இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -51 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 09-06-2024

Total Views: 12401

“ஓகே அவ வாயாலையே என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன் சொல்லட்டும் அப்புறம் கல்யாணத்தைப் பத்தி பேசிக்கறேன். அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் இப்படி குறுக்க விழுந்து தகராறு பண்ணிட்டு இருந்திங்க, யார் என்னன்னுலாம் பார்க்க மாட்டேன் சுட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன்.” என்றவன் அங்கியிருந்து சென்று விட்டான்.

அவன் போனதும் யுகியும் வளவனும் மார்த்தியைப் பிடித்துக் கொண்டனர்.

“எப்படி நீங்க சொல்லலாம் உங்க மகனைப் பத்தி உங்களுக்கு தெரியாதா.?”

‘அவருக்குமே எப்படி எல்லோருக்கும் முன்பு சொன்னோம்’ என்று தெரியவில்லை. மனதிற்குள் அத்தனை தடவை வேண்டாம் வேண்டாம், நந்தனுக்கு நிலா வேண்டாம் எனச் சொல்லிக்கொண்டே மேடை ஏறினாலும், அவரது வாய் அவருக்கு துரோகம் செய்து நந்தனுக்கு சார்பாக பேசிவிட்டது. இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா?

“இல்லடா அவன் நல்லா” என்று ஆரம்பிக்கும் போதே யுகி அவரை தீயாக முறைத்தவன்.

“உங்களை திருத்தவே முடியாதுப்பா. எப்போமே நந்து நந்துன்னு யோசிச்சி எங்களோட வாழ்க்கையை முடிச்சிக் கட்டிடுவீங்க, இப்போ பூனையோட லைப்பை முடிக்கப் பார்க்கறீங்களா?” என்றவன், 

"இவர் என்னடா சொல்றது. இனி பூனை சம்மதம் சொன்னா மட்டும் தான் அவன் இவப் பக்கம் வருவான், இவளை ஸ்டடியா இருக்கச் சொல்லு. அவன் மிரட்டுறான், கெஞ்சறான், கொஞ்சறான்னு அவன் பக்கம் சாஞ்சிடப் போறா..?“ என நிலாவை உறுத்துப் பார்த்தான்.

யுகி யூகித்ததுப் போல் நடக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது என அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். ஏன்? நிலாவிற்குக் கூடத் தெரியும். நந்தனை நினைத்தும் மனம் வேதனைக் கொள்ள செய்தது. அவள் முன் ஆறடி தேக்குமரம் நிலை குழைந்து நிற்கும் போது கவலை ஏற்படாமல் இருக்குமா அதும் தன் வாழ்நாளில் இன்று தான் முதல் முறை அவன் குரல் தாழ்ந்துப் போயிருக்கிறது.

யுகி, வளவன் இருவரும் நிலாவைப் பார்க்க அவர்களுக்காக தன் கவலைகளை மறைத்துக் கொண்டாள்.

வளவனுக்கும் தங்கையின் மீது நம்பிக்கை இருந்தது. தன்னை மீறி அவனை திருமணம் செய்துக் கொள்ள மாட்டாள் என்று.. ஆனால் நந்தன் மீது துளிக் கூட நம்பிக்கை இல்லை. அவன் எந்த எல்லைக்குச் சென்றும் சொன்னதை நடத்திக் காட்டுவான். அதற்கு இன்று காலையே சிறந்த உதாரணம்.

“அதான் அவன் போய்ட்டானேப்பா நீயும், ஷாலுவும் சாப்பிடுங்க." என மார்த்தாண்டம் மெதுவாக சொல்ல அவர் முகத்தைக் கூட நேருக்கு நேர் பார்க்க விரும்பவில்லை வளவன்.

“அம்மா போய் சாப்பிட்டு சீக்கிரம் வாங்க கிளம்புவோம்.” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு.

இவர்களின் சண்டையில் சம்மந்தமே இல்லாமல் ஷாலினி தான் பாதிக்கப்பட்டாள்.

