இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -53 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 09-06-2024

Total Views: 14800

தட்டிய வேகத்தில் அவன் கைப் பட்டு அலைபேசி கீழே விழுந்தது. அப்படி ஒன்று இருப்பதே அப்போது தான் நியாபகம் வர.. கீழே விழுந்ததை எடுத்து பார்த்தான். 

அதுவோ உயிர் இழந்து கிடந்தது. 

உயிர்பித்தவன், மார்த்தாண்டத்திடம் இருந்து பதினைந்து முறை அழைப்பு வந்திருக்க நெற்றியை தடவிக்கொண்டான். 

அலைபேசி உயிர் பெற்றதும் மார்த்தாண்டத்திற்கு செய்தி வர உடனே அழைத்து விட்டார். 

“இவர் ஒருத்தர், கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டாரு.” என முனவிக் கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட, அவரும் விடாமல் அழைத்தார். 

“தம்பி போனை எடுப்பா இல்லனா வீட்டுக்காவது வாப்பா..” என செய்தி அனுப்பினார். 

அதைப் பார்த்தவனுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்ற மீண்டும் அலைபேசியைத் துண்டித்து விட்டு, “ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ, அந்த வீட்டுக்கு வர முடியாது.” என செய்தி மட்டும் அனுப்பினான். 

அவன் தான் போலீஸ் ஆயிற்றே கிரிமினலாக யோசிக்க சொல்லியா தர வேண்டும்? 

தான் அழைத்தால் வர மாட்டான் கண்டிப்பாக நிலா பேசினால் வர வாய்ப்பு இருக்கிறது என அவரை நினைக்க வைத்து விட்டான். 

அவர் அப்படி தான் நினைப்பார் என நந்தனுக்கு தெரிந்ததால் என்னவோ தில்லாலங்கடி வேலையைப் பார்த்து வைத்தான். 

விடிந்தும் விடியாமலும் நிலாவின் வீட்டின் முன் வந்து நின்றார் மார்த்தி. 

“அண்ணா.. என்ன இவ்வளவு காலையில வந்துருக்கீங்க.?” 

“நிலா எங்கம்மா?” 

“தூங்குறாண்ணா” 

“கொஞ்சம் எழுப்பி விடும்மா” 

“ஏன் அண்ணா ஏதாவது பிரச்சனையா..?”அவர் முகம் பொலிவு இழந்து இருப்பதைப் பார்த்து கேட்டார். 

“நந்து நைட் வீட்டுக்கு வரவேயில்ல ராஜி, போன் பண்ணாலும் கட் பண்ணி விடறான்.” 

“இப்போ என்ன அண்ணா பண்றது?” 

“நிலாவை போன் பண்ணிப் பார்க்க சொல்லும்மா..” 

“சரிண்ணா இருங்க அவளை எழுப்பிட்டு வரேன்.” என்றவர் நிலாவின் அறையை நோக்கிப் போக. வளவன் மாடியில் இருந்து இறங்கி வந்தவன், நடுக் கூடத்தில் மார்த்தியைப் பார்த்ததும், “ஏதோ வில்லங்கத்தை இழுத்துட்டு வந்துருப்பாரு இல்ல அவன் தான் இவரை அனுப்பி வெச்சிருப்பான்.” என எண்ணிக்கொண்டே வேகமாக வந்தான். 

"என்ன மாமா?" வந்ததும் வராமலும் வளவனின் வார்த்தை முன் வந்து விழா, 

“ஏன் வந்தேன்னு கேக்கறீயா?” 

“நான் எப்போ அப்படி கேட்டேன்?” 

“பின்ன வந்ததும் என்ன மாமான்னு கேக்கற? வாங்கன்னு சொல்லக் கூட முடியலையா மாப்பிள்ளை.?” 


“அப்படிலாம் இல்ல மாமா..” என்று தயங்கியவன், “வாங்க.. என்ன இவ்வளவு காலையில்லையே வந்துருக்கிங்க?” என அவன் கேக்க வேண்டியதையும் சேர்த்துக் கேட்டுவிட்டான். 

“நிலாவைப் பார்க்க தான் வந்தேன்.” 

“எதுக்கு?” என்றவன் குரலில் கடுமை ஏறி இருந்தது 

“நேத்து நந்து வீட்டுக்கு வரல.” 

“அதுக்கு?” 

“நான் போன் பண்ணா கட் பண்ணி விடறான் அதான் நிலாவை பண்ண சொல்லலாம்னு..” என்று முடிக்கும் முன்பே, 

“அவன் கம்முனு இருந்தா நீங்க மாட்டீங்க போல மாமா போலாம்னு நினைக்காதீங்க நீங்க என்ன பண்ணாலும் அவன் நினைக்கறது நடக்காது.” 

“என்ன வளவா இப்படி பேசற?”

“வேற எப்படி பேச சொல்றிங்க நிலாவை அவன் விசியத்துல உள்ள இழுக்காதீங்கன்னு தான் நேத்தே சொல்லிட்டேன்ல.” என வளவன் கத்திக் கொண்டிருக்க, ராஜி நிலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.  

