இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 11-06-2024

Total Views: 8747

  கார்த்திக்கேயனுக்கு பரிட்சைகள் நடந்து கொண்டு இருந்தது.  தினமும் எதாவது கார்த்திகேயனை பற்றிய செய்திகள் சாந்தி வீரராகவன் காதிலும் விழும்படி சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.   

      ஆனால் லலிதா, கணக்குபிள்ளை சண்முகம், பிள்ளைகள் யாருக்கும் எதுவும் தெரியாது.  அந்த அளவுக்கு கோதண்டம், சாந்தி, வீரராகவன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும்படி காய் நகர்த்தி இருந்தனர். 

       தங்கையிடம் அனைத்தும் கூறும் கோதண்டம் மனைவியிடம் எதையும் சொல்லி இருக்கவில்லை. 

       சாந்தியும் தன் அண்ணிக்கு அனைத்தும் தெரிந்து இருக்கும் அண்ணன் சொல்லியிருப்பார்.  அதை பற்றி அண்ணி பேச தயங்குகிறார் என்று நினைத்தார். 

      வீரராகவரும் தன் நண்பரும் கணக்குபிள்ளையான சண்முகத்திடம் கூட  அந்த பேச்சுக்களை பற்றி பேசாதிருந்தார். 

      மூவரில் யாராவது ஒருவர் சண்முகம், லலிதாவிடம் பேசியிருந்தால் கண்டு இருக்கலாம் இது தங்களை சுற்றி பின்னப்பட்ட வலை என்றும் பின்னால் நடக்க இருக்கும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்து இருக்கும். 

      அன்றும் அப்படித்தான் வேலைக்காரப்பெண்கள் பின் பக்கம் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் பேசும் பேச்சு சாந்தியின் காதில் விழுந்தது. 

    " ஏன் அக்கா நேத்து பஸ்சில் நடந்த கூத்து தெரியுமா?... " என்றாள் ஒரு பெண். 

    " என்ன நடந்தது" என்றாள் இன்னொரு பெண் ஆர்வமாக 

    "அதுவாக்கா ஒரு பெண் பக்கத்தில் உட்கார்ந்து அவ்வளவு பேர் பார்க்க அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு பேசிட்டு வந்தாராம் சின்ன ஐயா" என்றாள். 

     " அடியாத்தி இவ்வளவு தூரம் போகிடுச்சா....  நமக்கே எல்லாம் தெரியும் போது வீட்டில் இருக்கிறவங்களுக்கு தெரியாமலா இருக்கும்" என்றாள் இன்னொரு பெண். 

   " அக்கா அவங்க பெத்த பிள்ளையா இருந்தா கூப்பிட்டு கண்டிச்சு இருப்பாங்க.  பெரியவங்க இருந்திருந்தாலும் அவங்ககிட்ட நல்ல பேர் வாங்க கண்டிச்சு இருப்பாங்க ஆனா இப்ப அவங்களை கேட்க யாரு இருக்காங்க.  அந்த புள்ளை எப்படி போனால் அவங்களுக்கு என்ன"  என்று பேசிக்கொண்டே இருக்க அதற்கு மேல் கேட்கமுடியாமல் கண்ணீருடன் தன் அறைக்கு சென்று அழுதார் சாந்தி. 

     அவர் இந்த வீட்டுக்கு மணமுடித்து வந்து எப்போது கார்த்திகேயன் அம்மா என்று அழைத்தானோ அன்றில் இருந்து அவனை பெற்றவராகத்தான் இன்று வரை இருந்தார் சாந்தி.  கார்த்திகேயன் தான் பெற்ற மகன் இல்லை என்று ஒரு முறை கூட அவருக்கு தோன்றியது இல்லை. அப்படிபட்டவரை தவறாக பேசியதை கேட்டு மனமுடைந்தார். 


     ஆனால் இவர்கள் கேள்வி பட்டதற்கு நேர்மாறாகத்தான் நடந்தன நிகழ்வுகள்.   அவை இவர்கள் காதுகளுக்கு வரவே இல்லை. 