அவளுக்கு என வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் திருமண நிகழ்வைக் கூட சந்தோசமாக அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டனர். 

வளவனுடன் கைக் கோர்த்து பல புகைப்படங்களை எடுக்க வேண்டும், அவன் ஊட்ட தான் வாங்க வேண்டும், தான் ஊட்ட அவன் உண்ண வேண்டும், குடும்பமாக நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், தோழிகள் கிண்டல் செய்ய தான் நாணி நிற்க வேண்டும் என பல வேண்டும் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தவளின் கனவை நந்தனும் வளவனும் போட்டிப் போட்டுக் கெடுத்து நார் நாராக்கி விட்டனர்.

ஷாலுவின் முகம் பார்த்ததும் இருந்த கோவமெல்லாம் வடிந்துவிட்டது வளவனுக்கு.

“ஷாலு.”

“ம்”

“வா சாப்பிடப் போலாம்”

“வேண்டாம்னு சொன்ன”

“அது கோவத்துல சொன்னதுடி வா.” 

“உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்.” என ஷாலினி ஆரம்பிக்க, 

“அம்மா தாயே இந்த உடம்பு தாங்காது என் மேல தான் தப்பு வா, சாப்பிடப் போலாம்.” என அவளது கையைப் பற்றி அழைத்தான். வீம்பு பண்ணாமல் அவனுடன் சென்றாள். 

ஷாலினிக்கும் கூட நிலாவை நந்தனுக்கு கொடுப்பதில் விருப்பமில்லை, வம்படியாக அவள் தான் வேண்டும் என அனைவருக்கும் முன் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் நிலாவை மணக்க விரும்பும்போது, ​​அவன் பக்கமும் யோசிக்கத் தோன்றியது. 

வளவனை பல வருடம் காதலித்து அந்த காதல் கைக் கூடும் வரை எந்த அளவிற்கு வேதனைப் பட்டாள் என்பது அவளுக்கும் தெரியும் தானே. 

ஒருவேளை அவளைப் போலவே நந்தனும் நிலாவை விரும்பி இருந்தால் கண்டிப்பாக அதற்கு தடையாக எப்போதுமே இருக்க மாட்டாள். 

“அம்மா இங்க என்ன நடக்குது..?” 

“எனக்கு மட்டும் என்னடி தெரியும், நம்ப கை மீறி போய் ரொம்ப நாள் ஆகுது இதுக்கு மேல மானம் போக அங்க என்ன இருக்கு. அதை தான் உன் பெரிய மருமகன் இன்னைக்கு காலையில்லையே வாங்கிட்டானே." என்ற கிருஷ்ணமாளிற்கு மிகுந்த கவலை. 

தூக்கி வளர்த்தப் பையன் தன் கையை மீறிப் போய்விடக் கூடாது என்று தானே மணிமேகலையிடம் கூட பையன் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார் 

. அனைவரும் இழிவானவர்கள் என பால்குடி மறவா பிள்ளையிடம் தினம் சொல்லி வளர்க்கும் போது மொழியை கற்றுக்கொள்வது போல் தானே 

இவர் சொல்வது தவறு என அவனுக்கு புரிய வைக்கும் மணிமேகலை கவனிக்கும் போது நந்தன் கைமீறிப் போயிருந்தான் 

“இது தப்பு நந்து இப்படி சொல்லக்கூடாது, எல்லோரும் சமம், யாரும் இங்க பெரியவீங்களும் இல்ல யாரும் இங்க தாழ்த்தப்பட்டவர்களும் இல்ல, புரிஞ்சுக்கோப்பா. என்று அவன் கன்னம் எடுத்துச் சொல்லும் போது 

, ​​“நீ தப்பு தப்பா சொல்றம்மா எல்லோரும் சமம்ன்னு சொல்ற?” என்ற ஐந்து வயது பையனை எதைச் சொல்லி மாற்றுவது என தெரியாமல் முழித்தார் 



நீட்டி சொல்லும் போது, ​​இதையெல்லாம் யாரைப் பார்த்து செய்கிறேன் என பார்க்க வேண்டும்.

