இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 11-06-2024

Total Views: 8509

பாகம்-10

அவளின் ஒற்றை  முத்தம் அவன் மேனி சிலிர்க்க வைத்தது. அன்னையிடம் பல முறை வாங்கிக் கொள்பவன் தான். ஏன் பல சமயம் தங்கைகளும் கொடுத்திறார்கள். சிறு வயதில் . ஆனால் இது வேறு மாதிரியாக இருந்தது. வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட... காலத்தில் இருந்தே எந்த பெண்ணும் இவனிடம் நெருங்கியதில்லை. அல்ல! இவனும் நெருங்க விட்டதில்லை. தீச்சுடும் பார்வை இல்லை. ஆனால்  பேசும்போதே" என்னமா தங்கச்சி என்ன வேணும்? என்ன தங்கச்சி வீட்டுல எல்லாரும் சொகமா ?" இப்படி ஆரம்பித்தால்  எந்த பெண் தான் அருகில் வருவாள் ? பெண்கள் நெருங்க வந்தாலும் இவன் தான் நகர்ந்து விடுவானே? அப்படிப்பட்டவனா இப்போது வேறு ஒரு பெண்ணிடம் முத்தம் வேண்டும் என்று ஏக்கமாக நிற்கிறான்? வேறு ஒருத்தியா ? அல்லது இவனின் கற்பை களவாட வந்த அவனவளா?
எந்த சடங்கும் நடக்கவில்லை என்றாலும் இவன் தாலியை வாங்கி கொண்டவள் அவள்தானே . 
ஏக்கமாக பார்வை பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.
அவன் அருகில் வந்து நின்றாள். இவனுக்கு படபடப்புடன் இதயம் அடித்தது. 
அருகில் வந்தவள் அவன் முகத்தை ஒற்றை விரலில் தடவினாள் . "இந்த பையனுக்கு நிச்சயம் கிடைக்கும். இப்ப இல்ல. வேற ஒரு தடவ" லேசாக கன்னம் தட்டி கிளம்பினாள். 
அவனோ வாய்க்குள் பூச்சி போனாலும் கவலை இல்லை என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 
சென்ற முறை போலவே இம்முறையும் அவரவர்  பாதையில்  அவரவர் பிரயாணித்தனர். இருவருக்குமே மனம் ஒரு நிலையில் இல்லை. அவனிடம் இருந்த படபடப்பு இவளுக்கு வந்து விட்டதோ? வசூல் ராஜாவில் கமலுக்கு வருவது போல இவனுக்கும் வயிற்றில் பட்டம் பூச்சி பறக்க ஆரம்பித்து விட்டது . 
தான் தன்  நிலையில் இல்லை. அறிந்து கொண்டவள், மனதை மாற்ற ரேடியோவை ஆன்  செய்தாள் .
யாருக்கெல்லாம் சித்தார்த் ரொம்ப பிடிக்கும்?அவர் இப்படி, அவர் அப்படி என்று சொல்லி பிறந்த நாள் விழகி காணும் செல்வி அவங்களுக்கு இந்த பாடலை வழங்குகிறோம் என்று பல நிமிடங்கள் பேசியப்  பெண் இறுதியாக பாய்ஸ் படத்தில் இருந்து இந்த பாடல்.... விளம்பரத்திற்கு பிறகு... எங்கையும் நகராம இங்கையே காத்திருங்கள் என்று நம்மை சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள் . விம் சக்தி விளம்பரம் முதல் சக்தி மசாலா விளம்பரம் வரை வந்து கொண்டே இருந்தது. அதை  எல்லாம் நம் நாயகி  எங்கே கவனித்தாள்? இந்த வர்ணனை, விளம்பரம் எல்லாம் உங்களுக்கும் எனக்கும்தான். பிறந்த நாள் என்ற வார்த்தையில் அவள்  மனம் எங்கோ சென்றது. தனக்கும்,செந்திலுக்கும்  பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும். என்னை போல இருக்குமா?அல்லது அவரை போல இருக்குமா? குழந்தையின் முதல் பிறந்த நாள் எப்படி கொண்டாடுவது? இன்றைய நிகழ்வையும் தனது  வருங்கால  வாழ்க்கையும் சேர்ந்து முடிச்சுப் போட்டு பல கணக்குளை செய்து கொண்டிருந்தது மூளை. இதே போல பெரிய ஹோட்டலில்? அவரு ஓகே சொல்லுவாரா ? 
ஏதோ பழமொழி சொல்வார்களே, "அடியேன்னு கூப்பிட பொண்டாட்டிய காணுமாம் ., அதுக்குள்ள எட்டாவது புள்ளைக்கு பேரு  வெச்சன்னான்னு " அது போலத்தான் இவள் நிலைமையும் இருந்தது. இப்போதைக்கு வரப்போகும் பாடலை கேட்டு மகிழ்ச்சி அடையட்டும். வீட்டிற்கு சென்றதும் வேப்பிலை அடிக்கலாம் 😜

