இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 18-06-2024

Total Views: 7675

இதரம் -12


"மல்லி மேம் இப்படி சாப்பிட்டா உடம்பு எப்படி ஹெல்தியா இருக்கும்?"என்று நேத்ரா அன்பாய் அதட்ட 


"முடியலையே டாக்டரம்மா" என்று முகம் சுருக்கினாள் மல்லி. 


"முடியனுமே... மூணு மாதத்திற்கு முன்ன சாப்பிட்டது எல்லாம் கணக்கில் இல்லை இப்போ சாப்பிடணும்" என்றாள் நேத்ரா புன்னகையுடன்.


"ரொம்ப கொமட்டுது." என்றாள் ஆப்பிள் பழத்தைப் பார்த்தபடி. 


"சாப்பிட்டு வாமிட் பண்ணு" என்றவனின் குரலில் அதிர்ந்து விழித்தாள் மல்லி. 



திருமாறன் நின்றிருந்தான் அவளெதிரே. 


'மாறா...!'தன்னையறியாமல் முணுமுணுத்த அதரத்தை அதட்டி அடக்கியவள்," டாக்டர் சார் !"என்றாள். 


திருமாறன் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது அவள் முதலில் அழைத்த பெயர் கேட்டு 



நேத்ரா நாகரீகமாக வெளியேறினாள் . 


"டயர்டா இருக்கா தேவா,"வாஞ்சையாய் கேட்கவும், கண்ணில் நீர் திரண்டு விட்டது அவளுக்கு. 


"ப்ப்ச் என்ன தேவா...? ஏன் அழற?" ஆதூரமாய் அவன் கேட்க இதமாய் ஓர் அதிரல் அவள் மனதில். 


"இங்க சாஞ்சுக்கவா?" அவன் நெஞ்சை ஆள்காட்டி விரல் கொண்டு சுட்டிக் காட்ட, மெலிதான புன்னகையுடன் தன்னைப் போல அவளை சாய்த்துக் கொள்ள, மனம் வெகுவாய் நிறைந்தது அவளுக்கு. 


நேரம் கரைந்த பின்பும் தேடல் கரையவில்லை இருவரிடத்திலும். உடல் தேடலாக இருந்தால் சிலமணித்துளிகளில் தன் நிறைவைக் காட்டும் இது மனதின் தேடல் மரணம் வரை நீடிக்கும் அல்லவா. 



எதுவும் பேசிடவில்லை இருவரும், ஆனால் அந்த நொடி அருகாமை ஆயுள் வரைக் கேட்டது அன்பில் நெய்த இதயமிரண்டும். 



"டாக்டர் இந்த டேப்லெட் மட்டும் தந்திடவா?" வெளியே நேத்ராவின் குரல் இருவரின் தவம் கலைத்திட சட்டென விலகி," உள்ளே வா நேத்ரா!" என்றான் சற்று சத்தமாய்



"சாரி டிஸ்டர்ப் பண்ணதுக்கு" என மாத்திரையை நீட்ட மறுக்காமல் வாங்கி போட்டுக் கொண்டாள். 


"வாமிட் அதிகமா இருக்கா தேவா." 


"அது சாப்பிட்டதும் வந்துருது டாக்டர். எங்க அக்கா எல்லாம் இப்படி வாந்தி எடுக்கல" என்று சொல்லும் போதே மாறனின் உடல்மொழியில் ஓர் இறுக்கம். 


"ம்ம்ம்" என்றான் கடினக் குரலில். 


நேத்ரா அவனை வித்யாசமாகப் பார்த்திட 


"மன்னிச்சுக்கங்க டாக்டரே, பேச்சு வாக்கில் வந்திடுது" என சங்கடமாய் உரைக்க 


"நோ இஷ்யூ தேவா. ஜஸ்ட் பிடிக்கலை" என்றவன்," ஓகே விடு "என்றான் இயல்பான தொனியில். 



"கேட்க நினைச்சேன் எப்படி உங்களுக்குள்ள இந்த லவ் எல்லாம்?, கொஞ்சம் சொல்லுங்களேன். இன்னும் சஸ்பென்ஸாகவே வச்சிருக்கீங்க.அதுவும் திரு சார் நீங்க ஐ மீன் உங்களைத் தான் என்னால நம்பவே முடியவில்லை?!" என்றாள் நேத்ரா வியப்பாக 


"ஜஸ்ட் எ மிராக்கிள் நேத்ரா." என்றான் சிரிப்புடன். 


"அந்த மிராக்கிளை தான் சொல்லுங்களேன் ஃப்யூச்சர்ல எனக்கு எதுவும் யூஸ் ஆகுதான்னு பார்க்கலாம்" என்றாள் விளையாட்டாய். 


மல்லிக்குமே அது தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சாதாரணமாக சமைத்து போட்ட பெண்ணின் மீது காதலா. அதுவும் சம்பளத்திற்காக செய்தாள்.அவனைப் போல் அதிகம் படிப்பில்லை அழகில்லை பணமில்லை வசதியில்லை இது போல எத்தனையோ இல்லை என்று இருக்கும் போது காதல் மட்டும் எப்படி இருந்தது என்று தான் அவள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி. 