    தினமும் பரிட்சை முடித்து வரும் கார்த்திகேயன் முரளி அன்பழகன் மேலும் சில மாணவர்கள் மாணவி எல்லோரும் ஒன்றாக பேருந்தில் வரும்போது எழுதிய பரிட்சை பற்றியும் எழுதிய விடைகளை பற்றியும் தான் ஆண் பெண் பேதமின்றி பேசிக்கொண்டு கொண்டும் கிண்டல் செய்து கொண்டு வந்தனர். 

     இவை அனைத்தும் அந்த பேருந்தில் வந்த எல்லாருக்கும் தெரியும்.  அதைத்தான் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டது அந்த சதிகாரக்கும்பல். 

     அன்று கடைசி பரிட்சை அனைத்திற்கும் சிகரம் வைத்தது மாதிரி சம்பவம் நடந்தது. ஊர்க்காரர்கள் அனைவரின் கண்பார்வையிலும் கார்த்திகேயனை தவறாக காட்டியது. 


     கடைசி பரிட்சை என்பதால்  பரிட்சை முடித்துவிட்டு உடன் படித்தவர்கள் ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் விடை பெற்று கிளம்ப மணி நான்கை தொட்டு இருந்தது.  பேருந்தில் ஏறி மாணவர்கள் மாணவிகள் பேசி சிரித்தும் சிலர் வருத்தப்பட்டு பேசிக்கொண்டு வந்ததால் பஸ்சில் கொஞ்சம் சத்தம் அதிகமாக இருந்தது. 

   அந்த பஸ்  முழுவதும் நிரம்பி இருக்க இடித்து கொண்டு நின்று இருந்தனர்.  கார்த்திகேயன் கண்ணில் அப்போது பட்டது படிகளுக்கு அருகில் ஒரு பெண் பயந்த முகத்துடன் கண்கலங்க நின்று இருந்தாள்.  அவளும் இவன் வகுப்பு தான் கூர்ந்து பார்த்தவனுக்கு  அப்பெண்ணின் அருகில் நின்று இருந்த இளைஞன் ஒருவன் அப்பெண்ணின் காதருகே சென்று பேசிவதும் அப்பெண் மிரட்சியுடன் அவனை பார்த்து இல்லை என்று தலையாட்டுவதையும் கண்டான்.  

   கார்த்திகேயன் உயரமாக இருந்ததால் அனைத்தும் அவனின் பார்வையில் பட்டது.  தனக்கு முன் இருந்தவர்களை விலக்கி விட்டு அப்பெண்ணின் அருகில் செல்வதற்கும் அப்பெண்ணின் மறுப்பை கேட்ட அவன் வேகமாக 
அவளை பற்றி ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விட அருகில் சென்ற கார்த்திகேயன் அப்பெண்ணை பிடிக்கமுயல அவளின் தாவணி தான் கையில் கிடைத்தது. அவள் வெளிப்புறம் விழாமல் இருக்க தாவணியை பற்றி இழுக்க கீழே விழப்போனப்பெண் விழாமல் பின்புறம் இழுக்கப்பட விழாமல்  தன்னை சமாளித்து கம்பியை பிடித்து இருந்தாள். 

   இவன் இழுக்கவில்லை என்றால் கண்டிப்பாக கீழே விழுந்து இருப்பாள் அப்பெண்.  சட்டென்று பேசிக்கொண்டு இருந்தவன் தன்னை தள்ளிவிடுவான் என்று எதிர்பார்க்காத பெண் கார்த்திகேயன் பிடித்து இழுத்தால் ஒரு வினாடியில் அந்த விபத்து தடுக்கப்பட்டது. 

   ஆனால் கார்த்திகேயன் தாவணியை இழுத்தால்  ஜாக்கெட்டில் போட்டு இருந்த பின் இழுக்கப்பட்டு ஜாக்கெட் கிழிந்தது. 

     அவளின் கத்தலில் தான் அனைவரும் அவளை பார்க்க அந்த நேரம் தாவணி கையில் பிடித்து இருந்தது கார்த்திகேயன் தான் அவன் இழுத்ததால் தான் அவள் கத்துகிறாள் என்று நினைத்துக்கொண்டனர். 

   அருகில் நின்ற ஒரிரு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அவளின் கத்தலுக்கு காரணம் அறிந்து இருந்தனர். 

