இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 15-06-2024

Total Views: 9146

மறுநாள் காலையில் எழுந்த கார்த்திகேயன் முரளியுடன் அவனின் வீடு சென்று காலை உணவை முடித்து கொண்டு கார்த்திகேயனும் அன்பழகனும் டவுனுக்கும், முரளி வேலைக்கும் சென்றான். 

    கார்த்திகேயன் அன்பழகன் இருவரும் டவுனுக்கு சென்று கார்த்திகேயனுக்கு உடைகள் போன் மற்ற தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு அன்பழகன் உடன்  கேன்டீன் வேலைகளை கவனிக்க சென்றனர். 

     கயல்விழி கார்த்திகேயனை தேடி வந்த போது கார்த்திகேயன் வீடு பூட்டி இருக்க வேலை செய்பவரிடம் விசாரித்ததில் அவன் அன்பழகன் உடன் சென்றது அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள். 

    வீட்டிற்குள் வந்த பெண்ணின் முகத்தை கண்ட லலிதாவிற்கு புன்னகை வந்தது.  அவள் எங்கு சென்று வருகிறாள் என்று அவருக்கு தெரிந்து இருந்தது இருந்தும் 

    "ஏன்டி இவ்வளவு காலையில் எங்க போயிட்டு வர?..." என்று கேட்டார். 

    "ஏன் உனக்கு தெரியாதா?..." என்றாள் கோபமாக 

     "நீ போன இடம் எனக்கு எப்படி தெரியும் நீ போகும்போது சொல்லிட்டா போனாய்" என்றார் லலிதா. 

      "இந்த அத்தான் காலையிலே  எங்கேயோ போய் இருக்கு அதை பார்க்கத்தான் போனோன்" என்றாள். 

    " அவன் தான் நேற்றே  காலையில் வெளியே போயிடுவேன் சாப்பாடு எடுத்து வர வேண்டாம் என்று சொன்னானோ" என்றார். 

    " எப்ப சொன்னார் அத்தான்."

     " நேற்று இராத்திரி போன் செய்தான்"  என்றார். 

     " ஓஓஹே...   உங்ககிட்ட சொல்ல முடியுது எனக்கு ஒரு போன் பண்ணணும்  தோணலை ,  இன்னைக்கு டவுனுக்கு கூட்டிட்டு போய் டிரஸ் போன் எல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்தேன் என்னை தான் அடிச்சுகினம்"  என்று அவள் பாட்டிற்கு பேசி திட்டிக்கொண்டு இருந்தாள். 

  
      அன்று மாலை முன் தினம் போல் அன்பழகன் ஓட்டலின் அருகில் மூன்று நண்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.  அப்போது சரவணன், வீரராகவன், கோதண்டம் மூவரும் காரில் எங்கே சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் கார்த்திகேயன் அமர்ந்து இருப்பதை கண்டதும் சற்று தொலைவில் சென்று கார் நின்றது. 

    அதை கண்ட அன்பு  "உங்க வீட்டு கார் உன்னை பார்த்துட்டு தான் நிக்குதுனு நினைக்கிறேன்" என்னும் போதே கோதண்டம் கதவை திறந்து கொண்டு இறங்கினார். 

     "டேய் உன் மாமனார் வராருடா" என்றான் அன்பு. 

      கார்த்திகேயன் அவர் வரும் பக்கம் கூட திரும்பாமல் இருந்தான். 

     காரில் இருந்தே வீரராகவன் தன் மகனை பார்த்துக்கொண்டு இருந்தார்.   அவர் மனமே இராஜா மாதிரி வாழவேண்டிய என்மகன் வாழ்க்கையை நானே குலைச்சுட்டேனே என்று வறுந்தினார்.  அவன் அருகில் வந்து பேசத்தான் ஆசை ஆனால் அவன் என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு காரில் இருந்தே பார்த்துக்கொண்டு இருந்தார். 

      சரவணன் தடுத்தும் கோதண்டம் பேச அருகில் வந்தார். 

     "கார்த்தி எப்படி இருக்கப்பா?..." என்றார் கோதண்டம். 

      அவன் பதிலும் சொல்லவில்லை அவர் புறம் திரும்பவும் இல்லை. 

