இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 17 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 13-06-2024

Total Views: 8380

இதயம் - 17

ஜெர்மனில் இருக்கும் போது பரத் அன்று வாசுவிடம் சண்டையிட்டு சென்றதோடு சரி அதன் பின் வாசுவிடம் ஒரு வார்த்தை கூட பரத் பேசவே இல்லை. வாசுவும் எவ்வளவோ அவனிடம் கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்தான். ஆனால் பரத் பிடிவாதமாக வாயை மூடிக் கொண்டு திரிந்தான். அன்றே அஞ்சனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டும் நடந்ததை விளக்கியும் தவறு அஞ்சனா மேலும் என்று புரியவைத்து வாசு அஞ்சனாவிடம் சேர்ந்துக் கொண்டான். சென்னை வந்திறங்கிய வாசு தனியாகவே வீட்டிற்கு செல்வதாக கூறி மனதில் தன் தாய் தந்தையிடம் உண்மையை கூறி சம்மதம் வாங்க மனதில் தயார்படுத்திக் கொள்ள நேரத்தை எண்ணி அஞ்சனாவை முன் செல்ல கூறி விட்டான். ஆனால் அவன் தனியாக நிற்பதை கண்ட யாழிசை ட்ரைவரை அவினாஷ் மற்றும் பேரத்துடன் அமரக் கூறி கார் சாவியை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள். 

"பாப்பா எதும் ஏடாகூடமா பன்னிடாத" என்று எச்சரித்த அவினாஷ்ஷையும் தன் அண்ணனின் எச்சரிக்கையை கேட்டதும் பின்னால் திரும்பி வில்லத்தனமாய் சிரித்த யாழிசையையும் கண்ட பரத்தின் அடிவயிற்றில் பகீர் என்ற உணர்வு தோன்ற தன் இதயத்தின் மீது கை வைத்தவன் "யாழும்மா கார் ஓட்ட தெரியுமா" என்று மென்மையாக தன் உயிர் தப்புமா என்ற பயத்தில் கேட்டான். "தெரியும் ஆனா மெதுவா ஓட்டத் தெரியாதூஊஊஊ" என்று யாழிசை இழுவையுடன் கூறவும் பரத்திற்கு தன் வாழ்நாள் முழுதும் நிறைந்த எல்லா நினைவுகளும் நொடி கண் முன் வந்துச் சென்றது. "நல்லா சங்கூதற டி நீ" என்று பரத் பயத்துடன் கூறவும் அவினாஷ் சிரித்தான். 

யாழிசை நேராக காரை வாசுவின் அருகில் இடிப்பது போல் கொண்டுச் சென்று நிறுத்தி "ஒரு ரைட் போலாம் வரியா" என்று கேட்டாள். வாசு யாழிசையை முறைத்து விட்டு அங்கிருந்து நகர யாழிசை "உன் வீடு வரைக்கும் உன் அண்ணன் என்னை ஸ்லோவா கார் ஓட்ட வச்சி என் ரெக்கார்ட்ட ப்ரேக் பன்னிடுவான் போலையே" என்று பரத்திடம் கூறினாள். "அவன் டாக்ஸில போவான் நீ ஏன் அவனை வம்பிழுக்கற ... முன்னால போயேன்" என்று பரத் சலிப்புடன் இருவருடனும் முடியவில்லை என்று நினைத்துக் கொண்டு கூறினான். "என்ன பரத் நம்ம கம்பனி கார் ஐஞ்சி பேர கூட ஏத்தாத அளவுக்கா சின்னதா இருக்கு" என்று யாழிசை கேட்டு வாசுவை சற்று இடித்தவாறு காரை நிறுத்த வாசு கோபமாக வெளியில் இருந்து "ஹேய் அறிவில்லை ... ஆள் நடக்கறது கண்ணுக்கு தெரியுதா இல்லையா" என்று கத்தினான். "ஒன்னு நீ கார்ல ஏறு இல்லை கார உன் மேல ஏத்துவன் எப்படி வசதி" என்று யாழிசை கேட்க வாசு கோபத்தின் உச்சியில் காரை உதைத்து விட்டு முன்னால் இருந்த டாக்ஸியை அழைத்தான். யாழிசை கோபம் கொண்டு காரை பின்னால் நகர்த்தியவள் ஒரே மூச்சாக வாசு ஏறிய டாக்ஸியை நோக்கி செலுத்தினாள். அவினாஷ் "பாப்பா வேணா இப்படி பன்னாத" என்று எவ்வளவு கூறியும் யாழிசை கேட்கவில்லை பரத் பயத்தில் அலறியே விட்டான். ட்ரைவர் சொல்லவே வேண்டாம் உயிரை கையில் இருக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.  உள்ளிருந்து பார்த்த டாக்ஸி ட்ரைவர் பயத்தில் கதவை திறந்துக் கொண்டு குதித்து தூரமாக ஓடி விட வாசுவும் உள்ளிருந்து யாழிசையின் செயலை அதிர்ச்சியுடன் பார்த்தான். 'இவளுக்கென்ன பைத்தியமா' என்று நினைத்தவள் காரில் இருந்து இறங்கிக் கொள்ள யாழிசை டாக்ஸிக்கு ஒரு இன்ச் இடைவெளியில் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினாள். 

