இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -54 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 10-06-2024

Total Views: 15671

'போவதா? வேண்டாமா? என்ன செய்வது?' என்று புரியாமல் நகத்தை கடித்தாள்.

நேரம் ஆக ஆக அடி வயிற்றில் பய பந்து உருண்டது. வளவனுக்கு தெரியாமல் சென்று, பின்பு தெரிந்தால் என்ன செய்வது என மனம் கேள்வி கேக்க.. செல்வதா? வேண்டாமா? என மீண்டும் அரைமணி நேரம் அவளுக்குள்ளேயே பெரும் போராட்டம் நடந்தது.

“குளிச்சிட்டு வருவோம் அப்புறம் முடிவு பண்ணலாம்.” என குளிக்கச் சென்றாள். குளித்து வந்ததும் தலையை வாரியவள்.. போக வேண்டாம் இப்படியே இருப்போம் என பலமுறை சொன்னாலும் கை, வண்டிச்சாவியை எடுத்தது.

அறையை விட்டு வெளியே வந்தவளை பார்த்த ராஜி, ‘எங்க கிளம்பிட்ட?’ என்று எதுவும் கேக்கவில்லை.

வீட்டிற்கு தெரியாமல் போவது வேறு குற்றவுணர்வாக இருந்தது.

“அம்மா கோவில் வரைக்கும் போய்ட்டு வரேன்ம்மா.”

“இட்லி இருக்கு சாப்புட்டு போ.”

நந்தன் வாங்கி தருவதை சாப்பிட வேண்டுமே என்பதற்காக, 

“இல்லம்மா போய்ட்டு வந்து சாப்புட்டுக்கறேன், அண்ணாக்கிட்ட சொல்லிடு.” என்று நிற்காமல் சென்று விட்டாள்.

தாய் அறியாதா சூழ் உண்டா? தன் மகள் நந்தனை தான் பார்க்கப் போகிறாள் என்று தெரியும் இருந்தாலும் வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. மனம் வளவனிடம் நிலா மாட்டிக் கொள்ளக்கூடாது என அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தது.

“அம்மு”

“சொல்லும்மா”

“பார்த்துப் போ உன் அண்ணன் ஆபிஸ் விசயமா வெளிய போயிருக்கான்.”

'அவன் போனா என்ன?' என்பது போல் நிலா பார்க்க,

“நீ வெளியே இருக்கறதைப் பார்த்தா பேசுவான்.” என அவள் முகம் யோசிப்பதை வைத்து சொன்னார்.

“ம்ம்” என தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுக்கப் போக.. அவள் அருகில் ராயல் என்பீல்டில் வந்து நின்றான் நந்தன்.

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் ஸ்கூட்டியை விடப் போக சட்டென்று எட்டிப் பிடித்துவிட்டான்.

“எப்போ பாரு விழுந்து வாரி வைக்கறது தான் வேலையாடி. ஒழுங்கா வண்டிக்கு ஸ்டாண்டைப் போட்டுட்டு வந்து வண்டியில ஏறு.” என கடுமையாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“இல்ல நா..ன் எ..ன்..னோட வண்டியில்லையே” சொல்லி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.

வண்டியை விட்டு இறங்கியவன் அவளது வண்டியை வீட்டின் உள்ளே நிறுத்தி பூட்டி சாவியை எடுத்துக் கொண்டான்.

காக்கி சட்டையில் கம்பீரமாக நின்றவனைப் பார்க்கும் போது நிலாவின் மனது அவன் அழகில் ஊஞ்சலாட முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“என்னைய கல்யாணம் பண்ணிக்க ஆளா பறக்குறாரே அப்போ அந்த உஷா என்ன ஆனா? இவரை கட்டிக்க முடியாதுன்னு ஓடிட்டாளோ, எதுமே தெரிய மாட்டிங்குதே.” என மண்டை கண்டதையும் யோசிக்க.

“சாவி என்கிட்ட இருக்கு” என்றான்.

“ம்ம்”

“ஏறு.”

“இல்ல கார்ல..” என்றவளுக்கு கடைசியாக சென்ற பைக் பயணம் கண் முன் நிழலாடியது.

எவ்வளவு மூர்க்கமாக இருந்தான் அன்று மட்டும் ஏதாவது எதிர்த்து பேசிருந்தால் இன்று தன்னை புதைத்த இடத்தில் மரமே வளர்ந்துருக்கும் அந்த கோவம் இப்போதும் கூட உடல் நடுங்க செய்தது.

“ஏன் மகாராணி கார்ல தான் வருவீர்களா?” என்றவனின் அனல் வார்த்தைகளில் முகம் வாட அவன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அவனுக்கும் அவளுக்கும் இடையே ஒரு ட்ரெயினே புகும் அளவிற்கு இடைவெளி இருந்தது.

அதைக் கண்ணாடியின் வழியேப் பார்த்தவனுக்கு அளவிட முடியாத அளவிற்கு கோவம்.

“இவள வழிக்குக் கொண்டு வரதுக்கே மெனக்கெடணும் போல, இதுல இவன் அண்ணன் வேற..?” என்று முனவியன் வேகமாக பிரேக் போட.. அவன் முதுகுலையே நச்சென்று மோதினாள்.

“ஐயோ!!!” என வேகமாக விலக, அவள் கையைப் பிடித்து இழுத்து இடுப்போடு அணைத்தவன்.


