இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 40 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 21-06-2024

Total Views: 4647

“சரி நந்தன் நீங்க பார்க்கவே ரொம்ப டயர்டா இருக்கீங்க… ஒரு ரெண்டு நாள் ஆஃபிஸ் டென்ஷன் எதுவும் எடுத்திக்காம வீட்ல ரெஸ்ட் எடுங்க” என்று சொன்ன ப்ரதீப்பை நந்தனோடு சேர்ந்து மோகன்ராம் பத்மாவதி கூட புரியாமல் பார்க்க

பத்மாவதியோ டைவர்ஸ் நோட்டீஸ் குழப்பத்தை தீர்க்காது போனால் தலை வெடித்து விடும் என்பது போல அது குறித்து கேட்க வாயெடுக்க வேண்டாம் என்று சமிக்ஞை செய்தான் ப்ரதீப்.

“இல்ல சார் ஏதோ அஃபிஷியலா பேசனும்னு வரச்சொன்னாரே…” என்று அபிநந்தன் தயங்க

“அப்பறம் பேசிக்கலாம் நந்தா. நீ மனசை போட்டு குழப்பாம இருப்பா… எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்று மோகன்ராம் அடுக்கிக் கொண்டே போக நந்தன் புரியாமல் பார்க்க

“அப்பா அப்பா!! போதும். நீங்க நான் சொன்ன மாதிரி ரெண்டு மூணு நாள் ஆஃபிஸ் வேலை எதையும் மண்டையில ஏத்திக்காதீங்க நந்தன். அக்ஷூ கிட்ட நான் அப்பறமா பேசுறேன். அதைப் பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம்.” என்று ப்ரதீப் சொல்ல அங்கிருந்து விடை பெற்றான் நந்தன்.

சொல்லப்போனால் இத்தனை நாட்கள் தன் மனதை அழுத்திய பாரங்களை வெளியேற்றி இருக்க இன்று மனம் கொஞ்சம் இலகுவாக தெளிவாக இருப்பது போல இருக்க நீண்ட மூச்சினை இழுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான் அபிநந்தன்.

அவனின் பைக் கிளம்பிய சத்தம் கேட்ட அடுத்த நொடி தன் மகளாக வளர்த்தவள் நிலை என்னவோ என்று பதறி பத்மாவதி அபிலாஷா இருந்த அறைக்குள் சென்று பார்க்க தரையில் அமர்ந்து தன் தவறுகளை நினைத்து கதறிக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.

“அபி… அபிமா” என்று மோகன்ராம் பத்மாவதி இருவரும் சேர்ந்து அவளை தூக்கி ஷோபாவில் அமர வைக்க

“இப்போ புரியுதா அபி? நந்தன் உன்னோட ஹெல்த்தை நினைச்சு உனக்கு அபார்ட் பண்ணலாமானு கேட்டிருக்காரு. அவ்வளவு தான். ஒன்னு உனக்கு தானாவே அபார்ட் ஆகிருக்கனும். இல்ல உன் லைஃப்ல புகுந்து இவ்வளவு குழப்பம் பண்ணின அந்த முகில் இதை பண்ணிருக்கனும். எதுவோ… ஆனா நந்தன் இதுக்கு காரணம் இல்ல. அத்தோட அவரு உனக்கு டிவோர்ஸ் கொடுக்க நினைக்கல…” என்று சற்றே கடுமையான குரலில் ப்ரதீப் சொல்ல

“அவளே வருத்தத்துல இருக்கா… கொஞ்சம் பொறுமையா இரு ப்ரதீப்.” மோகன்ராம் சொல்ல

“டேய் ப்ரதீப் அபியும் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பல… நந்தனும் அனுப்பல அப்போ யார் தான் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியது?” பத்மாவதி கேட்க

“இன்னும் புரியலையா அம்மா… அந்த முகில் தான் அனுப்பி இருக்கான்.. அவனை நான் பார்த்துக்கிறேன். இதை சந்தியாகிட்ட பேசி ஏற்கனவே நான் தெரிஞ்சுக்கிட்டேன். உனக்கு தெரியப் படுத்தத்தான் சந்தியாவை உன்னை பார்க்க அனுப்பினேன்.. அபி… இப்போவாச்சும் சொல்லு… நீ என்ன தான் முடிவு பண்ணிருக்க?” என்று ப்ரதீப் கேட்க

அழுகையை நிறுத்தி நிமிர்ந்து அமர்ந்து கண்களை துடைத்து பெருமூச்சு வாங்கி தன்னை அமைதி படுத்தி கொண்டவள், “என்னால என்னை வைச்சு நடந்த தப்பு எல்லாத்தையும் நானே சரி பண்ண போறேன் ப்ரதீப்… ரொம்ப தாங்க்ஸ் டா… எல்லாமே உன்னால தான்.. ஆன்டி அங்கிள் நான் கிளம்பறேன்..” என்று படபடவென்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் அபிலாஷா.

