இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 09-06-2024

Total Views: 10063

அடுத்து ஊர் திருவிழாவில் உறவினர் பெண் ஒருத்தி கயல்விழியை விட நல்ல கலராக இருக்க அவள் கார்த்திகேயனிடம் எதையோ அத்தான் அத்தான் என்று அழைத்து பேசிக்கொண்டு இருந்தாள். 

   வேகமாக வந்து அந்த பெண்ணை கீழே தள்ளி விட்டு விட்டு  "ஏய் இவர் என்னோட அத்தான், எனக்கு மட்டும் தான் அத்தான் யாராவது அத்தான் என்று கூப்பிட்டால்  கொன்னுடுவேன்" என்றாள். 

    கயல்விழியை விட ஒரு வயது பெரிய பெண்  பரமேஸ்வரி அவள் பெயர். 

   தன்னை விடச்சிறு பெண் தள்ளி விட்டதும் இல்லாமல் அத்தான் என்றாள் கொன்னுடுவேன் என்றதில் கோபம் கொண்டு வேகமாக எழுந்து 

  " ஏய் உனக்கு முன்னாடி இருந்தே அவர் எனக்கு அத்தான் தான் அப்படி தான் கூப்பிடுவேன்" என்றதும் சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கிருந்த ஒரு கல்லை அந்த பெண் மீது வீசி இருந்தாள். 

   இதை சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.  கார்த்திகேயன் கூட அவளின் பேச்சில் அதிர்ந்ததில் அடுத்த அவள் செய்த காரியத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

   பரமேஸ்வரியின் நெற்றியில் ரத்தம் கண்டு சுற்றி இருந்த உறவுக்கூட்டம் வேகமாக வந்து முதல் உதவி செய்தனர். 

   பரமேஸ்வரியின் ரத்தத்தை கண்டு சற்று பயந்தாலும் அவளின் உரிமையுணர்வு குறையாமல் கார்த்திகேயனின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

   "ஏன் விழி அவளை கல்லில் அடித்தாய்" என்று கேட்டான் கார்த்திகேயன். 

   "நீ எனக்கு மட்டும் தானே அத்தான் அவள் ஏன் உன்னை அத்தான் கூப்பிடுறா அதான் அடித்தேன்" என்றாள். 

    அவளின் அவன் மீதான அன்பை கண்டு அவனுக்கே என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான்.  அந்நேரம் அவளின் செயலை அறிந்த லலிதா வேகமாக வந்து அவனிடம் இருந்து பிரித்து நிறுத்தியவர் முதுகில் ஒங்கி அடித்தார். 

   " எதுக்குடி பரமேஸ்வரியை அடிச்ச" என்று மீண்டும் அடித்தார்.  தடுக்க வந்த கார்த்திகேயனை  கை பிடித்து நிறுத்தினார் சாந்தி. 

    "கார்த்தி அவள் தப்பு பண்ணியிருக்கா கண்டிக்காமல் விட்டால் இன்னும் அதிகமாக வம்பு இழுத்திட்டு வருவா  கொஞ்ச நேரம் அமைதியாக இரு" என்றார். 

  " அம்மா அவள் சின்ன பெண் சொன்னால் புரிந்துப்பா நான் அவளுக்கு சொல்லுறேன் அம்மா அத்தை எப்படி அடிக்கிறாங்க அவளுக்கு வலிக்கும் அம்மா" என்றான் வறுத்தமான குரலில் மகன் பேச்சு கேட்ட சாந்தியும் அவன் கையை விட்டு விட வேகமாக சென்று அவளை இழுத்து தன் பின் நிற்க வைத்துக்கொண்டான்.  

  " கார்த்தி கண்ணா அவளை விடு" என்றார் லலிதா. 

  " அத்தை" என்று அவன் பேசுவதற்குள் 

    " என் அத்தானை அவள் அத்தான் என்று ஏன் கூப்பிடுறா அதான் அடித்தேன்" என்றாள் கயல்விழி கோபமாக 

   அதை கேட்ட அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது. 