"தேவா இது என்னுடைய மனநிலை மட்டும் தான், நீ எதுவும் நினைச்சுக்காதே." என்று தன் காதல் துளிர்த்த கதையை இயல்பாய் கூறினான். 


"நான் அந்த ஊருக்குப் போய் பேசின பொண்ணுன்னா அது மல்லி தான் முதல்ல. தானா வந்து,வீடு க்ளீன் பண்ணி, சமைச்சு தந்து ,எல்லா உதவியும் செஞ்சா.அது அவளோட நேச்சர்னு அப்புறம் தான் எனக்குத் தெரியும். மணியக்காரர் அவர் தான் மல்லி பத்தி அடிக்கடி பேசுற ஆள். உனக்கு ஒரு லைஃப் அமைச்சு தரணும்னு ரொம்ப தீவிரமாக இருந்தார். ஈவன் என்னை மாப்பிள்ளை கூட இருந்தா சொல்ல சொன்னார். அவ்வளவு பாசம் உன் மேல" என்று சொல்லும்போதே மல்லிக்கு கண் கலங்கியது. 


"அவருக்கு நான் ஒத்தையா நின்றுவேனோன்னு அவ்வளவு கவலை. எங்கக்காங்க என்னைப் பாக்க மாட்டாங்கனு முன்னுக்கே தெரிஞ்சு வச்சிருக்காரு அதான்." என்றாள் கரகரத்தக் குரலில். 


"உன் அக்கா மேல எல்லாம் எனக்கே துளி கூட நம்பிக்கை கிடையாது மல்லி." என்றவன்," திருவிழாவிலேயே அவங்க பாசத்தை தான் பார்த்தேனே !"என்றான் கோபத்துடன். 


"அதேன் அன்னைக்கு அப்படி பண்ணீங்களா?" என்றாள்.


"எஸ்!" என்றவன்," அருவறுப்பு படாம உன் அக்கா பையன் சாப்பிட்டு கடிக்கத் தெரியாம போட்ட நான்வெஜ்ஜை உன் அக்கா குழம்பில் போட்டு கலந்து தர்றாங்க. நீயும் சாப்பிடுற. இத்தனைக்கும் நீ செஞ்ச டிஷ் அது, அதை நீ சாப்பிட உரிமை இல்லையான்னு எனக்கு அவ்வளவு கோவம்." என்றதும் நேத்ரா சங்கடமாய் உணர்ந்தாள் மல்லியின் நிலை கண்டு 


"நா வளத்த பசங்க, எம்புள்ளைங்க அதுக சாப்ட மிச்சம் எனக்கு அருவறுப்பு ஆவுமா டாக்டர்?" என்று கேட்க அவளை கனிவாய் பார்த்தவன்," நிஜம் தான்டா ஆனா அதை நீயா விரும்பி சாப்பிட்டு இருந்தா எனக்கு எதுவும் தோனி இருக்காது. பட் உன் அக்கா செஞ்ச காரியம் அது தான் எரிச்சல்." என்றான் விளக்கமாக. 


"ஒங்களுக்கு தெரியுமா நேத்ரா, டாக்டர் சார் எங்கூர் திருவிழா முடிஞ்சு ரெண்டு நாள்'ல ஏதோ ஃப்ரேண்ட் வர்றாங்க அசைவம் சமைக்கணும் மல்லினு எல்லாம் வாங்கிட்டு வந்து தந்தாங்க. நான் வகை வகையா சமைச்சு வச்சா இவர் ப்ரேண்டு வரல. அப்புறம் இவங்க சாப்டது போக, நானு வெண்ணி அக்கா அவங்க வீட்டுலனு எல்லாம் அதைத்தான் சாப்டோம் அப்ப தெரியல. எனக்கு இவக எனக்காக தான் சமைக்க சொல்லி இருக்காங்க'னு" என்றதும் நேத்ரா அன்பாய் பார்த்தவள்," உங்க அன்புக்கு ஈடு செஞ்சிருக்கார் என்ன சீனியர்?" என்றதும் மாறன் அழகாய் புன்னகைத்தான். 


"சரி சரி உங்க காதல் காவியத்துக்கு வாங்க" என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தாள் நேத்ரா. 


