் இனி தன் அண்ணனிடம் பேசுவதெல்லாம் வேஸ்ட் என்பதை புரிந்துக் கொண்டு "நீ ஒரு முடிவெடுத்துட்ட ... எப்படியோ போ ... நீ சோகமா இருப்பன்னு உன்னை சமாதானம் பன்ன வந்தன் பாரு ... என்னை சொல்லனும் ... போ நா என் ரூம்க்கே போறன் ... மொத்த டென்ஷனையும் என் தலையில ஏத்தி விட்ற" என்று புலம்பியவாறே அங்கிருந்துச் சென்றான். வாசு தன் தம்பி புரிந்துக்கொள்ளாமல் செல்கிறானே என்ற கவலையில் அப்படியே கட்டிலில் அமர்ந்தான். 

பரத் கோபத்திலும் வேகத்திலும் ஒரே மூச்சாக கதவை திறக்கவும் "ஐய்யோ அம்மா" என்ற அலறலுடன் யாழிசை பரத் காலடியில் வந்து விழுந்தாள். பரத் யாழிசையை அங்கு எதிர்பார்க்காததால் அதிர்ந்து நிற்க உள்ளிருந்த வாசு ஏதோ பெண்ணின் குரல் கேட்கவும் வேகமாக எழுந்து யார் என்று பார்க்கச் சென்றான். "யார் பரத்" என்று சந்தேகத்துடனே கதவை நோக்கிச் சென்ற வாசுவிடம் "யாரும் இல்லை" என்று பதிலை கூறி விட்டு வேகமாக எழுந்து நின்ற யாழிசையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். வாசு வந்து கதவை திறக்கும் முன் இருவரும் லிப்ட்டில் ஏறி மறைந்திருந்தான். வாசு கதவை திறந்து வெளியில் எட்டி பார்த்து விட்டு யாருமில்லை என்றதும் உள்ளே சென்று கதவடைத்தான். 

லிப்ட்டில் நுழைந்ததும் வாசுவிடம் மாட்டாமல் தப்பித்த நிம்மதியில் பரத் பெருமூச்சு விட யாழிசையோ ஒன்றும் அறியா பிள்ளை போல் பரத்தை பார்க்காமல் திரும்பி விரைப்பாக நின்றிருந்தாள். "ரொம்ப நடிக்காத" என்று பரத் கோபமாக கூற யாழிசை கேட்டும் கேட்காதது போல் நின்றிருந்தாள். "உன்னை யார் என் பின்னாலே வால் பிடிச்சிட்டு வர சொன்னது" என்று பரத் மீண்டும் கேட்க யாழிசை இம்முறையும் அமைதியாக நின்றிருந்தாள். பரத் பொறுமையிழந்து யாழிசையை திருப்ப யாழிசை திரும்பிய வேகத்தில் அவள் காதில் இருந்து ஹெட்போன் கீழே விழுந்தது. பரத் அதை கண்டு யாழிசையை முறைக்க அவளோ சமாளித்து சிரித்தவாறே அதை குனிந்து எடுத்துக் கொண்டு பரத்தை பார்த்தாள். "உன்னை யார்" என்று பரத் தொடங்கவும் நிறுத்து என்பது போல் கையை பரத் முன் நீட்டி தடுக்க பரத்தும் என்ன என்பது போல் பேச்சை நிறுத்தி யாழிசையை பார்த்தான். 

