இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 22-06-2024

Total Views: 3042

பகுதி-15

பாஸ்கர் அலுவலகத்தில் வேலையை முடித்து விட்டுத் திரும்பி  வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் அவன் தங்கையும், அன்னையும் நின்றிருந்தனர்.  'அப்படி குலுங்கி குலுங்கி சிரிப்பது தன் தங்கையா?' அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவள் இப்படி சிரிச்சு பல வருடங்கள் ஆயிற்று. அவளுக்கு மட்டுமில்லை அவன் வீட்டில் இருந்த அனைவருக்குமே அப்படிதான். சிரிப்பார்கள். சின்னப் புன்னகை மட்டுமே. அன்று அவள் கல்லூரியிலிருந்து  அழுதுகொண்டே வந்ததன் பிறகு யாருமே பெரியதாக எல்லாம் சிரிப்பதில்லை.
'அது சரி! யாரோ அவளை அப்படி சிரிக்க வைத்துக் கொண்டிருப்பது?' அன்னையும் சிரித்த முகமாகவே இருந்தார்.
அவர்கள்  அருகில் வந்து வண்டியை அவன் நிறுத்தியதும் உடன் இருந்த பெண் வாயை மூடிக் கொண்டாள். 
"அண்ணா! நீ என்ன  இங்க?" சிரித்த முகத்துடன் பேசிய  உடன்பிறப்பை 
ஆச்சர்யமாகப் பார்த்தான்.  அவன் தங்கை திக்காமல் பேசினாள். 
"என்னம்மா இங்க நிக்கறீங்க?"
"இல்லடா! பஸ்ஸுல வீட்டுக்குப் போய்கிட்டு இருந்தோம். ஸ்டாப்பிங்க்ல இந்தப் பொண்ணு மட்டும் தனியா நின்னுகிட்டு இருந்துச்சு. வேற யாருமே இங்க இல்ல. இப்ப காலம் கெட்டுகெடக்குதே. சின்னப் பொண்ண பார்த்துட்டு தனியா விட மனசில்லை. அதான் இந்தப் பொண்ணுக்கு பஸ் வர வரைககும் கூடத் துணைக்கு இருக்கலான்னு "
"இன்னுமா பஸ் வரல?"
"இப்பதான் ஒன்னு வந்துச்சு. அதுவும் ரொம்ப கூட்டமா  இருந்துது. ஏறவே முடியல" சொன்னவளை 
தீர்க்கமாக உற்றுப் பார்த்தான்.
"என்னடா இந்தப் பொண்ண எங்கையோ பார்த்த மாதிரி இருக்கா?"
"என்னம்மா? போட்டு வாங்கறியா?எனக்கு எங்கையும் பார்த்தமாதிரி எல்லாம் இல்லை?"
"இல்லடா! இது யாருன்னு உனக்குத் தெரியல?"
"உண்மையாவேத் தெரிலையா அண்ணா?"
"உண்மையா,  சத்தியமா தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.  இல்லையா. விடுங்க. இப்படியே ராத்திரி பூரா  சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருங்க. ஊரே சிரிப்பா  சிரிக்கட்டும் "
"டேய்! கோச்சுக்காதடா. இது நம்ம நிரஞ்சனாவோட நாத்தனாருடா"

அன்னை சொன்னதும்தான் அவளை நன்றாகக் பார்த்தான்.
"நம்பிக்கை இல்லையா?" பவித்ரா தான் கேட்டிருந்தது. 
"இருக்கு! இருக்கு !"

ஒரு மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான்.
"டேய் ! கொண்டு போய்  இந்தப் புள்ளைய  வீட்டுல விட்டுட்டு வாடா"

குழைந்து பேசினார் பட்டு. 
"என்ன விளையாட்டா? வேண்ணா  ஆட்டோல ஏத்தி விடறேன்"
"டேய்! பாவம் டா. எங்கையோ பிரண்டு கிட்ட நோட்ஸ் வாங்கப் போயிட்டு வழி  தவறிடிச்சு. இந்தக் காலத்துல யாரடா நம்ப முடியும். ராத்திரி நேரம் வேற. ஏதாவது ஒன்னு கிடைக்க ஒன்னு ஆச்சுன்னா  மனசு தாங்காதுடா. ப்ளீஸ் டா"
யாரோ ஒருவர் தனக்காகக் கெஞ்சுவது இவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
"பரவால்ல ஆன்டி. நீங்கக் கிளம்புங்க. நான் அடுத்து வர்ற பஸ்சுல போய்க்கறேன் "
"அண்ணா ப்ளீஸ்" அவன் தங்கையும் சொன்னாள்.
அவர்கள் சொல்வது அவனுக்கும் சரியாகவேப் பட்டது. இரவில் பெண் பிள்ளையைத் தனியாக விடுவது நல்லதில்லை. 
"சரி வெயிட் பண்ணு" இறங்கியவன் அன்னைக்கு ராபிடோவில் வண்டி புக் செய்தான்.
"நம்ம யாத்ரியில்  பவித்ராவுக்கு ஆட்டோ பார்த்தான். பெண் டிரைவர்கள் யாரும் இல்லை. வேறு வழியில்லை. அன்னையையும் தங்கையையும் ஆட்டோவில் ஏற்றி விட்டு விட்டுப் பவித்ராவை வண்டியில் ஏற்றிக் கொண்டார்
உரிமையாகத் தோள்  பிடித்துக் கொண்டாள். 
"என்ன? தொடர?கையை எடு "
"அப்புறம் நான் கீழ விழுந்தா நீங்கதான் வேணுன்னே  தள்ளி விட்டீங்கன்னு உங்க அம்மாகிட்ட சொல்லுவேன். ஓகே வா?"
"ஆமா ! நீ என்ன வேண்ணாலும் பண்ணுவ"
அவனுக்குப் பதில் எதுவும் அவள் சொல்லவில் லை.
ஒரு கையால் புத்தகப் பையை இறுக்கி கொண்டாள். மறு கையால் அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்குப் பயமாக இருக்கிறது போலும். மெதுவாகச் சென்றான். பயத்தை போக்க மெதுவாகப் பேச்சுக்குக் கொடுக்க ஆரம்பித்தான்.
"நீ கல்யாணத்துல மஞ்ச கலர் தாவணி கட்டிட்டு இருந்த பொண்ணு தானே?"
"இல்ல மஞ்ச பாவாடை, கிளி பச்சை தாவணி"
அவள் பேசுவது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. இந்தக் காலத்திலும் பெண்கள் இப்படி பேசுவார்களா என்ன?"
அவளே தொடர்ந்தாள். 