   "அவளுக்கு தான் முதலில் அத்தான் அப்புறம் தான் நீ வந்த" என்று சொன்னதும் அழ ஆரம்பித்தாள் கயல்விழி. 

    கார்த்திகேயனின் பேச்சை கூட கேட்காமல் அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்து கொண்டு அழுதாள். 

     அந்நேரம் வேகமாக வந்த நாராயணன் அவளை கார்த்திகேயனிடம் இருந்து பிரித்து தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று அவளின் கண்களை துடைத்து விட்டவர். 

   "இந்த தாத்தா சொல்லுறேன்  கயலுக்கு மட்டும் தான் கார்த்திகேயன் அத்தான் வேற யாருக்கு இல்லை"  என்றார். 

   அதை கேட்ட கயல்விழி "நிஜமாகவா தாத்தா?..." என்றாள். 

   "நிஜமாகத்தான் அவனை யார் அத்தான் என்றாலும் அது உறவில் கூப்பிடுற முறையாக மட்டும் இருக்குமே தவிர உரிமையாக கூப்பிடறதா இருக்காது." 

  " அந்த உரிமை உனக்கு மட்டுமே சொந்தம் அதனால் இனி யாராவது அத்தான் என்று கூப்பிட்டால் அவங்களை அடிக்க கூடாது கயலுமா" என்றதும் 

   " அப்ப எல்லோருக்கும் சொல்லுங்க தாத்தா" என்று அங்கு இருந்த வீட்டு ஆட்களை காட்டி " அத்தான் எனக்கு மட்டும் தான்"  என்று கூறினாள் கயல்விழி. 

   அதை கேட்ட ரங்கசாமி தாத்தாவும் அருகில் வந்து அவள் தலைகோதி " உனக்கு மட்டும் தான் அத்தான்  அதை இல்லை என்று செல்லும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை சரியா" என்றதும் அவரை கட்டிக்கொண்டாள். 

   அந்த கள்ளம் இல்லாத அன்புக்கு உலகில் வேறெதுவும் ஈடில்லை அல்லவா.   அனைவர் மீதும் அன்பு இருந்தாலும் அவனிடம் வைத்த அன்பை மட்டும் அந்த சிறுவயதிலேயே யாருக்கும் விட்டு கொடுக்க முடியவில்லை அந்த சிறு பெண்ணுக்கு வளர்ந்த பிறகு விட்டுக்கொடுத்துவிடுவாளா????.... காலத்தின் கையில் தான் இருக்கு. 

    ஒரு வேளை அவளே அந்த அன்பை வேண்டாம் என்றால்????..... 

    வருடங்கள் வேகமாக சென்றன 

    இப்போது கார்த்திகேயன் பதிரெண்டாம் வகுப்பும் சரவணன், இளவரசன் ஒன்பதாம் வகுப்பு கயல்விழி ஆறாம் வகுப்பு அமிர்தவள்ளி  ஐந்தாம் வகுப்பும் படித்து கொண்டு இருந்தனர். 

   பள்ளி இறுதி ஆண்டு என்பதால் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற வேண்டும் என்று  விடுமுறை நாட்களில் கூட பள்ளியில் சிறப்பு வகுப்புகள் வைத்தனர். 

   சென்ற வருடம் ஊரில் தொற்றுநேய்  பரவியதால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இறந்தனர்.  பெரும்பாலும் வயது ஆனவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இறந்தனர்.  அதில் நாராயணன் ரங்கசாமியும் பாதிக்கப்பட்டு இறந்து போயினர். 

   சில வருடங்களாக சந்தோஷமாக இருந்த குடும்பத்தினருக்கு இரண்டு பெரியவர்களும் அடுத்தடுத்து இறந்தது மீண்டும் வேதனைக்கு உள்ளாகினர்.  பெரியவர்கள் சில நாட்களில் மீண்ட போதும் பிள்ளைகளுக்கு தாத்தாக்களின் இறப்பை ஏற்று கொள்ள முடியவில்லை.   எப்போதும் தாத்தாக்களை கேட்டு அழுதனர்.  அவர்களை தேற்றி பழையபடி மாற்ற நிறைய நாட்கள் ஆகின. 

