இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -57 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 16-06-2024

Total Views: 11710

யுகி என அவன் அடித்த கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியாக பார்க்க..

“கொன்னுடுவேன் நாயே.. உன்னோட நல்லதுக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து நாங்க செஞ்சிட்டு இருக்கோம், இந்த நாய்க்காக எங்களையே தூக்கிப் போட்டுட்டு போய்ட்டில, அப்படி என்னடி செஞ்சான் இவன் உனக்கு? சின்ன வயசுல இருந்து எத்தனை தடவை அடிச்சிருப்பான்? எத்தனை தடவை அவமானப்படுத்தி இருப்பான்? அவனலாம் இப்போ நல்லவன் ஆகிட்டான் லவ் வந்துடுச்சி, உன்மேல தூசுப்படாம பாத்துக்கிட்ட நாங்க கெட்டவங்களாகிட்டோம். போடி உங்களுக்குலா இது மாதிரி ஆளுங்க தான் புடிக்கும் என்னைய மாதிரி கேனையனை புடிக்குமா? வளவன் சொன்னது தான் நானும் சொல்றேன். இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை, யுகின்னுட்டு வந்த கேவலப்பட்டு தான் போவ.” என கத்தியவன் நந்தனை முறைத்துவிட்டு செல்ல.. அந்த இடத்தில்லையே மண்டியிட்டு அழுதாள் நிலா.

அவளுக்கு அவர்கள் இருவரும் தானே உலகம். யுகி இல்லாமல் அவளுக்கு அணுவும் அசையாதே.. வளவன் அம்மு என்று சொல்லாமல் அந்த நாள் விடியாதே.. இருவரிடமும் பேசாமல் எப்படி இருப்பாள்?

அவள் தோளில் கை வைத்து அழுத்திய நந்தன். “எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கல்யாணம் ஆனா சரியாகிடும்." என்றான்.

எங்கிருந்து அவ்வளவு கோவம் வந்ததோ.. அவன் கையை தட்டி விட்டு எழுந்தவள்.

“நீங்க சொன்னதை செஞ்சிட்டேன்ல, என் யுகி மேலையும் அண்ணா மேலையும் ஒரு தூசிப்பட்டுச்சு..” என விரல் நீட்டி மிரட்டியவள், “எதுக்கு இங்க வந்தேன்னு இருக்கு? எதுக்கு உங்ககிட்ட பேசுனேன் இருக்கு? எதுக்கு உங்க பக்கம் என்னோட மனசு போச்சின்னு வேதனையா இருக்கு? இது எதுவும் நடக்காம இருந்திருந்தா நாங்க எப்போவும் போல சந்தோசமா இருந்திருப்போம். இப்போ எனக்கு யாருமே இல்லாம அனாதையா நிற்கறேன்.” என தேம்பி தேம்பி அழுதாள்.

“குட்டி” என்றவன் அவளை அணைத்து ஆறுதல் படுத்த.. அவன் மார்பிலையே சாய்ந்துக் கொண்டு அழுதாள். இப்போதைக்கு அவளுக்கு அந்த ஆறுதல் தேவைப்பட்டது.


“இங்க பாரு. அவங்க யாரு? உன்னோட அண்ணன், உன்னோட பிரண்ட் உன்கிட்ட பேசாம எங்கப் போகப் போறாங்க சொல்லு. கோவம் போனதும் பேசுவாங்க.”

“நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் பேசுவாங்க.”

“கொஞ்சம் இடம் கொடுத்தா அடிமடியிலையே கையை வெப்பியே.. கல்யாணம் நடக்கும் நடக்கணும்.”

“எதுக்கு என்னைய இவ்வளவு போர்ஸ் பண்றீங்க லவ் பண்றீங்களா?" அவன் இலகுவாக பேசவும் தைரியமாக கேட்டுவிட்டாள்.

ஆமான்னு சொல்லிடு என மனம் ஆர்ப்பரித்தது.

ஆனாலும் அவன் தலை இல்லை என்று ஆட்ட, ”ஒரு பிளானுக்காக தான் இந்த மேர்ஜ். அது சக்ஸஸ்புள்ளா முடிஞ்சா..”

“முடிஞ்சா?”

“உன் விருப்பப்படி இருக்கலாம்." என்றான் அந்த வார்த்தையை சொல்லும் போது அவனுள் தடுமாற்றம் எழுந்தது.

