இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 39 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 13-06-2024

Total Views: 10731

அபிநந்தன் பற்றி சந்தியா சொன்ன அனைத்தையும் ஒப்பித்து விட்டு முகில் மூலமாக தன் மனம் குழம்பியதில் தான் செய்த தவறுகள் யாவையும் புலம்பி கண்ணீரோடு அமர்ந்திருந்த தன் தோழியை தீயாக முறைத்து கொண்டு எதிரில் அமர்ந்திருந்தான் ப்ரதீப்.

இத்தனை நாட்கள் தாங்கள் எவ்வளவோ கேட்டும் கூட எதையுமே பகிராமல் இன்று கோர்ட் வரை சென்ற பின்னர் வந்து புலம்பி அழும் தங்கள் தோழனின் மகளை ஆற்றாமையோடு மோகன்ராம் பார்த்திருக்க பத்மாவதி அவளை ஆறுதல் படுத்த முயன்று கொண்டு இருந்தார்.

“ப்ரதீப் நான் வேண்டும்னு எதுவும் பண்ணல டா எனக்கு இப்போவும் எப்போவும் நந்தன் நல்லா இருக்கனும். அதைத்தான் நான் மனசார நினைச்சேன். நான் அவர் கூட அவரோட விருப்பமே இல்லாம ஏதோ கட்டாயத்துல இருக்கிறதா நினைச்சு தான் பிரிஞ்சு போக முடிவு எடுத்தேன். ஆனா நான் அவருக்கு சத்தியமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பல. அவரு எனக்கு டிவோர்ஸ் கொடுக்க நினைக்குறாருன்னு தான் நான் அதுல சைன் பண்ணினேன்.” என்று இன்னும் தேம்ப அவளை முறைக்க மட்டுமே முடிந்தது ப்ரதீப்பால்.

“ஏய் அவரோட விருப்பம் நீதான்னு தெரியாமத்தானா நீ அபிநந்தன் கூட ஒன் இயர் வாழ்ந்த அபி?” என்று ப்ரதீப் கேட்க உள்ளுக்குள் துணுக்குற்று போனாள் அபிலாஷா.

“நான் என்ன பண்றது ப்ரதீப். நந்தன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணினப்போ அவரு அதை அக்சப்ட் பண்ணவே இல்ல ஃபேமிலி தங்கச்சி அம்மான்னு காரணம் சொன்னாரு. ஆனா நான் தான் பிடிவாதமா நான் உங்களை லவ் பண்றேன்னு நின்னேன். நந்தன் என்கிட்ட நல்லாதான் பேசிட்டு இருந்தாரு. அதுக்கப்புறம் சித்தி சித்தப்பா வேற மாப்பிள்ளை பார்த்திருக்கோம்னு சொன்னதும் அத்தை மாமா முகிலை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பிரச்சினை வரவும் நந்தன்கிட்ட சொன்னேன். அவரும் வந்தாரு. 

அவங்க இன்சல்ட் பண்ற மாதிரி பேசவும் அவங்க பொருள் எதுவும் வேண்டாம்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்திட்டாரு. எங்க கல்யாணம் நடந்தது நாங்க வாழ ஆரம்பிச்சோம். ஆனா நந்தன் இன்னைக்கு வரை நந்தன் என்கிட்ட அவரு என்னை லவ் பண்றேன்னு சொன்னதே இல்லை. அது மட்டும் இல்ல… நந்தனும் சந்தியாவும் அன்னைக்கு ஃபோன்ல பேசிட்டு இருந்ததை வீடியோ எடுத்து காட்டினான்.” என்று சற்று நிறுத்தி மூச்சு வாங்கினாள் அபிலாஷா.

“முகில் வீடியோ எடுத்து காட்டினானா? அப்படி அதுல என்ன இருந்தது அபி?” பத்மாவதி கேட்க தன் கைப்பேசியில் இருந்த வீடியோவை காட்டி மீண்டும் கேவினாள் அபிலாஷா.

