இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -55 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 13-06-2024

Total Views: 12612


அது திறந்தவெளி உணவகம் என்பதால் அவர்கள் அமர்ந்திருப்பது அனைவருக்குமே தெரிய, நந்தனுடன் பேசவே கூச்சமாக இருந்தது.

“என்ன சாப்பிடற?”

“இல்ல”

“கொத்து சொல்லட்டுமா?”

“காலையிலையா?”

“அப்போ பொங்கல்”

“தூங்கிடுவேன்.”

“பூரி”

“எண்ணெய் ஐட்டம்”

“சப்பாத்தி”

“இல்ல”

‘என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறாளே’ என்று நெற்றியை தடவியவன், அவனே பேரரை அழைத்து மசால் தோசையை சொன்னான்.

“அப்புறம்.”

இவ்வளவு நேரம் உணவு பதார்தங்களுக்கு தைரியமாக பேச முடிந்த அவளால், அவனின் அப்புறம் என்ற வார்த்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை. தலையை குனிந்தாள்.

அவளின் தாடைப் பிடித்து நிமிர்த்தியவன். “என்னைய கட்டிக்க கசக்குதாடி? நானே தேடி வந்ததுல அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் ஓவர் ஏத்தமா போய்டுச்சுப் போல..”

அவள் பதில் சொல்லவில்லை.

“உன்னைய தான் கேட்டேன்.”

“அ.ண்...ணா..வுக்கு விரு..ப்..பமில்ல”

“நான் உன்னைய தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைக்கறேன்."

“அவன் தானே என்னைய கஷ்டப்பட்டு வளர்த்துனான் அவனை மீறி..” என்றவளின் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளேப் போய் குரல் கம்மியது.

“என்னய்யப் பார்த்து பேசுடி.”

எங்கு அவனைப் பார்த்து பேசுவது? படத்தில் சொல்வது போல் அவனைப் பார்த்தால் காற்று மட்டும் தான் வருகிறது. அவன் ஒவ்வொரு முறையும் தாடையைப் பிடித்து நிமிர்த்திவிட அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

“இப்போ கண்ணைப் பார்க்கப் போறியா? இல்லையா..?"

கண்களில் தெரியும் காதலை வைத்தாவது புரிந்துக் கொள்ள மாட்டாளா? என்ற எண்ணத்தில் அவன் சொல்ல, 'வாய்ப்பே இல்லை’ என நிரூபித்திக் கொண்டிருந்தாள் நிலா.

“ஏன் வாய் தொறந்து சொன்னா உனக்கு ஆகாதா?” என மனசாட்சி கேள்வி கேக்கதான் செய்தது. மனசாட்சிக்கு பதில் சொல்றவனாக இருந்திருந்தால் என்றோ திருந்திருப்பானே.

“உன் அண்ணன் சொன்னா தான் என்னைய கல்யாணம் பண்ணிப்ப..?”

“ம்ம்” என குனிந்த தலை நிமிராது தலையை ஆட்டினாள். அப்போதும் கூட சந்தேகம் தான், அவன் கூட வண்டியில் போக பிடித்தது அவன் நடந்தாலும் நின்றாலும் பேசினாலும் பிடிக்கிறது இந்த பிடித்தமெல்லாம் கல்யாணத்தில் சேருமா என்றுக் கேட்டால் இல்லை என்று விடுவாள் 

“அப்போ உன் அண்ண வேற மாப்பிள்ளை பார்த்தாலும் கட்டிப்ப..”

இதற்கு என்ன பதில் என்று அவளுக்கே தெரியவில்லை. அவன் முத்தம் கொடுத்த பின் வேறு ஒருத்தனை மனதில் நினைப்பது நந்தனுக்கு செய்யும் துரோகம் என எண்ணி அந்த மாதிரி எண்ணத்தின் பக்கமே செல்லவில்லை. இப்போது நந்தன் கேட்கவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றால் அவனுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என பல வேலையை செய்வான். கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொன்னால் இந்த இடத்தை விட்டு உயிரோடு செல்ல முடியாது எனத் தெரியும். அதனால் தான் எதுமே சொல்லாமல் அமைதியாக இருக்க.

அவளின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக எடுத்துக் கொண்டவன், வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்வாள் என நினைத்தான்.

உடனே கோவத்தில் கண்கள் சிவந்து கை நரம்புகள் முறுக்கேறியது. கோவத்தை அடக்க முகத்தை அழுந்த தேய்த்தவன் மூச்சை இழுத்து வேகமாக விட்டான்.

