இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 12-06-2024

Total Views: 9550

"அய்யோ நானே என் பிள்ளையை நம்பவில்லையே யாரே பேசியதை கேட்டு என் புள்ளையை தப்பா நினைச்சு பேசக்கூடாதது எல்லாம்  பேசிட்டேனே" என்று அழுதார் சாந்தி. 

    அந்த நேரத்தில் சரவணனும் எழுந்து வந்தவன் தாய் அழுவதை கண்டவன் அவரின் அருகில் வந்து 
 "என்னாச்சிம்மா" என்று கேட்க அவனை கண்டவர் மேலும் அழுதார்.  

     வீரராகவன் கோதண்டம் இருவரும் அடுத்து என்ன என்று புரியாமல் திகைத்து நின்று இருந்தனர். 

     "போதும் நிறுத்துங்க" என்ற குரல் ஓங்கி ஒலித்தது. 

    அனைவரும் திகைத்து பார்க்க 

     அங்கு கோபத்தில் முகம் சிவக்க நின்று இருந்தவன் வேறு யாருமில்லை இளவரசன் தான். 


      இளவரசன் படிப்பதற்காக அதிகாலை எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ளவன்.  லலிதா ஏற்படுத்திய பழக்கம் தான்.  அன்றும் அப்படி எழுந்து காலை கடனை முடித்துவிட்டு வந்தவன் கதவு தட்டும் ஓசையில் வந்து கதவை திறந்து இருக்க அடுத்து நடந்த அனைத்தையும் கண்டவன்  தாயின் கூற்றில் இருந்து கார்த்திகேயனை எதுவும் விசாரிக்காமல் தவறாக பேசி அடித்து இருக்கிறார்கள் அதில் கோபம் வந்து அத்தான் வீட்டில் இருந்து சென்று இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டவனுக்கு கோபம் வந்தது. 

   ஒரு சிறு ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்ய நினைக்காதவர் அத்தான் அவர் மீது பழி சுமத்தி இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனை அதிக கோபத்தை கொடுக்க இதுவரை அவனாக சென்று பேசாதவன் இன்று குரல் உயர்த்தி பேசி இருந்தான். 

    அனைவரும் அதிர்ந்து நிற்பதை கண்டு கொள்ளாதவன்  "அம்மா இப்படி நின்னு அழுதிட்டு இருந்தால் அத்தான் வந்து விடுவாரா எங்கே போனார் என்று பார்க்க வேண்டாமா?..." என்று கை பிடித்து அவரை அழைத்து சென்றான். 

    அதை கேட்ட சரவணன்  "அரசு என்னடா சொல்லுற அண்ணன் எங்க போனார்?..." என்று கேட்டுக்கொண்டே அவன் பின் போக 

    திரும்பி சரவணனை பார்த்து " உன் அண்ணன் மீது எதோ பழி போட்டு பேசி அடித்து இருக்காங்க அதனால் அத்தானை காணும்"  என்று அவனுக்கு தெரிந்ததை மட்டும் கூறியவன்  "சீக்கிரம் வா என்ன நடந்தது என்று அப்புறம் பேசலாம் இப்போது அத்தான் எங்கே போனார் என்று பார்க்கலாம்" என்று வீட்டில் இருந்து வெளியே சென்று அங்கு இருந்த சைக்கிள் எடுத்து கொண்டு சரவணனையும் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு  "அம்மா நாங்க அத்தான் பிரண்ட்ஸ் வீட்டில் பார்க்கிறோம் நீங்க  வேறு பக்கம் பாருங்க"  என்று கூறிச்சென்றான். 

    இளவரசனின் பேச்சை கேட்ட பிறகே மற்றவர்களுக்கும்  கார்த்திகேயன் எங்கே சென்றான் என்று தேடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேகமாக அவர்களும் சென்றனர். 

   அடுத்த நான்கு மணி நேரம் அந்த ஊரில் மட்டும் இல்லாமல் பக்கத்து ஊர்களிலும் ஆட்கள் சென்று தேடினர்.   கார்த்திகேயன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.   மாயமாய் சென்று இருந்தான் கார்த்திகேயன். 

