இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 09-06-2024

Total Views: 10726

அமிர்தவள்ளி இரண்டு வயது முடிந்து இருக்க அவளும் ஒரளவுக்கு பேசுவாள் அவள் எப்போதும் அமைதியாக இருக்கும் இளவரசன் கை பிடித்து வந்து விளையாட வைப்பாள்.  அவளுடன் மட்டும் நன்றாக பேசுவான் இளவரசன் அமிர்தவள்ளியின் மழலை பேச்சியை கேட்டு சில சமயங்களில் சிரித்து விட்டு அவள் தப்புதப்பாக பேசும் வார்த்தைகளை திருத்தி சொல்லி கொடுப்பான். 

   காதுகுத்து விழாவும் நல்லபடியாக முடிந்து மறுநாள் ஓய்வு எடுத்தவர்கள் அதற்கு மறுநாள் உறவில் சிலரை அழைத்துக்கொண்டு இரண்டு காரில் சென்றனர். 

   அந்த ஊரில் இருக்கும் போலீஸ் அதிகாரியை தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மூலம் விசாரித்து ஏற்கனவே அனைத்தும் போனில் கூறியிருந்தனர்.  அவரும் நேரில் வருமாறு கூறியிருக்க இவர்கள் நேரடியாக போலீஸ் நிலையம் சென்றனர். 

   கோதண்டத்திடம் அனைத்தும் விசாரித்த அதிகாரி சில போலீஸ்காரர்களை அனுப்பி அந்த மூன்று பேரையும் அழைத்து வரச்சொன்னார். 

   அவர்களும் போலீஸ் அழைக்கவே பயந்து கொண்டு வந்தனர்.  எதற்கு என்று தெரியாமல் வந்தவர்களுக்கு கோதண்டம் அங்கு அமர்ந்து இருப்பதை கண்டதும் எதற்கு என்று புரிந்து போனது.  கோதண்டம் மட்டும் இல்லாமல் நிறைய பேரை பார்த்தவர்களுக்கு பயம் வந்து விட்டது. யாரும் இல்லை என்று தான் கோதண்டத்தை எளிதாக ஏமாற்றி இருந்தனர். 

   இப்போது அவருடன் வந்தவர்களின் உருவத்தை பார்த்தே பயந்தவர்கள் போலீஸ் அதிகாரியின் கேள்விகளுக்கு அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டனர்.  அதிகாரி அவர்கள் கூறியதை அனைத்தும் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு இன்னும் இரண்டு மாதங்களில் பணத்தை வட்டியுடன் கொடுக்கவில்லை என்றால் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவதாக கூறி அவர்களை இரண்டு அடி அடித்தே அனுப்பி வைத்தார். 

   அனைவரும் அதிகாரிக்கு நன்றி கூறி தங்கள் ஊருக்கு வந்தனர். 

    பள்ளி விடுமுறை முடிந்ததால் இளவரசனையும் கயல்விழியையும் பள்ளியில் சேர்த்தனர்.  நால்வரையும் காரிலேயே பள்ளி அழைத்து சென்று கூட்டி வர டிரைவர் வைத்தனர். 

கோதண்டத்தையும் வயலுக்கு அழைத்து சென்று அனைத்தையும் மேற்பார்வை செய்ய கற்றுக்கொடுத்தனர்.  வீட்டையும் சுத்தம் செய்து அவர்களை தனியாக குடிவைத்தனர். 

   லலிதாவும் சும்மா இருக்காமல் அனைத்து வேலைகளையும் செய்தார்.  வீட்டினர் அதற்கு வேலையாட்கள் இருக்கும் போது நீ செய்யவேண்டாம் என்ற பிறகே நிறுத்தினார்.  ஆனால் பிள்ளைகள் பொறுப்பை அவர் எடுத்தக்கொண்டார்.  காலை உணவு பள்ளி எடுத்து செல்லும் உணவுகளை அவரே சமைத்து கொடுத்தார். 

    மாலை பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கும் எதாவது செய்து வைத்து காத்து இருப்பார்.  காரில் இருந்து இறங்கி நேராக அந்த வீட்டுக்குத்தான் செல்வார்கள் பிள்ளைகள். 

    அடுத்த இரண்டு மாதங்களில் கோதண்டத்திடம் பணத்தை கொடுத்து இருந்தனர்.  அதை அப்படியே வீரராகவன் இடம் கொடுத்து விட்டார் கோதண்டம். 

