இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -63 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-06-2024

Total Views: 5529

வளவனை எதிர்த்து பேசியதால் தாய் பேசவில்லை. அண்ணன் சொன்ன வார்த்தையை மீறி நந்தனை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் சொன்னதில் வளவன், யுகி இருவருமே பேசவில்லை. வளவனை மீறி பேசினால் தங்கள் வாழ்க்கைக்கு பிரச்சனை வந்துவிடுமோ என ஷாலினியும் பேசுவதில்லை. நந்தன் ஒன்று தான் ஆறுதல் என அவன் பக்கம் போக மனம் துடிக்க அவன் வீசும் விஷ வார்த்தைகளை தாங்க முடியாமல் அவன் பக்கமே போகவே பயந்தாள்.

இப்படி யாருமே பேசாமல் அவளை ஒதுக்கி வைக்கும் போது இதை விட பெரிய வலியை மரணத்தால் கூட கொடுக்க முடியாது.

‘விடு நிலா இதுவும் கடந்து போகும்.. பார்த்துக்கலாம்’ என அவள் தோளில் அவளே தட்டிக் கொண்டு அங்கிருந்து மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போனாள்.

அங்கு சரஸ்வதி தான் கல்யாணப் பெண் போல வளைச்சி வளைச்சி துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆன்ட்டி இந்த சேலை உங்களுக்கு நல்லா இருக்கும் ட்ரைப் பண்ணிப்பாருங்க.” என மணிமேகலையிடம் ஒன்றை நீட்ட.. அது பார்க்க அழகாக இருக்கவும் மணிமேகலை மறுப்பே சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

“நிலாக்கு டிரஸ் எடுக்கணுமே.”

“அந்தப் பொண்ணு பேர் நிலாவா ஆன்ட்டி.?”

“ம்ம் ஆமாம்மா..”

“நான் நல்லா செலக்ட் பண்ணுவேன் பண்ணி தரட்டுமா நிலா?” 

“இல்ல வேண்டா மேம்.. எனக்கு டிரஸ் ஆடர் பண்ணிட்டாங்க, நீங்க வேணும்னா ஆயாவுக்கு எடுங்க அவங்களுக்கு நீங்க எடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்.” என சொல்லியவள்.

எப்படியும் திட்டு வாங்க தானே போகிறோம் இதற்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தவள். “யுகி உனக்கு டிரஸ் எடுக்கணும்ன்னு சொன்னில வா போய் பார்க்கலாம்.” என அவன் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அனைவரும் தங்கள் கண் பார்வையில் இருந்து மறையும் வரையிலும் நிலாவின் கையை யுகி தட்டி விடவில்லை. மறைந்ததும் வேகமாக தட்டி விட்டவன்.

“என்னைய தொடர அருகதைக் கூட உனக்கு இல்ல, என்னைய பேச வைக்காத. உன்பக்கம் திரும்பாதவன் தான் வேணும்னு போய் நிற்கறீல என் மூஞ்சுலையே முழிக்காம போய்டு இல்லனா மானக்கேடா பேசிடுவேன். உன்னைய தூக்கி வளர்த்த அண்ணன் வேண்டா இவ்வளவு நாள் உயிரா இருந்த நான் வேண்டா, உன்னைய தினம் தினம் அழுக வெச்சவன் தான் வேணும்ன்னா இந்த கேடுகட்டத் தனத்துக்காக என்கிட்ட வந்து நிற்காத.” என கோவத்தில் நந்தனின் தம்பி என நிரூபித்தான் யுகி.

அவன் பேச பேச நிலாவிற்கு கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது. அதை யுகிக்கு முன் காட்டி விடக் கூடாது என உள் இழுத்துக் கொண்டவள்.

“ஓ சாருக்கு அவரோட கையை பிடிச்சதும், அப்படியே வந்து பேசிடுவேன்னு நினைப்போ.. போடா இனி நீயே வந்து பேசுனாலும் நான் பேச மாட்டேன். எனக்கு யாரும் வேண்டா.. கஷ்டத்துல கூட இருக்கவீங்க தான் நல்ல உறவுன்னு சொல்லுவாங்க. நீங்களா என்மேல வெச்சிருந்த பாசத்துக்கு அளவுகோலே இல்லைனு எத்தனையோ நாள் நினைச்சி சந்தோசப்பட்டுருக்கேன்.