      "எனக்கு தெரியும் கார்த்தி நீ எங்கிட்ட பேசமாட்டாய் என்று அந்தளவுக்கு நான் பெரிய தப்பு பண்ணியிருக்கேன் எல்லாத்துக்கும் நான் தான் காரணம் எனக்கு என்ன தண்டனை என்றாலும் கொடு ஏற்கிறேன்.  ஆனால் உன் அப்பா அம்மாவுக்கு தண்டனை கொடுக்காதே கார்த்தி  அவங்க இவ்வளவு நாள் அனுபவிச்சதே போதும் புள்ளையை தொலைச்சிட்டு  ஒவ்வொரு நாளும் வேதனையில் துடிச்சிட்டு  இருந்தாங்க இப்ப உன்னை பார்த்த பிறகு தான் கொஞ்சம் தெளிந்து இருக்காங்க அவங்க கிட்ட பேசிட்டா சந்தோஷமாகிடுவாங்க கார்த்தி" என்று பேசிக்கொண்டே இருந்தார். 

     எதற்கு அவன் பதில் அளிக்கவில்லை அவரையும் பார்க்கவில்லை. 

    " கடைசியா ஒரு வேண்டுகோள்  கார்த்தி என் பெண்ணை என்கிட்ட பேச சொல்லுப்பா நீ சொன்னா கேட்பா பத்து வருஷம் ஆச்சு அப்பா என்று கூப்பிட்டு" என்றவர் அவனிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்து  "நான் வரேன் கார்த்தி" என்று சென்றுவிட்டார் கோதண்டம். 

    அவர் சென்றதும் மூச்சை இழுத்து வெளியிட்டான் கார்த்திகேயன்.  நெஞ்சை அழுத்துவது போல் உணர்வினால் அப்படி செய்தான்.  நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா என்று அழைத்தவரை அம்மா இல்லை என்று தெரியவைத்தவர் இவர் தானே. 

   அதுதானே அவனை ஊரைவிட்டு ஓடவைத்தது.  தன்னை பெற்றவராக இருந்து இருந்தால் தன் மகன் தவறு செய்யமாட்டான் என்று உறுதியாக இருந்து இருப்பார்.  தந்தையை விட பெற்ற பிள்ளைகளை பற்றி தாய்க்குத்தானே தெரியும்.  தன்னை வளர்த்தவர் என்பதால் தான் மற்றவர்கள் சொல்லுவதை நம்பி தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் பேசினார்.  அந்த எண்ணம் தான் தனக்கு யாரும் இல்லை என்று எண்ணி ஊரைவிட்டு ஓடவைத்தது.

      தன்னை தவறாக பேசியவர்களின் முகத்தை பார்க்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதால் தான் லலிதா அத்தை தன்னை சமாதானம் செய்து மறுநாள் அவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லியும் வீட்டை விட்டு ஓடினான்.  எண்ணங்களில் மூழ்கி இருந்தவனை முரளி தோள் மீது கை போட்டதும் நினைவு கலைந்தவன் நண்பர்களிடம் இயல்பாக பேசினான்.  நண்பர்களும் அதை பற்றி பேசாமல் வேறு பேசினர். 

    அடுத்த இரண்டு நாட்களும் கயல்விழியால் கார்த்திகேயனை பார்க்க முடியவில்லை.  அதில் கோபம் கொண்டு அவனை திட்டிக்கொண்டே இருந்தாள்.  லலிதா அனைத்து கண்டு காணாமல் இருந்தார். 

      முரளிக்கோ  அன்பழகனுக்கோ போனில் அழைத்து கார்த்திகேயனிடம் பேசியிருக்கலாம் ஆனால் அவள் பேசவில்லை அத்தானுக்கு விருப்பம் இல்லாமல் தானே தன்னை பார்ப்பதை தவிர்க்க வெளியே போகிறார் என்று நினைத்து இவளும் போனில் பேசாமல் இருந்தாள். 

    ஆனால் மூன்றாம் நாள் அவளால் பேசாமல் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.  இன்று எப்படியும் பார்த்தே  விடவேண்டும் என்று நினைத்தவள் சரவணனிடம்   "அத்தான் எங்கு இருப்பார்?..." என்று விசாரித்தாள்.  எப்படியும் அண்ணனை பற்றி தெரிந்து வைத்து இருப்பான் என்று அவளுக்கு தெரியும். 