   வீரராகவன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து அமரவைத்து கோதண்டம் லலிதாவிடம் ஏதாவது தொழில் செய்கிறீர்களா இல்லை விவசாய நிலங்கள் வாங்கி விவசாயம் செய்கிறீர்களா என்று கேட்டதற்கு கோதண்டம் முதலிலேயே மறுத்துவிட்டார்.  உங்கள் நிலத்திலேயே வேலைக்கு வருகிறேன் தனியாக தொழில் வேண்டாம் என்று கூறிவிட்டார். 

   லலிதாவும் அதையே சொல்லவும் இருவரையும் அழைத்து சென்று பணத்தை பிள்ளைகள் பெயரில் டெபாசிட் செய்துவிட்டனர்.  

    ரங்கசாமிக்கு மகள் கலாவதி மட்டுமே வேறு யாரும் இல்லை.  கலாவதி இறந்த பிறகு தன் பேரனை பார்க்க வந்த விடுவார்.  அவருக்கு சிறிய வீடும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க அதில் மரங்கள் வைத்து இருந்ததால் தண்ணீர் விடுவது களைகளை நீக்க பழங்கள் பறிப்பது என்ற வேலைகளுக்கு ஆட்களை அழைத்து சென்று வேலைகளை முடித்து விட்டு நாராயணன் வயலுக்கு சென்று வருவார். 

   வேலை இல்லாத நாட்களில் பிள்ளைகளுடன் இருப்பார்.  லலிதாவை கண்டாள் தன் மகளை காணுவது போல் இருக்க பெரும்பாலும் நேரம் அவர்கள் வீட்டில் தான் இருந்து லலிதாவுடன் பேசிக்கொண்டு இருப்பார். 

   லலிதாவும் முறையில் அவர் மாமாவாக இருந்தாலும் அப்பா என்றே பாசமாக அழைப்பார்.  லலிதாவின் சிறுவயது கதைகளை கேட்டு மிகவும் வருந்துபவர் லலிதாவிற்கு உலக நடப்புகளை கூறி கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகம் எப்படி?.. அவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்று கூறுவார். 

    வருடங்கள் வேகமாக சென்றன.  கார்த்திகேயனுக்கு பதிநான்கு வயது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான். இளவரசன், சரவணன் ஆறாம் வகுப்பும் கயல்விழி மூன்றாம் வகுப்பு அமிர்தவள்ளி இரண்டாம் வகுப்பும் படித்து கொண்டு இருந்தனர்.  ஓர் விடுமுறை நாளில் ரங்கசாமி தாத்தா வீட்டிற்கு சென்று நீரில் கொட்டம் அடித்தவர்கள் பிறகு தோட்டத்தில் இருந்த பழமரங்களில் பழங்களை பறித்து சாப்பிட்டு விட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். 

    கார்த்திகேயன், முரளி, அன்பழகன் இன்னும் சில நண்பர்களுடன் கபடி விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். 

  சரவணன், இளவரசன் அமிர்தவள்ளி இன்னும் இரண்டு சிறு பெண்கள் வேறு பக்கம் விளையாடி கொண்டு இருக்க கயல்விழி அவர்களுடன் விளையாட செல்லாமல் கார்த்திகேயன் விளையாடும் இடத்தில் நின்று இருந்தாள். 

   அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்கள் கயல்விழியை அழைத்து 

   "ஏன் கயலு இப்படி அத்தான் பின்னாடி சுத்திட்டு இருக்க உன் அத்தானைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறாயா?..."  என்று கேட்டார். 

   கயல் பதில் சொல்லுவதற்குள் இன்னொரு பெண்மணி  "என்னக்கா இப்படி சொல்லுற நம்ப சின்ன ஐயா வெள்ளைகாரர் கணக்கா இருக்கார் அவர் இந்த கருவாச்சியையா கல்யாணம் பண்ணிப்பார்."

   "அவர் கலருக்கு ஏத்த ஒரு வெள்ளைக்காரியை தான் கல்யாணம் பண்ணிப்பார்"  என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த பெண். 

   ஆனால் சிறு பெண் கயல்விழிக்கு அவர்களின் கிண்டல் பேச்சு புரியாமல் " ஓஓ..."  வென பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள். 