மோகன்ராம் ஆச்சரியமாகவும் ப்ரதீப் அவள் முடிவில் மகிழ்வாகவும் பார்த்திருக்க அருகில் வந்த பத்மாவதி “டேய் அதான் அபி மனசை தெளிவு படுத்தி நந்தன் அபி வாழ்க்கையை சரி பண்ணியாச்சுல இனியாவது இவங்களுக்காக அச்சுக்கிட்ட கோபப்பட்டு சண்டை போடுற மாதிரி நடிக்கிறதை விடு… என்னதான் நடிப்பா இருந்தாலும் என் மருமக முழுகாம இருக்கா சத்தமா பேசுனா அவளுக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை…” என்று செல்லமாக கடிந்து கொள்ள நாக்கை கடித்துக் கொண்டான் ப்ரதீப்.

“எது? சண்டை மாதிரி நடிச்சாங்களா டேய் ப்ரதீப் என்னடா இது?” மோகன்ராம் புரியாமல் கேட்க வெட்கம் கொண்டது போல சுட்டு விரலை பல்லில் கடித்து கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டான் ப்ரதீப். 

அவனை வித்தியாசமாக பார்த்த மோகன்ராம் “டேய் என்னடா என்ன பண்ற சொல்லிட்டு பண்ணு…” என்றிட

“என்னங்க அவன் இப்போதைக்கு சொல்ல மாட்டான். என்ன தெரியனும் உங்களுக்கு நான் சொல்றேன்.” என்று பத்மாவதி சொல்ல

“அப்போ உனக்கும் தெரியுமா? என்ன நடக்குது இங்கே? அப்போ இவனும் அச்சுவும் சண்டை போட்டுக்கலையா? தெளிவா சொல்லு பத்மா…” என்றிட

“சண்டை… இதுங்க… என்னங்க நந்தனும் அபியும் மனசு விட்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம பிரிஞ்சு இருந்தாங்க… அவங்க ரெண்டு பேருக்கும் தங்களால இவங்க பிரிஞ்சு இருக்காங்கனு ஒரு சின்ன குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி அது மூலமா ரெண்டு பேரையும் பேச வைக்க நினைச்சான். ஆனா அது நடக்கவே இல்லை. அதுனால தான் அபியோட ஃப்ரண்டா சந்தியாவை பார்த்து பேசி அவ மூலமா அபிக்கிட்ட பேசி புரிய வைச்சிருக்கான். ஆனா அபிக்கு இந்த மாதிரி உடம்பு சரியில்லைனு என்கிட்ட கூட சொல்லலை…” என்று பத்மாவதி சொல்ல

“அப்போ எனக்கு தெரியாம அம்மாவும் பையனும் இப்படி ஒரு சீக்ரெட் வைச்சிருக்கீங்க.. அப்படி தானே?” என்று செல்லமாக முறைத்தபடி மோகன்ராம் கேட்க

“ஆமா… பெரிய சீக்ரெட்… அன்னைக்கு அச்சுக்கிட்ட ஃபோன்ல சண்டை போடும் போது அக்ஷூ நடிப்புதான் ஆனா அதுக்காக இப்படி கத்தி பேசாதே… உடம்புக்கு ஆகாதுனு கொஞ்சிட்டு இருந்தான். எதர்ச்சையா நான் அதை கேட்டு அப்பறம் உருட்டி மிரட்டி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். பின்ன… என் மருமககிட்ட இவன் இத்தனை நாள் கோபமா பேச நான் விட்டுடுவேனா என்ன?” என்று பத்மாவதி கேட்க

“சரிதான்… சரி அபி இப்போ என்ன பண்ண போறா எங்க போனாள்ன்னு பாரு” என்று மகனுக்கு சொல்ல அவனும் தோழியை தேடி சென்றான்.

வீட்டுக்கு வந்த அபிநந்தன் ஆயாசமாக இருக்கையில் பொத்தென்று அமர அவன் வந்த அரவம் கேட்டு “நந்தா… வந்துட்டியா ப்பா?” என்று பார்வதி கிட்சனில் இருந்தும் ப்ரதீப் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் அபிலாஷா முடிவை தெரிந்து கொண்டு சிரிப்பை இதழுக்குள் அடக்கி கொண்டு அக்சயாவும் அறையை விட்டு வெளியே வர அவளை பார்த்த நந்தன்

“ப்ரதீப்கிட்ட பேசுனேன் அச்சு… அவர் உன்கூட பேசுறேன்னு சொன்னாரு. அவர் கால் பண்ணினா கோபப்படாம அமைதியா பேசு மா…” என்றிட தலையை மட்டும் ஆட்டினாள் அக்சயா.

“நந்தா.. ஏன்பா ஒரு மாதிரி இருக்க?” ஆதூரமாக அவன் கையை பார்வதி தொட

“ஒன்னுமில்ல ம்மா… ஆஃபிஸ் விஷயமா பேச மோகன்ராம் சார் வரச்சொன்னாருன்னு போனேன். அப்போ தான் ப்ரதீப்பை பார்த்து பேசினேன். அதான் ஒரு மாதிரி…” என்று சொல்லி கொண்டு இருக்க அபிநந்தன் செல்ஃபோன் ஒலித்தது. 

