இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 23-06-2024

Total Views: 2502

பாகம்-

 பாஸ்கர்  பேசுவது அனைத்தையும் சிரித்த முகமாகவே கேட்டுக் கொண்டிருந்தார் மீனாட்சி . இருந்தாலும் மகனுக்கும் அவன் மனைவிக்கும் இருக்கும்  உறவைப் பற்றி அவனிடம் பேச அவருக்குத் தயக்கமாக இருந்தது. 
அவரும் தான் மருமகள்,  
'எப்படா வீட்டிக்கு வருவாள்' என்று காத்து  கிடந்தார். அதிலும் மாலையில்  அவளை சந்தித்தது முதல் தலை கால் புரியவில்லை.
"இனிமே நானா இல்ல,  உன்னோட பிஸினஸா முடிவு பண்ண வேண்டியது நீதான்" சொன்ன கணவனிடம்  மறுவார்த்தை பேச பிடிக்காமல், வருத்தம், ஏமாற்றத்துடன் வெளியேறியவள் பார்த்தது மீனாட்சியைத் தான்.
"நல்லா  இருக்கீங்களா அத்தை ?" சிறு புன்முறுவலுடன் கேட்டாள் .
"நல்லா  இருக்கேன் மா"
" இந்தாங்க அத்தை ,பாம்பே போய் இருந்தேன். இதுல உங்க  எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்தேன்."
"எதுக்கும்மா இதெல்லாம்?"
"ஏன் அத்தை நான் வாங்கித் தரக் கூடாதா ?" ஏக்கமாக கேட்டாள் .
"அதுக்கில்லம்மா. உனக்கெதுக்கு வீண் சிரமம்?"
"எனக்குன்னு வாங்கி கொடுக்க எந்த உறவும் இருந்ததில்லை. இப்பதான் முதல் முறையா என்னோட பேமிலிக்குன்னு  நான் வாங்கறேன். ப்ளீஸ். இதை வாங்கிக்கோங்களேன்"
"எத்தனை அழகாகப்  பேசுகிறாள் ? "
"அதுக்கு என்ன? இனிமே எனக்கு ஒரு கர்சீப்பு வேணுன்னா கூட உனக்கே போன்  பண்ணறேன். யாரும்  இல்லன்னு  சொல்லக் கூடாது. அம்மா வருத்தப்படுவாங்கல்ல? இனிமே உனக்கு குடும்பம் இல்லன்னு நினைக்க கூடாது, எப்பவுமே  நாங்க எல்லாரும் இருக்கோம். புரிஞ்சுதா? இனிமே உனக்கு அடிக்கடி நான் போன் போட்டு தொந்தரவு பண்ணப் போறேன். இது வேணும் அது வேணுன்னு நச்சரிக்கப் போறேன் "
"தாராளமா பண்ணுங்க அத்தை . நீக்க எப்ப கூப்பிட்டாலும் நான் ஓடி   வந்து நிப்பேன்"
"அதுக்கு நீயே எங்க வீட்டுக்கு வந்துடலாம் " சிரித்துக் கொண்டே தான் சொன்னார்.
"அது பத்தி முடிவெடுக்க வேண்டியது உங்க பையன் தான் அத்தை " 
தனக்கு விருப்பம் தான் என்பதை மறைமுகமாகச்  சொல்லி விட்டாளே மனதிற்கு சந்தோஷமாய் இருந்தது. விரைவில் வீட்டிற்கு வர போகும் மருமகள் என மனம் கோட்டை கட்ட ஆரம்பித்தது.
"இந்தாங்க அத்தை . இதுல என்னோட நம்பர் இருக்கு" பையில் இருந்து தனது கார்டை நீட்டினாள்.
அதை  வாங்கி தந்து கைப்  பர்சில் பத்திர படுத்திக்  கொண்டார்  மீனாட்சி.
இது அனைத்தையும் கண்ணாடி வழியாக செந்தில் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால்  எதுவும் சொல்லவில்லை. தானாகவே பெரு மூச்சு வந்தது. அவள் வேண்டுமா வேண்டாமா என்பதில் அவனுக்கே தெளிவில்லையே? இந்தக் குழப்பம் எப்போது தீரும்? யார் தீர்த்து வைப்பார்கள்? தன்  குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது? 
  அவள் வேண்டாம் சரி. ஏன் வேண்டாம் என்று அன்னை கேட்டால் என்ன சொலவது. அவள் சுயமாக தொழில் செய்கிறாள் அதனால் வேண்டாம் என்று சொன்னால் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார். அதே சமயம் தன்னை விட தன்  மனைவி அதிகமாக சம்பாதிக்கும் பெண், சமுதாயத்தில் வேறு அந்தஸ்தில் இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு தனக்கு மனம் விரிந்தது இல்லை என்பதை அவனால் ஒத்துக் கொள்ள முடியாது. அவள் பெண். எனக்கு மனைவி. அவள் எனக்கு கீழ் தான்  இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு மனதில் ஓங்கி இருந்தது.