   அதை கண்ட அந்த வேலை செய்யும் பெண்கள் அவளை சமாதானம் செய்தும் அழுவதை நிறுத்தவில்லை. 

   அவளின் அழுகுரல் கேட்டு கார்த்திகேயனும் அவனுடன் விளையாடியவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். 

   "விழி என்னாச்சு மா?..." எதாவது  பூச்சி கடித்து விட்டதே என்று கேட்டுக்கொண்டே வந்தவனை தாவி அணைத்து கொண்டாள். 

    "என்னடா விழி ஆச்சு?.." என்று கேட்ட போதும் அவள் பதில் செல்லாமல் அவனை அணைத்தபடி அழுது கொண்டு இருந்தாள். 

    அங்கு வேலை செய்தவர்களை பார்த்து  "அக்கா ஏன் அழறா?..."  என்று கேட்டான். 

    "சின்ன ஐயா ஒன்னும் இல்ல சும்மா கிண்டலாக பேசினோம்" என்று அவர்கள் பேசியதை சொன்னார்கள். 

    எதாவது பூச்சி கடித்துவிட்டதே இல்லை எதையாவது கண்டே பயந்து அழுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவர்களின் கிண்டல் பேச்சை கேட்டு அழுகிறாள் என்று அறிந்ததும் சற்று பதட்டம் நீங்கியவன். 

    அவளை தன்னிடம் இருந்து நீங்கியவன் அவள் முகத்தை பார்க்க அழுததில் கண்கள் சிவந்து கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. 

   திக்கி திக்கி  "அத்.. தான்...  நான் கரு...வாச்சி..யாம்..   என்னை....  கல்... யாணம்.. பண்ண...  மாட்... டிங்களாம்...  வெள்ளை... காரியை.. தான்... கல்... யாணம்.. பண்...ணுவிங்...களாம்...."  என்று அழுது கொண்டே கூறியதை கண்டவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. 

    "நானா அப்படி சொன்னேன்?..." என்றதும் அழுது கொண்டு இருந்தவளின் அழுகை சுவிட்ச் போட்ட மாதிரி நின்று புன்னகை செய்தது. 

    " அப்ப என்னை தான் கல்யாணம் பண்ணிப்பிங்களா அத்தான்" என்று புன்னகையுடன் கேட்டவளை தலையில் குட்டியவன் 

   "நீ சின்ன பெண் இப்படியெல்லாம் பேச கூடாது" என்றான். 

  " நான் ஒன்னும் சின்ன பெண்ணு இல்லை பெரிய பெண்ணு தான்.  நான் வள்ளி கூட சண்டை போட்டா நீ தானே சொல்லுவ அத்தான். அவ சின்ன பெண் நீ பெரிய பெண் அதனால் அவள் கூட சண்டை போடக்கூடாது என்று சொல்லுவ அத்தான்."

    என்றதும் அங்கு கூடியிருந்தவர்கள் கார்த்திகேயனை பார்த்து சிரித்தனர். 

    அவள் விடாமல் " சொல்லு அத்தான் நீ என்னை தானே கல்யாணம் பண்ணிப்ப?... " என்று கேட்டாள். 

   " மச்சான் சொல்லுடா தங்கச்சி கேட்குது இல்ல" என்று சிரிப்புடன் அன்பு சொல்ல அவனை முறைத்தவன்.  மீண்டும் அழ தயாரானவளை கண்டவன் 

    நான் இப்ப தான் படிச்சுட்டு இருக்கேன் படிச்சு முடித்து விட்டு வேலைக்கு போகனும் அப்ப தான் கல்யாணம் பண்ணுவாங்க.  அதுக்கு இன்னும் நிறைய வருஷம்  இருக்கு அதனால் நீயும் நல்லா படி இப்ப அதை பத்தி பேசற வயசு நமக்கு இல்லை"  என்று எதை எதையே பேசி அவளை திசை திருப்பினான். 

   அதிலிருந்து இன்னும் அவனை ஒட்டிக்கொண்டாள் பூனைக்குட்டி மாதிரி அவனை உரசிக்கொண்டே சுற்றுவாள்.   நண்பர்களுடன் எங்காவது சென்றாள் கூட உடன் செல்ல அடம்பிடிப்பாள். 