ரொம்ப சந்தோசப்படாத எல்லாமே ஒரு அளவு தான்னு நிரூபிச்சிட்டிங்க.. உங்க பேச்சை மீறி அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன், இது தானே உங்க பிரச்சனை. உண்மையான அன்பு, பாசம் இருந்திருந்தா உன் உயிரை எடுத்திருந்தாக் கூட உனக்கு கோவம் வந்திருக்காது. போதும் எது உண்மை எது பொய்ன்னு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப சந்தோஷம். இனி நீயா பேசுனாலும் நான் பேச மாட்டேன் உன் கையை பிடிச்சதுக்கு மன்னிச்சிரு. உன்னை தொட்டுக் கலங்கப் படுத்திட்டேன்னு நினைச்சின்னா கையில பெனாயில் ஊத்தி கழுவிக்கோ இல்லனா ஆசிட் வாங்கி நானே ஊத்திடுவேன்.” என்று கத்தியவள் தன்னை சமன் செய்ய குளியலறைக்குள் ஓடி விட்டாள்.

பலப் பெண்களில் அழுகையை பார்ப்பது குளியலறையின் சுவர்கள் தானே.

குளியலறையில் இருந்த அனைத்து குழாய்களையும் திறந்து விட்டவள்.. கதறி அழுதாள்.

யுகியின் கைப் பிடித்து நடைப் பழகிய காலங்கள் உண்டு, அவள் அழுதால் அவனுக்கு வலிக்கும், அவள் கோவம் தணிய அவன் அடிவாங்கி நின்ற காலங்கள் அதிகம். இப்படி அவளுக்காக அவன் செய்தது அதிகம். இன்று அவன் கையைப் பிடிக்கும் அருகதையற்றவளாக நிற்கிறாள். நினைக்கும் போதே நெஞ்சி வெடித்து விடும் போல் வலித்தது.

நிலா போனதும் யுகி அந்த இடத்தில்லையே ஆணி அடித்ததுப் போல் நின்று விட்டான்.

உண்மை தானே அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை தானே, தூய அன்பிற்கு ஏது அளவுகோல். நீ கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் நான் கொடுப்பேன் என்பது தானே தூய அன்பு அதில் எந்த எதிர்ப்பும் இருக்காதே. எப்படி அவள் இதை தான் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தான். நந்தனைப் பார்த்தாலே பயந்து தன் பின்னால் ஒளிபவள். அவனை திருமணம் செய்துக் கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறாள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும் எப்படி யோசிக்க தவறினான்.  சந்தோசக்காலத்தில் கூட இருந்து விட்டு இப்போது அவள் கஷ்டப்படும் போது விட்டு வந்து விட்டானே.

நிலா அவளுக்கு நடக்கும் அனைத்தையும் யுகியிடம் பகிர்ந்துக் கொள்வாள் நந்தனின் விஷயத்தை தவிர்த்து.

ஏற்கனவே அவளால் அண்ணன் தம்பி இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. இதில் நந்தன் செய்யும் அழிச்சாட்டியங்களை சொல்லி மேலும் விரிசலை ஏற்படுத்தக் கூடாது என நினைத்து தான் சொல்லாமல் விட்டுவிடுவாள். இன்று அதுவே இவர்களின் உறவிலும் விரிசலை ஏற்படுத்திருந்தது.

கலங்கி அவனும் நின்றிருக்க, வளவன் அவனின் தோளைத் தொட்டான்.

“தப்பு பண்ணிட்டேனாடா” 

“விடு.. அவ பண்ணதும் தப்பு தான் அதை மறைக்க பேசிட்டுப் போறா.?”

“இல்லடா அவ என்ன பண்ணிருந்தாலும் நான் விட்டுருக்கக் கூடாதுல.”

“சரிடா நியாஸ்தா உன்னைய மாதிரி என்னால இருக்க முடியாது. நான் இப்படியே இருந்துக்கறேன்.”

“வளவா..”

“உனக்கு என்னய விட அவதான் முக்கியம்ன்னு தெரியும், உன்னால அவகிட்ட பேசாம இருக்க முடியாது. பேசறதுன்னா பேசிக்கோ.”

“நான் பேசுனாலும் அவ பேசணும்ல, தப்பு பண்ணிட்டேன்டா..” என்று கண் கலங்கி நிற்க.. தன்னை சமன் செய்துக் கொண்டு வெளியே வந்த நிலா அவர்களை திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விட்டாள்.

இனி நிலாவின் மன்னிப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என பிறந்ததில் இருந்து பார்த்த அவர்களுக்கு தெரியும் அல்லவா.

