இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 17-06-2024

Total Views: 5837

 

பாகம்-12

மனம் கவர்ந்த கள்வனை ஓரம் ஒதுக்கிவிட்டு மனதிற்கு பிடித்த வேலையை செய்வதுக் கூட கடினம்தான் போலும். இதோ நம் நாயகி படும்பாடுதான் தெரிகிறதே.

  அதுவும் சில நிமிடங்கள்தான். பிறகு வழக்கம்போல வேளையில் மூழ்கி விட்டாள் . அடுத்த இரு தினங்கள் சில நிமிடங்கள் அவனுக்கு அட்டண்டன்ஸ்  போட்டு விட்டு பயிற்சிக்குச் சென்றாள் . 

இதே விஷயத்தை ஒரு ஆண்  செய்யும் போது சரியாக இருப்பது,ஒரு பெண் செய்தால் சரியாக இருக்குமா? எத்தனையோ நல்ல நிலைமையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின்  வீட்டில் இருந்து சரியான புரிதல் இருக்கிறதா? 

மீன் வாசனை வரவே இல்லையே? விம் ஆடிலும்,  மனைவிக்கு முபே எழுந்து காபி போட்டுக்  கொடுக்கும் சன்  ரைஸ்  ஆடிலும் தான் பார்க்க முடியும். நிஜத்தில் சிலருக்கு நிச்சயமா அந்த கொடுப்பினை உண்டு. பலருக்கு இன்னும் மாறவில்லை. நீ மூன்று நாட்கள், நான் மூன்று நாட்கள் என்று சமைப்பது எல்லாம் வெகு சில இடங்களில்தான் நடக்கிறது. பெரும்பான்மையான வீட்டில்  ஆண்களின் ஆதிக்கம் தான் இன்னும் தலை ஓங்குகிறது. படிப்பை எல்லாம் திருமண்டத்திற்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும். 

"என்னங்க நான் இன்னும் கொஞ்சம் படிக்கவா?

கணவனின் நெஞ்சு ஒட்டி, சட்டை பட்டனை திருகி  கேட்டாலும், அல்லது பிள்ளைக்கு மூத்திரத் துணி  சுத்தம் செய்துக் கொண்டே கேட்டாலும் அவர்களிடமிருந்து வரும் பதில் இப்படித்தான் இருக்கும்.

"நீ இங்க வந்தது வீட்டு வேலை பார்த்துகிட்டு புருஷன சந்தோசப்படுத்தத்தான். நீ படிக்கப் போனா நான் படுக்க வேற ஆள பாக்கவா ? இதையே ஒவ்வொரு கணவனும் ஒவ்வொரு மாடுலேஷனில் சொல்வார்கள். அதுதான் வித்தியாசம்.

இதில் செந்தில் எந்த ரகம் ?

ரேணுகாவுக்கு நல்ல படிப்பு வந்தது. கல்லூரிக்கு போகக் கூடாது என்று மறுத்த

தந்தையிடம் பேசி  சம்மதிக்க வைத்து அவளை கல்லூரிக்கு அனுப்பியது செந்தில்தான். ஆனால்  வேலைக்கு கண்டிப்பாக நோ தான். பிறகுதான் அவள் தோழி வேலை பார்க்கும் இடத்தில இவள் சேர்ந்துக்  கொண்டாள் . அதுவும் பாங்க்  பரீட்சைக்கு எண்ட்ரன்ஸ் எழுதுவது, மற்ற பரீட்சைகளுக்கு தேர்வு எழுத சொல்லிக் கொடுக்கும் இடம் அது. முதலில் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பிடிவாதமாக இருந்து அவளை வேலைக்கு அனுப்பியது மீனாட்சிதான். அதுவும் கணவரின்  இறப்பிற்கு பிறகுதான் . 

அவள் கணவரிடம் எல்லாம் பேசவே முடியாது. அவரெல்லாம் பேசி தீர்க்கும் ரகம் அல்ல. தீர்த்து விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரகம்.  எதிர்ப்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார். இன்றளவும் இவர்களால் அவரின் விபத்தை மனதால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் அது.