   கயல்விழி அமிர்தவள்ளி எழுந்த போது வீட்டில் யாரும் இல்லை.  வீட்டின் வெளியே வந்த போது அங்கங்கே ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.  தன் தாயும் நின்று கவலையுடன் பேசிக்கொண்டு இருந்ததை கண்ட கயல்விழி அவரின் அருகில் சென்று  "அம்மா" என்று அழைத்தாள். 

    அதுவரை கார்த்திகேயன் காணாமல் போனதை பற்றி மட்டுமே கவலை கொண்டவர் தன் மகளை பற்றி மறந்து இருந்தார்.  இப்போது மகளின் குரலில் அய்யோ இவள் கார்த்திகேயன் இல்லை என்றால் என்ன செய்வாளே என்ற எண்ணம் தோன்றியது. 

    "ஒன்னும் இல்லை கயல் நீ வீட்டுக்குப்போ" என்று அவளை அனுப்ப நினைக்க அந்நேரம் கயல்விழி வயது பெண் ஒருத்தி வந்து 

   "கயலு உன் அத்தானை  காணோமாம்." என்றாள். 

    அதை கேட்ட கயல்விழி அவளின் தாயைப்பார்த்து  "அத்தானை காணோமா?... " என்று கேட்க 

     "அத்தான் வெளியே போயிருக்கான் வந்திடுவான் வாங்க" என்று இருவரையும் கை பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். 

     தாயின் பேச்சை கேட்ட கயல்விழி அத்தான் இப்படி நண்பர்கள் உடன் செல்வது வழக்கம் என்பதால் அமைதியாகி விட்டாள்.  

     லலிதா இருவருக்கும் காலை உணவாக தோசை ஊற்றி கொடுத்தார்.  இரண்டு பெண்களும் சாப்பிட்டு முடித்ததும் அறைக்கு சென்று விளையாடுங்கள் என்றார் லலிதா. 

     அப்போதும் கயல்  "அம்மா அத்தான் பிரண்ட்ஸ் கூட போயிருக்கார் ஆனால் சரவணனும் அரசுவும் எங்க அம்மா" என்றாள். 

   அவள் கேட்டதும் தடுமாறிய லலிதா தன்னை சமாளித்து கொண்டு  "இன்னும் இரண்டு நாளில் அவங்களுக்கு பரிட்சை இல்லையா அதான் அவங்களும் பிரண்ட்ஸ் கூட படிக்க போயிருக்காங்க" என்று கூறினார். 

     அதில் சமாதானம் ஆகி விளையாடச்சென்றனர் கயல், வள்ளி. 

     நேரம் சொல்லச்சொல்ல அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்திருந்தனர்.  இளவரசனும் சரவணனும் திரும்பி வந்து கார்த்திகேயன் அறைக்கு சென்று அவன் உடைகள் இருக்கா என்று ஆராய்ந்தனர். 

     அவனின் உடைகளும் சில பொருட்களும் காணாமல் போகியிருந்தது.  அதை கண்ட அரசு சரவணனும் ஆசுவாசமூச்சை விட்டனர்.  எங்கே தவறான முடிவு எடுத்து இருப்பாரே என்று இருந்தவர்களுக்கு அவன் உடையும் அவனுக்கு பிடித்த சில பொருட்களும் இல்லை என்பதால் கண்டிப்பாக தவறான முடிவு எடுக்கவில்லை எங்கே சென்று விட்டார் என்பது புரிந்தது.  மேலு‌ம் தேடியதில் ஒரு கடிதம் கிடைத்தது. 

   வேகமாக அதை பிரித்து படித்தார்கள். 

    "என் மீது நம்பிக்கை இல்லாத குடும்பம் எனக்கு தேவை இல்லை.  என்னை யாரும் தேடி வரவேண்டாம் அப்படி வந்தால் நானே இல்லாமல் போகிடுவேன். தாத்தாவின் பீரோவில் இருந்து எனக்கு தேவையான பணத்தை எடுத்து சொல்கிறேன்" என்று மட்டுமே எழுதி இருந்தது.  

    அதை எடுத்து சென்று வீரராகவன் இடம் கொடுத்தான் சரவணன்.  படித்து பார்த்தவர் கண்கள் கலங்கியது. அந்த நேரத்தில் வீட்டின் வெளியே நிறைய பேச்சுக்குரல் கேட்க அனைவரும் வெளியே சென்றனர். 

