இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 22-06-2024

Total Views: 5568

     சிறு வயதிலேயே தன் அத்தான் இடம் பெண்கள் பேசினால்  கயல்விழிக்கு பிடிக்காது. இப்போதோ சிவந்த நிறத்தில் அழகான பெண் அவளின் அத்தானை அணைத்ததும் இல்லாமல் சிரித்து சிரித்து பேசியதை கண்டவள் அதிர்ந்து நின்றாள். 

     அப்பெண் பேசியதற்கு இவளின் அத்தானும் அல்லவா சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறான்.  இன்று தான் இருவரும் அறிமுகமாகியது போல் இல்லை இதற்கு முன்பே அறிமுகம் ஆகியது போல் தான் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

      அப்பெண்  பிளாக் கலர் ஜீன்ஸ் பேண்ட் கிரீம் கலர் சட்டை அணிந்து அழகாக வெட்டி விடப்பட்ட முடியை  போனிடைல் போட்டுயிருந்தாள்.  காதில் சிறிய ஒற்றை வெள்ளை கல் கம்பல் அணிந்து ஒரு கையில் வாட்ச் மற்றொரு கையில் மெல்லிய பிரேஸ்லெட்  விரலில் மெல்லிய ரிங் அணிந்து பார்க்க வடமாநில பெண் போல் இருந்தாள்.

     சில அடிகள் தூரத்தில் நின்று பேசியது அவளின் காதுக்குள் கேட்கவில்லை என்றாலும் அவர்களின் சிரிப்பு  அவளுக்கு கோபத்தை கொடுத்தது.  எட்டு வயது சிறுமியாக இருந்தபோது தன் அத்தானிடம் பேசியவர்களை அடித்தவளுக்கு இப்போது குமரியாக நிற்கும் போது ஓடிச்சென்று அப்பெண்ணை அடிக்க கையும் மனமும் பரபரத்தன.

    ஆனால் அவளின் அத்தானே திரும்ப திரும்ப நான் உனக்கு அத்தான் இல்லை என்று சொல்லும் போது எந்த உரிமையில் அப்பெண்ணிடம் சண்டை போட முடியும்.   கண்களில் உருண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டே வேகமாக அவர்களை கடந்து உள்ளே சென்றாள்.

     அவள் சென்ற பிறகே பேசிக்கொண்டு இருந்தவர்கள் பிரிந்து அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

     முதல் நாள் என்பதால் எந்த வேலையும் இல்லை.  ஏற்கனவே அவர்களின் படிப்புக்கு ஏற்ற பணிகளை பிரித்து இருந்தனர்.  ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் அவர்களிடம் பேசி என்ன பணி அவர்களின் குழுவுக்கு ஒதுக்கப்பட்டது என்று விளக்கி பயிற்சிகள் சில நாட்கள் நடைபெற்ற பிறகே இவர்கள் பணியை தொடங்கவேண்டும்.

   மும்பையில் உள்ள கம்பெனியின் கிளை என்பதால் அங்கு இருந்து சிலரும் இங்கு மாற்றலாகி வந்து இருந்தனர்.  கம்பெனி தொடங்கும் முன்பே பல பெரிய ப்ராஜெக்ட் இவர்களின் கைக்கு வந்து இருந்தது.    ஏனெனில் மும்பையில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தின் கிளை என்பது மட்டும் அல்லாமல் இந்த கம்பெனியின் முதலாளிகளில் ஒருவனான கே கே வின் திறமைக்கே நிறைய ப்ராஜெக்ட் கிடைத்திருந்தன.

   அதனால் சிறு கம்பெனியாக தொடங்காமல் ஆரம்பத்திலேயே  கிட்டத்தட்ட ஐநூறு பேர்கள் பணியில் அமர்த்தி இருந்தனர்.  அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  மீட்டிங் ஹாலில் அமர்ந்து அருகில் அமர்ந்து இருந்தவர்களிடம் பேசி தங்களை அறிமுகம் செய்து கொண்டு இருந்தனர்.

