இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 14-06-2024

Total Views: 8422

இதரம் -11


"தேவா எழுந்து அலாரத்தை ஆஃப் பண்ணு!" என முனகியபடி நன்றாக திரும்பி படுத்துக் கொண்டான் மாறன். 


அலாரம் நிற்காமல் அடித்துக் கொண்டே இருக்கவும், எரிச்சலில் கண்ணைக் கசக்கியவன்," ப்ம்ச் தேவா ப்ளீஸ்!, எழுந்து ஆஃப் பண்ணு,கண்ணைத் திறக்க முடியல" என மீண்டும் சொல்லி விட்டு உறங்கத் துவங்க, அலாரச் சத்தம் அவனைத் தூங்க விடாமல் செய்தது.



ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல் எழுந்தவன்," என்ன தேவா?" என்று சலித்துக் கொண்டே அலாரத்தை அமர்த்தினான். 


அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்கவே,' கழிவறை சென்றிருப்பாள் அதுதான் நான் சொன்னது கேட்கவில்லை!' என்று அவனே தீர்மானித்துக் கொண்டு மீண்டும் உறங்கிவிட்டான். 



விடிந்த பிறகு தான் தெரிந்தது மல்லி பேலஸிலேயே இல்லையென்று 

"எங்கே மல்லி?" என்று ஜீவரெத்தினம் மாறனிடம் வினவ அவனோ," கிச்சன்ல இல்லையா?" என்று அதிர்வாய் கேட்டவன் படபடவென்று சமையலறைக்குச் சென்றான். 


"திரு!" என்று பலமுறை அழைத்த ஜெகதீஸ்வரியின் குரல் அவனை எட்டிடவே இல்லை. 


ஜெயராஜ் நக்கலாய் உதடு சுளித்து சிரித்தவர்,'நம்ம விரட்ட நினைச்சோம் அவளே ஓடிட்டா !'என எண்ணியபடி உணவருந்தினார். 


ஜீவரெத்தினம் உணவை வைத்து விட்டு எழுந்தவர் திருவின் பின்னால் செல்லப் போக, ஜெகதீஸ்வரியும் வேறு வழியின்றி எழுந்து கொண்டார். 


திருமாறன் மனமெல்லாம் கனத்தது. 


'எங்கே போயிருப்பா ...?கோவிலுக்கு, வெளியே கார்டனில் இருப்பாளோ?' யோசித்துக் கொண்டே ஓடினான் தோட்டத்திற்கு. எங்குமில்லை. 


அவள் அறையை விட்டு வெளியே செல்வது சமையலறைக்கு மட்டுமே. நடுக் கூடத்தில் கூட அவளைக் காண இயலாது. தன் இருப்பை இங்கு மட்டும் தான் நிரப்பியிருப்பாள். 

'கோவிலுக்கு போயிருப்பாளோ?' என்றெண்ணியவனின் மனமே காறித் துப்பியது. என்றாவது அங்கெல்லாம் அழைத்துச் சென்று இருக்கிறாயா என்று. 


மனம் அலைகழிந்தது. 


'எங்கே சென்றிருப்பாள்?' என்றவனின் எண்ணத்தில் அவளது அக்காக்கள் நினைவு வந்து நின்றது. 


'ஒரு வேளை வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்களா...?இல்லை நமக்குத் தெரியாம இது நடக்க வாய்ப்பு இல்லையே?' என்று யோசித்தவன் மணியக்காரருக்கு அழைத்து விட்டான். 


அவர் எடுத்ததுமே பரபரப்பாக மல்லியின் நலத்தை விசாரிக்க, அவருக்குத் தெரியவில்லை என்று ஊர்ஜிதம் செய்தவன், சம்பிரதாயமாக நான்கு வார்த்தைகள் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தான்.


ஜெயராஜ் அவன் வருவதற்குள் கலவரத்தையே ஏற்படுத்தியிருந்தார் அனைவரின் முன்னிலையிலும். 


'இவர் ஏன் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்?' என்று ரகு நயனிகாவிற்கே அத்தனை எரிச்சல். அதே கடுப்பில் தான் நின்றிருந்தான் நரேனும். 


"உன் சித்தப்பாக்கு இது தேவையில்லாத விஷயம் துர்கா" என்றிருந்தான் மனைவியிடம். 



"உங்க மாமான்னு சொல்லுங்க" என்று திருத்தினாள் அவனை. 


திலகவதியோ," ராஜு நீ ஏன் தொண்டைத்தண்ணி வத்த கத்துற. நீ கொண்டு வந்த சம்பந்தத்தை அவன் மதிக்கலை தான் அதுக்காக இப்ப கத்தி என்ன பிரயோஜனம்.? கொஞ்சம் அமைதியா இரு" என்றிருந்தார் 



"அதுக்கில்லைக்கா இப்போ வெளியே இந்தப் பொண்ணு காணாமல் போனது தெரிஞ்சா நம்ம மரியாதை என்ன ஆகறது. இல்லாத வீட்டுப் பொண்ணை கர்ப்பம் கலைஞ்சதும் துரத்தி விட்டுட்டோம்னு பேச மாட்டாங்களா...? போகப் போறது ஒருத்தனோட மானமா இருந்தா பரவாயில்லை. ஜெஆர்எம் பேலஸோட மானமில்ல போகும். ஏற்கனவே இவன் செஞ்ச வேலையால என் பையனுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்கிது. விஐபிஸ் எல்லாம் யோசிக்கிறாங்க நம்ம வீட்டில் பெண் தர்றதுக்கு" என கடுகடுத்தார். 