   அங்கே நடுத்தர வயது உடைய ஆண் பெண் ஒரு இளவயது பெண் சில பெரியவர்கள் என்று புதிய முகங்களும் அந்த ஊர் மக்கள் சிலரும் நின்று இருந்தனர்.  தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு வெளியே சென்றார். 

      வந்தவர்கள் கையெடுத்து கும்பிட்டு  "அய்யா என்று அவர்கள் ஊர் பெயரை கூறி அவர்களை பற்றி கூறியவர்கள். பின் தன் மகளை காட்டி பத்து வருஷம் தவமிருந்து பெற்ற பெண் ஐயா இன்னைக்கு உயிரேட இங்க நிக்கிறா என்றாள் அதற்கு காரணம் உங்க மகன் தான்." 

      "அவரை பார்த்து நன்றி சொல்ல வந்தால் இங்கு வரும்போதே இந்த ஊர்க்காரங்க என்னென்னவே பேசிட்டு இருக்காங்க" என்றார் கவலையான குரலில். 

      அதை கேட்ட அனைவரும் வாயடைத்து போயினர்.  

      அப்பெண்ணே நேற்று நடந்த அனைத்தையும் கூறினாள்.  கேட்டுக்கொண்டு இருந்த அனைவருக்கும் மனம் கணத்தது.  எப்படி பட்ட பிள்ளை மீது பழியை சுமத்தி பேசியிருக்கிறோம் என்று அந்த ஊர் மக்கள் வருந்தினர். 

      ஊர்க்காரர்கள் தங்களுக்குள் ஐயா விசாரிக்காமல் அடித்து வெளியே தள்ளியதால் தான் கார்த்திகேயன் ஊரை விட்டு ஓடியதாக அவரின் காதுபடவே பேசினர்.  இதே ஊர்க்காரர்கள் நேற்று மகனை பற்றி பேசியது என்ன இப்போது பேசுவது என்ன எல்லாம் நான் பண்ணிய தவறால் தான் இப்போது என் மகன் தொலைத்துவிட்டு நிற்கிறேன் என்று வேதனை பட்டார் வீரராகவன். 

   வந்தவர்கள் எப்படியாவது புள்ளையை கண்டுபிடிங்க ஐயா என்று கூறி விடை பெற்று சென்றனர். 

   வீட்டினுள் வந்த அனைவர் கண்களிலும் கண்ணீர்.  சாந்தி வாய்விட்டே புலம்பி அழ அதை கேட்ட இளவரசன் சரவணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சாந்தியின் அருகில் சென்றனர். 

     "அத்தை அழுவதை நிறுத்தி விட்டு நாங்க கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்கள்" என்றான். 

    அமைதியின் உருவாக இருப்பவன் இன்று அவனே வந்த அதட்டல் குரலில் கேட்டதும் திகைத்து அவனை பார்த்தார் சாந்தி. 

     "நீங்க சொல்லுறதை பார்த்தால் இந்த பிரச்சினை நேற்று ஆரம்பிக்கலை முன்னாடியே ஆரம்பித்து இருக்கு என்ன என்று சொல்லுங்கள்" என்றான். 

    சாந்தியும் அனைத்தும் சொல்ல அந்த வேலைக்கார பெண்களை அழைத்தான். 

    அந்த பெண்கள் சற்று முன் வந்து கார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றதில் இருந்தே பயம் வந்து இருந்தது.  எங்கே தாங்கள் பணத்திற்காக செய்த செயல் கண்டு விடுவார்களே என்று இருந்தவர்களுக்கு வீட்டின் உள் இருந்து அழைப்பு வந்ததும் உள்ளே சென்றனர். 

     இளவரசன் சரவணன் இருவரும் அவர்களை விசாரிக்க முதலில் தெரியாது என்றவர்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் என்றதும் அனைத்தும் கூறியிருந்தனர்.   அவர்கள் திட்டி இனி இந்த ஊரில் நீங்க இருக்கக்கூடாது அப்படி இருந்தால் பஞ்சாயத்தில் தண்டனை கிடைக்கும் என்றதும் அன்றே ஊரை விட்டு சென்று இருந்தனர். 