"நீங்கச் சொல்லறது என்னோட அக்கா"
"ஒ  அவங்க பேரு  என்ன?"
"அது எதுக்கு உங்களுக்கு?"
"கொஞ்சம் பாக்க நல்லா இருந்தாலே இப்படித் தான் வாயில் அவள் லேசாக முணுமுணுத்தது இவன் காதில் நன்றாகவே விழுந்தது.
வண்டியை  ஓரம் கட்டினான். இவள் பயந்து விட்டாள்.
'அச்சச்சோ நாம சொன்னது கேட்டுருச்சோ? இப்ப என்ன பண்ண? பயத்தில் நகத்தில் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள். அவனோ கண்டும் காணாமல் பெட்ரோல் டேங்க்  மீது வைத்திருந்த ஹெல்மட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.
'இதுக்குத்தான் வண்டியை நிறுத்தினாங்களா ?' பெரு மூச்சு விட்டாள். அதற்குப் பிறகு இருவரும் மௌனமாகவே வந்தார்கள். சரியான  முகவரியில் வந்து அவளை இறக்கி விட்டவன்,
"பேரு கேட்டது சும்மா தெரிஞ்சுக்கத்தான். மத்தபடி நீயோ இல்ல உங்க அக்காவோ அப்படி ஒன்னும் பெரிய அழகி எல்லாம் இல்ல" கடுப்புடன் இறங்கி அவள் வீட்டிற்குச் சென்று அவள் அன்னையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அன்னை அவனிடம் யார் என்ன என்று விசாரித்துக் கொண்டார். ஆண்ட்ரே செந்தில், ஏற்கனவே பாஸ்கர் பற்றிச் சொல்லி இருந்தான். அதனால் பாஸ்கர் மீது நல்ல எண்ணமே இருந்தது.
"உக்காருங்க தம்பி. தோசை ஊத்தி தரேன்"
"இருக்கட்டுங்க. நான் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கறேன் "
கட்டாயப்படுத்தி தோசை உண்ண  செய்து விட்டே அனுப்பினார் மீனாட்சி.
"அம்மா ரேணுகா!  தம்பிக்கு இன்னொரு தோசை போடம்மா"

பெயர் தானாகவே தெரிந்து விட்டது.
"என்ன பவி சும்மாவே நிக்கற?தம்பிக்குச் சட்னி கொண்டு வா"

இவள் பெயரும் தெரிந்து விட்டது.
"நீங்கதான் மருமகளுக்கு எல்லாம்னு செந்தில் சொன்னான்.

தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். 

நிரஞ்சனா இங்கு இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். இவனும் ஒரு மாதிரி தன்னை நிலை படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
"ஆமாங்க! ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ். அவளும் நானும் பிரண்ட்ஸ்ங்கறத  தாண்டி ஒரே வீட்டுப் பிள்ளைங்க தான்."
"மீனாட்சி தன்  நட்பைத் தவறாக     எண்ணி விடக்  கூடாதே என்று நினைத்தான். உடன் சேர்த்து பிரதீப் பற்றியும் சொல்லி விட்டான். எந்தக் காரணத்தினாலும் அவர்களின் நட்பு மாறி விடக் கூடாது.

முக்கியமாக நிரஞ்சனாவின் வாழ்கை எந்த விதத்திலும் இவர்களால் பாதித்து விடக்  கூடாது.
மீனாட்சி வயதானவர் என்று எல்லாம் சொல்லி விட முடியாது. அதனால்தானோ என்னவோ அவர் இந்தக் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டார். பெண்கள் வேலைக்குச் செல்வது முதல் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வரை அவள் எல்லா  விதங்களிலும் மாடர்னாகவே இருந்தார் எனலாம். இறைவனின் கணக்கு என்றும் தவறாகாது.

தொடரும்....




"


Leave a comment


Comments


Related Post