இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 15-06-2024

Total Views: 6251

பாகம்-11
அதற்குப்  பிறகு வந்த நாட்களில் இருவரின் சந்திப்பும் அடிக்கடி நிகழ ஆரம்பித்தது. இவனிடம் தான்  நெருங்குகிறோம் என்று தெரிந்தே நிரஞ்சனா அவனிடம் நெருங்கினாள்.  அவள் நெருங்குகிறான் என்று  தெரிந்து கொண்டு இவனும் அவளுக்கு ஒத்துழைத்தான். அவரிடம் நிகழும் மாற்றங்களை பாஸ்கரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். ஒரு முறை  கணவனும் மனைவியும் போனில் பேசிக்கொண்டிருந்த போது பிரதீப் அழைத்தான். இவள் எடுக்கவில்லை. மீண்டும் அழைக்கவும் இல்லை.  பாஸ்கரிடம் விசாரித்தான்.
"அவ ஹாஸ்பண்டோட பேசிகிட்டு இருப்பா . அதான் ரிப்லை  பண்ணி இருக்க மாட்டா "
"யாரு! பாதி ராத்திரி வரைக்கும் நின்னு அவ வேண்டான்னு கையெழுத்து வாங்கிட்டு போனானே அந்த புருஷனா?"
பிரதீப்பின் வார்த்தைகள் நக்கல் அடித்தது .
"விட்றா. கல்யாணத்துக்கு அப்புறம் நாமளும் அவங்களோட விஷயத்துல ரொம்ப  தலைடயிட முடியாது" என்றான் பாஸ்கர்.
"அது சரி என்ன  அவ பாம்பே போகப்போறாளா இல்லையா ?
"அது அவளுக்காக நீ புக் பண்ணி கொடுத்தது. போகாம எப்படி"  
"எங்க புது புருசனோட கொஞ்சறதுல என்ன மறந்த மாதிரி தொழிலையும் மறந்துட்டாளோன்னு  நினைச்சேன்"
"ஏண்டா இப்படி பொறாமை படற?"
"இது ஒன்னும் பொறாமை இல்ல. அவளை பத்தின கவலை. அவரு நல்லவரா இருந்து அவளை நல்லா பார்த்துக்குவாருன்னா எனக்கு சந்தோஷம் தான். அதுவே அவளை ஹர்ட்  பண்ணுவாருன்னா அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். அவரு அவளை இது வரைக்கும் சரியா ட்ரீட் பண்ணலையோன்னு தோணுது. இவ எதுக்கு அவரு பின்னாடியே சுத்தறா?
"டேய்! விடுடா புருஷன் பொண்டாட்டின்னா அப்டித்தான் இருப்பாங்க. சண்டையும் வரும், சமாதானமும் இருக்கும் "
"யாரு புருஷன் பொண்டாட்டி? நீ உங்க அம்மா அப்பாவை வச்சு எல்லாரையும் ஒரே மாதிரி பாக்கற பாஸ்கர். உங்கம்மா பட்ட மாதிரி கஷ்டங்கள் இவளுமா படணுமா ?
"டேய்  எதுக்குடா இப்ப அத பத்தி எல்லாம் பேசிக்கிட்டு?"
"நா உங்க வீட்டை பத்தி பேசறது சரியில்லை எனக்குத் தெரியும். அதுக்கு சாரி. உங்க அம்மாவுக்கு அவங்க பொறந்த வீட்டுல கேள்வி கேக்க சரியான ஆளுங்க இல்ல. அதனாலதான் உங்க அப்பா அவங்கள அவங்க வீட்டு ஆளுங்களோட சேர்ந்து அவ்ளோ கஷ்டப்படுத்தினாரு.  ஒரு வேளை  சாப்டியான்னு கேட்டது கூட இல்லையே? எங்க வீட்டுலையும் அப்படித்தானே ? ஆனா இங்க நிலைமை வேற. என்னோட பேரன்ட்ஸ்குள்ள  ஒரு இன்டிமசி இருக்கு. உங்க வீட்டுல அப்படி இல்ல. நீ தலை எடுத்து கேள்வி கேக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் உங்க அப்பா உங்க அம்மாவை அடிக்கறதையே நிறுத்தினார். "சரிடா! அதுக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன டா சம்பந்தம்?"