டாக்ஸி அவ்வளவு தான் நொருங்க போகிறது என்று பயத்துடன் கண்களையும் காதையும் பொத்திக் கொண்டு நின்றிருந்த டாக்ஸி ட்ரைவரின் வயிற்றில் அடிக்காமல் டாக்ஸி உயிருடன் நிற்பதை கண்ட டாக்ஸி ட்ரைவர் வேகமாக ஓடிச் சென்று காரை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். வாசுவும் சிறிது நேரத்தில் கால் நடுங்கி விட்டான். "அண்ணா எப்படியும் என்னை வீட்ல விட நம்ம வீட்டுக்கு தான போக போறோம் வாயேன் ஒன்னாவே போலாம்" என்று பரத் யாழிசையின் பிடிவாதம் தாங்காமல் தன் அண்ணனிடம் பேசியே விட்டான். வாசுவும் பரத் பேசிய ஆனந்தத்தில் பின்னால் ஏற போக யாழிசை காரை பின்னால் நகர்த்தி அவனை முன்னால் அமரு என்பது போல் கூறினாள். வாசு மீண்டும் பின்னால் செல்ல யாழிசை மீண்டும் பின்னால் காரை நகர்த்தினாள். அவினாஷ்ஷும் பரத்தும் தான் இருவரின் தொல்லை தாங்காமல் ஐய்யோ என்று உள்ளே அமர்ந்திருந்தனர். வாசுவும் அவளின் எண்ணம் புரிந்து முன்னால் ஏறி அமர யாழிசை "சீட்பெல்ட் போட்டுக்கோ அப்பறம் எங்கையாவது போய் முட்டிகிட்டனா அப்பறம் நா பொறுப்பில்லை" என்று கூற வாசு அவளை முறைத்தவாறே சீட்பெல்ட்டை இழுத்து மாட்டிக் கொண்டான். 

வாசு சீட்பெல்ட்டை மாட்டிய அடுத்த நொடி கார் விர்ரென பறந்துச் சென்றது. பரத் பயத்தில் தான் அமர்ந்திருந்த சீட்டை அழுத்தி பிடித்துக் கொண்டான். அவினாஷ்க்கு இது ஒன்றும் புதியதில்லையே அதனால் அவன் நார்மலாக அமர்ந்திருந்தான். அண்ணனும் தங்கையும் என்னனென்ன அட்டூல்யங்கள் செய்யவிருக்கின்றனர் என்ற பயத்திலே பரத் பயணத்தில் அமர்ந்திருந்தான். முதலில் கார் நகர்ந்தபோது தடுமாறிய வாசு பின் ஆர்வமாக சாலையை பார்க்கத் துவங்கினான். யாழிசை நேராக அஞ்சனாவின் காரை கண்டுபிடித்து அதன் வேகத்திற்கு தன் வேகத்தை குறைத்தவள் அஞ்சனா பார்க்க வேண்டும் என்று வாசுவின் புறம் இருந்த ஜன்னலை திறந்து விட்டு விடாமல் ஹாரன் அடித்தாள். அஞ்சனாவும் மயில்சாமியும் அவளின் ஹாரன் சத்ததில் கடுப்பாகி திரும்பி வாசு யாழிசையுடன் செல்வதை கண்டு அதிர்ந்தனர். யாழிசை புன்னகையுடன் முன் செல்ல வாசு "இப்ப எதுக்கு தேவையில்லாம ஹாரன் அடிச்சி அஞ்சனாவை வெறுப்பேத்தற" என்று கோபமாக கேட்டான். "சும்மா ஃபன் ஃபன்" என்று கூறிய யாழிசையை கொல்லும் அளவிற்கு வாசுவிற்கு கோபம் வந்தது. 