காதல் சொன்ன கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஒ !! எகிறி குதித்தேன் வானம் இடித்தது பதங்கள் இரண்டும் பறவையானது......
'நாம இன்னும் காதலையே சொல்லலியே,  சீ! மக்கு. அதுக்குள்ள என்னென்ன கற்பனை? 
 'மனதிற்குள் ஒரு செல்ல சிணுங்கல் வந்தது.
ஒரு வழியாக அவள் பயணம் முடிந்து வீட்டிற்கு வந்தவள் நேரே சென்று கட்டிலில் விழுந்தாள் . 
எப்போதும் இப்படி செய்பவள் இல்லையே !  
நேரே சென்று மகள் அறையை லேசாக தட்டினார் பூரணி.
"என்ன மாம் இது! யாரோ மாதிரி கதவை தட்டிகிட்டு "
"நீ என்ன மன நிலமைல இருக்கியா அனாவசியமா உன்ன தொந்தரவு பண்ணக் கூடாதில்ல"
"மாம் ப்ளீஸ் மொக்க போடாதீங்க" கட்டிலில் அமர்ந்த தாயின் மடியில் உரிமையாக தலை வைத்துக் கொண்டாள் . 
மகளின் கன்னங்கள் லேசாக சிவந்திருந்தது. தலையை லேசாக கோதி  விட்டார்.
"ஹவ்  வாஸ் தி  டே?"
"வெரி நைஸ் "
"செந்தில் என்ன சொன்னாரு. ரெண்டு பேருக்கும்  ஜெல் ஆகுதா"
"அது தெரியல மாம். பட்  நிறைய டிபேரன்ஸஸ் ஆப்  ஒபினியன்ஸ்  இருக்கும் போல இருக்கு"
"அதெல்லாம் அப்படிதான் இருக்கும் மகளே. அவரு என்ன, எப்படி சொன்னாலும் நீ  சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே  போய்டணும். அதுதான் உனக்கும் அவருக்கும், உங்க வருங்கால குழந்தைகளுக்கும் நல்லது."
"அப்ப எனக்குன்னு ஒரு தனித்துவமே  இருக்கக் கூடாதா  மாம்?" கால்களை ஆட்டிக்  கொண்டிருந்தாள் .
"நம்ம குடும்பத்து ஆளுங்களுக்குக்காக நீக்கு போக்கா  நாம தனித்துவமா இருக்கறதுக்கும்  
நிறைய சம்பந்தம் இருக்கு. அட் தி சேம்  டைம் நம்மளோட தனித்துவம், குடும்பம், சொந்தங்கள்  எதையுமே இழக்காம எல்லாத்தையும் பாலன்ஸ் பண்ணனும். எதுவுமே புதுசா வந்துடாது. பழகப்பழகத் தான் வரும். ஆனா  பழகிக்க  தயாரா இருக்கணும் "
"இதை எல்லாம் கல்யாணதுக்கு முன்னாடி தானே மாம் சொல்லணும். நீங்க  என்ன இவ்ளோ  அட்வைஸ் பண்ணறீங்க?"
"நீ சொல்லறது சரிதான். முன்னாடியே சொல்லி இருந்திருக்கணும். ஆனா எனக்கு உன் மேல  நம்பிக்கை இருந்தது.
"இப்ப இல்லையா?"
"இப்பவும் இருக்கு. ஆனா மாப்பிளையை பார்த்தா கொஞ்சம் பயமாவும் இருக்கு"