" நம்ம வீட்டு பொண்ணும்  அந்த மாதிரி ஆகிடுவாளோன்னு பயமா இருக்குடா ஆனா நீருவுக்கு அப்படி இல்ல. அவ கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாக்  கூட நான் யாரை இருந்தாலும் சும்மா விட மாட்டேன்."
 பிரதீப் தான் தொடர்ந்தான்.
"அவளுக்கு புருஷனா இருக்கற தகுதி அவனுக்கு கிடையவே கிடையாது. எந்த விதத்துல அவளுக்கு அவன் ஈக்குவல் ? பணம் பதவி, அந்தஸ்து, மனசு?" மூச்சுக் காற்று வேகமாய் வந்தது. 
"அப்பா நீயும் ஸ்டேட்டஸ் பார்த்து தான் கல்யாணத்துக்கு வரலியா ?
"அதுக்கு வேற ரீசன்?"
"சும்மா நடிக்காதடா "
" நடிக்கனுன்னு அவசியமே எனக்கு இல்லடா. நானும் சரி எங்க அம்மாவும் சரி அப்படிப்பட்டவங்க இல்லன்னு உனக்கு தெரியாதா? அப்பா அப்படித்தான். அதுவே அம்மா சொல்லிடீங்கன்னா  மறுவார்த்தை பேச மாட்டார். அவ இந்த விஷயத்துல ரொம்ப அவசரப்பட்டு முடிவெடுத்துட்டான்னு  எங்களுக்கு தோணிச்சு. பொண்ணு பாக்க, மாப்பிள்ளை பாக்க எந்த சடங்குக்கு எதுக்குமே  சரியான விதத்துல அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  அவங்க சொல்லவே இல்லங்கறது அவங்களுக்கு வருத்தம்"
"டேய்! சீக்கிரமா கல்யாணம் பண்ணணுன்னு நிர்பந்ததுலதான்டா அவ அவ்ளோ வேகமா அந்த முடிவெடுத்தா ?  நீயுமா அவளை புரிஞ்சுல?"
"விட்றா இத பத்தி நான் இனி  பேசத் தயாரா இல்ல. அன்னிக்கு அவ போலீஸ் ஸ்டேஷன்ல வந்து நின்னபோது எங்கடா போனாரு அவளோட அவரு? அவளுக்கு வாழ்க்கை முழுக்க  துணையா இருப்பாரான்னு தெரியல.  என்னமோ அவரோட குணமும் பிடிக்கவே இல்ல. அவரு நீருவை நல்ல வச்சுப்பாருன்னு தோணவே இல்ல"
"நீ நீரு மேல ரொம்ப பாசம் வசுருக்கறதுனால ரொம்ப ஓவரா பயப்படற . அன்னிக்கு அவரு வரல வரலன்னு திட்டறியே, எங்களோட லாரி ஆக்சிடன்ட் ஆன போது அவரு தான் சரியான நேரத்துல எங்களுக்கு ஹெல்ப் பண்ணாரு தெரியுமா? அந்த வண்டி கஸ்டமர் வீட்டுக்கு போகற  வரைக்கும் கூடவே நின்னு எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாரு. நான் எவ்வளவோ சொல்லியும்  சாப்பிட கூட போகல. எதுக்காக? பொண்டாட்டிகாகத் தானே? "
"என்னவோ நீ சொல்லற. என்னால ஏத்துக்க முடியல"
"அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பெரும் சேர்ந்து லஞ்சுக்கு போயி  இருக்காங்க. அங்க ஏதோ கசமுசா நடக்காமல் இருந்திருக்கும்?அவங்க சந்தோஷமா தான் இருப்பாங்க "
"பாக்கலாம்" அரை  மனதாய்  பதில் அளித்தான் பிரதீப்.
