இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 18-06-2024

Total Views: 4629

பாகம்-13
அன்றைய தினம் பயிற்சி முடிந்ததும், ஏனோ அவளுக்கு கணவனின் நினைவை  விட பாஸ்கரின் நினைவே அதிகம் வந்தது. அதற்குக்  காரணம் மனம் முழுவதும் தொழில் பற்றிய சிந்தனைகளே நிரம்பி இருந்தது தான்.  தோழனுக்கு அழைத்தாள் .
"என்ன மேடம் எங்க நினைவெல்லாம் உங்களுக்கு இருக்கா?"  விளையாட்டாக கிண்டலடித்தான். 
அதை அவள் ரசித்தாள். 
"இல்லாமலா கால் பண்ணறோம்?"
"வாடி வா! உனக்கு உன்னோட நண்பன் செமையா வச்சுருக்கான்.
"பிரதீப்பா?"
"அந்த நல்லவனேதான்"
"விட்றா அவனை ஹாண்டில் பண்ணறது எல்லாம் ரொம்ப ஈஸி"
"முடிஞ்சா ஹாண்டில் பண்ணு "
 நமுட்டு சிரிப்பு  சிரித்தான்.
"உன்னோட பேச்சே சரி இல்லையே? ரெண்டு பேரும்  என்னடா பேசி வச்சிருக்கீங்க?"
மிரட்டும் தோனியில் கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள் .
உஷாராக பேச்சை மாற்றியவன்,
"அதெல்லாம் இருக்கட்டும்  என்ன இன்னிக்கு சீக்கிரம் முடிஞ்சுருச்சா என்ன?"
"ஆமா டா! "
அப்பா வெளில அவுட்டிங் எ வேண்டியதுதானே?"
"எஸ் டா! எனக்கும் இங்க சில புது பிரண்ட்ஸ் கிடைச்சுருக்காங்க. எல்லாரும் சேர்ந்து பீச்சுக்கு போகலான்னு பிளான்"
"ரெண்டு நாள் மூஞ்சி பாக்கலன்னா அதுக்குள்ள புதுசா வேற பிரண்ட்ஸ் பார்த்துக்குவியா? நீ துரோகி" வார்த்தைகள் தாறுமாறாக வந்தபோதிலும் இவள் எதையும் கண்டுகொள்வதாய் இல்லை.
"போடா! எத்தனை வருஷம் உங்க மூஞ்சியே பாக்கறது? எனக்கும் நல்லதா நாலு கேர்ள் பிரண்ட்ஸ் வேணாமா?"
"கண்டிப்பா வேணும். பாக்கறது தான் பாக்கற இந்த பாஸ்ருக்கு ஏத்த  மாதிரி ஒரு குடும்ப குத்து விளக்கு.  அந்த பாசக்காரனுக்கு ஏத்த மாதிரி ஒரு மாடர்ன் பொண்ணா பார்த்து  பிரண்டு புடிச்சீனா, நீயும்  பதினாறு புள்ள பெத்து உன் புருஷனோட நீடூழி வாழ்வ "
"ஏண்டா பதினாறு புள்ள பெத்துக்க  அது என்ன கர்ப்ப பையா? இல்ல கோணிப் பையா? நல்லா  இருன்னு சொல்லி போட்டுத் தள்ள பிளான்  பண்ணறியா?"
"அதெல்லாம் இல்ல மேடம். மீட்டிங் எப்படி போச்சு?"
அலுவலகத்தில் யாராவது வந்திருப்பார்கள். அதுதான் பேச்சு மாறுகிறது. புரிந்து கொண்டவள், தானும் பேச்சையும் குரலையும் மாற்றிக் கொண்டாள் .
"பாஸ்கர் நான் இங்க வந்தது பயங்கர ஹெல்ப் புல்லா  இருக்கு. என்னோட பழைய பிஸினஸ்ல என்ன தப்பு செஞ்சுருக்கேன்னு இப்ப நல்லா  புரியுதுடா."
"ஓ! கிரேட் " அவனும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினான்.
"ஆமா டா  புது பிசினஸ் எடுக்கறது மட்டுமில்ல அவங்களோட எப்படி ரிலேஷன் ஷிப் கன்டினியூ பண்ணணும் எப்டி கஸ்டமர்ஸ்  ரிட்டைன்  பண்ணனும். புதுசா தொழில் பண்ணறவங்க கிட்ட கஸ்டமர்ஸ் எப்படி இருப்பாங்க. அதுவே பழகினவங்க கிட்ட ரிலேஷன் ஷிப் எப்படி இருக்கும்? . எலலாமே சொல்லறாங்க . ஒரு வேளை  நானும் எம் பீ ஏ  டிரைகிட்டா 
 கம்ப்ளீட் பண்ணி இருந்தா இன்னும் நல்லா  இருந்திருக்கும். எனக்கு அது பெரிய லாஸ் தான் இல்ல?"
"சரி விடு. அதுக்கு என்ன பண்ண முடியும்? நீ என்ன படிப்புல இன்டரஸ்ட் இல்லாமலா விட்டுட்டு வந்த? என்னவோ  அந்த நேரம் அப்படி. நாம  என்ன பண்ண முடியும்?"
"அந்த நேரம் அப்பா, பணம், படிப்பு, நிம்மதி எல்லாமே போயிருச்சுல்ல பாஸ்கர்?"