   அவனும் அந்த நினைப்பை பொய்யாக்காமல்  "பகல் நேரத்தில் கம்பெனியில் கேன்டீன் வேலைகளை கவனிக்க சொல்லும் அன்பழகன் உடன் சென்றுவிட்டு மாலையில் அன்பழகன் கடைக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் இருப்பார்" என்றும் கூறினான் சரவணன். 

      மாலை தாய் தனியாக வெளியே அனுப்பமாட்டார்கள் என்று அமிர்தவள்ளியை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு அன்னையிடம் கோயிலுக்கு செல்வதாக கூறி தன் ஸ்கூட்டியில் அமிர்தவள்ளியுடன் அன்பழகன் கடை நோக்கி சென்றாள்.

     தூரத்தில் வரும்போதே கவனித்துவிட்டான் கார்த்திகேயன் இவளை என்று பல்லைக்கடித்தான்.  முரளியும் அன்பழகனும் யாரை திட்டுகிறான் என்று பார்க்க வந்தவர்களை பார்த்து சிரித்தனர். 

     "பூனைக்குட்டி வருதுடா" என்றான் அன்பழகன் சிரித்துக்கொண்டே

      அருகில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவர்களை பார்த்து முறைத்தான் கார்த்திகேயன்.

      "குட்டிமா உன்னை இவள் கூட சேரக்கூடாது என்று அன்னைக்கே சொன்னோன் இல்லையா?..." என்றான் கார்த்திகேயன்.

     " இல்லை அண்ணா அவள் தான் நான் வரவில்லை என்று சொல்லியும் என்னை கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தாள்" என்றாள் தயங்கிய குரலில்.

     "டேய் அன்பு வண்டி சாவி கொடு" என்று பைக் சாவியை வாங்கிக்கொண்டு " நீ வா குட்டிமா" என்று அழைத்து வண்டியில் சாவியை போட்டு ஏறியமர்ந்தவன் முன் வந்து பைக்கில் இருந்த சாவியை வேகமாக எடுத்து கையில் மறைத்துக்கொண்டு கார்த்திகேயனை பார்த்து முறைத்தாள் கயல்விழி.

     "ஏய் ஒழுங்கா சாவியை கொடு" என்றான் கார்த்திகேயன்..

     அவள் முறைத்துக்கொண்டே   "வள்ளி எதுக்கு என் கூட பேசக்கூடாது என்று சொன்னீங்க அத்தான்" என்றாள்.

     "அது உனக்கு தேவையில்லாதது சாவியை கொடுடி" என்றான்.

     "அதில் நான் சம்பந்தப்பட்டு இருக்கிறதால் தான் கேட்கிறேன் சொல்லுங்க அத்தான்" என்றாள்.

    "இதோ செய்து இருக்கியே வரமாட்டேன் என்று சொன்னவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இருக்க இல்லையா?...  இது மாதிரி நடக்கக்கூடாது என்று தான் குட்டிமா கிட்ட சேராத என்று சொன்னேன்.  நீ எப்படியும் அத்தை கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கமாட்ட நீ தப்பு செய்யறதும் இல்லாமல் என் தங்கச்சியையும் அதுக்கு உடைந்தையாக்கி இருக்கியே அதுக்கு தான் போதுமா" என்றான்.

    "அவள் உன் தங்கச்சி என்றாள் நான் யாரு அத்தான்" என்றாள்.

    அவள் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு  "நீ கோதண்டம் பெண்ணு" என்றான்.

     "அது இங்க எல்லாருக்கும் தெரியும் உனக்கு நான் யாரு அத்தான்" என்றாள் கோபமாக

     "எனக்கு நீ யாரும் இல்லை" என்றான் கார்த்திகேயன்.

   " அத்தான்.... " என்றாள் அதிர்வாக

    "ஏய் அத்தான் என்று கூப்பிடாத என்று சொன்னேன்  உனக்கு அத்தான் என்றாள் சரவணன் தான் நானில்லை.   இனி அவனை அத்தான் கூப்பிட்டுக்கே" என்றவன்

     முரளியை பார்த்து  "டேய் தங்கச்சியை அழைச்சுட்டு போய் வீட்டில் விட்டுட்டு வாடா" என்றான்.