அது சரி இதை எல்லாம் அவன் ஏன் தனக்கு திருமணம் முடிப்பதற்கு முன்பே சொல்லவில்லை? அப்போது அவனுக்கும் அந்த எண்ணமே இல்லையே.
திருமணம் நின்று வீட்டிற்கு வந்தவுடன்  பெரிய அத்தை  கத்திக் கொண்டிருந்தார். 

 "அது என்ன? மேடையில் இருந்து அப்படியே மாலையை கழட்டி வச்சுட்டுப் போறது? எல்லாம் சம்பாதிக்கறோன்னு திமிரு. கேக்க ஆளு இல்ல. அப்பன் இருந்திருந்தா கட்டுப்பாடா இருந்திருக்கும். நூலை போல சேலை, தாய போல புள்ள. ஆத்தாகாரி என்னத்த சொல்லி வளரத்தாளோ ? இன்னிக்கு இப்டி தற்று தலையா வந்து நிக்குது. எல்லாம் பணக்கார திமிரு. இப்ப இருக்கறதுங்க காலுல சலங்கை இல்லாமலேயே அந்த ஆட்டம் ஆடுதுங்க. இதுக்கு கேக்கவா  வேணும்? ஒருத்தனுக்கு கீழ வேலை பாக்கறதுங்களே இஷ்டத்துக்கு ஆடும். இது  கேக்கவே வேணாம். சொந்தமா தொழில் பண்னுது. தம்பிய விட அதிகமா சம்பாதிக்குது. அப்பறம் ஏன் இருக்காது திமிரு. ஏதோ ஜாதகம் தோஷம்னு கண்ட  தெருவுல போகற  நாய பார்த்து கட்டி வச்சா உங்க ஆத்தா . அதுக்குத்தான் இப்படி ஊரே சிரிக்குது. இதுவே நம்ம மாதவியை கட்டி இருந்தா, இந்நேரத்துக்கு கையில சுண்ட  காசினை பாதாம் பாலோட ரூமுக்கு வந்திருப்பா . அடுத்த கல்யாண நாளைக்கு முன்னாடி அப்பா ஆகி இருப்பான் நம்ம வீட்டு  புள்ள.ரெண்டோ மூணோ பெத்துக்கிட்டு சொன்னதை கேட்டுகிட்டு வீட்டோட இந்திருப்பா . இப்ப பாரு. இந்த அசிங்கத்தை எப்படி மறக்கறது இல்ல எப்படி மறைக்கிறது ?

 அன்றைய இரவில் தனிமையில் கிடந்தவனுக்கு அத்தை சொன்னது அவனுக்கு சரியாகவேப் பட்டது. இதோ இன்றைய இரவிலும் தனியாகத் தான் இருக்கிறான் , நிலவை பார்த்துக் கொண்டு.
 "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ, விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை"
 எஸ் பீ பி சாரை  போல இவனுக்குப் பாட  வராது. ஆனால் அந்த வரிகள் நன்றாகவே பொருந்தும். திருமணத்தில் தவறான முடிவெடுத்துவிட்டோம் என்பது புரிந்தது. அதே சமயம்  அவளை பட்டென அறுத்து விட்டு விடவும் முடியவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான் மறு  மணம் செய்து கொள்ள வேண்டும். தனக்கென்று ஒரு பெண். தன்னையே சுற்றி வருபவள். அவள் இருந்தால்தான் தன்  வாழ்க்கை மாறும். ஆனால்  மறுமணம் இப்போது இல்லை. தங்கைகளை கரை சேர்க்க வேண்டும். கடையின் கடனை அடைக்க வேண்டும். இப்போதைக்கு கடமைகள். பிறகுதான் அனைத்தும். ' நீ என்ன வேணா  யோசி. என்னால முடியாது' கண்கள் மூடிக் கொள்ள, மூளையும் அமைதிப் பட ஆரம்பித்தது.
   அன்று கணவனை பார்த்து விட்டு வந்தவள் முகம் சரி இல்லை. அன்னக்குப் புரிந்து போனது. அவர்களுக்குள் மீண்டும்  ஏதோ பிணக்கு.  மகளின் அசாத்திய மௌனம் மனதைப் பிழிந்தது . 