    முன் தினமே லலிதா அத்தையிடம் சொல்லி வைத்து அவளை அவன் வெளியே செல்லும் வரை வீட்டிற்குள்ளே வைத்து இருக்கும்படி செய்து விட்டே செல்வான். 

    அப்போதும் அன்பழகன் "பூனைக்குட்டி எங்கடா" என்று கிண்டல் செய்வான். 

   நாட்கள் செல்ல இப்போது பத்தாம் வகுப்பு சென்று இருந்தான் கார்த்திகேயன்.  பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு என்பதால் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால் பள்ளிக்கு காலையில் சீக்கிரம் சென்று மாலையில் தாமதமாக வருவதால் காரில் செல்வது இல்லை பஸ்சில் நண்பர்கள் உடன் சென்று வந்தான். 

   நன்றாக படிப்பவன் என்பதால் பள்ளியில் எல்லோரும் அவனுடன் நன்றாக பேசுவார்கள்.  ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் எல்லோரிடமும் பழகுவான்.  வசதியானவன் என்ற எந்த பந்தாவும் காட்டமாட்டான் பெண்களிடமும் நட்புடன் மட்டுமே பழகுவான் என்பதால் அவன் வகுப்பு பெண்கள் அனைவரும் அவனுடன் நன்றாக பேசுவர் பாடத்தில் சந்தோகம் வந்தால் இவனிடம் தான் வந்து கேட்பார்கள். 

    அப்படி ஒரு நாள் பள்ளி கிரவுண்டில் இருந்த மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டே இருந்தபோது பாடத்தில் சந்தோகம் கேட்டு அவன் அருகில் இரண்டு பெண்கள் அமர்ந்து அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தனர். 

   அப்போது அதே கிரவுண்டில் விளையாட்டு வகுப்பு என்பதால் விளையாடிக்கொண்டு இருந்த கயல்விழி கண்களில் அவர்கள் அமர்ந்து இருப்பதை கண்டவளுக்கு என்ன தோன்றியதே வேகமாக சென்று அமர்ந்து இருந்த பெண்ணுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையில் வந்து அமர்ந்து கொண்டாள். 

    கார்த்திகேயனுக்கு மறுபக்கம் அமர்ந்து இருந்த முரளியும் அன்பழகனும் சிரித்துக்கொண்டே  "பூனைக்குட்டி உரச வந்து விட்டது" என்றனர்.   

   பெண்கள் புரியாமல் பார்க்க 

   கார்த்திகேயன் நண்பர்களை பார்த்து முறைத்துவிட்டு கயல்விழியை பார்த்து  "விழி இங்க என்ன பண்ணுற வகுப்புக்கு போ டீச்சர் பார்த்தா திட்டுவாங்க" என்றான். 

     "இல்லை அத்தான் இப்போ விளையாட்டு வகுப்பு தான் அதான் வந்தேன்.  நீ ஏன் அத்தான் இந்த அக்காங்க கூட எல்லாம் பேசிட்டு இருக்க" என்றாள். 

   "விழி அவங்க என்னோட பிரண்ட்ஸ் அவங்களுக்கு பாடத்தில் டவுட் இருக்கு அதைத்தான் சொல்லி கொடுத்துட்டு இருந்தேன்.  இப்போ நீ கிளம்பு" என்றதும் 

    " சரி அத்தான்"  என்று கூறிவிட்டு அந்த பெண்களை பார்த்து முறைத்து விட்டு சென்றாள். 

   அதை கண்ட பெண்கள்  "என்ன அன்பு நடக்குது அந்த வாண்டு  முறைச்சுட்டு போகுது" என்றாள் ஒர் பெண். 

    " உனக்கு என்ன தோணுதோ அதேதான்" என்றான் அன்பு சிரித்துக்கொண்டே 

   "டேய் சும்மா இருடா" என்றான் புன்னகையுடன் கார்த்திகேயன். 

     "ஓஓஹே....  அவளுடைய அத்தானை நாங்க கடிச்சு தின்னுடுவோம் என்று எங்களை முறைச்சுட்டு போகுது அந்த வாண்டு" என்றதும் கார்த்திகேயனின் முகத்தில் மெல்லிய வெட்கம் வந்தது.  அதைக்கண்ட நண்பர்கள் கூட்டம் அவனை அதை வைத்தே கிண்டல் கேலி செய்தனர்.



Leave a comment


Comments


Related Post