குழந்தைகள் அனைவரும் வீட்டில் பெரியவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடத்தை தான் முதல் ஐந்து வயது வரைக்கும் கற்கிறார்கள். அதன்பிறகு இந்த சமூகமும் கூட பழகும் நண்பர்கள் மீதி பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி பார்த்தால் அஸ்திவாரம் போடுவது என்னவோ வீட்டில் இருப்பவர்கள் தானே. அதை தான் நந்தனுக்கு செய்திருந்தார் கிருஷ்ணம்மாள்.

கிருஷ்ணம்மாள் போட்ட விதை.. வெளி உலகம் தண்ணீர் ஊற்றி விருச்சகமாக வளர்த்திருக்க, இப்போது பயங்கர மரமாக வளர்ந்து நின்றான். அது விஷ மரமா? இல்லை அனைவருக்கும் நிழலும் தங்க இடமும் கொடுக்கும் ஆலமரமா என யாராலும் கணிக்க முடியவில்லை.

வளவனும் ஷாலினியும் பந்தியில் அமர, நிலா சாப்பிடப் பிடிக்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“அம்மு வந்து சாப்பிடு.”

“எனக்கு பசிக்கலண்ணா, நீங்க சாப்பிடுங்க நான் வெளியே நிற்கறேன்.”

“எங்கையும் போக வேண்டா என்னோட கண் முன்னாலையே நில்லு." என்றவனுக்கு நந்தனை நினைத்து தான் பயம். கோவமாக சென்றவன் நிலா தனியாக நிற்பதைப் பார்த்து அவளை ஏதாவது செய்து விடுவானோ என்று.

ஆனால் நிலா வளவன் சொன்னதை தவறாக எண்ணிக் கொண்டாள்.

'என் மேல நம்பிக்கை இல்லாம தானே முன்னாலையே நிற்க சொல்றான். அப்படி என்ன இவனை விட்டு ஓடிப் போய்டுவனா?' என்று எண்ணியவளின் முகம் சுருங்கிப் போனது.

“பூனை”

“ம்ம்”

“வா சாப்பிடப் போலாம்”

“எனக்கு பசிக்கலன்னு ஒரு போர்ட் அடிச்சி கழுத்துல மாட்டிக்கவா? எதுக்கு ஆள் ஆளுக்கு சாப்புடு சாப்புடுன்னு உயிரை வாங்கறீங்க? எனக்கு தான் பசிக்கலைன்னு சொல்றேன்ல.” என வளவன் மீது காட்ட முடியாத கோவத்தை யுகியின் மீது காட்டினாள்.

அவள் கோவத்தை யுகி புரிந்துக் கொள்ளாதவன் இல்லையே.. நேராக சாப்பாடு இருக்கும் இடத்திற்குச் சென்றவன், பாக்கு தட்டில் அவளுக்கு பிடித்த உணவாக பார்த்து பார்த்து வைத்து எடுத்து வந்தான்.

“இந்தா சாப்பிடு”

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா?” என கத்தியவளின் வாயில் ஜிலேபியை எடுத்து திணித்தவன்.

“பசிச்சா இப்படி தான் கத்த தோணும், நீ விளம்பரம் பார்க்கறதில்லையா?” என சிரிக்க அவன் சிரிப்பில் கோவத்தை விட்டவள் வாயை நன்றாக திறந்து காட்ட,

“தின்னு பூனை நிறைய வேலை இருக்கு”

“ஊட்டு” என்றவள் மாடிக்குச் செல்லும் படியில் அமர்ந்துக் கொண்டாள்.

அவர்களை யாரும் கவனிக்க முடியாது. யுகி நிலாவிற்கு ஊட்டி விட.. அவளும் அவனுக்கு அள்ளிக் கொடுத்தாள்.