அதற்குள் தோசை வந்துவிட, அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வில்லையாக பியித்து வாயில் வைத்தாள்.

அவன் பேச ஆரம்பித்து விட்டால் இந்த உணவும் அவளுக்கு கிடைக்காது என நன்கு தெரியும். இவனை நம்பி சாப்பிடாமல் வேறு வந்துவிட்டாள் அதனால் அவசர அவசரமாக சாப்பிட பொறை ஏறிவிட்டது.

அவள் பக்கம் தண்ணீரை நகர்த்தி வைத்தவன். இருக் கைகளையும் கோர்த்து தாடையில் ஊன்றி அவள் சாப்பிடுவதைப் பார்த்தான்.

நிலா சாப்பிட்டு முடித்ததும், “வெல் இப்போ பேசலாமா?”

'ஹா அப்போ இனி தான் எனக்கு ஆப்பா இதுதான் சோறுப் போட்டு அடிக்கிறதுன்னு சொல்லுவாங்களா..?' என்று பயத்துடன் அவனைப் பார்த்தவள். “ம்ம்” என்றாள்.

“இது யாருன்னு கொஞ்சம் பாரு..?” என தன் கையில் இருந்த அலைபேசியை அவள் பக்கம் நகர்த்தி வைக்க, வில்லங்கம் இல்லாமல் இவன் எதையும் சொல்ல மாட்டானே என வேகமாக போனை எடுத்துப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.

நேற்று வந்து இறங்கிய வளவனின் புதுக் காரில் கஞ்சா பொட்டலங்களை மூட்டையாக உள்ளே வைத்துக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.

“என்ன இது..? அண்ணா கார்ல எதுக்கு வைக்கறாங்க?" அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

“சும்மா கஞ்சா பொட்டலம் தான், நாங்க வேற கேஸ் பிடிக்கும் போது கிடைச்சது, அதை நானே வெச்சி, நானே எடுப்பேன். ஆனா வெச்சிருந்தது உன் அண்ணன்னு சொல்லி தூக்கி உள்ளேப் போட்டா சொல்லவே முடியாது வெயிட்க்கு தகுந்த மாதிரி வருஷம் கூட்டுட்டே போகும். எப்படி வசதி.?"

“ஐயோஒஒஒஒஒ...!!! எதுக்கு இப்படிலாம் பண்றீங்க? இப்போ தான் அவன் பிஸ்னஸ், மேரேஜ்ன்னு ஒரு டிராக்ல போய்ட்டு இருக்கான். அவனை எதுக்கு ஜெயில போடப் பாக்கறீங்க?”

“இந்த வீடியோவையும் பார்த்துட்டு கதறு.” என இன்னொரு வீடியோவையும் காட்டினான். அதில் யுகியின் வண்டியை ஒரு பெரிய லாரி இடிப்பது போல் பின்தொடர்ந்துப் போனது.

“என்ன பண்றீங்க? யுகி? யுகி, அவனை எதுவும் பண்ணிடாதீங்க." என சத்தம் போட்டே கத்தி விட்டாள்.

“ஸ்சுஉஉஉஉஉஉஉ வாயை மூடு.” என வாயில விரல் வைத்து மிரட்டியவன், “எனக்கு டைம் பாஸ் ஆகல அதான் உன் நொண்ணனையும் அந்த நாயையும் வெச்சி கேம் பிளே பண்ணிட்டு இருக்கேன்.”

“ப்ளீஸ் அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க.” என தேம்பி தேம்பி அழ.

அவளின் அழுகையைக் கூட கண்கள் துடிக்கப் பார்த்தான், அழாதே என்று சொல்லவில்லை.

“இது சின்ன சாம்பில் தான், நீ எல்லோருக்கும் முன்னாடி என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லல.. நாளைக்கே என் தங்கச்சி லைஃப்பை பத்திக் கூட கவலைப்படாம உன் அண்ணனை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். அப்புறம் தம்பி கம்பின்னு எவனையும் பார்க்க மாட்டேன் அவனையும் சேர்த்துப் போட்டுருவேன்.” என இறுக்கமான முகப் பாவத்துடன் சொல்ல.

நந்தன் துளிக் கூட மாறவேயில்லை என்ற வேதனையும், வளவன், யுகி வாழ்க்கை நினைத்து கவலையும் ஒரு சேர இதயத்தை அறுத்தது.

“என்னைய எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க?" இருவரின் வாழ்க்கை நிலாவை தைரியமாக கேள்வி கேக்க வைத்தது.

“ஓ உனக்கு தெரியாது.”