"ஏன் வைஷாலியையே கட்டி வைக்கிறது?" என்று திலகவதியின் கணவர் செங்கதிரோன் பட்டென்று சொல்லிவிட, ஜெயராஜிற்கு முகம் கறுத்துப் போனது. 


"அவ ப்ரணவோட ரெண்டு வயது பெரியவ அண்ணா. இல்லாட்டி எந்த மேடையில் நாங்க கொண்டு வந்த சம்பந்தத்தை திரு வேண்டாமென சொன்னானோ அங்கேயே ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிருப்போம்" என்றார் வைஷ்ணவி. 


"இப்போவெல்லாம் யார்மா வயசைப் பார்க்கிறா. நல்ல பொண்ணுன்னா முடிக்க வேண்டியது தான்" என்று அதற்குமே அவர் பேசிவிட 


வைஷாலி முந்திக் கொண்டு,"இவர் தான் மாப்பிள்ளைனு சொன்ன பிறகு மாத்தி வேற ஒருத்தரை கட்டிக்க சொன்னா நான் என்ன பொம்மையா அங்கிள். திருவை மனசில் நினைச்சு மறக்க முடியாம தான் இதுவரைக்கும் என் பேரன்ட்ஸ் ஃபோர்ஸ் பண்ணியும் அடுத்த மேரேஜுக்கு ஒத்துக்கலை நான்" என்றாள் வைஷாலி கோபமாக. 

 
"ஜஸ்ட் ஷட் அப் வைஷாலி" என்று அதட்டினார் இளமாறன். 



"அங்கிள்...?" என அதிர


"ஹவ் டேர் யூ. என் பையனுக்கு உன்னை மேரேஜுக்கு பேசினோம் தான் அதுக்காக அவனுக்கு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் நடந்தும் நீ இப்படி பேசுறது சரியில்லை."என்றார் அவளின் பேச்சுப் பிடிக்காமல். 


"அங்கிள் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை" என்று தன்னிலை விளக்கம் கொடுக்க வந்தவளை இளமாறன் கையுயர்த்தி நிறுத்தியவர்," திரு கிளம்பு மல்லி ஊருக்குப் போகலாம்" என்றார். 



ஜெகதீஷ்வரியோ," அவ எங்கே போனா உங்களுக்கு என்ன?, அதான் போய்ட்டாளே விடுங்க. தேடுறேன்னு அது இதுனு சொல்லாதீங்க." என்றார் அமர்த்தலாக 



"ம்மா!" என்று சட்டென அதட்டிய திருவோ," லீவ் இட் டாட். ஷீ இஸ் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி. நான் பார்த்துக்கிறேன்" என அங்கிருந்து வெளியேறி விட்டான். 



"இப்போ நான் என்ன சொன்னேன்னு இப்படி கோவப்பட்டு போறான்?" என முணுமுணுத்த ஜெகதீஸ்வரியும் தன்னறை புகுந்து கொண்டார். 


***********



மல்லி ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அந்த பங்களாவில். 


என்னைத் தேடுவாரா... இல்லை தொல்லை விட்டதுன்னு இருப்பாரா... மாறா தேடி வருவீங்க தானே என்று தனக்குள் பேசிக் கொண்டாள். 


பார்க்கணும் நிறைய நேரம் பேசணும் எல்லாம் சொல்லணும். நிறைய கேட்கணும் மாறா வந்திடுங்க...அவளின் மனம் டாக்டர் அழைப்பை மறந்து மாறனுக்குத் தாவியிருந்தது. 

யாரைப் பற்றியும் நினைக்க நேரமில்லை அவளுக்கு. நினைவெல்லாம் அவன் மட்டுமே சூழ்ந்திருந்தான். 


இன்னுமா சாப்பிடாம இருக்க என்ற குரலில் சுயம் வந்தவள் மெலிதாய் புன்னகைத்து இதோ என்று தன் முன் இருந்த தட்டை எடுத்துக் கொண்டாள்.





'எங்கே போயிருப்பாள்?' என்ற ஒரு கேள்வி மட்டுமே அவன் எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தது. 


"எங்கு சென்று தேடுவது அவளை... வீட்டை விட்டு இதுநாள் வரை தனியே வெளியே சென்றதில்லையே அன்று மருத்துவமனைக்குத் தானே வெளியே சென்றாள் தலையைப் பிடித்துக் கொண்டான். 


"டாக்டர் சார் இப்படி காட்டுக்குள்ள போகாதீங்க. ஊரு சின்ன ஊரா இருக்கலாம், ஆனா இந்த காடு திக்கு தெரியாத இடம். எல்லாம் ஒன்னைப் போலவே இருக்கும். ஒரே எடத்துல சுத்துவீங்க அப்புறம்.." என்று ஒரு நாள் காட்டுப்பாதையில் வழி தவறியவனை அழைத்துக் கொண்டு வரும் போது சொல்லியிருந்தாள். 



'வழி தவறிட்டேன்னு எனக்கு அறிவுரை சொன்ன, நீ ஏன்டி இந்த கான்கீரிட் காட்டுக்குள் தொலைஞ்சு போன...?' மனதினோரம் மெலிதாய் ஓர் அழுத்தம். 


அவனின் மனம் மெல்ல மெல்ல பயணித்தது கடந்த காலத்தை நோக்கி. 


அவனது எண்ணங்களை தடை செய்தது கைபேசியின் கதறல். 



"நான்... நான் உடனே வர்றேன்." என்று பதற்றமாய்  கிளம்பி விட்டான். 


...... தொடரும் 


Leave a comment


Comments


Related Post