    கயல்விழியுடன் படித்த சிலரும் அங்கு இருந்ததால் அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.  அமிர்தவள்ளி, சரவணன் வேறு வேறு பிரிவுகளில் இருந்தனர்.

     முரளி நேராக சென்றது கே கே என்று பெயர்  பொறிக்கப்பட்ட அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான். 

    அங்கே மிக கம்பீரமாக இருவர் அமர்ந்து இருந்தனர் அவர்களை பார்த்து குட்மார்னிங் சார் என்றான் முரளி. 

    அவனை முறைத்த கே கே லேட்டா வந்ததும் இல்லாமல் குட்மார்னிங் சாராம் என்று கையில் இருந்த போனாவை தூக்கி அவன் மீது போட்டான் அதை கேட்ச் என்று பிடித்தவன் அங்கிருந்த சேரில் சென்று அமர்ந்தான். 

     "ஏன்டா வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது இவ்வளவு நேரம் என்னடா பண்ணிட்டு இருந்த?..." என்று கே கே அருகில் மற்றொரு இருக்கையில் அமர்ந்து இருந்த ஹரிஷான்த் கேட்டான்.  ஹரிஷான்த் AH சாப்ட்வேர் சொல்யூஷன் கம்பெனி உரிமையாளரின் இரண்டாவது மகன் மற்றும் கே கே, முரளியின் கல்லூரி நண்பன் .  

    நண்பனின் கேள்விக்கு சிரித்து மழுப்பினான் முரளி. 

    அதற்குள் மீண்டும் கதவு தட்டிவிட்டு வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்  ஐஸ்வர்யா. 

     அவளை கண்டதும் நண்பர்கள் இருவரும் நகைக்க முரளியே முகம் சிவந்து அமர்ந்திருந்தான். 

     அதைக்கண்ட ஐஸ்வர்யா இடுப்பில் கை வைத்து  "என்ன சிரிப்பு?..." என்றால் அதிகாரமாக 

     ஹரிஷான்த், கே கே இருவரும் மேலும் சிரித்தனர். 

     ஹரிஷான்த் அருகில் வந்தவள்  "இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா?... நீங்க சிரிக்கிறீங்க அவன் வெட்கப்பட்டு உட்கார்ந்து இருக்கான்" என்றாள் சினுங்களாக 

      "உனக்கு வராத வெட்கம் அவனுக்கு வருது என்ன பண்ணுறது" என்றான் கே கே. 

      இன்னும் சினுங்களாக "அண்ணா" என்றாள். 

      "சரி சரி இவ்வளவு நேரம் என்னடா பண்ணிட்டு இருந்த என்று கேட்டேன் அதுக்கு தான் இப்படி உட்கார்ந்து இருக்கான்" என்றான் ஹரிஷான்த். 

     
      இருவரையும் முறைத்தவள் முரளியின் கை பிடித்து " எழுந்து வா முரளி மீட்டிங் ஹாலில் எல்லாரும் வந்துட்டாங்க இவங்க ரெண்டு பேருக்கும் தான் வேலைவெட்டி இல்லை நம்பளுக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள். 

     " அடிப்பாவி நாங்க இந்த கம்பெனியின் ஓனர்ஸ் எங்களுக்கு வேலைவெட்டி இல்லையா" என்றான் கே கே. 

      "ஆமாம் அதான் கம்பெனியோட எம்டியை உட்காரவைத்து  வெட்டியா பேசிட்டு இருக்கிங்க" என்றாள் ஐஸ்வர்யா. 

    " அவன் இந்த கம்பெனியின் எம்டி என்று உனக்கு நியாபகம் இருக்கா?..  இருந்து இருந்தா உன்னை விட நான்கு வயது பெரியவனை கம்பெனியின் எம்டியை இப்படி தரதரவென்று இழுத்துட்டு போவியா?... இல்லை பெயர் சொல்லி தான் அழைப்பியா?... "என்றான் ஹரிஷான்த். 

      அவளே முரளியை பார்த்து   "உன்னை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதா?... என்று கேள்வி எழுப்பினாள். 