“அதுல நந்தன் என்னை லவ் பண்ணவே இல்ல சூழல் நிலை காரணமாகத்தான் என்னை கல்யாணம் பண்ணினேன்னு அவரே சொன்னாரு. அதை கேட்டே என் மனசு உடைஞ்சு போச்சு. அப்படி நிலையில தான் நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சு குழந்தைக்காகவாச்சும் நந்தன் அவரோட காதலோட என்னை ஏத்துப்பாருன்னு நினைச்சு இருந்தேன். அவரும் என்கிட்ட பாசமா இருந்தாரு. ஆனா…” என்று அதற்கு மேல் பேச இயலாது அபி அழ

“ஆமா நந்தன் உன்னை லவ் பண்ணலனு சொன்னதை பத்தி நீ அவர்கிட்ட எதுவும் கேட்டியா?” கூர் பார்வையோடு ப்ரதீப் கேட்க

‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“சரி நந்தன் தான் உனக்கு அபார்ட் பண்ணினாருன்னு நீ எப்படி நம்புற? அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அதுவரை நந்தன் கையை பிடிச்சிட்டு அவரோட ஆறுதலை கேட்டுட்டு இருந்தவ சடனா எப்படி அவர் மேல சந்தேகம் வந்தது?” என்று மீண்டும் அடுத்த கேள்வி முன் வைக்க

“அ… அது… அதுவும் முகில் தான் என்னோட லைஃப் மேல இருந்த அக்கறையில நந்தனை கண்காணிக்க ஆள் வைச்சதாகவும் அவர் மூலமா தெரிஞ்சதாகவும் சொன்னான்.” என்று குரல் தாழ்த்தி சொல்ல

“ஆமா… அக்கறை பொல்லாத அக்கறை… அபி நீ எப்போ இருந்துடி இப்படி இடியட் மாதிரி யோசிச்சு ஆரம்பிச்ச?” கடுப்பாக கேட்டான் ப்ரதீப்.

“ஏம்மா நந்தன்கிட்ட இதுபத்தி பேசி இருந்தா பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காதே டா..” வேதனையாக மோகன்ராம் கூறிட

“என்னங்க… போனதை விடுங்க ப்ரதீப் இப்போ என்ன பண்ணி இதை சரி செய்ய முடியும் னு யோசிங்க…” பத்மாவதி சொல்ல

“அபி… ஒரு ஆஃபிஸ் விஷயமா பேசுறதுக்காக நந்தனை சரியா பத்து மணிக்கு வீட்டுக்கு வா ன்னு சொல்லி இருந்தேன் மா மணி இப்போ ஒன்பதே முக்கால். கண்டிப்பா இன்னும் கால்மணி நேரத்தில நந்தன் வந்திடுவாரு. நீங்க நேரடியா எல்லா பிரச்சனையும் பேசுங்க.” என்று மோகன்ராம் சொல்ல

“இல்ல… இல்ல அப்பா… அபி இன்னும் முழுசா சந்தேகம் தீர்ந்து போய் வரலை. அவளுக்கு முகில் சொன்னதுல எவ்வளவு உண்மை பொய்னு தெரியனும்ல. அபி நீ அந்த ரூம்ல இரு. உன் மனசுல இருக்கிற எல்லா கேள்விக்கான விடையையும் நான் நந்தன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன். அதுக்கப்புறம் முடிவு உன்னோடது.” என்று சொன்ன நேரம் வாசலில் அபிநந்தன் வண்டி சத்தம் கேட்க எதுவும் பேசாமல் அபிலாஷா அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.