பூரணிக்கு திருமணத்தின் போது  இருந்த அவனின் குளிர்ந்த பார்வை எங்கே நினைவில் இருக்கிறது? இவள் மாலையை கழற்றியதும்  தெரிந்த உக்ர ரூபமும், இதெல்லாம் என்ன இப்ப பாரு ஆட்டத்தன்னு பிடிவாதமாக விவாகரத்து கேட்ட செந்திலின் பார்வையும் தானே நினைவுக்கு வருகிறது. மகளால்  சமாளிக்க முடியுமா ? முடியுதா பாரு. இல்ல அறுத்து போட்டுட்டு வா, வேற ஆளப்  பார்த்துக்கலாம் சொல்லும் ரகம் பூரணி இல்லை. என்னதான் பணமும் பதவியும் வந்திருந்தாலும் அவர் இன்னும் ஆதி காலத்து மனுஷிதான். ஒருவனுக்கு ஒருத்தி. ஒருவருக்கொருவர் அன்பாக அன்னியோன்னியமாக வாழ வேண்டும். அது இல்லையா. ஒருவருக்கொருவர் பொறுத்துக்  கொண்டாவது வாழ வேண்டும். இது எல்லாம் அன்னையின் எண்ணம்தானே . மகள் அப்படி இருப்பாளா? இந்த காலத்தில் பெற்றவர்கள் இதற்கெல்லாம் ஆசை படுவதும் தப்பு. எதிர்பார்ப்பதும் தப்பு. நிரஞ்சனா எப்படிப்பட்டவள்? அன்னையின் சொல் பேச்சு கேட்பவளா? ஆம்! இது வரை அப்படித்தான். ஆனால்  செந்தில் விஷயம் மட்டும் மாறிப் போனது. பூரணிக்கு இந்த திருமணத்தில் பெரிய விருப்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் 'பெண்ணிற்குப் பிடித்திருக்கறது. அதனால் தனக்கும் சரி' என்றே திருமணத்திற்கு ஒத்து கொண்டவர். திருமணம் ஆகி விட்டது. ஏதோ கெட்ட நேரம். திருஷ்டி பட்டது போல இருவரும் பிரிந்தார்கள். அவர்களின் தவறை இறைவனே சரி செய்ய நினைக்கிறான். மகள் ஆசைப் பட்டபடி  அவள் கணவனுடன் ஆசையாக வாழ வேண்டும். அதுதானே பெற்றவர்களுக்கு வேண்டும். அதற்குத்தான் இப்போது மகளுக்கு அறிவுரைக்கு கூறி கொண்டிருக்கிறார். 
"எல்லா சமயங்களிலும் என்னால உன் கூடவே இருக்க முடியாது கண்ணம்மா. உன்னோட வாழ்க்கை. நீதான் சமயம் பார்த்து நடந்துக்கணும்" 
அவள் பெற்றோர் எப்போதுமே சொல்லும் அறிவுரைதான் இது. அவரும் சரி அவர் கணவரும் சரி எப்போதுமே நிரஞ்சனா தனியே நிற்க வேண்டும் என்று எண்ணியதில்லை. உன்னுடன் நான் இருப்பேன். உன் அருகில். நீ எப்போதும் என் மடியிலேயே அமர முடியாது என்பதை வாயாலும் செய்வார்கள். மகளை தைரியமாக சுயமாகவும் இருக்க விடுவார்கள்.
இப்போது இருக்கும் பல பெற்றவர்கள் போல மகளுக்கு பிள்ளையே பிறந்தாலும் பிள்ளையை சேர்த்து நான் வளர்க்கிறேன் என்று பிள்ளைகளின் கையை பிடித்துக் கொண்டே இருப்பவர்கள் இல்லை. "இப்ப கூட என்னோட கை  உங்க கைக்குள்ளேதானேபா இருக்கு" சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வேறு வருவது போல  இல்லை. "நீ தனியே செல். எங்களின் கவனிப்பு உனக்கு இருக்கும்" என்றே சொல்லி சொல்லி வளர்த்திருந்தார்கள் நிரஞ்சனாவை. அதுவே அவளை எல்லா  சந்தர்ப்பங்களிலும் தொய்ந்து விடாமல் இருக்க  உதவி செய்கிறது. 
"சாப்டீங்க இல்ல?" பூரணி இன்னும் மகளின் தலையை வருடிக் கொண்டிருந்தது.
"எஸ் மாம்"