அவள் கண்களில் கிளுக்கென எட்டி பார்க்கும் கண்ணீரை அவனால் அவளைப் பார்க்காமலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
"சரி! விடு! நாம எல்லாத்தையும் கடந்து வந்துதானே ஆகணும்"
அன்னையின் ஒரு முறைப்பில் கண்ணீரை வெளியே விழாமல் உள்ளிழுத்துக் கொண்டாள் .
பூரணியைப் பொறுத்த வரை  கண்ணீர் என்பது நமக்கான பலகீனம். நம்மை யோசிக்க விடாமல் தடுத்து விடும் ஆயுதம். "அழுது என்ன ஆகும்? ஒண்ணுமில்ல. அதுக்கு நிதானமா உக்காந்து யோசிச்சா ஏதாவது நல்ல வழி கிடைக்கும்" என்று நினைப்பவர்.
 அதனால் தானோ என்னவோ பெற்றோரைப் பிரிந்த  போதும் சரி, கணவனை இழந்தபோதும் சரி அவர் அழவில்லை . பெற்றோரை பிரிந்து காதல் திருமணம் செய்துக் கொண்டார்.யாரும் இவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. வெறுப்பை கொட்டினார்கள்.
 "இதுதான் நடக்கும் என்பது தெரிந்ததுதானே?" மனதளவில் தன்னை தயார் படுத்திக் கொண்டார். கணவன் இறந்து விட்டார். என்ன செய்ய வேண்டும். அழுதால் ? நிலைமை மாறி விடுமா? இறந்த கணவனுக்கு எப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டுமோ அதேப்  போல  அவரின் கம்பனியையும் நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம். தான் அழுதால்  தன்  மகள் எப்படி அனைத்தையும் சமாளிப்பாள்? துக்கம்தான் . கொடுமைதான். அவரேச்  சென்று  கொல்லி வைத்தார். அது தன்  உரிமை என வாதிட்டார். லிங்கம் எதுவும் பேசவில்லை. அவரால் பூரணியின் நிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது. அண்ணிக்குத்  துணையாக அருகில் நின்றுக் கொண்டார். பல ஆயிரம் காதல் மொழி பேசியவன் கரண்ட் அடுப்பில் வெந்துக்  கொண்டிருந்தான்.  இது இயற்கை. மனம் ஒத்துக் கொள்ளவில்லை. "
"இப்படி  என்னையும் என்  பொண்ணையும்  அனாதையா நிக்க வச்சுட்டு நீ மட்டும் சொகமா  போய்  சேர்ந்துட்ட இல்ல? மனதால் அழுதுக் கொண்டிருந்தார்.  அப்போதும் வெளியில் காட்டவில்லை. ஒரு வேளை  இப்படி கண்ணீரை முழுங்கி முழுங்கி வாழ்க்கையின் துன்பங்களை அனுபவிக்காமல் அந்த நேரமே வெளியில் விட்டிருக்கலாமோ? வருங்காலத்தில் வர போகும் விபரீதம் நடக்காமல் கூட இருந்திருக்கலாம். கண்ணீர் என்பது வரமா? சாபமா?  
இவள் கண்ணீர் மறைந்ததும் அவள் அன்னை ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். அங்கே போடப் பட்டிருந்த திண்டு அவருக்கு மிக வசதியாக இருந்தது. 
" அதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நிரஞ்சனா பேச்சைத் தொடர்ந்தாள் .ஒரு புக் குடுத்திருக்காங்க. "தி க்ரேட்டனஸ்  கைட் " ராபின் ஷர்மாவோடது. நீயும் பிரதீப்பும் கண்டிப்பா படிக்கணும்"
"நீ படிச்சு பார்த்தியா? புக் எப்படி இருக்கு?"
"இல்லடா சும்மா லைட்டா  கோ த்ரூ   பண்ணேன். ரொம்ப டீடைல்டா  படிக்கணும்"
" அது சரி! என்னதான் மத்தவங்க சொல்லிக் கொடுத்தாலும் நாமளே கத்துகிறது வேற தான் இல்லையா நீரு ?"
"நீ சொல்லறது கரெக்டு தாண்டா. இருந்தாலும் ..."
"போதும் நீரு  வேற ஒன்னும் இல்ல. பழைய விஷயங்கள போட்டு மனச குழப்பிக்காத. முதல்ல பிரண்ட்ஸோட போய்  என்ஜாய் பண்ணு "
"சரிடா !" 
"செந்தில் கிட்ட பேசினியா ?"
"இல்லடா! இங்க வந்ததுலேர்ந்து அவருகிட்ட சரியாவே பேசல.கொஞ்சம் பயமா இருக்கு. அதான் நேர்ல போய்  பேசி சமாளிக்கணும் "