“வாங்க நந்தன்… என்று மூவருமே வரவேற்க சார் ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?” மோகன்ராமை நோக்கி கேட்க

“ம்ம் பேசலாம் ப்பா நீ முதல்ல உட்காரு.” என்றிட

“அது வந்து ப்ரதீப் நான் உங்ககிட்ட பேசணும்னு தான் நினைச்சேன்.” அபிநந்தன் பேச்சை துவங்க அவன் என்ன சொல்ல போகிறான் என்று தெரிந்தே

“சொல்லுங்க நந்தன்..” என்று கேட்க

“எனக்கும் லாஷாக்கு இருக்கிற பிரச்சினைக்காக நீங்க ரெண்டு பேரும்… அதுவும் அச்சு ஃப்ரகணன்டா இருக்கும் போது அவளோட மனசு கஷ்டப்பட வேண்டாமே…” நந்தன் சொல்ல

“அச்சுக்கிட்ட நான் பேசுறது இருக்கட்டும் நந்தன். அவகிட்ட நான் நார்மலா இருக்க நீங்க எனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்தனும்.” என்ற ப்ரதீப் தன்னுடைய அழைப்பை அபி ஏற்று விட்டாளா என்று நந்தன் அறியாமல் சரி பார்த்து கொண்டான்.

நந்தன் பேசத் துவங்கும் போதே ப்ரதீப் ‘தங்களின் உரையாடல் தெளிவாக கேட்கட்டும்’ என்று அழைப்பு தொடுத்திருந்தான். அவளும் அதை ஏற்று நந்தனின் பேச்சை கவனிக்க துவங்க

“என்ன ப்ரதீப் என்ன கேட்கனுமோ கேளுங்க..” என்று நந்தனும் அனுமதி தர

“முதல்ல உங்களுக்கும் சந்தியாக்கும் இடையில இருக்கிறது எந்த மாதிரியான உறவு?” வேண்டுமென்றே ப்ரதீப் சந்தேக தோணியில் கேட்க ஒரு நொடி அதிர்ந்து பின்னர் விரக்தியாக உதட்டை சுழித்தான் நந்தன்.

“உங்களுக்கும் என் மனைவி அபிலாஷாவுக்கும் இடையில என்ன உறவோ அதே உறவு தான் ப்ரதீப்..” என்று நந்தன் அழுத்தமாக தெரிவிக்க அதை கேட்டு ஏற்கனவே தெரிந்த விடை தானே என்று ப்ரதீப் மர்ம புன்னகை புரிய அலைப்பேசி வழியே கேட்டவளுக்கோ நெஞ்சில் சுருக்கென்று வலி தைத்தது.

“ப்ரதீப் என் கூடப்பிறக்காத அண்ணன். இப்போ என் நாத்தனாரை கல்யாணம் பண்ணி எனக்கு இன்னும் அண்ணன்ங்கிற உறவை ஸ்ராட்ங் ஆக்கிட்டான்.” என்று எத்தனை முறை நந்தனிடமே சிலாகித்து இருக்கிறாள் இந்த அபிலாஷா.

“அப்போ ரெண்டு பேருக்கும் ஃப்ரண்ட்ஷிப் தாண்டி ப்ரதர் சிஸ்டர் பாண்டிங் சரியா?” ஒற்றை புருவம் உயர்த்தி ப்ரதீப் கேட்க

“என் அப்பா அம்மாவுக்கு அக்சயா மாதிரி சந்தியாவும் ஒரு மகள் தான். அக்சயாக்கு எனக்கு எப்படி அண்ணானு மரியாதை தராளோ அதேப்போல தன்னோட அக்காவா நினைச்சு தான் அவளும் எல்லாமே ஷேர் பண்ணிப்பா… அப்போ சந்தியா எனக்கு தங்கச்சி மாதிரி தானே?” நந்தன் கேட்டு நிறுத்த இதற்கு சொல்ல பதிலின்றி அமர்ந்திருந்தான் ப்ரதீப்.

சற்று மௌனம் காத்தவன் அவனே அடுத்த கேள்வியை முன் வைத்தான்.