   இப்போதும் எப்போதாவது தாத்தாக்களின் பேச்சுக்கள் வந்து கொண்டு தான் இருந்தன.  சிறுபிள்ளை வாய்விட்டு கேட்டார்கள் என்றால் கார்த்திகேயன் ஒரளவு வளர்ந்துவிட்டதால் அழமாட்டான் ஆனால் தனிமையில் அமர்ந்து வருந்துவான் அவனின் இயல்பை அறிந்த அவனின் நண்பர்கள் முரளியும் அன்பழகனும் எப்போதும் அவனுடன் இருந்தனர்.  

   பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் அதிகமாக வைத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் தன்னை முழ்கிக்கொண்டான்.  மற்ற நேரங்களில் நண்பர்கள்ளுடன் பேச்சு விளையாட்டு என்று இருந்தான். 

    கோதண்டம் அதிகம் யாரிடமும் பேசமாட்டார்.  பெரியவர்கள் இருக்கும் வரை அவர்களே அழைத்து பேசுவார்கள். வீரராகவன் இடம் வேலை விசயமாக மட்டுமே பேசுவார்.    தன் தங்கையிடம்  மட்டுமே நன்றாக பேசுவார். பிள்ளைகளிடமும் அதிகம் பேசிப்பழக மாட்டார்.   பிள்ளைகளும் தங்களுக்கு எது தேவைப்பட்டாலும் இரண்டு தாத்தாக்களிடமே கேட்டு வாங்கிக்கொள்ளவார்கள். 

   அதனால் கோதண்டம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். 

   இளவரசனும் ஏனே அதே குணத்துடன் தான் இருப்பான் அனைவரும் அவனை அழைத்து பேசுவார்களே தவிர அவனாக வந்து அனைவரிடமும் சகஜமாக பேசமாட்டான்.  அனைவரும்  ஒன்றாக விளையாடும் போது அழைத்தால் கூட வர மறுத்துவிட்டு ஓரமாக அமர்ந்து விளையாடுவதை பார்ப்பான். 

   அவனை சகஜமாக்க எவ்வளவே வீட்டு ஆட்கள் முயன்றும் முடியாமல் தந்தையை போல என்று விட்டு விட்டனர். 

   சில நாட்களாக கார்த்திகேயன் பற்றி நிறைய பேச்சுகள் வரவே தன் தங்கையை பார்க்க வந்த கோதண்டம். 

   "சாந்திமா நம்ப கார்த்தி பற்றி சில பேர் என்னென்னவே பேசுறாங்கமா" என்றார் கோதண்டம். 

   "என்ன அண்ணா பேசறாங்க" என்றார் சாந்தி 

  " பஸ்சில் நிறைய பெண்ணுங்க கூடத்தான் எப்ப பார்த்தாலும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வரதா பேசுறாங்க சாந்திமா" என்றார். 

   "என் பிள்ளையை பற்றி யாரு தப்பா சொன்னது அவன் எல்லார்கிட்டேயும் நல்லா பேசுவான்.  அதை யாரு உன்கிட்ட தப்பு தப்பா சொன்னது" என்றார் சாந்தி கோபமாக 

  " அந்த வடிவேலு ஏழுமலையும் பேசிட்டு இருந்தாங்க சாந்தி மா" 

  " அவனுங்களா அந்த வடிவேலு வாயில்லா ஜீவன் மாட்டை போட்டு அடிச்சிட்டு இருந்ததை பார்த்து அவனை வேலைவிட்டு அனுப்பினான்.  அந்த ஏழுமலை அவனுக்கு சப்போர்ட் பண்ணான் என்று இரண்டு பேரையும் வேலையை விட்டு எடுத்துட்டான். அதனால் என் பிள்ளை பற்றி தப்பு தப்பாக பேசிறானுங்க அடுத்த முறை பேசினா என் கிட்ட வந்து செல்லு அவனை பஞ்சாயத்தில் நிக்க வச்சுடுறேன்" என்றார். 