அதைக் கேட்டு மேலும் அழுகை தான் வந்தது. பிடிக்காமல் அவனுடன் இருக்க அவளுடைய தன்மானமும் இடம் கொடுக்காது. அவன் சொன்னதற்காக குடும்பத்தை விட்டு வந்து பின்பு அவனும் வேண்டாம் என்றால் தன்னுடைய நிலை என்ன என்று யோசிக்கும் போதே எதிர்காலம் அவள் கண் முன் பூதாகரமாகத் தோன்றி பயமுறுத்தியது.

நிலாவின் பேயரைந்த முகத்தைப் பார்த்ததும், “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

“ஒன்னுமில்ல” என்று விட்டு வீட்டின்னுள் திரும்பி நடக்க,

“வியா.”

“ம்ம்”

அவள் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தவன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போம் எல்லாம் சரியாகிடும்.” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் திருமணம் பண்ணி தான் அதில் இருந்து வெளி வர வேண்டும் என்றில்லை. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அவள் கரம் பிடித்துவிட நினைத்தானோ தெரியவில்லை. உள்ளே வந்த நிலாவை அடி வெளுத்துவிட்டார் ராஜி.

அவள் நினைவு தெரிந்து ராஜி அடித்ததில்லை. இன்று அடிக்கவும் அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

“எவ்வளவு தைரியம்டி? உன்னைய தூக்கி வளர்த்தவனை ஒரே மிதில தூக்கி எறிஞ்சுட்ட.. அவன் உனக்கு அண்ணனா மட்டுமாடி இருந்தான் அப்பாவுமா இருந்து செய்ய வேண்டிய ஒவ்வொன்னையும் எப்படி உனக்கு செஞ்சி அழகுப் பார்த்தான்? எப்படிடி உன்னால எடுத்து எறிஞ்சி பேச முடிஞ்சி?” என மேலும் நாலு அடி முதுகில் மொத்தென்று போட, யார் எவ்வளவு கேட்டும் வாயையே திறக்கவில்லை நிலா.

“உன்னைய தாண்டி கேக்கறேன் பதில் சொல்லப் போறியா இல்லையா?”

“அண்ணா ஆசைப்பட்டா தப்பில்ல நான் ஆசைப்பட்டா மட்டும் தப்பாம்மா.. அவன் ஷாலுவை லவ் பன்றேன்னு சொன்னப்ப, நான் இப்படி எந்த பிரச்சனையும் பண்ணலையே.. என்னோட வாழ்க்கையில மட்டும் எதுக்கு குறுக்க வந்து விழுறான்?” கெட்டவள் என்று பெயர் எடுத்தாகிவிட்டது இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன பேச வேண்டியது தான்.

“அவன் லவ் பண்ணதும் நீ பண்றதும் ஒன்னா?”

“ஆள் வேற வேறையா இருக்கலாம், ஆனா காதல் ஒன்னு தானே. நான் அவரை தான் கட்டிப்பேன். நீங்களா கல்யாணம் பண்ணி வெச்சா எல்லோரும் முன்னாடி நடக்கும், இல்லனா நாங்க மட்டும் தனியா போய் ரிஜிஸ்ட்டர் பண்ணிப்போம்.”என்றவளை அதற்கு மேல் அடிக்க முடியாமல் ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்தார் ராஜி.

காவல் நிலையம் சென்ற நந்தன், நிலாவின் காதை உரசி சென்றதற்காக அதை வீசியவனின் காதை எடுத்துவிட்டான்.

“உங்களை யாருடா அனுப்புனது?”

“அது சொன்னா தொழில் தர்மம் ஆகாதுங்களே.” அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னார்கள்.

“சொல்லலன்னா உங்க உடம்புல உயிர் இருக்காது, சொல்லுங்கடா.” என இரண்டு லத்தி உடையும் அளவிற்கு அடி வெளுத்து விட்டான்.


“என்னைய போட வேற இடமே கிடைக்கலையா அவ கூட இருக்கும் போது தான் வருவீங்களா?” என கேட்டு கேட்டு அடித்தவனை சரஸ்வதி வினோதமாக பார்த்தாள்.

“அப்போ அவரை போட வந்தது தப்பில்ல, அந்த பொண்ணு இருக்கும் போது போட வந்தது தான் தப்பா?” என புரியாமல் அங்கிருந்தவர்கள் முழிக்க.

“அவ மேலே சின்ன கீறல் பட்டுருந்தாலும் உங்கள உயிரோடவே விட்டுருக்க மாட்டேன்.” என்றவனிடம் உங்கள போட வரல அந்த பொண்ணை தான் போட வந்தோம் என எப்படி சொல்வார்கள்.


Leave a comment


Comments 1

  • S Subhadra saiprasad
  • 2 weeks ago

    அட பாவிங்களா ஏண்டா


    Related Post