“நந்தன் நீங்க லாஷாவை எப்படி எந்த காரணத்தால கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என்று ப்ரதீப் கேட்க மென்னகை தந்தவன்

“உங்களுக்கு தான் தெரியுமே ப்ரதீப்…” என்றிட 

“ம்ம்.. தெரியும். எங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ ல ஒரு யூகம் இருந்திருக்கும். ஆனா உண்மையான நிகழ்வு உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ ல தானே தெரியும்.” என்று ப்ரதீப் சொல்லிட

“ஆக்சுவலா அன்னைக்கு ஜூவல்ரி ஷாப்ல அம்மா கூட லாஷா பேசிட்டு இருக்கும் போது தான் ஃபர்ஸ்ட் பார்த்தேன். அப்பறம் அதே பொண்ணை அச்சுக்கு ட்ரெஸ் எடுக்கும் போது பாக்கும் போது ஏதோ கோ- இன்சிடென்ட்னு நினைச்சேன். பட் அடுத்த நாளே லாஷா ஆஃபிஸ் ல என் கண் முன்னாடி வந்து நிற்க அப்படியே என் மனசுல பதிஞ்சு போய்ட்டா… ஒவ்வொரு முறை லாஷா என்னோட பேசும் போது கண்டிப்பா என் மனசுக்குள்ள எனக்கே தெரியாம என்னை நெருங்கினா‌. என்னை தடுக்க வழி தெரியாம அவளை தவிர்க்க முயற்சி பண்ணினேன். முடியல.

ஒரு நாள் அவளே ப்ரப்போஸ் பண்ணினா… நீங்களே சொல்லுங்க ப்ரதீப் தன்னோட சொத்துக்காக தான் தனக்கு ஒரு ஆதரவா இருக்காங்க னு தெரிஞ்சும் அவ குடும்ப ஆட்கள்னு எவ்வளவு பண்ணிருக்கா அவங்களுக்கு.. அப்படி ஒருத்தி யாருக்கு தான் பிடிக்காது ப்ரதீப்?” என்று கேட்டு நிறுத்த அபிலாஷாவை நினைத்து மோகன்ராம் பத்மாவதி ப்ரதீப் பெருமை கொள்ள அந்த பெருமைக்குரியவளோ தன் சிறுமை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டாள்.

“லாஷாவை எனக்கு பிடிச்சிருந்தும் அவாய்ட் பண்ணினேன். ஒருவேளை அவ விரும்புற வசதியான வாழ்க்கையை என்னால தர முடியாதோன்ற பயத்துல தான். ஆனா லாஷா  உன்னோட கடமைகளை முடிச்சிட்டு என்னோட காதலை நீ ஏத்துக்கிட்டாப் போதும். அதுவரை உனக்கும் சேர்த்து நான் காதலிக்கிறேன்னு சொன்னவ மேல எனக்கு மரியாதையோட சேர்த்து காதலும் அதிகரிச்சது. 

என் லாஷா என்னை மட்டும் விரும்பல. என்னோட குடும்பத்தையும் சேர்த்து விரும்பினா. என்னோட வருமானத்துக்கு ஏத்தமாதிரி அவளோட தேவைகளை மாற்றிக்கிட்டா… லாஷா எவ்வளவு பெரிய கோடீஸ்வரி… ஆனா எனக்காக என் மேல உள்ள காதல்ல அந்த ஒரு பெட்ரூம் இருந்த என்னோட பழைய வீட்ல அவளோட வாழ்க்கையை ஏத்துக்க தயாரா இருந்தா… 

உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ப்ரதீப். நான் படிப்பை முடிச்சு உங்க கம்பெனில ஜாய்ண் பண்ணினதுல இருந்தே என் அம்மா எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அதுல முக்கால்வாசி சம்பந்தம் அமையாம போனதுக்கு வீடு சின்னதா இருக்குனு சொன்னதும் ‘இது என் அப்பா வாழ்ந்த வீடு இங்கிருந்து என்னால மாற முடியாது’னு நான் சொன்ன காரணத்தால தான்.