“ஹும்ஹும் உங்களுக்கு தான் சின்ன வயசுல இருந்தே என்னைய புடிக்காதுல, எப்போ பார்த்தாலும் அடிச்சி அழ வெச்சிட்டே இருப்பிங்க. கடைசியா நான் ஊரை விட்டுப் போனதுக்குக் கூட நீங்க தான் காரணம். எங்க தகுதிக்கு நீங்க பக்கத்துல கூட நிற்கக் கூடாது நினைப்பிங்க. என்னோட கைப் பட்டாலே அருவருப்பா இருக்குன்னு சொல்லுவீங்க. இப்போ என்னோடவே வாழணும்னு சொல்றிங்க, இதுலயும் ஏதாவது பிளான் இருக்கா..? சொல்லிடுங்க அப்புறம் உங்க பிளான் முடிஞ்சதும் என்னைய கழட்டி விட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்?” என சின்னக் குழந்தைப் போல தேம்பி தேம்பி அழுதவளை விழி எடுக்காமல் பார்த்தான்.

சுற்றி இருந்தவர்கள் நிலாவையும் நந்தனையும் ஒரு மாதிரி பார்த்தனர்.

“கண்ணை துடைடி”

“உனக்கிட்ட தான் சொல்றேன்” என்று அழுத்தம் கூட்டி சொல்லவும் சட்டென்று கண்ணீரை துடைத்து விட்டாள்.

“ஆமா பிளானோட தான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கறேன். இல்லனா உன்னைய எவன்டி சீண்டுவான்..?”

“அப்போ..”

“என்ன அப்போ.?”

“இல்ல நீங்க நினைச்சது முடிஞ்சதும்...” என்றவளுக்கு அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.

கல்யாணம் செய்துக் கொண்டு எங்கு நட்டாத்தில் விட்டு சென்று விடுவானோ என இப்போது புதுக் கவலை வேறு பிறந்தது.

“அது நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்போ நான் கேட்டதுக்கு என்ன பதில் உன் அண்ணனோட வாழ்க்கையும் அந்த நாயோட வாழ்க்கையும் நல்லா இருக்கணுமா? வேண்டாமா?”

“இருக்கணும்”

“அப்போ எல்லோருகிட்டையும் போய் என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு.”

“நானா?”

“இதுக்குன்னு தனியா ஆள் வைப்போமா..?”

“இல்ல. அண்ணனுக்கு தெரிஞ்சா என்கிட்ட பேசவே மாட்டான்.”

“அப்போ அவங்க ரெண்டு பேரும் ஜெயில்ல களி திங்க வேண்டியது தான் எப்படி வசதி.?”

“உங்ககிட்ட இருக்கற பதவியை நீங்க தப்பா யூஸ் பண்ணப் பார்க்கறீங்க.”என்றவளை வெட்டிப் போடும் அளவிற்கு பார்த்தான்.

என்ன சொன்னாலும் கல்யாணத்திற்கு சரி என்று சொல்ல மாட்டிங்கிறாளே என்ற கோவமா? இல்லை. இவளை கல்யாணம் பண்ணிக்க இவ்வளவு இறங்கி வர வேண்டியிருக்கிறதே என்ற அகந்தையா? என்று சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் கோவம் வந்தது, அடக்க முடியாத அளவிற்கு கோவம் வந்தது. தன் விரல்களை அழுத்தமாக மடக்கி கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.

“சரி நீ யோசிச்சிட்டு பொறுமையா பதில் சொல்லு, அதுக்குள்ள உன் அண்ணன் மாமியார் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டும். உன் யோகிபாபு ஹாஸ்பிடல் போய்ட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும்.“ என்று மேஜையை குற்றி எழும்பினான்.

நிலாவை வளைக்க வேண்டுமானால் யுகி, வளவன் மீது கை வைத்தால் போதும்.. அவளின் உயிர் அவர்களிடம் இருப்பதைப் புரிந்துக் கொண்டவனுக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது.

“இல்லை வேண்டா வேண்டா நான் சொல்லிடறேன்."

“என்னனு?”

“உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு..”

“ஓ, இதனால உன் அண்ணன் உங்கிட்ட பேச மாட்டான் பரவாயில்லையா?” 

“பேசலைனாலும் அவனும் யுகியும் நல்லா இருந்தா போதும்.” என்றவளின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்து ஓடியது.

அவள் அழுதுக் கொண்டே சம்மதம் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் டீ ஒன்றை வரவழைத்து அருந்தினான்.


Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 3 weeks ago

    Waiting for nxt epi💕💕💕


    Related Post