     குட்டிமா இது மாதிரி இனி  வீட்டில் சொல்லாமல் வெளியே வரக்கூடாது.   என்னை பார்க்கனும் என்றால் அன்பழகன் கேன்டீனில் தான் இருப்பேன் வேலைக்கு வரும் போது பார்க்கலாம் குட்டிமா"  என்றவன் அவள் கையில் இருந்த போனை வாங்கி தன் நம்பரை பதிவு செய்து தன் போனுக்கு கால் செய்து அவள் நம்பரை தன் போனில் பதிவு செய்துவிட்டு போனை  அமிர்தவள்ளியிடம் கொடுத்தான்.

    போனை வாங்கிய அமிர்தவள்ளி அண்ணனை கயல்விழியை பார்க்குமாறு ஜாடை காட்டினாள். மெல்ல திரும்பி பார்க்க கண்களில் கண்ணீர் முட்டி நின்று விழாவா என்று தத்தளித்துக்கொண்டு இருந்தது.

     "ஏய் இன்னும் என்ன நின்னுட்டு இருக்க கிளம்பு" என்றான் வெறுப்பான பார்வை பார்த்து.

   ஏற்கனவே அவன் வார்த்தைகள் வலிக்க செய்து இருக்க இப்போது அந்த பார்வையும் அவளை என்னவோ செய்ய  கண்ணீர் வேகமாக வெளியே வந்து கன்னங்களை நனைக்க கையில் இருந்த சாவியை அவன் மீது போட்டவள் "நீ என் அத்தானே இல்லை" என்று கூறிவிட்டு அவள் ஸ்கூட்டியை நோக்கி செல்ல

   கார்த்திகேயன் தங்கைக்கு அவளுடன் போ என ஜாடை காட்ட வேகமாக சென்று அவள் வண்டியின் பின் அமர்ந்தாள்.

   அதை கண்ட கயல்விழி  "ஏய் இறங்குடி உன் பாசமலர் தான் என் கூட சேரக்கூடாது என்று சொன்னார் இல்லையா" என்றாள்.

    "நீ தானே இப்ப வரும் போது இழுத்துட்டு வந்த அதே மாதிரி கூட்டிட்டு போய் விடு அப்புறம் உன் கூட சேரமாட்டேன்" என்றாள் அமிர்தவள்ளி.

     அவளின் பதிலில் ஒரு முறை கார்த்திகேயனை திரும்பி பார்த்து முறைத்துவிட்டு வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றாள் கயல்விழி.

     ஏன்டா ஆசையா பார்க்க வந்த கயலை அப்படி பேசின என்றான் அன்பு.

  " வேற வழியில்லைடா இப்போதைக்கு அப்படி பேசினால் தான் பின்னாடியே வரமாட்டாள்" என்றதும் நண்பர்கள் இருவருக்கும் கார்த்திகேயன் சொல்வது சரி என்று படவே அமைதியாகி விட்டனர்.

    சிறிது நேரத்தில் லலிதா அத்தையிடம் இருந்து போன் வந்தது.
ஆன் செய்து காதில் வைத்தவன் அந்த பக்கம் அவர் பேசும் முன் " விழி ரொம்ப அழறாளா அத்தை" என்றான்.

   " ஆமாம் கார்த்தி கண்ணா ரொம்ப பேசிட்டாயா"  என்றார்.

     "வேற வழி இல்லை அத்தை அப்படி செய்வது தவிர  அப்பத்தான் என் பின்னாடி வரமாட்டாள்  எத்தனை நாள் ஓடி ஒளிந்து கொள்ளமுடியும். இனி ஒரே இடத்தில் வேறு வேலை செய்யனும் அதனால் தான் பேசினேன் சாரி அத்தை"  என்றான்.

  " கார்த்தி கண்ணா என்ன இது சாரி எல்லாம் இனி உன் வேலையை நல்லபடியாக பார் நான் அவளை பார்த்துக்கிறேன்" என்று கூறி போனை வைத்தார்.

   கார்த்திகேயனும் போனை அனைத்து விட்டு நண்பர்களை பார்க்க அன்பழகன் முகம் கோபத்துடன் கார்த்திகேயனை பார்த்து இருந்தான்.

    "நீயும் சந்தோஷமாக இருக்கமாட்ட மத்தவங்களும் சந்தோஷமா இருக்க விடமாட்ட இல்ல"  என்று கூறி வேகமாக ஓட்டல் நோக்கி சென்றுவிட்டான் அன்பு.

    அவன் பின் அவனை சமாதானம் செய்ய கார்த்திகேயனும் , முரளியும் அவனை அழைத்துக்கொண்டே சென்றனர்.



Leave a comment


Comments


Related Post