“ஒழுங்கா இடுப்போட கைப் போட்டு பிடிச்சி உக்காரு, இல்லை இப்படியே கீழே தள்ளி மேலே வண்டியை ஏத்திடுவேன்.”

“ஹா ... யாராவது பார்த்தா...?" என்றவளுக்கு சாதாரணமாக அமர்ந்திருக்கும் போதே ஊரை தங்களை தான் வேடிக்கைப் பார்ப்பது போல் இருந்தது. இதில் இடுப்போடு அணைப்பதா? என்று நினைத்தவளுக்கு உடல் பதற.. மேலும் இரண்டு அடி தள்ளி உக்காரப் போனாள்.

“இன்னும் தள்ளி உக்கார்ந்தினா விழுந்து வாரிடுவ..”

“நீங்க யூனிபார்ம் போட்டுருக்கீங்க”

“போடலைன்னா கட்டிப்பிடிச்சு கிழிச்சிடுவ.”

“அது..” என்று இழுத்தவளுக்கும் ஆசை தான் அவனை கட்டி முதுகில் தலை சாய வேண்டும் என்று.. ஆனால் காட்டான் எப்போதும் மனிதனாக இருப்பான் எப்போதும் காட்டானாக காட்டு கத்துவான் என்று தெரியாதே அதற்கு பயந்து தானே கல்யாணம் வேண்டாம் என அழுது காய்ச்சல் கண்டது உடம்பு. 

சீருடையில் இருக்கும் போது கட்டிப் புடிக்கச் செய்தால் அவனை அல்லவா தவறாக நினைப்பார்கள்.? இப்போதே ஒரே வண்டியில் இருவரும் செல்லும் போதே ஊரில் பலர் பலவிதமாக பேசுவார்கள் இதில் எப்படி ஆசைப்பட்ட மாதிரி செய்ய.

“கேட்டதுக்கு பதில் வரவில்லை.”

“நீங்க பெரிய போஸ்டிங்ல இருக்கீங்க இப்படி நாலுப்பேர் பார்க்க பப்ளிக்ல..” என்றவளை கண்ணாடியில் பார்த்தவன் மந்தகாசமாக சிரித்துக் கொண்டான்.

அவனின் பெயருக்கு ஒரு கெடுதல் வந்திடக்கூடாது என நினைக்கிறாள். எவ்வளவு கோவம் இருந்தாலும் அவள் பேசும் வார்த்தைகள் பூந்தென்றலாக வீசிக் கோவத்தை தணிக்கச் செய்தது.

வண்டி ஒரு திறந்தவெளி உணவகத்தில் நின்றது.

நிலா வண்டியை விட்டு இறங்க, அங்கு இருந்த பெண்களின் பார்வை நிலாவை பொறாமையில் சுட்டது.

நந்தனின் ஒவ்வொரு அசைவும் அந்த கோபியர் கொஞ்சும் கண்ணனை ஒத்திருக்கும், அந்தக் கண்ணனை விரும்பாதா பெண்களும் உண்டா..?

நந்தனையும் அப்படி தான் வண்டுப் போல் மெய்த்தது பெண்களில் கூட்டம்.

இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம் என ஒன்று விடாமல் சமூக வலைத்தளம் அனைத்திலும் நந்தனை பின்தொடர்கிறார்கள். அவனின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறார்கள். அவன் பார்வை தன் மீது படாதா? என ஏங்கி தவிக்கும் பெண்களுக்கு, நிலா நந்தனுடன் ஒன்றாக ஒரே வண்டியில் வந்தால் பொறாமை ஏற்படாமல் இருக்குமா...?

அவர்களின் பார்வையில் தெறிக்கும் அனலை உணர்ந்த நிலா நந்தனை திரும்பிப் பார்க்க, அவன் விழிகளோ அவள் காலை அலங்கரித்திற்கும் கொலுசைப் பார்த்துக் கொண்டிருந்தது.

இருவரும் வண்டியின் அருகில் நிற்க.

உள்ளேப் போவதா? இல்லை இப்படியே அனைவருக்கும் காட்சிப் பொருளாக நிற்பதா? என்று தெரியாமல் சுற்றி இருப்பவர்களைப் பார்த்தாள்.

பத்து நிமிடம் நந்தனின் விழிகள் அவளது காலை விட்டு நகரவேயில்லை. அவளும் தயங்கி தயங்கி பார்த்துக் கொண்டிருக்க பத்து நிமிடம் கழித்து, “வா” என்றான் ஒற்றை வார்த்தையில்.

அவன் அழைத்ததும் பின்னால் போனவள், அவன் ஒரு மேஜையை பார்த்து அமர எந்தப் பக்கம் அமர்வது என்று தெரியாமல் நின்றாள்.


Leave a comment


Comments 3

  • K Kanimozhi K
  • 3 weeks ago

    I don't understand one thing on what point of view she is impressed by Nanthan, like insulting her whole family..??? She knew very well how she and her whole family been insulted by Nanthan and his grandmother... then how she falls for him.. she is taking granted of valavan and yugis love...

  • K Kanimozhi K
  • 3 weeks ago

    I don't understand one thing on what point of view she is impressed by Nanthan, like insulting her whole family..??? She knew very well how she and her whole family been insulted by Nanthan and his grandmother... then how she falls for him.. she is taking granted of valavan and yugis love...

  • P Priyarajan
  • 3 weeks ago

    Eagarly waiting for nxt epi😍😍😍💕💕💕💕💕💕💕💕💕


    Related Post