ஏதோ ஒரு கெடுதல் நடந்தால் கடவுள் ஏதோ ஒரு நல்லதையும் சேர்த்தே நடத்துவார் போலும். அரசு தோண்டி இருந்த பள்ளத்தில் விழுந்து இறந்ததால் அரசு சில லட்சங்களை நஷ்ட ஈடாகக் கொடுத்தார்கள். விபத்துக்கான பாலிசி எல் ஐ  சி யில் எடுத்திருந்தார். எல்லாம் சேர்த்து கைக்கு வந்த பணத்தை அன்னையின் அறிவுரைப் படி ஒரு ஹார்ட்வர் கடை திறந்தான். கடின உழைப்பு, அன்னையின் ஆசீர்வாதம், கடவுளின் கருணையால் இன்று அதையே இந்த அளவுக்கு பெரியதாக மாற்றி இருக்கிறான். கை  நிறைய வங்கி கடன். மனம் முழுவதும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை.உடலை  வருத்தி உழைக்கச் சொல்லும் மனது. சோம்பி இருக்கற! எழுந்து ஓடு  சொல்லிக் கொண்டே இருக்கும் மூளை. அனைத்திற்கும் தயாராக இருக்கும்  இளவயது. கஷ்டம் தான் அடுத்த சில வருடங்களுக்கு. அவன் இந்த நிலையில் திருமணத்திற்கு தயார் இல்லைதான். இருந்தாலும் அன்னைக்கு முன் அளவு உடலில் தெம்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவந்தான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான். அதிலு அவனுக்கும் நிரஞ்சனாவுக்கும் அத்தனை பொருத்தமும் இருக்கிறது என்றுக் கூட ஜோசியர் சொல்ல வில்லை.  ஐவகை ரெண்டு பேரும்தான் ஜோடி. உங்க பிள்ளைக்காகவே இந்த பொண்ண கடவுள் படைச்சுருக்கான் . அவர்கள் இருவரும் இணைய அது ஒரு முக்கிய காரணம். நினைத்தது ஒன்று. நடப்பது  வேறு ஒன்று.  திருமணம்  நின்ற சமயத்தில்  ஜோசியர் செய்த புண்ணியம் மகளுக்கு பிரசவ நாட்களில் உடன் இருக்க மனைவியுடன் வெளியூர் சென்றவர்  இன்னும் திரும்பவில்லை. அவரை மட்டும் செந்தில் பார்த்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். 

 

அண்ணனுக்கு முடிந்தவுடன் அடுத்து ரேணுகாவிற்கு என்ற பேச்சை ஆரம்பித்தார்கள் அத்தைகள். மாதவியைத்தான் உங்க அண்ணன்  வேண்டான்னு சொல்லிட்டான் . நீயாவது மாதவி அண்ணனை கட்டிக்க வேண்டியது தானே?

"இல்ல அத்தை . எனக்கு  இன்னும் அடுத்த இரு வருடங்களுக்கு தனக்குத்  திருமணம் வேண்டாம்" என்று விட்டாள் ரேணுகா. பவித்ரா படிப்பு முடித்து மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள். அண்ணனும் தானும் புத்திசாலியாக இருந்தாலும் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தை  அவள் தங்கையின் மூலமாவது தீர்த்துக் கொள்ள ஆசை பட்டாள். அவள் நினைத்தால்  இப்போதும் படிக்கலாம்.  ஏன் படிக்கவில்லை. அதை எல்லாம் அவளவனிடம்தானே சொல்லுவாள்? யார் அவன்?  

 

பாஸ்கரிடம் பேசிய பிறகு பிரதீபுக்கு இன்னும் மூளை குழப்பம்  அதிகம்தான் ஆனது. அன்னையிடமும் மனம் விட்டுப் பேசினான். 

"ரொம்ப யோசிக்காதடா. வரும்போது ஹாண்டில் பண்ணிக்கலாம்" அன்னை தலை வருட அப்படியே உறங்கிப் போனான். மறுநாள் எப்போதும் போல வீட்டிலேயே இருக்கும்  ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டான். அவன் மட்டுமல்ல, அன்னையும் ட்ராக்ஸ் பாண்ட் டீ  ஷர்ட்  சகிதம் விடியலிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார். ஆர்ம்ஸ் ஆம்பிளைங்களுக்கு மட்டும்தான் அழகா? பொண்ணுங்களுக்கும்  அழகுதான் என்று சொல்ல அல்ல. வயதாகிறது. உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். 

கை வலிக்குது  கால் வலிக்குது  மாமா என்று சத்யா விளம்பரத்தில் வருவது போல புலம்பக் கூடாது. அதற்குத்தான். 