     அடுத்து வீரராகவன் கோதண்டம் சில நாட்களாக நடந்த அனைத்தும் சொல்ல அதில் அதிகம் வடிவேலு ஏழுமலை இன்னும் இருவர் பெயர் சொல்லவே இருவரும் கிளம்பி தன் நண்பர்கள் சிலரை அழைத்து சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் கருப்பசாமி பெயர் சொன்னார்கள்.  அவர்களை அடித்து துவைத்து விட்டு கருப்பசாமி வீட்டிற்கு சென்று அடித்து உடைத்து விட்டே வந்தனர். 

    அதன் பிறகு இளவரசன் தன்னை கண்டு அனைவரும் பயப்படும் அளவுக்கு உடல் வலுவையும் முரட்டு தனத்தை வளர்த்து கொண்டான்.   இந்த குடும்பத்திற்கு மனதில் கூட தீங்கு நினைக்கக்கூடாது என்றே அனைவரும் தன்னை கண்டு அஞ்சும் அவளுக்கு முரட்டு தனத்தை வளர்த்திருந்தான்.

     சரவணனும் அரசுவும் வீட்டிற்கு வந்த போது ஓவென்று அழும் குரல் வந்தது ஓடிச்சென்று பார்த்தபோது கயல்விழியும் அமிர்தவள்ளியும் விசயம் அறிந்து அழுது கொண்டு இருந்தனர்.   யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. 

    சரவணனும் அரசும் தான் எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம் என்று சமாதானம் செய்தனர்.  இருந்த போதும் அன்று இரவே அழுது அழுது இரண்டு பேருக்கும் ஜுரம் வந்து விட்டது.   அவர்களின் உடலையும் மனதையும் தேற்றி பள்ளிக்கு அழைத்து சென்று பரிட்சை  எழுதவைத்து அவர்களும் பரிட்சை எழுதி முடித்தனர். 

   அதில் இருந்து அந்த வீட்டில் உள்ளவர்கள் தேவைக்கு மட்டுமே பேசினார்கள்.  ஓடி ஆடி விளையாடும் பிள்ளைகள் கூட அமைதியாக அமர்ந்து இருப்பர். 

    வீரராகவன் அதற்கு பிறகு வெளியே சொல்வதை குறைத்து கொண்டார்.  பஞ்சாயத்து செய்யவும் செல்வது இல்லை இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டார்.  தன் மனைவியிடமும் பேசுவதை குறைத்து கொண்டார். 

   பிள்ளைகளும் லலிதாவிடம் மட்டுமே பேசினார்கள் மற்றவர்களிடம் தேவை இருந்தால் என்றால் மட்டுமே பேசினர்.  அதிலும் கயல்விழி தன் அத்தான் செல்ல காரணமான மூவரிடமும் பேசுவதை நிறுத்தி இருந்தாள். 

   சில நாட்களுக்கு பிறகு வீரராகவன் அவளிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் அவரிடம் மட்டும் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பாள். 

வீரராகவன் சண்முகம் மூலமாக தேடச்சொல்ல அவரும் நம்பகமான ஆட்களை அனுப்பி தேடிக்கொண்டு இருந்தார்.  போலீஸ்சில் கம்ப்ளைன்ட் கொடுக்காமல் அறிந்த போலீஸ் அதிகாரியிடம் சொல்லி விசாரித்ததில் அதிலும் எந்த விதமான பலனும் இல்லை.  மனம் நொந்து கடவுளை சரணடைந்தார் வீரராகவன். 

    சரவணனும் அரசுவும் பள்ளி படிப்பையும் பார்த்துக்கொண்டு விவசாயத்தையும் மேற்பார்வை செய்தனர்.  கல்லூரி முடித்து இளவரசன் முழுமையாக விவசாயம் பார்க்க சரவணன் தன் அண்ணன் படிக்க நினைத்ததை படித்து வேலைக்கு சென்றான். 

   பெண்கள் இருவரும் கம்ப்யூட்டர் படிப்பையே படித்து இப்போது வேலைக்கும் சொல்ல இருக்கின்றனர். 

   அனைவரும் அவரவர் நினைவுகளிலேயே அன்றைய இரவை கழித்து இருந்தனர். 

   


Leave a comment


Comments


Related Post