   அந்த பையன் அவளை தள்ளி விட்டு நின்றவன் அவளை காப்பாற்றியதை கண்டு தான் செய்தது அவள் சொல்லிவிடுவாள் என்று பயந்து பஸ்சில் இருந்து குதித்து ஓடினான்.  கிராமப்புற சாலையில் பஸ் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருந்தால் அவன் குதித்து ஓடினான். 


   இவளின் கத்தலில் பஸ் நின்றதும்  கார்த்திகேயன் இறங்கி ஓடினான் அந்த பையன் சென்ற பக்கமாக அவன் பின் மற்ற மாணவ மாணவிகளும் கூடவே அந்த பெண்ணும் இறங்கி சென்றாள்.  

     பஸ்சில் இருந்தவர்களுக்கு கார்த்திகேயன் முதலில் ஓடுவதும் பின்னால் மற்ற மாணவர்கள் ஓடுவது அவனை துரத்தி சொல்வது போல் தோன்றியது. 

      அதை கண்ட அனைவரும் ஆளாளுக்கு ஒன்று பேச அது கடைசியில் கார்த்திகேயன் அந்த பெண்ணின் தாவணியை பிடித்து இழுத்து உடையை கிழுத்துவிட்டான் என்றும் அதனால் அவனை துரத்தி கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று பரவியது. 

      பஸ் சிறிது நேரம் நின்றது சென்றவர்கள் வராததால் பஸ் கிளம்பி விட்டது. 

     கார்த்திகேயன் ஊரை சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் அதை பரப்பியதும் இல்லாமல் வீரராகவரிடமும் தாங்கள் கண்டதாக கூறினர். 

    இங்கே துரத்தி சென்ற கார்த்திகேயன் அவனை பிடித்து விட்டான்.  மற்ற மாணவர்களும் சூழ்ந்து கொள்ள அவனால் தப்பிக்க முடியவில்லை.. 

    கார்த்திகேயன் அப்பெண்ணை அழைத்து 

   உனக்கு என்ன செய்யனும் என்று தோன்றுதோ செய் என்றதும் அப்பெண் அவனின் கன்னத்தில் ஓங்கி இரண்டு மூன்று முறை அறைந்தாள். 

   இவனை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகலாமா என்று அப்பெண்ணிடமே கேட்டான்.  அந்த பெண் சம்மதம் என்று தெரிவித்ததும் மீண்டும் வேறு பஸ்சில் சென்று அந்த பையன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு அப்பெண்ணையும்  அவளின் வீட்டில் விட்டு வந்தனர் மாணவர்கள்.  அவளின் தந்தை வெளியே சென்று இருந்ததால் தாயிடம் சொல்லி விட்டு விட்டு அவர்களின் ஊருக்கு வந்தனர். 

    நேரம் இரவு ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது.   மற்ற பிள்ளைகள் லலிதா வீட்டில் இருக்க லலிதா இரவு உணவு செய்துவிட்டு அனைத்து எடுத்து வந்து வைத்து சாப்பிடச்சென்னார்.  பிள்ளைகளும் அமர்ந்து சாப்பிட லலிதா பரிமாரிக்கொண்டு இருந்தார். 

   இங்கே சாந்தியும் கோதண்டம் மட்டுமே ஊரார் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்து இருந்தனர்.  அப்போது உள்ளே வந்த கார்த்திகேயனை கண்ட கோதண்டம் 

    "சாந்திமா பார் செய்யறதையும் செய்திட்டு எவ்வளவு தைரியமா வரான் பாரு" என்று கூறவும். 

      சாந்தி அவனை பார்க்க உடை கசங்கி தலை கலைந்து வந்தவனின் தோற்றம் கோபத்தை கொடுத்தது.  

     இவ்வளவு நாள் கண்டிக்காமல் விட்டது எங்கு சென்று விட்டு இருக்கு என்று தன் மீதே கோபம் வர அதை மகனிடம் கொட்டினார் சாந்தி. 

   " கார்த்தி என்ன காரியம் பண்ணிட்டு தைரியமாக இந்த வீட்டுக்குள் வர உன்னை கேட்க யாரும் இல்லை என்று தானே எல்லாம் பண்ணிட்டு இருக்க.  இப்படி எல்லார் எதிரில் பொம்பள புள்ளை தாவணியை பிடித்து இழுத்து பொறுக்கிதனம் பண்ணிட்டு வந்து இருக்க."