எதுவும் நடக்காததுப் போல் சென்று மணிமேகலையின் அருகில் நின்றுக் கொண்டாள்.

அனைவருக்கும் துணி எடுக்க இரவு ஆகிவிட்டது.

சரஸ்வதி வீட்டிற்கு கிளம்பும் போது நிலாவிடம் வந்தவள்.

“ஏய் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் அப்படி வா” என்றாள்.

'இவ என்கிட்ட என்ன பேசப் போறா..?' என்ற யோசனையில்லையே நிலா சரஸ்வதியின் பின்னால் சென்றாள்.

“இங்கப் பாரு உன் பேர் என்ன நிலாவோ குல்லாவோ”

“நிலா”

“ம்ம் ஹா அதான், உன் பார்வை இது வரைக்கும் நந்தன் சார் பக்கம் போகல, இதுவே மெயின்டெயின் பண்ணுனா உனக்கு நல்லது இல்லனா வெச்சிருக்கோ..”

“இல்லனா..”

“விபசாரக் கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்.” போலீசாக அனைவரையும் மிரட்டுவது போல் நிலாவையும் மிரட்டினாள்.

“ஓ ஊர்ல எல்லாப் பொண்ணுங்களும் தான் அவங்களப் பார்க்குது. அதுக்குன்னு அவங்க எல்லார் மேலையுமா கேஸ் போடுவீங்க..” 

“ஏய்..???”

“சும்மா சவுண்டு விடாம கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மேடம்.”

“அவங்க பார்த்தாலும் சார் யாரையும் பார்க்க மாட்டாரு.”

“அப்புறம் எதுக்கு என்கிட்ட மட்டும் சொல்றிங்க?”

“ஏனா சார் உன்னை மட்டும் தான் அவரோட பைக்ல கூட்டிட்டு வந்துருக்காரு. இதுவரைக்கும் எவ்வளவு அர்ஜென்ட் இருந்தாலும் சார் எந்த பொண்ணையும் அவர் வண்டியில ஏத்துனதில்ல..”

நிலாவிற்கும், 'அட ஆமால அவன் அப்போவும் சரி இப்போவும் சரி என்னைய மட்டும் தான் அவன் வண்டியில ஏத்திருக்கான் ம்ம் சரியான கேடி போலீஸ்.'

“சரி அவர் என்னைய ஏத்துனதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“அது உனக்கு தேவையில்லாதது.”

“அப்போ நான் அவரைப் பார்க்கறதும் உங்களுக்கு தேவையில்லாதது தானே. போலீஸ்னா யார் யாரைப் பார்க்கிறாங்கன்னுலாமா பார்ப்பீங்க.”

“ஏய் நீ ரொம்ப பேசற பார்க்க பிள்ள பூச்சி மாதிரி இருந்துட்டு பேசற பேச்சுல பேட்டை ரவுடி மாதிரி இருக்கு.”

“காரணம் சொன்னா பார்க்கறதா வேண்டாமான்னு யோசிப்பேன்.”

“நான் அவரை சின்சியீரா ஆறு மாசமா லவ் பண்றேன்.”

“ஓ. சரி ட்ரை பண்றேன்.”

“ட்ரை பண்ற வேலையிலா வேண்டா.. அவரைப் பார்க்கக் கூடாது அவ்வளவு தான்..”

“உங்க லவ்வை சொல்லிட்டீங்களா?”

“இன்னும் இல்ல”

“சீக்கிரம் சொல்லிடுங்க உங்க சார் அதுக்குள்ள வேற யாரையாவது புடிச்சிடப் போறாரு.” என்றவள், “நகருங்க பில் போட்டுட்டாங்க போகணும்.” என்று சரஸ்வதியை நகர்த்திக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

சரஸ்வதி காதலிக்கிறேன் என்றதும் நிலாவின் மனதில் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது. “இவன் ஊருக்கு தான் வியாக்கியானம் பேசுவான் இவன் எதையும் பாலோ பண்ண மாட்டான், வரட்டும் எப்படியும் நைட் வருவான்ல அவன் பேசும்போது நானும் பேசி விட்டறேன், கண்டவளா வந்து விபசாரக் கேஸ்ல தூக்கி உள்ளேப் போடுவேன்னு மிரட்டுறாளுங்க. என்னைய பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா இல்லை போற வரவீங்க திட்டிக்கலாம் மிரட்டிக்கலாம்ன்னு போர்ட் வெச்சிருக்காங்களா?” என பொசு பொசுவென நின்றாள்.



Leave a comment


Comments


Related Post