 

அன்னையும் மகனும் எலுமிச்சை பழச்சாறு குடித்ததன் பிறகு அவரவர் வேலைகளை பார்க்கச் சென்று விட்டார்கள் . ஓட்டுநர் வண்டி ஓட்ட  கையில் இருக்கும் சில பைல்களை பார்த்து முடித்து விட்டான். தலை நிமிர்ந்த போது யாரோ திருமணம் ஆன புது மணத்தம்பதி போலும் ஏதோ ஊடல் . இரு சக்கர  வாகனத்தில் பின்னே அமர்ந்திருந்த பெண் முகம் தூக்கி வைத்திருந்தாள் . அவன் ஏதோ சமாதானம் செய்து கொண்டும், கெஞ்சிக் கொண்டு கொஞ்சிக் கொண்டு  இருந்தான் சிக்னலில். அது வெளி இடம் என்று கூட அவர்களுக்கு நினைவில் இல்லை. அவர்கள் உலகத்திலியேதான் அவர்கள் இருந்தார்கள்.  சிக்னலில் பச்சை விழுந்து புறப்பட்ட பின்னும் அவர்களின் லீலைகளை கவனிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது. அவர் இருவருக்கும் நடுவில் அவள் தனது லன்ச் பையை வைத்திருந்தாள் . அவனோ அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னை கட்டிக் கொள்ள வைத்தான். "ஒன்னும் வேணாம் போ" என்று சொன்னாள் . அவள் வாய் அசைப்பில்  தெரிந்து கொண்டான் பிரதீப். தன்னிடம் இப்படி கொஞ்ச, சண்டை போட ஒருத்தி வருவாளா? ஏனோ எத்தனையோ பெண்களை பார்த்திருந்தாலும், கடந்திருந்தாலும் தனக்கென ஒருத்தி நினைத்ததில்லை. மருமகள் வர வேண்டும் அன்னைக்கும் ஆசை தான். இன்னும் சில வருடம் என்று தள்ளிப் போட்டான்.

"அவனா நீ?" நீருவும்  பாஸ்கரும் .கலாய்த்தார்கள். 

" ஏதாவது பிரச்சனை இருந்தா டாக்டர் கிட்ட போலாம்" அன்னை அறிவுரை செய்தார். 

"டேய்! அவதான் சொல்லறான்னா ஒரு ஆம்பிளைக்குத் தெரியாது இன்னொரு ஆம்பிளை மனசு? " குறைப்  பட்டுக் கொண்டான் பாஸ்கரிடம் பிரதீப்.

ஒருத்தியை பார்த்ததும் இவை எனக்குத் தான் தோணனும் .

சொன்னவனை இடுப்பில் கை  முறைத்தாள்  நிரஞ்சனா.

 

"அதையே நான் சொன்னா  ஒத்துக்க மாட்ட. உங்களுக்கு மட்டும் வேற ஒரு நியாயமா?

கேக்கறா பாரு பதில் சொல்லு, என்ற ரீதியில் பாஸ்கரும் பாதான் பழைய எண்ணங்களை மனதில் அசை போட்டவனுக்கு எதிரில் வந்து நின்றது அந்தப் பேருந்து.

"ச  எப்படி இண்டிகேட்டர் கூட போடாம, ஹாரன் அடிக்காம நம்மள முந்திக்கிட்டு போகிறான்  பாருங்க தம்பி"

"அது சரி அண்ணே ! இப்பலாம் நாம வண்டியை சரியாய் ஓட்டணும்கறத விட மத்தவன் தப்பாவே ஓட்டுவான்னு நினச்சுகிட்டே தான் வண்டி  ஓட்ட வேண்டி இருக்கு"

"சரியா சொன்னீங்க தம்பி. நான் மட்டும் கண்ணாடில பார்த்து முன்னடியே யோசிக்கலனா  நம்ம கதை கந்தலாகி இருக்கும்" சொல்லிக் கொண்டே அந்த பேருந்துக்கு பின்னால்  வண்டியை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

பேருந்து நல்ல கூட்டம். அதிலும் இன்னும் பலர் ஏறிக்  கொண்டனர். இறுதியில் பல ஆண்கள் ஏற  நடுவில் சில பெண்களும் ஏறிக் கொண்டனர். அதில் அவன் பார்த்தது!.....

தொடரும்........


Leave a comment


Comments


Related Post