இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -61 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 22-06-2024

Total Views: 6686

அவன் போனதும் தான் இழுத்த மூச்சை விட்டாள் நிலா.

‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி டிசைன் டிசைனா பிரச்சனை பன்றான். இவனோட வாழ்க்கை எப்படி இருக்குமோ தெரியலையே’ என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறியது.

நந்தன் நிலா திருமணம், முதலிலும் வளவன், ஷாலினி திருமணம் இரண்டாவதும் ஒரே மேடையில் நடத்துவது என முடிவு செய்தனர்.

அடுத்த நாள் கல்யாணப் பட்டும் அதற்கு அடுத்த நாள் இருவருக்கும் மாங்கலியமும் எடுக்கலாம் என முடிவு பண்ணி மார்த்தியின் குடும்பம் அங்கிருந்துச் சென்றது.

காலையில் உணவு கொடுத்தவன் தான், இரவும் உணவும் கொண்டு வந்துக் கொடுத்தான், மதியம் ஏட்டு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருந்தார்.

நிலாவின் தேவையை அறிந்து எவ்வளவு வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு செய்தான்.

இதை காதல் என்ற இடத்திற்கே எடுத்து செல்லவில்லை நிலா.. அவன் தேவையை நிறைவேற்ற வேண்டும் அதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டும் அதற்காக செய்கிறான் என்று தான் நினைத்தாள்.

இரவு உணவை எடுத்து வந்தவன் சாப்பிடு என்றெல்லாம் சொல்லவில்லை அவளது படுக்கையில் வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

“நந்தா.”

“சார்..”

“நான் கேள்விப்பட்டது உண்மையா?”

“என்னது சார்.?”

“நீ நிலாவை கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”

“ஆமா சார்.”

“நீ ரொம்ப ரிஸ்க் எடுக்கற நந்தா”

“அவளக் கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன ரிஸ்க் சார். புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”

“பொய் சொல்லாத நந்தா..”

“சார் நீங்க நினைக்கிற மாதிரிலா எதுமே இல்லை, அவ பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்.”

“அப்போ லவ் பண்றியா?”

“மேபி”

“என்னடா பதில் இது?”

“எனக்கே தெரியல”

“எப்போ கல்யாணம்?”

“இன்னும் இரண்டு வாரத்துல..”

“ரொம்ப பக்கமா இருக்கற மாதிரி இருக்கு.”

“ம்ம் அவங்க கல்யாணம் முன்னாடியே பேசுனது அதனால டைம் இருந்தது. நம்பளது இப்போ தானே பேசுனாங்க.”

“முடிவே பண்ணிட்டியா?”

“முடிவு பண்ணாம இவ்வளவு தூரம் வர முடியாதுல சார்.”

“பார்த்து நந்தா ரிஸ்க் எடுக்கற நல்லா யோசிச்சிக்கோ.”

“ம்ம்” என்றவனின் கை அவனது மீசையை தடவிக் கொண்டது.

“இந்த விஷயம் நம்ப டிபார்ட்மென்ட்ல இருக்கவீங்களுக்கு தெரியுமா.?”

“இன்னும் சொல்லல்ல உங்களுக்கு மட்டும் தான் சொல்லிருக்கேன்.”

“சொல்ல வேண்டா அப்புறம் எவனாவது குறுக்க புகுந்து குட்டையா கிளப்பி விட்டுருவாங்க.”

“ம்ம்”

“பார்த்துக்கோ" என அவனது தோளை தட்டிவிட்டு சென்றார்.

நந்தன் ஒரு முடிவு எடுக்கிறான் என்றால் அதை ஆயிரம் தடவை யோசித்திருப்பான் காதலுக்காக இந்த கல்யாணமா? இல்லை காவல் கடமைக்காக இந்த கல்யாணமா? என அவனுக்கு மட்டும் தான் தெரியும். 

இன்று துணி எடுக்க கடைக்குப் போயிருக்கிறார்கள். மார்த்தி இவனையும் அழைக்க.

“இல்லைப்பா எனக்கு ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு நீங்களே எடுத்துட்டு வந்துடுங்க.” என்றான்.