"இது போல சின்ன சின்ன இன்ஸிடன்ட் நிறைய இருக்கு நேத்ரா. ஒவ்வொரு விஷயத்திலும் தேவாவோட அன்பு அக்கறைனு நான் மெல்ட் ஆகிட்டே போனேன். நிஜமா நான் லவ் பண்ண விஷயத்தை உணரவே இல்லை என்று தான் சொல்லணும். இந்த லைஃப் இப்படியே போகட்டும். தேவா சமைச்சு தர, நான் என்னுடைய டியூட்டிப் பார்க்கன்னு ரொம்ப கேஷூவலா போனது. அது இப்படியே இருக்கட்டுமே இப்போ என்னன்னு நினைச்சிருக்கும் போது தான் இவங்க அக்கா மலர்க்கொடி வந்தாங்க. அதுவும் சும்மா இல்லை அவங்க சொந்த பந்தங்கள் எல்லாம் திரட்டிட்டு வந்தாங்க. மணியக்காரர் அவ்வளவு சந்தோஷமா என் கிட்ட மல்லியோட அக்கா கொழுந்தனுக்கு மல்லியை பேசி முடிச்சாச்சு தம்பின்னு சொல்றாங்க. எனக்கு அந்த விஷயத்தைக கேட்டு சந்தோஷப்படுறதா இல்லை என்ன செய்றதுன்னு தெரியவே இல்லை. எங்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு. இதோ ஒரு வாரத்தில் கல்யாணம்னு சொல்லி ஊரே தேவா வீட்டில் கொண்டாடுறாங்க. மல்லி மேரேஜில் வெறுமையா உணர்ந்தது நான் மட்டும் தான்." என்றான் அப்போது வலியை உணர்ந்தது போல. 


சற்று நிதானித்து அவனே பேசினான். 


" அந்த ஒரு வாரத்தை போகவேக் கூடாதென்று அவ்வளவு வேண்டுதல் எனக்கு." என்று சொல்ல மல்லி அவனை ஆதூரமாக பார்த்தாள். 


"நிஜம் தேவா. ரொம்ப ஃபீல் பண்ணேன். ஒரு பக்கம் உன்னை விட்டுடக் கூடாதுன்னு தோனுது. மறுபக்கம் என் ஃபேமிலி பேக் க்ரவுண்ட் தேவாவை நினைக்காதே அவளுக்கு உன்னால நல்ல லைஃப் தர முடியாதுன்னு சொல்லுது. இந்த போராட்டம் தொடர்ந்து கடைசியா என் ஃபேமிலியில் தேவாவை கொண்டு வர மனசில்லாம அவ மேரேஜுக்கு போக நினைச்சேன். போகவும் செஞ்சேன், என் மனசில் தேவா இல்லைன்னு உறுதியா நம்ப வச்சுக்கிட்டு. ஆனா இந்த பொண்ணு என் உறுதியை ஒவ்வொரு டைமும் உடைச்சா நேத்ரா"என்றான் புன்னகையுடன். 


மல்லியோ," நான் என்ன செஞ்சேன்?" என பாவமாய் கேட்க 



"நீ என்ன செய்யவில்லை.!"என்று கடிந்தவன்," இவ இல்ல நேத்ரா, மேரேஜ் பிக்ஸ் ஆனதும் ஒரே ஜிவல்ஸ், நியூ சாரி அப்புறம் எனி டைம் ஃபுல் மேக் அப் இப்படி தான் இருப்பா " என குற்றம் சாட்ட 


"அது புதுப் பொண்ணு எல்லாம் அப்படி தான் இருப்பாங்க சீனியர்" என்று நேத்ரா சிரித்தாள். 


"ஓஓஓ மை குட்நஸ்!, என்ன சொல்ல நான் இருந்த நிலையை. ஒவ்வொரு டைமும் வாவ் ஃபீல் தான் எனக்கு. நீ ஃபுட் கொண்டு வராதேன்னு கூட ஒரு டைம் சொல்லிட்டேன் தானே தேவா?!" என்று சிரிக்க 


"ஆமாம் ஆனா நான் தான் கேட்கவே இல்லை. இதுக்கு மேல இவங்களுக்கு என் கையால எப்போ சமைக்கப் போறேன்னு ஆதங்கம். அன்றைக்கு கோபமா நான் தான் சமைச்சுத் தருவேன்னு சொல்லிட்டு வந்தேன்."என்றாள் அவளும். 


"பார்த்துக்கோ எவ்வளவு கஷ்டம்?" என்று என்றான் கிண்டலாய். 

"ரொம்ப கஷ்டம் தான் சீனியர்." என நேத்ராவும் ஒப்புக் கொள்ள


"இதில் இவ மேரேஜுக்கு இன்வைட் பண்ணி நானும் போய் ஹப்பா ஹார்ட் அட்டாக் வராத குறை தான். நானும் வேற வழியில்லாம போனேன்." என்றான். 


"ஏன் ஸ்கிப் பண்ணி இருக்கலாமே நீங்க?" என்ற நேத்ராவிடம் 


"தேவாவுக்கு வாங்கின ஜிவல்ஸ் தரணும் அன்ட் மோர் ஓவர் தேவாவை கல்யாணப் பொண்ணா பார்க்க ஆசைப்பட்டேன்." என்றான் மல்லியைக் காதலாக பார்த்தபடி. 


"அப்போ மேரேஜ் நடந்திடுச்சா?" என்றதும் திருமணம் நடந்தேறிய விதத்திற்கு போயினர் மல்லி மாறன் இருவரும். 


...... தொடரும். 











Leave a comment


Comments


Related Post