      முரளியே  "என் பேர் சொல்லி கூப்பிட உனக்கு முழு உரிமையும் இருக்கு ரியா" என்றான் புன்னகையுடன் முரளி. 

   அதை கேட்ட நண்பர்கள் "அடப்பாவி இவனுக்கு போய் சப்போர்ட் பண்ண நம்பளைத்தான் அடித்துக்கனும்" என்றான் ஹரிஷான்த். 

      ஐஸ்வர்யா  "இப்ப என்ன சொல்லுறீங்க" என்றாள் ஐஸ்வர்யா. 

      கையெடுத்து கும்பிட்டு  "அம்மா தாயே நீ எப்படி வேணா கூப்பிட்டுக்க" என்று பேசிக்கொண்டு இருந்தபோதே கே கே போன் ஒலித்தது. 

     எடுத்து பார்த்தவன் அவன் இவ்வளவு நேரம் காத்திருந்த முக்கியமான வெளிநாட்டு அழைப்பு வந்து இருந்தது.   

    மற்றவர்களுக்கு ஜாடை காட்ட அவன் அருகில் இருந்த இருக்கையில் வரிசையாக அமர்ந்தனர்.  ஐஸ்வர்யா வேகமாக அங்கிருந்த தன்  ஐ பேட் எடுத்து ஆன் செய்து வைத்துக்கொள்ள மூவரும் ஓகே என்றதும் தன் போனை ஆன் செய்ய எதிரில் பெரிய திரையில் வீடுயோ காலில் சில வெளிநாட்டவர்கள் "ஹாய்" என்றன. 

     இவர்களும் "ஹாய்" சொல்லி தங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது இருந்தனர்.   ஐஸ்வர்யா பேசும் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்தாள்.  மற்ற மூவரும் வெளிநாட்டவர் உடன் கலந்துரையாடல் செய்து கொண்டிருந்தனர். 

     ஒரு மணி நேரம் நடந்த உரையாடலில் வெளிநாட்டு கம்பெனி இவர்களுக்கு ப்ராஜெக்ட் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.  மீட்டிங் முடிந்ததும் அதுவரை அமைதியாக வேலை பார்த்தவர்கள் நால்வரும் இப்போது  "ஓஓஹே..." என்று ஒன்றாக கூச்சலிட்டு குதுகலித்தனர். 

    இந்த ப்ராஜெக்ட் முடித்து கொடுத்தால் லாபமே பலகோடி இவர்களுக்கு கிடைக்கும். அந்த சந்தோஷத்தை சிறிது நேரம் கொண்டாடியவர்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் இருப்பதால்  தங்கள் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டனர். 

    ஐஸ்வர்யா ஹரிஷான்த்தின் உடன்பிறவா தங்கை சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவளை ஹரிஷான்த் தாய் தன் மகளாக வளர்த்தார்.  கல்லூரியில் நண்பர்களாகி மூவரும் இன்று தொழில் வரை இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  தன் அண்ணனின் நண்பர்கள் என்ற முறையில் அறிமுமாகியவர்கள் பின்னாளில் நெருக்கமாகி போயினர் கே கே வை அண்ணாக ஏற்றவளால் முரளியை அப்படி நினைக்கமுடியவில்லை நேரடியாக அனைவரின் முன்பே தன் காதலை முரளியிடம் கூறிவிட்டாள் ஐஸ்வர்யா.  ஆரம்பத்தில் தயங்கியவன் பின் முரளியும் அவளின் காதலை ஏற்றுயிருந்தான். 

     அமைதியான முரளிக்கு அடாவடியான ஐஸ்வர்யாவும் மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர்.  

     சிறிது நேரத்தில் இயல்புக்கு வந்தவர்கள் அடுத்து செய்யவேண்டிய பணிகளை பற்றி பேசி முடித்து அதன்படி ஹரிஷான்த் முரளி ஐஸ்வர்யா மூவரும் மீட்டிங் ஹாலுக்கு சென்றனர். 

    ஐஸ்வர்யா கே கே வின் பி ஏ வாக நியமிக்கபட்டு இருந்தாள்.  கே கே  வுக்கு வேறு வேலை இருப்பதால் ஐஸ்வர்யா மீட்டிங் ஹாலுக்கு சென்று  அங்கு பேசுவதை குறிப்பெடுக்க சென்றாள்.  