“என்னப்பா இப்படி சொல்ற நிலா நீ வருவன்னு எவ்வளவு எதிர்பார்க்கும். ஒரு எட்டு வந்துட்டுப் போப்பா.”

“ட்ரை பண்றேன்” என்று சொல்லிவிட்டு தான் இங்கு வந்திருந்தான். இப்போது வேலை வேறு கழுத்தை நெறிக்க, கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வேலையை செய்தவன்.

சரியாக மணி பனிரெண்டு இருக்கும் போது,

“சரஸ்வதி”

“சொல்லுங்க சார்.”

“நம்ப 407, 302 வையும் கூட்டிட்டு கார்ல ஏறுங்க கடை வீதில ஒரு வேலை இருக்கு.”

“சரிங்க சார்” என்றவள் அவன் சொன்னதை செய்து முடித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் நந்தன் தலைமையிலான குழு கடைவீதியை சுற்றி வளைத்திருந்தனர்.

அங்கு புழங்கிய போதைப் பொருளையும் மளிகைக்கடையில் விற்கும் ஹான்ஸ் போன்ற போதை பொருளையும் கைபற்றி அதை விற்றவர்களை கைது செய்திருந்தான் நந்தன்.

“சார் அவ்வளவு தானே ஸ்டேஷன் போலாமா?” என்று சரஸ்வதி கேக்க.

“நீங்க கிளம்புங்க சரஸ்வதி என்னோட சிஸ்டர் மேர்ஜ்க்கு டிரஸ் எடுக்க வந்துருக்காங்க, நான் அவங்களோட ஜாயின் பண்ணிக்கறேன்.”

நந்தனின் குடும்பம் என்றதும் சரஸ்வதிக்கு அவர்களைப் பார்க்க வேண்டும் அவர்களுடன் பழகி நல்லப் பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை வர.

“ஹா சார் வித் பெர்மிஸ்ஸன் நானும் உங்களோட வரலாமா, என்னோட சிஸ்டருக்கு நாளைக்கு பர்த்டே ஒரு டிரஸ் எடுக்கணும்.” என்றாள் ஆசையாக. கண்களில் அந்த ஆசைப் பிரதிபலிக்க,

அதை கவனிக்காத நந்தன், "ஓ ஸ்சூர் கம்.“ என்று முன்னால் நடக்க அவர்கள் பிடித்த கைதியை வேறு ஒரு வண்டியை வர வைத்து அதில் ஏற்றி காவல் நிலையத்திற்கு மற்ற காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

நந்தன் ஜீப்பை கடையின் முன் நிறுத்திவிட்டு துள்ளிக் குதித்து இறங்கினான்.

அன்று காலை பத்து மணிக்கு மேல் நல்லநேரம் இருக்க, அப்போது தான் வீட்டில் இருந்தே கிளம்பினார்கள். கடைக்கு வந்து சேர அரைமணி நேரமாகிவிட்டது.

அவர்களுடன் யுகியும் கூட வந்திருந்தான். அவனின் பார்வை நிலா இருந்த பக்கமே போகவில்லை. ‘அவ்வளவு சொல்லியும் கல்யாணப்பட்டு எடுக்கற அளவுக்கு வந்துட்டா, அப்போ நாங்கல்லாம் கொஞ்சம் கூட முக்கியமில்லாம போய்ட்டோம்ல’ என்ற கோவம்.
நிலா கல்லூரி படிக்கும் போது அவளுக்கு நண்பர்கள் பட்டாளம் ஏராளம், அப்போதுக் கூட யுகி சொல்லுவான்.

“பூனை உன் பிரண்ட்ல ஏதாவது ஒன்னை கரைட் பண்ணி விடேன் நானும் எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்திட்டு இருக்கறது. கொஞ்சம் மிங்கிள் ஆகிக்கறேன்.”

“வாய்ப்பில்லை ராசா.. நான் சிங்கிளா இருக்கிற வரைக்கும் நீயும் சிங்கிள் தான் எவளையாவது பார்த்தேன்னு தெரிஞ்சிது கண்ணை நோண்டி காக்காயிக்கு போட மாட்டேன் நானே சமைச்சி தின்னுடுவேன்.”