ஆனா, நானே அந்த வீட்ல இருந்து மாற காரணம் எனக்காக என்னை இவ்வளவு காதலிக்கிற லாஷாக்கு தேவையான வசதிகள் நான் முடிஞ்ச அளவுக்கு பண்ணி கொடுக்கனுமே… அதனால தான்.” என்று நந்தன் முடிக்க

“நந்தா நீ இவ்வளவு சொல்லவே தேவையில்லை. எனக்கு உன்மேல ரொம்பவே நம்பிக்கை இருக்குப்பா.. ஆனா எனக்கு புரியாத விஷயம் நீதான் அபிக்கு அபார்ட் பண்ண சொன்னதா நீயே சொல்லிருக்கியே..‌ அது எதனாலப்பா?” என்று மோகன்ராம் கேட்க விலுக்கென்று நிமிர்ந்தான் அபிநந்தன்.

“அது ஒன்னுதான் சார் என் மனசு அறிஞ்சு நான் பண்ணின பாவம்… அந்த வார்த்தையை சொன்னதுக்காகத் தான் இப்போ விதி என்னையும் லாஷாவையும் பிரிச்சு வைச்சு வேடிக்கை பார்க்குது.” என்று விரக்தி பட பேச

‘விதியை கண்டிப்பா மதியால வெல்ல முடியும் நந்தன்…” பூடகமாக பேசினான் ப்ரதீப். ஒரு நொடி அவனை கூர்ந்து பார்த்த அபிநந்தன்

“நான் சொல்றதை நீங்க யாரும் லாஷாகிட்ட ஷேர் பண்ணிக்க வேண்டாம் ப்ரதீப். ஒருவேளை இது தெரிஞ்சா கண்டிப்பா லாஷா மனசு உடைஞ்சுடுவா..” இப்போதும் தனக்காக யோசிப்பவனை விட்டு விலகிய தன் பைத்தியக்காரதனத்தை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.

“சொல்லுப்பா…” என்று மட்டுமே மோகன்ராம் சொல்ல

“சார்.. அது வந்து லாஷாக்கு அடிக்கடி ஸ்டமக் பெய்ன் வந்துட்டே இருந்தது. அதை பார்த்து சந்தியா அவளை செக் பண்ணிட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரச்சொன்னா. நானும் கூட்டிட்டு போய் எல்லா டெஸ்டும் எடுத்தோம். ரிப்போர்ட்ல லாஷாக்கு யூட்ரஸ் ல ஒரு கட்டி இருக்கு. ஆனா கண்டிப்பா மெடிசின் மூலமாவே குணப்படுத்திடலாம். ஆனா குழந்தை விஷயத்துல அபிலாஷா கொஞ்சம் எமோஷனலா இருக்கா. சோ அவளுக்கு இதெல்லாம் தெரிஞ்சா மனசளவுல அவளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால இது எதுவும் அவளுக்கு தெரிய வேண்டாம்னு ஒரு டாக்டரா சந்தியா என்கிட்ட சொன்னா.

அதான் நான் இதை யாருக்கும் தெரியப்படுத்த விரும்பல. அதோட எங்க இந்த விஷயம் தெரிஞ்சா லாஷா என்னை விட்டு போய்டுவாளோனு பயம் வேற…” என்றவனுக்கு அந்நாளைய நினைவுகள் கண்ணில் தோன்றி மறைய கைகள் நடுக்கம் தந்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்து அபிநந்தனை பருகச் செய்தான் ப்ரதீப். 

அவனுக்குமே தோழியின் நிலையை கேள்வி பட்டு வருத்தம் தான். அவன் தந்த நீரை பருகி விட்டு நீண்ட மூச்சுக்களை இழுத்து விட்டு நந்தன் தன்னை ஆசுவாசப் படுத்த

“நந்தா இப்போ லாஷாவோட ஹெல்த் கன்டிஷன் என்னப்பா? ஏன் எங்ககிட்ட கூட நீ இதை சொல்லலை?” பத்மாவதியும் மோகன்ராமும் கேள்வி தொடுக்க

“கடைசியா லாஷாவை டெஸ்ட் பண்ணிட்டு அவளோட கட்டி மாத்திரை மருந்து மூலமாவே குணமாகிடுச்சுனு சொன்னா சந்தியா. அதுக்காக நான் சந்தோஷப் பட்டேன். ஆனா லாஷாவோட யூட்ரஸ் வீக்கா இருக்கு கண்டிப்பா இப்போதைக்கு குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறது தான் நல்லதுன்னு சந்தியா சொன்னா. ஆனா விதிவசத்தால என் லாஷா ப்ரெக்னன்ட் ஆனா.