அவளாக எதுவும் சொல்லவில்லை. இப்போது போய்  கேட்டால்  எதையும் சொல்ல மாட்டாள் . மனம் சற்று அமைதியாகட்டும். ஊஞ்சலில் அமர்ந்து மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டார். கண்களில் ஓரம் வந்த கண்ணீரை அன்னையும் துடைக்கவில்லை. மகளும் துடைக்கவில்லை. மருமகனின் ஏதோ ஒரு வார்த்தை அவள் மனதை புண்படுத்தி இருக்க வேண்டும். புரிந்து கொண்டவள் மெதுவாக தலை கோதிக்  கொண்டிருந்தார். 
"வாம்மா  சாப்பிடலாம்"
"சாரி மாம் ! இன்னிக்கு எனக்கு வேணாம்"
"அதெல்லாம் இல்ல. ஒரே ஒரு சப்பாத்தி சாப்பிடு. வெறும் வயத்துல இருக்கக் கூடாது"
மெதுவாக எழுந்து சாப்பிட அமர்ந்தாள் . ஒரு வாய் வைத்தவளுக்கு அன்று அவர்கள் இருவரும் ஓட்டலில் அமர்ந்து உண்டது நினைவுக்கு வந்தது. 
"எல்லாமே நன்றாகத் தானே  இருந்துது. ஏன் இப்படி? நான் ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்ன ஆச்சு? யாரு உங்க மனச கெடுத்தது? ஏன் இப்படி? மனம் வெம்பியது. அவன் அணைப்பில் இருக்க வேண்டும் போல இருந்தது. அவனுக்காக அவள் எல்லாம் செய்வாள். அதற்காக இது முடியாது.
பெயருக்கு அன்னை வைத்த  ஒற்றை சப்பாத்தியை காலி செய்துவிட்டு சென்று சோர்வாக படுத்துக் கொண்டாள் .
நினைவில் அவனை தேடியது மனம். கனவில் வந்து நின்றான். கட்டிப் பிடித்தான். அழுதவளை சமாதானம் செய்தான். ஆயிரம் முத்தமிட்டான். அவன் முகத்தில் ஒட்டி இருந்த சில முடிகளை நகர்த்திக் கொண்டு இவள் விலகி நின்றாள் . அவன் வசமாகி இருந்த அவள் உதடுகளைப் பிடிக்க முடியவில்லை. மூச்சடைத்தது. வேகவேகமாக மூச்சு விட்டு எழுந்து  அமர்ந்தாள் . 
"என்ன டா கண்ணு என்ன ஆச்சு? எல்லா கதவுகளையும் அடைத்து, விளக்கை அணைக்க வந்த அன்னையின் குரலில் நினைவுக்கு வந்தாள் . கனவு என்பது புரிந்தது. 
"இல்ல மா! ஒன்னும் இல்ல! ஏதோ கனவு"
மகளுக்கு நெற்றியில்  விபூதி இட்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். அருகில் வந்து படுத்துக்  கொண்ட அன்னையின் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கினாள் .
இதே போல  அவள் கணவனின் முகத்தை தன்  நெஞ்சில் ஏந்திக் கொள்ளும் நேரமும் வருமா? 


யார் உறங்கினாலும் உறங்கவில்லை என்றாலும் எனக்கு  எந்த கவலையும் கிடையாது. வழக்கம்போலவே இரவு முடிந்தது. பகல் வந்ததது. அவரவர் வேலையைப்  பார்க்க அவரவர் கிளம்பினார்கள்.
பிரதீப்பும்தான். தினமும் வேலைக்குச் செல்கிறான். கார் சிக்கனலில்  வந்து நின்றது. ஏதேதோ சிறு குழந்தைகள் வீடு செய்யும் அட்டை விற்றுக் கொண்டிருந்தார்கள். இவன் வண்டி அருகில் ஸ்கூட்டியில்  ஒரு பெண் வந்து நின்றாள் . கைக்கு க்ளவுஸ் அணிந்திருந்தாள். முகத்தை முழுவதும் துப்பட்டாவினால் மறைத்திருந்தாள். எதைச்சையாக  அவன் இவள் பார்க்க , அவள் இவனைத்தான் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . ஏனோ இவனை பார்க்கும் பெண்களுக்கு எல்லாம்  வெட்கமே இல்லையா? இவன் அலட்சியமாக பார்வை திருப்பிக் கொண்டாலும் அவள் கண்டு கொள்ளவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். வண்டி கிளம்பியது. சற்று நேரத்தில் அதே பேருந்து நிறுத்தம். அவனின் கண்ணழகி அப்போது வந்த பேருந்தில் வழக்கம்போலவே கூட்ட நெரிசலில் தொற்றிக் கொண்டாள் . அவள் மட்டுமல்ல அவளை போன்ற இன்னும் சில பெண்களும் கீழே விழுந்து விடாமல் இருக்க படிக்கட்டு ப்ரதர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 
ஏனோ இன்று அவனை அறியாமல் பேருந்து எண்ணைப்  பார்த்துக் கொண்டான்.