"டேய் நீ ரொம்ப பயப்படற டா. அவரு அவளை நல்லா  பார்த்துப்பாரு. அந்த நம்பிக்கை இல்லன்னா அவ கல்யாணம் பண்ணிருந்திருக்கவே மாட்டா . அவ அவசர பட்டுடான்னு உன்னோட பேமிலி  நினைக்கறீங்க. ஆனா அவ யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கா.. அவளுக்கும்அவரை  ரொம்ப பிடிச்சுருக்கு டா. அது இல்லாம  எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்கறவ இல்லடா அவ "
"என்ன கண்டதும் காதலா?"
"ஏன் இருக்க கூடாதா?"
"அது அவருக்கும் இருக்கணுமில்ல?"
"ஏன் இல்ல"
"எனக்கென்னமோ இவளோட பணத்தை பார்த்து தான் அவரு கல்யாணம் பண்ணி இருப்பாரோன்னு தோணுது. அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க இல்ல. அவங்களுக்கு கல்யாணம் பண்ண வேணாம்? இந்த மாதிரி பெரிய இடத்தை வளைச்சு போட்டுட்டா கவலையே இல்லை பாரு."
"போதும் பிரதீப். நம்மளவிட அவங்க அம்மா நிறைய யோசிப்பாங்க. அப்படியே பொண்ண கொண்டுபோய் ஏதோ ஒரு இடத்துல தள்ளி விட்டுடுவாங்களா?நீ பேசறதை கேட்டா  நீரு ரொம்ப வருத்தப்படுவா. தயவு செஞ்சு உன்னோடஎண்ணங்களை  அவகிட்ட  வெளிப்படுத்திடாத. அவளால தாங்கவே முடியாது. ஒரு வேளை  நீ சொல்லற  மாதிரி அவளுக்கு  கல்யாண வாழ்க்கைல ஏமாற்றம் வந்தா நீயும் நானும் இருக்கோம். அவ ஒன்னும் எங்க அம்மா மாதிரி கேக்க ஆளில்லாத அனாதை  இல்லை. அவள பாக்கும்போது தயவு செஞ்சு எதையாவது உளறி வைக்காத. ரொம்ப கவனமா இரு "
"சரி!சரி!" சிடு சிடுவென பதில் அளித்தான்.  
இவர்களின் பேச்சு இப்படி முடிக்க காதலர்களின்  பேச்சு அங்கே வளர்ந்துக்  கொண்டே இருந்தது. 
"இப்ப போய்த் தான் ஆகணுமா"அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
"அதெப்படி வேலை பார்த்து தானே ஆகணும்"
"ஆனாலும் உன்ன அனுப்பவே எனக்கு மனசு வரல" 
"அப்ப  நீங்களும் வாங்க"
"ஏதோ ஒரு முறைன்னா வரலாம் . எப்ப பார்த்தாலும் உங்கூட ஊரை  சுத்த முடியுமா? எனக்கு பொழைப்பு இல்ல?"  அவன் குரல் மாறுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
"சரிங்க! எனக்கு இன்னொரு கால் வந்துகிட்டே  இருக்கு. மறுபடியும் கூப்பிடறேன்"
அவன்  போனை கட் செய்தவள் வந்த மற்றொரு காலை அட்டண்ட்  செய்து விட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் பாம்பே செல்வது ஒரு ட்ரையினிக் ப்ரோக்ராமிற்க்காக. இரு தினங்கள் பயிற்சி இருக்கும். பொதுவாக சொந்த தொழில் செய்பவர்கள் செய்யும்  தவறுகள் என்ன என்பதைப் பற்றிய வர்க்  ஷாப் ப்ரோக்ராமது.பல துறைகளில் சாதித்தவர்கள் வருவார்கள். பயிச்சிக்குமே தான். அவர்களிடம் பேசத் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவளுக்கு இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும். அதே சமயம் சில புது ஆர்டர்களை வரலாம். பல  விஷயங்களை பற்றி படிக்க வேண்டும். எடுத்து படிக்க ஆரம்பித்தாள். எப்போதுமே  சுறுசுறுப்பாக வேலை செய்யும்   மூளை இப்போது சண்டித்தனம் செய்தது. அதற்கு காரணம் செந்திலின் குரலில் இருந்த மாறுபாடு தான்.   