    "அவனுங்க மட்டும் சொல்லியிருந்தா நானும் நம்பி இருக்க மாட்டேன் சாந்திமா அந்த என்று இருவர் பெயரை கூறி அவங்களும் பேசிட்டு இருந்தாங்க சாந்திமா அதான் உங்கிட்ட சொல்லி வைக்கலாம் என்று வந்தேன்" என்றார் கோதண்டம். 

   " அண்ணா என் பிள்ளை எல்லார்கிட்டேயும் நல்லா பேசி பழகுவான் அதை பார்த்திட்டு சொல்லியிருப்பானுங்க அவங்களுக்கு புரளி பேசுறது தான் வேலை அதனால் யார் என்ன சொன்னாலும் கேட்டுட்டு வராமல் அவனுங்களை திருப்பி கேள்வி கேட்டுட்டு வாங்க" என்று அந்த பேச்சை முடித்துவிட்டார் சாந்தி. 

    ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது பேசிக்கொண்டு இருந்தனர். எதையோ கேட்க சென்ற சாந்தியின் காதில் சின்ன ஐயா என்று கேட்டதும் அப்படியே நின்று விட்டார் சாந்தி. 

    "ஏன் அக்கா நம்ப சின்ன ஐயா பத்தி என்னென்னவே பேசறாங்களே அதெல்லாம் உண்மையா?.." என்றாள். 

    மற்றொரு பெண்ணே "ஆமான்டி நான் கூட சின்ன ஐயா பத்தி இப்படி தப்பு தப்பாக பேசறாங்களே என்று கோபப்பட்டேன் ஆனால் நேத்து என் புருஷன் டவுனுக்கு போயிட்டு வந்த அப்ப பஸ்சில் நடந்ததை சொல்லினார்.  ஆம்பிளை பிள்ளைங்க கூட நிக்காமல் பெம்பளை பிள்ளைங்க பக்கத்தில் நின்னுட்டு பேசிட்டு வந்தாராம்.  அதுவும் இல்லாமல் பெம்பளை புள்ளைங்களை தொட்டு தொட்டு பேசினாராம்.  என் புருஷன் ரொம்ப வறுத்தப்பட்டு சொன்னார்" என்று பேசிக்கொண்டே இருந்தனர்.  அதற்கு மேல் நின்று கேட்கமுடியாமல் உள்ளே சென்று விட்டார் சாந்தி. 

   அவர் அப்போதும் நம்பவில்லை என் பிள்ளை அப்படி எல்லாம் இல்லை என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டார். 

   இந்த விசயம் வீரராகவன் காதிலும் விழுந்தது அவரும் என் பையனை பத்தி எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு வந்து விட்டார். 

    இறுதி பரிட்சை நெருங்கிக்கொண்டு இருந்ததால் படிப்பில் மூழ்கி இருந்தவனுக்கு தன்னை பற்றி பின்னப்பட்டு வந்த சதி வலை பற்றி தெரியாமல் இருந்தான். 

    அடுத்தடுத்த கோதண்டம் வந்து சாந்தி இடம்  கார்த்திகேயன் பற்றி ஊரார் பேசியதை கூறிச்சென்றார் என்றால் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் பேசிவதும் அடிக்கடி காதில் விழுந்தது. 

    இப்போதும் அவரால் கார்த்திகேயனை தவறாக நினைக்க முடியவில்லை ஆனால் ஏன் அவனை பற்றியே எல்லோரும் பேசுறாங்க அவனிடமே கேட்கலாமா என்று எண்ணம் வரும் பின் அவனிடம் போய் எப்படி கேட்பது சிறு பிள்ளை என்றால் கேட்கலாம் அவனோ நெடுநெடு என்று  அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஆண்பிள்ளையிடம் எப்படி கேட்பது என்று தயங்கினார். 

   தாய்க்கு பிள்ளை எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும் குழந்தை தான் என்று அவனிடம் விசாரித்து இருந்தால் பின்னால் நடக்கப்போவதை தடுத்து இருக்கலாமோ?... 





Leave a comment


Comments


Related Post