"அவருக்கு புடிச்சிருந்ததா ?"
"ம்! ஓகே தான்! காரமே இல்லன்னு சொன்னாரு"
"நான் கேட்டது சாப்பாடு இல்லை உன்ன பிடிச்சிருந்ததான்னு" லேசாக மகளின் மூக்கு நுனியை உருட்டினார்.
"மாம்.."
வெட்கத்தில் சிணுங்கினாள் மகள்.
"உன்னோட இந்த புது ட்ரெஸ் பார்த்துட்டு என்ன சொன்னாரு"
மகளின் கன்னத்தை தாங்கி கண்களில் ஊடுருவினார். 
(மகளுக்கு உற்ற பெண் தோழிகள் இல்லாததால் இவரே அந்த ரோலையும் சேர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார். ஐயோ பாவம் 😊)
"அவரு ஒண்ணுமே சொல்லலியே மாம். போன் பண்ணி கேக்கவா?"
மகளின் ஆர்வம் புரிந்தது.
"சரி. அவரு கிட்ட பேசிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. வேலைக்கு போகப் போறியா?"
"நோ மாம். அலுப்பா  இருக்கு."
"அது சரி, கொஞ்ச நேரம் புருசனோட சுத்திட்டு வந்ததுக்கே இப்டியா ? நமுட்டு சிரிப்புடன் கதவை சாற்றிக் கொண்டு வெளியில் சென்றார்.
"மனைவியின் அழைப்பை ஏற்றான். நிரஞ்சனா என்றே சேமித்திருந்தான் அவள் பெயரை.
கணவன் செந்தில் என்ற  பெயரில் இவள் போனிலிருந்து அழைப்பு மணி செல்லத்  துவங்கியது. முதல் முறை எடுக்கவில்லை. இரண்டாம் முறை அழைத்தால்.
'வீட்டிற்குப் போயி  சேர்ந்திருப்பாரா? இல்ல ட்ரைவிங்க்ல இருப்பாரோ?இல்ல பிஸ்னஸ் விஷயமா யாரையாவது பார்க்கப் போய் இருப்பாரோ? 
முகம் கழுவப்  போனவன் இன்னும் வராததால் பெயரைப்  பார்த்து மீனாட்சி தான்  பேசினார்.
"நிரஞ்சனாவா ? எப்படிம்மா இருக்க? " குரல் உரிமையாக இருந்தது.
"நல்லா  இருக்கேன் அத்தை "
செந்தில் முகம் கழுவ போய்  இருக்கான் மா. வந்ததும் பண்ண சொல்லறேன்"
இது வரை அவள் மீனாட்சியிடம் சரியாகப் பேசியதில்லை. இப்போதுதான் அவரிடம் முதல் முறையாகப் பேசுகிறாள்.
"வணக்கம் அத்தை. நீங்க நல்லா  இருக்கீங்களா? "
"எனக்கென்ன மா  ஏன் புள்ள என்ன ராணி மாதிரி கவனிச்சுக்கறான்"
"ஓ ! அப்படியா " 
அதற்கு மேல் எப்படி பேச? அவளுக்குத் தயக்கமாக இருந்ததது.
"அப்புறம் அத்தை,  நடந்த எல்லாத்துக்கும் ரொம்ப சாரி" நிரஞ்சனா குரல் தயங்கி ஒலித்தது. தன் மீது தான் எல்லாத்  தவறும் என்று அவள் நினைத்ததினால் தான் போலும். 
"அதுக்கெல்லாம் நீ என்னம்மா பண்ணுவ? ஏதோ அந்த கெட்ட  நேரம். அவன் தாலி கட்டினதும் உனக்கு ஆபிஸ் எரிஞ்சு போச்சு"
"இல்ல அத்த, அது கெட்ட  நேரம் இல்ல. என்னோட எதிரி வேணுன்னே  செஞ்சது, என்னை பழி  வாங்க. நானும் இவரும் சேர்ந்து வாழக்  கூடாதுன்னு "
