இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -64 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-06-2024

Total Views: 5108

துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

போகும் போது சாப்பிட்டு போலாம் என்றதுக்கு பெரியவர்கள் யாரும் வேண்டாம் என்றதால் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டனர்.

ராஜி தோசையை ஊற்றி நிலக்கடலை சட்டினி அரைத்தார்.

அனைவருக்கும் ஊற்றினாலும் நிலா, “எனக்கு யாரும் தோசை ஊத்த வேணா நானே ஊத்திக்கறேன்.” என்று சுவரைப் பார்த்து சொன்னவள், அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவளுக்காக தோசையை ஊற்றி மிளாகாய் பொடி வைத்து சாப்பிட்டாள்.

இரவு மணி பத்தை நெருங்க சாப்பிட்டு முடித்தவள் மாடிக்குச் சென்றாள்.

“அதென்ன கல்யாணம் நிச்சியமான பொண்ணு மேலே தனியா படுக்கறது.” என ராஜி அவர் பாட்டுக்கு வசைப்பாடிக் கொண்டிருக்க,

அவர்கள் சொன்னதைக் கேட்ட காலம் எல்லாம் மாலை ஏறி பல நாள் ஆகிறது. அவர் பாட்டுக்கு கத்தட்டும் தான் பாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டியது தான் என மேலே சென்று படியின் கதவை அடைத்து விட்டாள்.

எப்படியும் இந்நேரத்திற்கு நந்தன் வந்திருப்பான் அவன் இருப்பதை யாரும் பார்த்து விடக்கூடாது என மாடிக் கதவை அடைத்துவிட்டாள்.

“மணி என்ன?”

“பத்து.” கொஞ்சம் தைரியமாகவே குரல் வந்தது.

“பத்து பத்து.”

'பத்து நிமிஷம் தானே லேட் அதுக்குக் கூட கேள்வி கேட்டு கொல்லுவான்.' "வரும் போது அம்மா பிடிச்சிக்கிட்டாங்க.”

மாடி சுவரை பிடித்து வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தன், நிலாவைப் பார்த்து திரும்பி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.

அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிர் பரவியது.

“பயம் விட்டுப் போச்சுப் போல.. நான் அவன்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லியும் பேசற, என் முன்னாலையே அவன் கையைப் பிடிச்சிட்டுப் போற.” கரகரப்பு அவன் குரல் முழுவதும்.

கோவத்தை அடக்கும் போது தான் இப்படியான குரல் வரும் என அவனை அறிந்து வைத்திருந்தவளுக்கு ஆரம்பக்கட்ட நடுக்கமான விரல் நடுக்கம் ஆரம்பித்து விட்டது.

“கேட்டதுக்கு பதில் வரல.”

“அ..ந்..த பொ..ண்..ணு கேட்ட கோவத்துல.”

“நானும் உன்னைய காயப்படுத்தக் கூடாதுன்னு தான் நினைக்கறேன் விட மாட்டிங்கறியே” என்று ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைக்க, அந்த ஒவ்வொரு அடியும் நிலாவின் நெஞ்சில் மத்தளம் கொட்டுவது போல் இருந்தது.

“இதுக்கு மேல பேச மாட்டேன் ப்ளீஸ்”

“அது நாளைக்கு பார்த்துக்கலாம் இப்போ பேசுனதுக்கு என்ன தண்டனைக் கொடுக்கறது, சொல்லிட்டே இருந்தா நான் செய்ய மாட்டேன்னு தைரியம் வந்துடும் அப்படிலாம் விட முடியாது. நாளைக்கு சின்னதா சாம்பிள் பாரு அப்போதான் இந்த நந்தன் யாருன்னு தெரியும்.” என்றான்.

“ப்ளீஸ் ப்ளீஸ் நான் அவன் பக்கம் கூடப் போக மாட்டேன் இப்போல இருந்து அவன் யாருன்னே எனக்கு தெரியாது ப்ளீஸ் அவனை எதும் பண்ணிடாதீங்க.”