“வக்கீல் கூப்பிடுறாரும்மா… ஒருவேளை ஹியரிங்ல எப்படி பேசனும்னு சொல்லவா இருக்கும் போல…” என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைக்க அவர் சொன்ன செய்தியில் இன்பமாக அதிர்ந்தவன் அவர் சொல்வது உண்மைதானா? என்று உறுதிப் படுத்திக் கொள்ள ஃபோனை ஸ்பீக்கர் மோடில் போட்டு தாயையும் தமக்கையையும் கேட்க செய்தான்.

“என்ன அபிநந்தன் சர்ப்ரைஸா இருக்கா? உங்க மனைவி அபிலாஷாவோட லாயர் கோபாலன் எனக்கு ஃப்ரண்ட் தான் ப்பா.. அவரே உங்க டிவோர்ஸ் பத்தி நிறைய சங்கடப் பட்டு பேசினாரு. இப்போ உங்க மனைவி அபிலாஷாவே ஒரு சின்ன மனஸ்தாபத்தால என் கணவர்கிட்டு கோவிச்சிட்டு எங்க வீட்டுக்கு வந்திட்டேன். என்னோட சம்மதம் இல்லாம என் குடும்பத்தினர் இந்த விவாகரத்து வழக்கு போட்டாங்க.. அவங்க செய்த தவறுக்காகவும் எங்களால கோர்ட்டுக்கு ஏற்பட்ட நேர விரயத்துக்கும் மன்னிச்சிடுங்க னு சொல்லி கேட்டுக்கிட்டு அவங்க தரப்புல இருந்து விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கிட்டாங்க… 

என்னப்பா நந்தன் எனக்கு என் மனைவியை பிரிய விருப்பம் இல்லை தான் ஆனா, அவளுக்கு என்னை பிரியறதுல சந்தோஷம்ன்னா நான் அதை தடுக்க மாட்டேன்னு சொன்னியே.. உனக்கு இப்போ சந்தோஷமா?” என்று வழக்கறிஞர் கேட்க என்ன பதில் சொல்வான்.. 

ஆனந்தத்தில் அவன் வாயடைத்து போய் அமர்ந்திருக்க “என்ன அபிநந்தன் சத்தத்தையே காணோம்?” என்று வக்கீல் கேட்க அபிநந்தன் கையில் இருந்த ஃபோனை வாங்கிய பார்வதி மகனின் நிலையை சொல்லி தன் மகிழ்வையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்.

“நந்தா… நான் தான் சொன்னேனே..‌ அபிக்கு நம்மளை பிரிய மனசு வராதுப்பா…” என்று சொல்ல

“அண்ணா அண்ணியை நேர்ல போய் பார்த்து மனசு விட்டு பேசு. அண்ணியை சீக்கிரம் கூட்டிட்டு வாண்ணே… இனியும் நேரத்தை கடத்த வேண்டாம்.” அக்சயா சொல்ல

“அபியை போய் கூப்பிடலாம்.. நந்தா அதுக்கு முதல்ல எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு பக்கத்துல இருக்குற கோவில்ல தான் வாப்பா போய்ட்டு வரலாம்.” என்று அழைக்க இம்முறை மறுக்காமல் தாயோடு கிளம்ப அக்சயா பார்வதி அபிநந்தன் மூவரும் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வர வாசலில் நின்றிருந்தாள் அபிலாஷா.

மூர்ச்சையாகி நின்றிருந்தான் ஒரே நாளில் கையிலிருந்து நழுவி சென்ற தன் வாழ்க்கை மீண்டும் தன்னை வந்தடைய அதை நம்பவே கொஞ்சம் நேரம் பிடித்தது நந்தனுக்கு. 

இத்தனை நாட்கள் கழித்து அபிலாஷா தன் தவறை உணர்ந்து தனக்கு தாயாக இருந்த பார்வதி தன்னை தவறாக நினைத்திருப்பாரோ என்று சிறு தயக்கத்தோடு அபிலாஷா வாசலில் நின்று இவர்களை பார்த்திருக்க அருகில் வந்த பார்வதி

“ம்க்கும்” என்று தொண்டையை செருமி கொண்டு “எப்போவும் நான் வீட்ல இருந்து வெளியே போனா சாவி எங்கே வைப்போம்னு உனக்கு தெரியும் தானே?” என்று கேட்க முதலில் புரியாமல் முழித்து பின்னர் தெரியும் என்று தலையாட்டினாள் அபிலாஷா.

“ம்ம்… அப்போ அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே போய் இருக்கிற வேலை என்ன வெட்டி என்னனு பார்க்க வேண்டியது தானே? இங்க எதுக்கு நின்னுட்டு இருக்க? உனக்கு என்ன ஆரத்தி எடுத்து உள்ளே கூப்பிடனுமா?” என்றுமில்லாத கடுமையோடு பார்வதி கேட்க அபிலாஷா மட்டுமின்றி அபிநந்தன் அக்சயா கூட விழி விரித்து ‘ஆ’ என்று பார்த்திருக்க

‘சரி நாம செய்ததுக்கு இவ்வளவு கூட கோபம் இல்லன்னா எப்படி?’ என்று மனதை சமன் செய்து கொண்டாள் அபிலாஷா.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post