 முதலில் எல்லாம் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.ஆனால் இந்த இரண்டு மூன்று சந்திப்புகள் அவர்களை நெருக்கமாக்கியது . அவனுக்கு அவள் தந்த அந்த ஒரே முத்தம் உடலில் பல வித மாற்றங்களை உண்டு பண்ணியது. அவளுக்கு மனதிற்குள் பல பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான்? வாழ்க்கையை எப்படி வழி நடத்துவது என்பதை பற்றி எல்லாம் அவள் சிந்திக்கவில்லை. ஆனால் இனி அவள் அப்படி இருக்க முடியாது. இது அவள் சிந்திக்க வேண்டிய சமயம். 
கண்கள் கணினியை பார்த்துக் கொண்டிருக்க மூளை அவனைப் பற்றி சிந்தித்தது. 'அவரு என்ன சொல்ல வராரு?' மூளை குழம்பியது. அவனிடமே நேரில் கேட்கும் தைரியம் இல்லை. வாயை மூடியவள், மூளையையும் தன் பக்கம்  இழுத்து வந்தாள் . அவளுக்கு சேல்ஸ் வெகு சுலபம். ஆனால் அருகே இருப்பவரின் ப்ரொபைல் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு முழு  கவனமும் அவளிடமே இருக்க வேண்டும் அதனால் அன்று அவள் மீண்டும் அவள் கணவனை அழைக்க இல்லை.  
மறு  நாள் பாம்பே சென்றதும் தான் அவனுக்கு அழைத்தாள் .
" பத்திரமா வந்தாச்சா? "
"ம்! வந்தாச்சு"
"உங்க அம்மா வந்துருக்காங்களா?"
"ம்  உங்க அத்தை இங்கதான் பக்கத்துல இருக்காங்க"
" எங்க தங்கி இருக்கீங்க?"
"தாஜ் !"
"ரேட்  ரொம்ப  அதிகமில்லை? "
"ஆமா! பட் வர்க் ஷாப் நடக்கற இடம் இங்கேர்ந்து ரொம்ப பக்கம். அதான் , இங்கயே தங்கிக்கலான்னு. நானும் இதுவரை இங்க வந்ததில்லை. டாம்  க்ரூஸ் படத்துல பார்த்திருக்கேன். இப்பதான் பஸ்ட் டைம் நேர்ல பாக்கறேன்.  "
"ரொம்ப பிடிக்குமா?"
"எது?"
"டாம்  க்ரூஸ்?"
"ம்! ஆமா ! உங்களுக்கு யார் பிடிக்கும்?"
"வடிவேலு. தன்னை ஹீரோவா காட்டாம தன்னை தானே மட்டப்படுத்தி மத்தவங்களை சிரிக்க வைப்பார்"
அவளிடம் மௌனம்...
"வீடியோ காலுக்கு வாங்க "
தங்கி இருந்த அறையை அப்படியே சுற்றிக் காண்பித்தாள் .
"எப்படி இருக்கு ரூம்?"
"ம் ! பணம் இருந்தா எல்லாம் வசதிதான், நான் படுக்க டாய்லட்டே  போதும்"
"ஆனா  நாம சேர்ந்து படுக்க அது போதாதே ?"
நல்ல வேளை  அவள் அன்னை வாஷ் ரூம்  சென்றிருந்தார்.
"என்ன சொன்ன ?"
சட்டென நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் .
"இல்ல ஒண்ணுமில்ல. அப்புறம் பேசறேன்"
காலை கட் செய்தலும் அவனின் சிரிப்பு ஒளி அவள் காதில் ரீங்காரமிட்டது.
மனம் கவர்ந்த கள்வனை ஓரம் ஒதுக்கிவிட்டு மனதிற்கு பிடித்த வேலையை செய்வதுக் கூட கடினம்தான் போலும். இதோ நம் நாயகி படும்பாடுதான் தெரிகிறதே. 

தொடரும்..........


Leave a comment


Comments


Related Post