"நீ இறங்கி போனதும் எனக்கு மனசு கேக்கல ... அதான் உன் பின்னாலே வந்தன் ... நீங்க உள்ள என்ன பேசறிங்கன்னு வெளியில சத்தியமா கேக்கல" என்று யாழிசை அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற பரத் அவளை முறைத்தான். "அப்பறம் எதுக்கு அங்க நின்னுட்டு இருந்த" என்று சந்தேகமாக பரத் கேட்க "டேய் சத்தியமா எதும் கேக்கல டா ... எதாவது கேட்ருந்தா நீ டோர் திறக்கற சௌண்ட் எனக்கு கேக்காம இருந்திருக்குமா சொல்லு" யாழிசை கேட்க பரத் "பைத்தியமா நீ" என்று கேட்டான். "சரி சொல்லு என்ன பேசனிங்க ... உங்கண்ணன் பிரேக்கப் பன்னிட்டானா" என்று ஆர்வமுடன் யாழிசை கேட்க பரத் "எல்லாம் நாசமா போய்ட்டு இருக்கு ... அவன் நம்ம நினைக்கிறதுக்கு எதிர்மறையா தான் பன்னிட்டு இருக்கான் யோசிக்கிறான்" என்று சலிப்புடன் கூறினான். 

"என்ன ஆச்சி" என்று யாழிசை சீரியஸாக கேட்க பரத் "அவன் மேல இருக்க ஆசையிலையும் அவன் மேல இருக்க காதலாலையும் தான் அஞ்சனா எல்லாமே பன்னாலாம் அதனால அவன் சீக்கிரமாவே அஞ்சனாவை கல்யாணம் பன்னிக்க போறானாம்" என்று பரத் கூற யாழிசை "உன் அண்ணனுக்கு மூளைன்னு ஒன்னு இல்லைவே இல்லை பரத் ... அவன் மூளை முழுசும் அஞ்சனா தான் காதல்ன்னு உறி போய் இருக்கு" என்று கூற பரத் "கடுப்பேத்தாத நானே செம காண்டுல இருக்கன்" என்று கூறினான். "சரி உனக்கு அஞ்சனா அண்ணியா வர்ரதுல விருப்பமா இல்லையா" என்று யாழிசை கேட்க "சத்தியமா அவங்களை பத்தி தெரிஞ்ச அப்பறம் இல்லவே இல்லை" என்று கோபத்தில் பொறிந்தான் பரத். "ஓகே விடு மத்தத நா பாத்துக்றன்" என்று யாழிசை கூற பரத் "ம்ம்ம்" என்று கேட்க அவளும் "ம்ம்ம்" என்று கூறி கண்ணடித்தாள். 

அனைவரும் சென்னை வந்திறங்கியதும் மயில்சாமி, அஞ்சனா மற்றும் வாசுவிற்காக ஒரு கார் வந்திருக்க அவினாஷ், யாழிசை மற்றும் பரத்திற்காக ஒரு கார் வந்திருந்தது. வாசு அவர்களுடன் செல்லாமல் "நா டேக்ஸில போய்க்கிறன் ... நீங்க கிளம்புங்க" என்று கூற அஞ்சனா "வா வாசு உன்னை வீட்ல விட்டுட்டே போறோம்" என்று கெஞ்சலுடன் அழைக்க வாசு "இல்லைம்மா நீ ... நா சொன்ன மாதிரி நாளைக்கு வந்திரு ... நா இப்படியே கிளம்பறன் ... நாளைக்கு பாக்கலாம்" என்று கூறி அங்கிருந்து நகர அவர்களும் அங்கிருந்து நகர்ந்தனர். ட்ரைவரை பக்கத்தில் அமர வைத்து விட்டு  காரை எடுத்த யாழிசை வாசு அருகில் நிறுத்தி "ரைட் வேணுமா" என்று கேட்டாள். அவனோ அவளை முறைத்து விட்டு நகர பரத் "அண்ணா எப்படியும் என்னை ட்ராப் பன்ன வீட்டுக்கு தான் வர போறா வாயேன் ஒன்னா போலாம்" என்று அழைத்தான். ஏதோ ஜெர்மனியில் இருந்து பேசாத தம்பி பேசிய ஒரே காரணத்திற்காக ஏறிய வாசுவை யாழிசை அழைத்துச் சென்று அஞ்சனா முன் காட்டி கொடுத்து அவனை பதட்டமாக்கி விட்டாள். 


Leave a comment


Comments


Related Post