"சரிம்மா! அதெல்லாம் எதுக்கு இப்ப? முதல் தடவையா நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வெளில போயிட்டு வந்துருக்கீங்க. எதை எதையோ யோசிச்சு நல்ல மன நிலைமையை மாத்திக்காத "
அதற்குள் ரேணுகாவும் பவித்ராவும் வந்து நின்றார்கள். ரேணுகா ,"அண்ணி நீங்க  வாங்கி குடுத்த விளக்கு சூப்பர்" சைடில் கத்தினாள் .
"நீங்க  எழுதி அனுப்பின பேப்பரை அண்ணா  பர்ஸுக்குள்ள மறைச்சு வச்சுகிச்சு" பவித்ரா கத்தினாள் . அவர்கள் யாருக்குமே இவளை வேறாக பார்க்கத்  தெரியவில்லை.
இவளுக்கு சிரிப்பாக  வந்தது.
"என்னது இது கொஞ்சம் கூட மானேர்ஸ்  இல்ல?" கத்திக் கொண்டே வந்தான் அவள் நாயகன்.
"இப்ப பாரேன் அண்ணா போனை எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ள போய்டும்" ரேணுகா கமுக்கமாய்  சொல்ல பவித்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதற்கேற்றாற்போல அவனும் உள்ளே சென்றான்.
"அண்ணா! அண்ணிதான் பேசறாங்க. நீங்களும்  எங்களை மாதிரியே  இங்கயே இருந்து பேசலாம். நாங்களும் சேர்ந்து பேசுவோம்" வேண்டுமென்றே வம்பிழுத்தாள்  பவித்ரா.
எப்போதும் அண்ணன்  முறைத்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடும் தங்கைகளுக்கு இம்முறை அடக்க முடியாதபடி சிரிப்புதான் வந்தது. அன்னையும் சேர்ந்து நமுட்டு சிரிப்பு சிரித்தால்  பெண்கள் மட்டும் அடங்கி விடுவார்களா என்ன?
இதை எல்லாம் போனில் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தான் இடத்தில்  இல்லையே என்ற ஏக்கம் வந்தது.
"சொல்லுங்க மேடம்"
"இல்ல வீட்டுக்கு சேப்பா  வந்துடீங்களான்னு  கேக்கத்தான் பண்ணேன்"
"ம் வந்துட்டேன். நீங்க?"
"ம். வந்துட்டேன்"
"அப்புறம் பிடிச்சிருந்ததா?" அவள் குரல் தேய்ந்து ஒலித்தது.
"எது ?"
"அவன் எதைக் கேட்கிறான் ?" இவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.
"அதான் அந்த மில்க் ஸ்வீட்?" உளறினாள் .
"நீ கொடுத்ததுக்கு முன்னாடி எல்லாமே சுமார்தான்"
"இந்த ட்ரீட் அவ்ளோ நாள் இருந்துச்சா?" ஒன்னும் தெரியாதது போல கேட்டாள் 
"நான் ட்ரீட்டையா சொன்னேன்?"
"வேற எது?"
"நான் பார்க்கிங்கில் நடந்தது பத்தி பேசினேன்"
"அப்படியா ?"
"அப்படித்தான்"
"இன்னொன்னு வேணுமா?"
"ஆமா "
"அப்ப இன்னொரு முறை மீட் பண்னனும்....."
"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா ...." அதுங்க கடலை வறுக்க என்னால  உக்கார முடியாது. நான் கிளம்பறேன், அவர்களின் பேச்சு?

தொடரும்.............









 


Leave a comment


Comments


Related Post