" அவரு தங்கச்சிங்களுக்கு உங்க மாமியாருக்கு எல்லாருக்கும் ஏதாவது வாங்கிட்டுப் போ. அட்லீஸ்ட் கொஞ்சம் தப்பிக்கலாம்"
 "நல்ல ஐடியா! தேங்க்ஸ் டா! நாம நாளைக்கு பாக்கலாம்"
காலை கட்  செய்தவள் சிறு புன்முறுவலுடன் குளிக்கப் போனாள் .குளித்துவிட்டு வந்தவள் கண்ணாடியில் தன்னை பார்க்கும்போது ஏனோ அந்த பதினாறு புள்ள நினைவு வந்தது. எனக்கும் அவருக்கும் குழந்தை. நினைக்கும்போதே இவள் முகம் 
சிவந்து விட்டது. அவள் முகத்தை அவளாலே பார்க்க முடியாத அளவுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. புதிதாக திருமணம் ஆனப்  பெண்ணுக்கு வரக் கூடிய எல்லா  என்ணங்களும் அவளுக்கு வர ஆரம்பித்துவிட்டதே. செந்திலின் கை  வளைவுக்குள் நெகிழ்ந்து நிற்க அவள் உடலும் உள்ளமும் இப்போதே தயார்தான்.
"என்ன மேடம்! என்ன ஆச்சு?" அன்னை வந்து முகம் நிமிர்த்தினாள்.
"இல்ல மாம்! ஒன்னும் இல்ல"
"சரி நம்பிட்டேன்" சொல்லிக் கொண்டே மகளிடம் இருந்து சீப்பை வாங்கி லெஸிகா கூந்தலை அலங்காரம் செய்தார். 
"என்னம்மா ஊருக்குப் போனதும் செந்தில் அம்மாகிட்ட பேசவா?"
"இல்லம்மா! இப்ப வேணாம்"
"இன்னிக்கு ஸ்கூ லுக்கு போகல சொல்லும் பிள்ளையைப் போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்  நீரூ"
"என்னமா இது என்ன குழந்தை மாதிரி. நீ அங்க வீட்டுக்குப் போய்த்  தானே ஆகணும். முதல்லதான் பிரச்சனை. இப்பதான் உங்களுக்குள்ள எல்லாம் சரி ஆகிடுச்சே?  இப்ப என்ன?"
"இல்ல மா அது வந்து... ப்ளீஸ்  கொஞ்ச நாள் லவ் பண்ணறோமே"
"தாராளமா லவ் பண்ணுங்க. ஆனா மறுபடியும் பிச்சுக்கிட்டு வந்தீங்கன்னா?"
மனதில் தோன்றியதை மாற்றிக் கொண்டார்.
"மனசு சேர்ந்தா மட்டும் போதாது பொண்ணே . உடம்பும் சேரனும்"
"சீ! என்ன மாம் இது. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையே . பெத்த பொண்ணுகிட்ட வந்து இப்படி பேசற?"
"வெக்கப்படத்தான் நீ இருக்கியே? அதோட என்னோட வெட்கமெல்லாம் என்னோட புருஷன் கிட்ட காட்டிட்டேன்"
"மா ப்ளீஸ்"
"டெய்லி நைட்  அவரு கிட்ட சொல்லு ப்ளீஸ் "
இதற்கு மேல் விட்டால் தன்  கதி அதோ கதிதான். கைப் பையை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பித்து ஓடினாள் மகள்.
அதே சிரிப்புடனே மகளை வழி அனுப்பி விட்டு கதவை தாழிட்டு  வந்து அமர்ந்தார் மீண்டும் புத்தகம் படிக்க. 
தோழிகளுடன் கடற்கரைக்கு சென்றவள் அவர்களுடனே ஷாப்பிங்கும் சென்றாள் . ரேணுவுக்கும் பவிக்கும் 
 சில குர்திகளை  வாங்கியவள்  மாமியார் என்ன மாதிரி உடுப்பார்  எனத் தெரியாமல் சில  புடைவைகளை  வாங்கிக்  கொண்டாள் . 'அவருக்கு என்ன வாங்குவது?' அவள் பார்த்து அவன் எப்போதுமே அரை கை சட்டைதான். அதற்குப் பதிலாக சில டீ  ஷார்ட் வாங்கினாள் . 
 'அவருகிட்ட எப்படி சொல்லி கொடுக்கறது? இந்த ட்ரெஸ் போடும்போது என்னையே கட்டிக்கற மாதிரி மை  டியர் புருஷா' நினைக்கும் போதே மனம்  குஷியானது . என்ன நடக்கப் போகிறது? பார்க்கலாம்.

நீருவிடம்  பேசிவிட்டு பாஸ்கருக்கு செய்ய வேண்டிய வேலைகள் சிலது இருந்தது. முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பினான். வழியில் அவன் கண்டது...
தொடரும்......



Leave a comment


Comments


Related Post