     " எப்படிப்பட்ட குடும்பம் இது இப்படி பொறுக்கிதனம் பண்ணி குடும்ப பேரை கொடுத்துட்டு வந்து இருக்க   என் பிள்ளையா நீ இப்படி எங்களை ஊரார் முன் அசிங்கப்பட வைத்து விட்டாயே" என்று பேசிக்கொண்டே சென்றார். 

   கலைத்து வந்தவனுக்கு தாய் என்ன பேசுகிறார் என்று புரியாமல் இருந்தவன் பெண்ணின் தாவணியை இழுத்து பொறுக்கிதனம் என்றது அதிர்ந்து நின்றுவிட்டான்.  என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் தாய் இப்படி பேசுகிறார்களே என்று நினைக்கும்போதே அந்த அடுத்த இடியாக வந்தது கோதண்டம் வாயில் இருந்து. 

    "உன் பிள்ளையா இருந்தா ஏன் இப்படி பொறுக்கிதனம் பண்ணப்போறான்.   அவன் உடம்பில் ஒடுறது உன் ரத்தம் இல்லையே"  என்று பேசிக்கொண்டே சொல்ல 

    "அண்ணா....." என்று சாந்தியின் குரல் கேட்டு பேச்சை நிறுத்தினார் என்றால் 

   மாமாவின் பேச்சு புரியாமல் நின்றவன் தாய் மாமாவை அதட்டுவதைக்கண்டு மாமாவின் பேச்சை மீண்டும் அசைபோட அது தந்த விடை அவன் உலகத்தையே புரட்டிப்போட்டது.  அவர்கள் ரத்தம் இல்லை பிள்ளை இல்லையென்றால் என்ன அர்த்தம் இவர் என் அம்மா இல்லையா???...  என்ற கேள்வி வந்ததும் 

   தன் மாமாவை பார்த்து  "இப்ப நீங்க என்ன சொன்னீங்க மாமா" என்றான் கார்த்திகேயன். 

   தன் தங்கை குரல் கேட்டதும் தான் தான் உளறியது புரிந்து அமைதியாக நின்ற கோதண்டம் கார்த்திகேயன் கேட்டதில் திகைத்து தங்கையை பார்க்க சாந்தியே சொல்லாதே என்று தலையாட்டினார். 

       "கார்த்தி ஓன்னும் இல்லை நீ உன் அறைக்கு போ" என்றார் அனைத்து மறந்து இப்போது எங்கே இவ்வளவு வருடம் அவனுக்கு தெரியாமல் இருந்தது தெரிந்து விடுமே என்ற பயம் வந்தது. 

     "மாமா சொல்லுங்க" என்றான் கார்த்திகேயன். 

      அவர் அமைதியாக இருக்கவே அவரின் அருகில் சென்றவன்  "சொல்லுங்க மாமா என் அம்மா யாரு என்று கேட்டான். 

      புத்திசாலி என்பதாலே மாமாவின் பேச்சு தாயின் பதைபதைப்பு வைத்தே உண்மையை அறிந்தவனுக்கு சாந்தி தன் அம்மா இல்லை என்றால் தான் யார்?.. தன் தாய் யார்?... என்று அறிந்து கொள்ள கேட்டான். 

      ஆனால் கோதண்டம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். 

       கார்த்திகேயனுக்கு கோபம் வந்தது ஏற்கனவே என்ன என்று விசாரிக்காமல் தாய் பொறுக்கி என்று சொல்லி இருக்க மாமனே உன் பிள்ளை இல்லையே என்று சொல்லியிருக்க அனைத்தும் கேட்டவனுக்கு தான் ஓர் அனாதையா என்ற எண்ணம் எழுந்தது.  தாய் தன்னை நம்பாதது, அவர் தன் தாயே இல்லை என்றது அடுத்தடுத்த அதிர்ச்சி ஏமாற்றம் தான் அனாதையே என்ற பயம் இப்படி எல்லாம் சேர்ந்து அழுத்த  தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் நின்ற மாமன் மீது அதீத கோபம் வர

     "இப்ப சொல்லப்போகிறீங்களா இல்லையா?...."  என்று அவரின் சட்டையை பிடித்து இருந்தான் கார்த்திகேயன். 




Leave a comment


Comments


Related Post