“நான் யாருடி.”

'யாருன்னா என்ன சொல்லணுமோ இந்த வேதாளத்துகிட்ட தெரியலையே,' "அது நந்து..”

“பெரிய பொந்து. என் பக்கத்துல யார் வந்தாலும் உனக்கு கவலையில்ல..” என கேக்க வாய் எடுத்தவன் அப்படியே விட்டுவிட்டான்.

“நான் சொன்னதை செய்யக்கூடாதுன்னா மாமுல் குடு..”

“என்ன பண்ணனும்?”

“இங்க நீயே கிஸ் பண்ணனும் அதும் டைட்டா ஹக் பண்ணி..” என அவன் உதட்டைக் காட்டினான்.

“ஹா ஹும்ஹும்.”

“அப்போ பனிஷ்மென்ட் கண்டிப்பா உண்டு. உனக்கு இல்லை அவனுக்கு.”

“இல்ல இல்ல பண்றேன்.”

“ம்ம் பண்ணு” என்றவன் கையைக் கட்டிக் கொண்டு அப்படியே நின்றான்.

ஒரு சிற்பத்தை செதுக்கும் போதுக் கூட சிற்பி இந்த அளவிற்கு பார்த்து பார்த்து செதுக்கிருக்க மாட்டான். கட்டுமஸ்தான படிக்கட்டு தேகம். அவன் ஒருக் கையில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் அந்த அளவிற்கு முறுக்கேறிய தேகம் வேலைக்காக அவன் வெட்டிய முடிக் கூட தனி கவிதை படித்தது.

சரஸ்வதி என்ற பெண் போட்டிக்கு வரும் போது தான் நிலா என்ற சிலைக்கு உணர்வுகள் உயிர்த்தெழும்பியது.

இதற்கு முன்பும் அவனை ரசித்திருக்கிறாள் தான் ஆனால் இன்று புதிதாக ரசிக்கத் தோன்றியது. அவனைக் கண்டாலே எழும் பயத்தை மீறி உணர்வுகள் வயிற்றில் பட்டாம்பூச்சியாக பறந்தன.

ஒவ்வொரு அடியாக அவனை நெருங்கியவள், அவனுடைய உயரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக கால் கட்டை விரலை நிலத்தில் அழுத்தி மேலே எழும்பி அவன் உதட்டை பட்டும் படாமலும் உரசி சென்றாள்.

அவள் செய்யும் சேட்டைகளை கண் மூடி கிறக்கித்துக் கொண்டிருந்தான் நந்தன்.

கன்னத்திலும் தன் இதழை பட்டும் படாமல் வைத்து எடுத்தவள் தன் தைரியத்தை எல்லாம் ஒன்றாக திரட்டி, “பிராஸ்டிடியூட் மாதிரி நடந்து கிட்டேனாங்க.” என்றாள்.

அவள் கேள்வியில் பட்டென்று கண்களை திறந்தவனின் விழிகள் நெருப்பாக எரிந்தது.

“என்னடி சொன்ன?” என அவளை தள்ளியவனின் கை இடியென நிலாவின் கன்னத்தில் இறங்கியது.

பல வருடங்களுக்கு பிறகு நந்தன் அடிக்கிறான் அன்று கன்னம் கன்னமாக அறைந்ததுக்காக அவனை விட்டு ஊரை விட்டும் சென்றாள். இன்று அவனின் அடியை வாங்கிக் கொண்டு கண்ணீர் வழிய பார்த்தாள்.

“கிஸ் பண்ணா பிராஸ்டிடியூட் ஆகிடுவாங்களா.. உன்னைய நான் வேற எதுவும் பண்ண சொல்லி கம்பெல் பண்ணுனனா.. சொல்லுடி.”

“உங்களைய பார்த்தாலே அந்த கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்னு சொல்லும் போது கிஸ் பண்ணா சொல்ல மாட்டாங்களா?” சண்டைக் கோழியாக சிலிர்த்து நின்றாள்.