அஞ்சனா வாசுவை யாழிசையுடன் பார்த்ததும் பதட்டமாகி "அப்பா வாசு ... அவளோட ... எப்படி ... அப்பா அவ கார நிறுத்துங்கப்பா" என்று தன் தந்தையை அவசரப்படுத்த மயில்சாமி ட்ரைவரை யாழிசை காரை முந்திச் சென்று நிறுத்தக் கூற ட்ரைவர் காரை தேடும் முன் கார் சாலையில் இருந்து மறைந்திருந்தது. யாழிசையின் வேகத்திற்கு காற்று கூட நிதானமாகத்தான் தெரியும் போல். "ஆனா சார் அந்த கார் முன்னால இல்லை" என்று ட்ரைவர் கூறவும் இருவரும் சாலையை பார்த்து அவ்வளவு வேகமாக மறைந்து விட்டாளா என்று ஆச்சரியப்பட்டனர். அஞ்சனா உடனே தன் கைப்பேசியை தேடி எடுத்து வாசுவிற்கு அழைத்தாள். வாசுவோ விமானம் ஏறும் போது அணைத்த கைப்பேசியை இன்னமும் உயிர்பிக்காததால் அஞ்சனாவிற்கு 'ஸ்விச் ஆப்' என்ற பதிலே கிடைத்தது. கோபத்தில் கைப்பேசியை வைத்து விட்டு இருக்கையை குத்திய அஞ்சனாவின் கோபம் புரிந்த மயில்சாமி தன் மகளை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கினார். 

வீடு வந்ததும் முதலில் வாசு தான் வேகமாக இறங்கினான். பரத் இறங்கி இருவருக்கும் நன்றியை கூறி விட்டு திரும்ப யாழிசை "உங்கண்ணனுக்கு லிப்ட் கொடுத்தா தாங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டாரா" என்று கத்தி கேட்க முன்னால் சென்ற வாசு திரும்பி அவளை முறைத்து விட்டுச் சென்றான். "ஏன்" என்று பரத் யாழிசையை பார்த்து கேட்க "சும்மா ஃபன் ஃபன்" என்று யாழிசை கூறினாள். "நீ இப்படியே ஃபன் ஃபன் ன்னு அவனை சீண்டிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் செமையா காண்டாகி ஃபன் ஃபன்னு உன் மூஞ்ச ஃபன் மாதிரி உப்ப வைக்க போறான்" என்று பரத் கூறினான். "சரி சரி நாளைக்கு பெட்சீட்ட இழுத்து போத்திட்டு தூங்கிடாத ... காலையில கதவ திறந்து வச்சிட்டு காபியோட வெயிட் பன்னு வரன்" என்று கூறிய யாழிசை பரத் ஏன் என்று கேட்கும் கேள்வியை கூட கேட்காது அங்கிருந்து பறந்து விட்டாள். 'இவ எதுக்கு நாளைக்கு வர்ரா' என்று நினைத்த பரத் தன் அண்ணனையும் தன் முதலாளியையும் நினைத்து தலையை சிலுப்பிக் கொண்டு உள்ளேச் சென்றான். 

"டேய் என்னங்கடா இரண்டு பேரும் வீட்டுக்கு வந்ததும் அம்மான்னு வருவிங்கன்னு பாத்தா ஒருத்தன் கோபமா உர்ருன்னு மூஞ்ச தூக்கிட்டு போறான் நீ என்னடான்னா குழப்பத்துல சோகமா போற ... எங்களை கண்ணுக்கு தெரியுதா இல்லையா" என்று மல்லிகா கேட்க பரத் தன் தாயின் குரல் வந்த பிறகே அவர்களை திரும்பி பார்த்தான். "ஒன்னும் இல்லைம்மா ட்ராவல் டையர்ட் ... நானும் ரெஸ்ட் எடுக்கறன் ஈவ்னிங்க பேசலாம்" என்று கூறிய பரத்தும் அங்கிருந்து அவன் அறைக்குச் சென்று விட்டான். 

மாலை உறக்கம் கலைந்து எழுந்த பரத் வெளியில் வந்து பார்த்தபோது வாசு ஹாலில் அமர்ந்து தவிப்புடன் தன் தாயையும் தந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தான். பரத் தன் அண்ணனின் பதட்டத்தையும் தவிப்பையும் வைத்தே அவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்ன பேசை போகிறான் என்பதை யூகித்து விட்டான். சமையலறை சென்று காபி போட்டவன் எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தான். தானும் ஒரு கப்புடன் தன் அண்ணன் அருகில் அமர்ந்து வாசுவையையும் தன் பெற்றோரையும் மாறி மாறி பார்த்தான். 

ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று கூறி அமர வைத்த மகன் ஒரு மணி நேரமாக கையை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருக்கிறானே தவிற வாயை திறக்காமல் இருக்கவும் இருவரும் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க போகிறான் என்று அமைதியாக அவன் வார்த்தைக்காக காத்திருந்தனர். பரத் மூவரையும் பொறுமையாக காபி குடித்து முடிக்கும் வரை பார்த்தான். மூவரும் அமைதியாகவே இருக்கவும் பரத் "இப்ப என்ன நீ அஞ்சனாவ லவ் பன்ற விஷயத்தை உன்னால சொல்ல முடியல அதான" என்று தன் அண்ணனிடம் கேட்டவன் தன் தாய் தந்தையரை பார்த்தவாறு திரும்பி "அப்பா அவன் ஒரு பொண்ண லவ் பன்றான்ப்பா அதை சொல்ல அவனுக்கு இவ்வளவு தயக்கம் ... நாளைக்கு அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு வர சொல்லி இருக்கான் அத சொல்ல தான் இவ்வளவு பதட்டம்" என்று மொத்தமாக போட்டுடைத்தான். 