“இங்க என்னடா நடக்குது? ஒரு நாளாவது தங்கச்சின்னு எனக்கு அள்ளிக் குடுத்துருக்கியா? இவளுக்குனதும் எங்க இருந்துடா எல்லோரும் வரிஞ்சி கட்டிட்டு வரீங்க..?” என ஷாலினி யுகியின் தலையில் அடிக்க.

“உனக்கும் வேணும்னா வாங்கி தின்னுடி, அதுக்கு எதுக்கு என்னைய கண்டு பொறாமை படற? வளர பையனை தலையில அடிக்கிறியே அப்புறம் எப்படி வீட்டு நெலவு இடிக்க வளர்ந்து என்கிட்ட கட்டுன பெட்டுல வின் பண்ணுவான்?” என்ற நிலா தட்டில் இருந்து அவளுக்கும் ஊட்ட யுகியும் கூட ஷாலினிக்கு ஊட்டி விட்டான்.

நிலாவின் கை யுகியின் தலையை தடவவும் மறக்கவில்லை.

“ஹப்பா ஒவ்வொன்னும் கேட்டு கேட்டு வாங்க வேண்டியிருக்கு எருமை..” என்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

"என்ன அண்ணியாரே பாசமலர் படத்தை ஓட்ட ட்ரை பண்றியா?"

“நீ உன் அண்ணகிட்ட ஓட்டல..”

“ஆமா அப்படியே ஓட்டினாலும் உன் புருஷன்கிட்ட விளங்கிடும்." என நொடித்துக் கொண்டாள் நிலா.

அவளின் பேச்சிலயே ஏதோ மனதாங்கல் ஏற்பட்டிருக்கிறது என புரிந்துக் கொண்ட ஷாலினியும் யுகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சாப்பிட்டுக் கைகழுவி வந்த வளவன், “யுகி நீ போய் சாப்பிடு இதுக்கு மேல நான் பார்த்துப்பேன்.” என்றான்.

“யாரைப் பார்த்துப்ப?” என நிலா விளையாட்டாக தான் கேட்டாள். இவ்வளவு நேரம் இருந்த நல்ல மனநிலையில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்தது நினைவில் இருந்து சற்று விலகி இருந்தது.

“உன்னைய தான். இனி உன்னைய நந்துகிட்ட இருந்து பாதுகாக்கறது தான் எங்க ரெண்டுப் பேருத்தோட முழுநேர டியூட்டி. ஆள் மாத்தி ஆள் உன் பின்னாடியே இருக்கனும் இல்லனா அவன் ஏதாவது சொல்லி உன் மனசை மாதிடுவான்.” என்று சாதாரணமாக சொல்ல, நிலாவிற்கு சுருக்கென்றது. உள்ளுக்குள் கோவம், வலி, வேதனை அனைத்தும் ஒரே நேரத்தில் மின்சாரம் போல் தாக்கியது என்றால் மிகையாகாது.

அதில் யுகி வைத்திருந்த தட்டைத் தூக்கி வீசியவள். “அப்போ எனக்கு பசிக்குமேன்னு நீ சாப்பாடு கொண்டு வரல. எங்க அவரு என் பக்கம் நெருங்கிடுவாரோன்னு பயந்து வேவுப் பார்க்கத் தான் சோறுக் கொண்டு வந்துருக்க.. ச்சை ரெண்டு பேரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவர் கூப்பிட்டதும் பின்னாடியே போய்டுவேன்னா.. என்மேல நம்பிக்கை இல்லாத யாரும் என்கிட்ட பேசணும்னு அவசியம் இல்ல. இனி என் மூஞ்சுல முழிச்ச அப்புறம் கேவலமா பேசிடுவேன்.” என யுகியை மட்டும் திட்டுவிட்டு கண்களில் கண்ணீர் துளிர்க்க அங்கிருந்து ஓடி விட்டாள்.



Leave a comment


Comments 2

  • P Priyarajan
  • 3 weeks ago

    Waiting for nxt update😍😍😍😍😍 💕💕💕💕💕💕

  • P Priyarajan
  • 3 weeks ago

    Waiting for nxt update😍😍😍😍😍 💕💕💕💕💕💕


    Related Post