     மாலை வரை வேலை தொடர்ச்சியாக இருந்தது அனைத்து முடித்து தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தான் முரளி. 

   முரளி எம். டி என்று பெயர் பொறிக்கப்பட்ட அறைக்குள் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் அந்த அறையை சுற்றி பார்த்தான்.  அனைத்து வசதிகளும் நிறைந்த தனியறை  இதுபோன்ற ஒரு கம்பெனியில் டீம் மேனேஜராக பணியாற்றி மாதச்சம்பளம் வாங்க வேண்டியனை ஒரு கம்பெனியின் எம். டியாக அமரவைத்து இருப்பதற்கு காரணம் நட்பு அவனுக்கு கிடைத்த நண்பர்கள் தான் இந்த உயரத்திற்கு அவன் வரக்காரணம் முரளியின் நினைவுகள் பத்து ஆண்டுகளுக்கு பின்னேக்கி சென்றனர். 

    கடைசி பரிட்சை முடித்து வந்தவர்கள் பஸ்சில் ஏற்பட்ட பிரச்சனையில் வீடு வர தாமதமாகி இருந்தது.  அவனின் தாயும் தங்கை மட்டுமே வீட்டில் இருந்தனர். தந்தை வெளியூர் சென்று இருந்தார். 

    தாமதத்திற்கு காரணம் கேட்ட தாயிடம் அனைத்தும் கூறி சாப்பிட்டு விட்டு தூங்கியிருந்தான்.  காலையில் அன்பு வந்து கார்த்திகேயனை காணவில்லை என்றபோதுதான் விசயம் அறிந்து அவனுடன் சென்றபோது எதிரில் இளவரசனும் சரவணனும் வந்து இவர்களிடம் விசாரித்தனர். 

   இவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என்றதும் நால்வரும் கார்த்திகேயனை தேடினர்.  எங்கும் கிடைக்கவில்லை  நண்பனின் மீது கோபம் வந்திருந்தது இப்படி தான் அனைத்தும் விட்டு ஓடுவதா நண்பர்கள் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம்  என்று வாய்விட்டே திட்டியிருந்தான். 

     அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் கிடைக்காமல் போகவே கார்த்திகேயன் எங்கு சென்று எப்படி இருக்கிறானே என்ற கவலையே முரளி, அன்புவை வாட்டியது.  பதிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது பள்ளியில் கார்த்திகேயன் முதல் மதிப்பெண்ணும் முரளி இரண்டாவதும் அன்பு ஒரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தான்.  அதை கொண்டாடக்கூட அவர்களால் முடியவில்லை. 

     அடுத்த சில நாட்களில் கல்லூரி சேர்க்கைக்கு தந்தையுடன் சென்னை சென்று தந்தையின் நண்பரின் மகன் வக்கில் குமரன் வீட்டிற்கு சென்றபோது தான் கே கே வை கண்டான்.   அவனும்  பதிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து இருந்ததால் மும்பையில் மிகப்பெரிய கல்லூரியில் தன் படிக்கப்போவதாகவும் முரளியையும் அங்கேயே சேர்க்குமாறு சண்முகத்திடம் கூறினான். 

    அவரே அவ்வளவு பெரிய கல்லூரி என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் தயங்கினார்.  சென்னை கல்லூரி என்றால் செலவு குறைவு அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக கல்லூரி சீட் கிடைக்கும் மற்ற செலவுகள் மட்டுமே இருக்கும் என்று நினைத்தவரின் எண்ணத்தை அறிந்த கே கே அந்த கல்லூரியில் படித்தால் கிடைக்கும் வாய்ப்புகளை பற்றியும் முரளின் திறமையை நிரூபிக்க முடியும் என்று பலவாறாக கூறி செலவுகளை பற்றி கவலை வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி மும்பை கல்லூரியில்  கே கே வும் முரளியும் சேர்ந்தனர். 



Leave a comment


Comments


Related Post