இடையில் வாசு "டேய்" என்றதையோ தன் தாயும் தந்தையும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தன் மூத்த மகனை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்ததையும் அவன் கைகளை பிசைந்தவாறு தயக்கத்துடனும் பயத்துடனும் அமர்ந்திருப்பதை அவன் கண்டுக்கொள்ளவே இல்லை. உண்மையை போட்டு உடைத்து விட்டு ஹாயாக "இனிமே உங்க முடிவு" என்று கூறி விட்டு எழுந்துச் சென்று விட்டான். வாசு போகும் தன் தம்பியை முறைத்து விட்டு தன் தாய் தந்தையை பார்த்தான். "அன்னைக்கு வீட்டுக்கு வந்த பொண்ணா" என்று மல்லிகா கேட்க "அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்ற ஆச்சரிய கேள்வியை பென்னுரங்கத்திடம் இருந்து கேட்க நேரிட்டது. "தெரியும்ங்க ... அன்னைக்கு" என்று தொடங்கிய மல்லிகா அனைத்தையும் கூறி முடித்தார். பொன்னுரங்கம் பெருமூச்சுடன் "நா ஒரே ஒரு கேள்வி தான் வாசு உன் கிட்ட கேக்க நினைக்கிறன்" என்று கூறிய பொன்னுரங்கம் தன் மகனை தீர்க்கமாக பார்த்தார். 

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்த வாசுவிடம் "இது உன்னோட வாழ்க்கை ... உன் வாழ்க்கை துணை உன் அம்மா என்னை கேர் எடுத்து பாத்துகிட்ட மாதிரி பாத்துக்கனும் ... இடையில சண்டை வரலாம் ஆனா அது ஒரு நாளைக்கு மேல நீடிக்கவேக் கூடாது ... உன்னை எங்கையும் எந்த இடத்துலையும் விட்டுக் கொடுக்கக் கூடாது ... உன்னோட செல்ப் ரெஸ்பெக்ட் தான் தன்னோடதுன்னு நினைக்கனும் ... நீ அஞ்சனாவ கல்யாணம் பன்னிட்டு லைப் லாங் ஹாப்பியா இருப்பன்னு நம்பறியா?" என்று பென்னுரங்கம் கேட்க வாசு பதில் கூறும் முன் "இன்னொரு விஷயம்" என்று மல்லிகா இருவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினார். "நா எனக்கு பிடிச்சதால தான் படிச்சிருந்தும் வேலைக்கு போகல ... எனக்கு என்னோட உலகம் மொத்தமும் உன் அப்பாவையும் உங்களையும் பாத்துக்றது தான் ... ஆனா அஞ்சனா அப்படி கிடையாது அவ ஆப்பிஸ் போற பொண்ணு ... அவளுக்கு மூட் சிவிங்க்ஸ் வரும் ... எல்லாத்தையும் நீ ஹான்டில் பன்னனும் ... இத்தனை வருஷமா நா மட்டுமே உன் அப்பாவையும் உங்களையும் கேர் பன்னிக்கல எனக்கு உன் அப்பா ரொம்பவே சப்போர்ட்டா இருந்தாரு ... என் மேல அவரும் ரொம்ப கேர் எடுத்துப்பாரு ... எனக்கான நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்துல எந்த வேலையா இருந்தாலும் ஒதுக்கி வைப்பாரு ... என்னை இதுவரைக்கும் உன் அப்பா என்ம்மா இப்படி பன்னன்னு கேட்டதே இல்லை ... ஏன்னா அவரை பொறுத்தவரைக்கும் நான் செய்றது நம்ம குடும்பத்தோட நன்மைக்குன்னு நினைப்பாரு ... நீயும் அவரை மாதிரி பொறுமையா எல்லாத்தையும் புரிஞ்சிக்கனும் ... கல்யாணம்ன்றது ஈஸி இல்லை வாசு ... பிடிக்கலன்னா இடையில பிரியலாம் ஆனா பிரியறதுக்கு முன்ன வரைக்கும் நம்ம வாழ்ந்த வாழ்க்கை நம்மல ரொம்பவே பின்னால பாதிக்கும் ... யோசிச்சி ஒரு மனசா முடிவு பன்னு ... திரும்ப நம்மளால பின்னால போக முடியாது" என்று கூறினார். 


Leave a comment


Comments


Related Post