“கொலைகாரி”

“இருந்துட்டுப் போறேன், உனக்காக ஒரு கொலை கூடப் பண்ணலைன்னா என்ன இருக்கு சொல்லு.?”

“சொல்லுவடி சொல்லுவ.. பாரு உனக்கு முன்னாடியே பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணல..”

“நான் விட்டா தானே.. வேணும்னா ஒரு டீல் போட்டுப்போம்...”

“நீ கேடி ஆச்சே வில்லங்கமால டீல் போடுவ..”

“முதல்ல டீலை கேளுடா என் பொட்டேட்டோ”

“சரி சொல்லு.”

“உனக்கு நான் பொண்ணு பார்க்கறேன் எனக்கு நீ மாப்பிள்ளை பாரு எப்படி ஐடியா.?”

“பாப்போம் கல்யாணக் காலத்துல என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும்?” என்று அன்று சொன்னான்.

தனக்கு மாப்பிள்ளை பாரு என்று அன்று சொன்னவள் தான் இன்று அவனுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? என்றுக் கூடக் கேக்கவில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் தணிந்திருந்த கோவம் மீண்டும் அனல் போல் கொழுந்து விட்டு எரிந்தது.

நந்தன் யுகியின் பக்கம் திரும்பக் கூடாது என மிரட்டியதால் அவன் குரலை மட்டும் காதில் நிரப்பிக் கொள்வாள் மற்றப்படி அவன் இருந்தப் பக்கமே திரும்பவில்லை.

“நிலா உனக்கு எந்த புடவை வேணும்ன்னு பாரும்மா.”

வளவன், யுகி, ஷாலினி மூவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து புடவையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்தில் தேவையில்லாத ஆணியாக நிலா சென்று நிற்பதில் சங்கடப்பட்டவள்.

“அவங்க வரேன்னு சொல்லிருக்காங்க மாமா வந்ததும் சேர்ந்து எடுத்துக்கறோம்.” காரணம் சொல்ல வேண்டுமே என்று தான் இதை சொல்ல, வளவனும் யுகியும் சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தனர்.

“அங்க என்ன பார்க்கறீங்க? இந்த சேலை எனக்கு நல்லா இருக்கா..? இதைப் பாருங்க” என அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள் ஷாலினி.

கட்டிக்கப் போறவனுக்கு, தான் உடுத்தும் புடவை பிடிக்க வேண்டும் என்று தானே எல்லாப் பெண்ணும் ஆசைப் படுவாள் அதில் நிலா மட்டும் என்ன விதிவிலக்கா? 'இதுக்கு போய் ஆன்னு வாயை பிளந்துப் பார்க்கறான் கேடி பாய்ஸ்..’ என முனவியள், தன் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்துப் பார்த்து வளவனின் கண் அசைவில் எது எடுக்கலாம் என யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

யுகிக்கு தான் நிலா தனிமையில் நிற்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

'இனி இதுபோல தான் நடக்கும், நீ அனுபவித்து தான் ஆகணும் ஏனா இது நீயா முடிவு பண்ண விஷயம்.' என அங்கிருந்து ஆண்கள் பகுதிக்கு சென்று விட்டான்.

அங்கிருந்தால் அவள் படும் அவஸ்தையை அவனால் பார்க்க முடியாது.

இப்படியே நேரம் போய்க் கொண்டே இருக்க கடைக்கு வந்த மூன்று மணி நேரம் கழித்து தனக்கு என மூகூர்த்தப் புடவையை தேர்ந்தெடுத்திருந்தாள் ஷாலினி.

“என்ன ஷாலு உனக்கே இவ்வளவு நேரம் பண்ணிட்ட? இன்னும் நிலாக்கு எடுக்கணும், வீட்டுல இருக்கறவீங்களுக்கு எடுக்கணும். இப்போ சாப்பாட்டு நேரம் வேற ஆயிடுச்சு.” என்ற மார்த்தி கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வாசலைப் பார்க்க, அப்போது தான் நந்தன் சரஸ்வதியுடன் படியேறிக் கொண்டிருந்தான்.




Leave a comment


Comments


Related Post