"வாங்க மாமா."  

"ம்ம்ம்ம் நிலா."  

"மாமா இப்போ தானே சொன்னேன்." என வளவன் ஆரம்பிக்க அவனை முறைத்த ராஜி, “அண்ணா நிலா போன் பண்ணுவா, நீங்க என்ன பேசணும்ன்னு சொல்லுங்க.” என்றார் உறுதியாக.  

“அம்மா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சொல்..”  

“அவ பேசுவா வளவா” என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லி விட. வளவனால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.  

நிலா தன் அண்ணனை தான் பார்த்தாள் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதித்திருக்கிறான். இதில் அவனை மீறி நந்தனிடம் பேசினால் ஒன்று கோபப்பட்டு பேசாமல் போய் விடுவான் இல்லையா அவளையே வெறுத்து விடுவான்.  

வளவன், “பேசு” என தலையை ஆட்டிய பிறகு தான் நிலா அவளது அலைபேசியை எடுத்தாள்.  

“மாமா அவர் நம்பர்”  

“உன்கிட்ட இல்லையாம்மா”  

“இல்லை மாமா..”  

பொன் நம்பரைக் கூட வைத்திருக்காத பெண் தான் வேண்டும் என பிடிவாதமாக நிற்பவனை என்று சொல்லி மாற்றுவது.  

“இந்த நம்பர் தாம்மா” என்று அவர் அலைபேசியைக் கொடுக்க,  

அதில் இருந்து நந்தனின் எண்ணத்தை தன்னுடைய அலைபேசியில் குறிப்பிட்டு நந்தனுக்கு அழைத்தாள்.  

இரவு தந்தை முழுவதும் அழைப்புக்கு பெப்பேக் காட்டியாகி விட்டது. இப்போது நிலாவின் அழைப்பு வரவும் அவளது அழைப்பையும் துண்டித்து விட்டான் உடனே எடுத்தால் மார்த்தியின் மனம் கஷ்டப்படும்.  

“அவர் கட் பன்றாரு மாமா”  

“அதான் கூப்புட்டுடில போதும் விடு” என வளவன் குறுக்க வந்து விழ, “இன்னொரு தடவைக் கூப்பிட்டுப் பாரும்மா.” என்றார் மார்த்தி.  

“உங்களுக்குலாம் என்ன பிரச்சனைன்னு புரியல.  

"வளவா அமைதியா இரு."   

“அம்மா...”  

“உன்னை அமைதியா இருன்னு சொன்னேன்.”  

“என்னமோ பண்ணுங்க எனக்கு அம்மு மேல நம்பிக்கை இருக்கு, நான் சம்மதம் சொல்லாம அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டா.” என்று கத்திவிட்டு அங்கிருந்தால் அழுத்தம் தான் கூடும் என சென்று விட்டான்  

“நீ உன்னோட ரூம்ல போய் ட்ரை பண்ணிப் பாரும்மா நான் வீட்டுக்குப் போறேன்.” என்றாள்.

நிலாவும் சரி என தலையை ஆட்டியவள், அவளது அறைக்குச் சென்று இரண்டு முறை அழைத்துப் பார்த்தாள்.

மூன்றாவது முறை அழைப்பை ஏற்றவன். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“ஹெலோ” குருவியாக சிணுங்கியது குரல்.

“லைன்ல இருக்கீங்களா? நான் தான் பேசறேன்.”

“நாந்தாங்கறது பேரா..?” பூனையை வேட்டையாடி விடும் வேகத்தில் புலியின் குரல் வர, 

“நிலா பேசறேன்” 

“அப்படி யாரையும் எனக்கு தெரியாது?”

“என்ன என்னைய தெரியலைன்னு சொல்றாரு” என்றவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அது..”


“ஹலோ ஹலோ” என்று கத்தியவள், “என்ன கேக்க மாட்டிங்குது? லைனை கட் பண்ணித் தொலஞ்சிட்டானா?” என அலைபேசியைப் பார்க்க, அழைப்பில் தான் இருந்தான். அந்த பக்கம் அவன் செறும்பல் சத்தம் கேட்டது, ஒரு நொடி அமைதியானவள்.

“வீட்டுக்கு வரலையா நீங்க?” என்றாள் மெலிதாக.

“---- ரெஸ்ட்ராண்ட்டுக்கு 10 மணிக்கு வர.”

“இல்ல...“ என பட்டென்று சொன்னவள், அவன் என்ன நினைப்பானோ என நாக்கை கடித்துக் கொண்டு,  “அண்ணா கோவப்படுவான் நான் வரல.” இந்த நாலு வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவளுக்கு.

“பத்து மணி வரைக்கும் தான் உனக்கு டைம் வர, வரணும்.. இல்லனா நானே வர வெப்பேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.



Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 3 weeks ago

    Ud romba chinnatha irukku..... Spr going waiting for nxt update😍😍😍😍 💕💕💕💕


    Related Post