ஆன்டி நீங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ லாஷா கன்சீவா இருக்க வாய்ப்பு இருக்கு விசாரிச்சு பாருங்கன்னு அம்மாகிட்ட சொன்னீங்க இல்லையா? அதை நான் கேட்டேன். எனக்கு அவ கன்சீவ் ஆனா லாஷாக்கு எந்த பாதிப்பும் இல்லனு தெரிஞ்சுக்கிட்டாத்தான் நிம்மதினு தோணுச்சு.

சந்தியாகிட்ட போனேன். ‘அபி இருக்கிற நிலையில கரு வளர்ந்தா அது தாயோட உயிருக்கு ஆபத்து’னு சொன்னதும் நான் என்ன சொல்ல முடியும்? எனக்கு கடைசி வரைக்கும் என் லாஷா மட்டும் போதும். வேற எதுவும் தேவையில்லை என் லாஷாக்காக இந்த குழந்தையை அபார்ட் பண்ண கூட தயாரா இருக்கேன்னு ஒரு முறை.. ஒரே ஒரு முறை தான் சொன்னேன். ஆனா அதுகூட என் மனசுல இருந்து வரலை… என் லாஷாவை காப்பாத்த வேற வழி இல்லைன்னா கண்டிப்பா அதை பண்ணலாம்னு சொன்னேனே தவிர அது தானாவே நடந்தப்போ உங்க எல்லாரையும் விட ஏன் லாஷாவை விட நான் ரொம்பவே நொந்து போய்ட்டேன்.

டெஸ்ட் பண்ணி சொல்றேன்னு சொன்ன சந்தியா டெஸ்ட் பண்ணிட்டு இந்த குழந்தை அதிக நாள் தாங்க வாய்ப்பில்ல. அபிலாஷாவோட யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு. சோ எப்போ வேணும்னாலும் அபார்ட் ஆகலாம்னு சந்தியா சொன்ன நொடியில இருந்து நெருப்புல நிக்கிற வேதனை தான் எனக்கு.” என்று மொத்த சோகத்தையும் கூறி நந்தன் கண்ணீர் வடிக்க எதிரில் இருந்த இருக்கையை விட்டு அருகில் சென்று அமர்ந்து ஆளுக்கொரு பக்கம் ஆதரவாக  கொண்டனர் மோகன்ராம் ப்ரதீப் இருவரும்…

இவன் சொன்னதை கேட்டு மூவருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் மூவருக்குமே இதனை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டு இருக்கும் லாஷாவின் நிலை குறித்து பயமும் வந்தது.

“சரி நந்தன் இவ்வளவு காதலை வைச்சிட்டு ஏன் அபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புனீங்க?” என்று ப்ரதீப் கேட்க இம்முறை “நான் லாஷாக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் தந்தேனா?’ என்று நந்தன் அதிர இவர்கள் குழப்பமாக பார்த்தனர் அவனை..

“இல்ல ப்ரதீப்.. சார் லாஷாகிட்ட இருந்துதான் எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் வந்தது. அவ என்கூட இருந்தவரை எதுவுமே கேட்டதே இல்ல முதல் முறை என்கிட்ட இருந்து பிரிவை பரிசா கேட்குறான்ற வேதனையோட தான் நான் அதுல கையெழுத்து போட்டேன்.” என்று அபிநந்தன் சொல்ல ப்ரதீப் மோகன்ராம் பத்மாவதி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


தொடரும்…


Leave a comment


Comments


Related Post