முதன் முறையாக நந்தனின் முன்பு அவள் குரல் உயர்ந்திருந்தது.

அவளை துளைக்கும் பார்வையில் கிழித்தெடுத்தவன், ”யாருடி அப்படி சொன்னா..? சொல்லுடி யார் சொன்னா?” கீழே கிடந்தவளை உண்டியல் போல் உளுக்கி எடுத்துவிட்டான்.

அவனின் ஆக்ரோசத்தில் நிலா அரண்டுவிட்டாள். ஒரு வேகத்தில் சரஸ்வதி சொன்னதைக் கேட்டு விட்டாள். அதனால் ஏற்படும் பாதிப்பை பற்றி இப்போது பயம் வந்தது.

“யாரும் சொல்லல நான் தான்.." என்றவளின் இன்னொரு கன்னமும் பழுத்தது.

“நானும் அடிக்கக் கூடாதுன்னு பார்க்கறேன் ஒழுங்கா சொல்லிடு இல்ல சாவடிச்சிடுவேன்.”

இனி ஒரு அடி அடித்தாலும் கன்னம் தனியாக பியிந்து அவன் கையோடு வந்தாலும் வந்துவிடும் என எண்ணியவள். “உங்களோட வந்தாங்கள...”

“சரஸ்வதி.” கற்பூர புத்திக்காரன் பக்கென்று பிடித்துக் கொண்டான்.

“ம்ம்”

“என்ன சொன்னா... சொல்லு?” என உறும.

“உங்க பக்கம் என்னோட பார்வை போய்ச்சினாலே விபசாரக் கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்னு..”

“அதுக்கு மேடம் என்ன சொன்னிங்க.?”

“சரின்னு”

“ஓ சரின்னு சொல்லிருக்கீங்க. இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் நியாபகம் இருக்கா மேடம்க்கு.?”

“ம்ம்” என ஆட்டிய தலையை திருகிப் போடலாம் போல் எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன், “இப்போ கேட்டதும் சரின்னு சொன்னிங்க கல்யாணத்துக்கு அப்பறம் கேட்டாலும் சரின்னு தான் சொல்லுவீங்க..?” என வார்த்தை ஒவ்வொன்றும் அவ்வளவு அழுத்தமாக வந்தது.

“நீங்க திட்டம் போட்டு தானே கல்யாணம் பண்ணறீங்க?”

“அதனால கேட்டா கொடுத்துருவ.." என்றவனுக்கு உடல் முழுவதும் பற்றி எரிவது போல் இருந்தது. திண்டில் கையை ஓங்கி ஓங்கி அடித்தான்.

“ஐயோஒஒஒஒஒ...!!!! என்ன பண்றிங்க..? ப்ளீஸ் அடிச்சிக்காதீங்க.” என அவன் கையைப் பிடிக்க அவளிடம் இருந்து கையை உதறியவன்.

“உன்னையலாம் திருத்தவே முடியாதுடி. பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருட்டிருச்சின்னு நினைக்குமா.. கண்ணைத் தொறந்து சுத்தி நடக்கறதைப் பாரு..” என அவளை இழுத்து இறுக அணைத்தவன், வெறிக் கொண்டு அவள் இதழை தீண்டினான்.

அவள் நினைத்ததுப் போல் நந்தனின் கோவத்தின் வடிகால் அவள் அல்லவா முத்தம் கொடுத்தால் சுகமாக இருக்கும் என யார் கூறியது இதழ்கள் தீயாக எரிந்தது. அவனின் கோவம் முழுவதையும் நிலாவின் இதழில் இறக்கி வைத்திருந்தான்.

“போ“ என்று அவனை விலக்க முயலாமல் அவன் கொடுத்த காயத்தை ஏற்று நின்றாள் மங்கையவள்.



Leave a comment


Comments


Related Post