பேருந்து கவனத்தில் இருந்து நகர்ந்தவுடன் மூளைத்  தானே செயல்படத் தொடங்கியது.
  'இன்று நிரஞ்சனாவைச் சென்று பார்க்க வேண்டும். அவள் பாம்பே சென்று விட்டு வந்து இன்னும் பேசவில்லை. லஞ்சுக்கு போகலாம்'
தோழிக்கு அழைத்தான்  நிரஞ்சனா அழைப்பை ஏற்கவில்லை. பாஸ்கருக்கு அழைத்தான். 
"ம்! ஆபிசுக்கு வந்துடு"
"அம்மாகிட்ட சொல்லி உனக்கும்  சேது லன்ச் கொண்டு வந்துடவா?"
"ஏண்டா வெளில பொய்க்கலாம்டா. அவங்கள தொந்தரவு பண்ணாத"
"வெளில வேண்டாண்டா. அம்மா சமையல் செஞ்சுட்டாங்க"
"பரவால்ல வாடா. வீட்டுல அவங்க சாப்பிட்டுப்பாங்க"
"அதெல்லாம் முடியாதுடா. பாவம் காலைல 5.30 மணிக்கே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க"
"சரிடா என்ன பொரியல்? என்ன சாம்பார்?"
"அம்மா! இன்னிக்கு என்ன சமையல் ?" பெல்ட்டை இடுப்பில் மாட்டிக் கொண்டே கேட்டான் பாஸ்கர்.
"யாருடா போன்ல?"
"பிரதீப்"
"அவனுக்கு  உருளை கிழங்கு செய்யவா? ஒனக்கு கத்தரிக்காய் வச்சுருக்கேன்"
"முடிஞ்சா செய்யுங்க இல்லாட்டி பரவல்லம்மா"
"அதுக்கு என்னடா? பத்தே நிமிஷம்"
சொன்ன மாதிரியே அடுத்த பத்தாவது நிமிஷம் பிரதீபுக்கு சேர்த்து லன்ச் டப்பா  கைக்கு வந்தது
"டேய் வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்கடா"
"அம்மா! நாங்க  எல்லாம் ஸ்கூல்  முடிச்சு வேலைக்கு போகிறோம்"
"அதுக்கு என்னடா எனக்கு குழந்தை தானே? நீருவை  குட்டி பாப்பாவா நர்சரில பார்த்தது. இன்னமும் எனக்கு நீங்க எல்லாம் குழந்தைங்க தாண்டா "
மதியம் சொன்ன படியே இவர்களின் அலுவலகத்துக்கு வந்து விட்டான். ஏனோ வரு வழியில் அந்த பேருந்து நிலையத்தை நோட்டம் விட்டான். அவள் இப்போது வர மாட்டாள். மனம் அறிவுறுத்தியது. இருந்தாலும்......என்ன இருந்தாலும் கண்கள் அங்கேயேத்தான் நோட்டம் விடுகிறது. தன்னை மாற்றிக் கொள்ள போனை பார்த்தான் .
அலுவலகத்தில் இருந்த நிரஞ்சனாவிடம் அசாத்திய அமைதி. அவளும் உருளை கிழங்கு தான் கொண்டு வந்திருந்தாள் . எப்போதும் ஒரே நிமிடத்தில் காலியாகி விடும் பொறியலை வைத்துக் கொண்டு தடவிக் கொண்டிருந்தாள் .
அது என்னவோ குழந்தைகளுக்கு உருளை கிழங்கு செய்து தருவதில் அன்னைகள் தான் கில்லாடி. எத்தகைய சோர்வும் பறக்கடித்து விடும். 
"என்னடா? என்னடா நடக்குது இங்க?"
"தெரிலடா . நேத்து ஊருக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து மேடம் பயங்கர  அப்சட்"
"என்ன நீரு ? என்னடி ஆச்சு?" ப்ரதிப்புக்கு கவலையாக இருந்தது.
"இல்லடா! ஒன்னும் இல்ல"
"அப்ப நார்மலா இரு."
"என்ன கொஞ்சம் தனியா விடுங்கடா. ப்ளீஸ்"
"அப்டி எல்லாம் விட முடியாது. அங்க பாம்பேல என்ன ஆச்சு?"
அவள் வாயை திறக்கப் போவதில்லை. ப்ரதீப்புக்கு கோவம் வந்தது.
"மேடம் சரியா ஆனா சொல்லுடா" டேபிளில் ஓங்கி அடித்து விட்டு கிளம்பி விட்டான்.
அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அமர்ந்திருந்தாள் நீரு .
"யாராவது ஒருத்தர் கிட்டையாவது பேசு நீரு . எங்க கிட்ட வேணாம். அம்மாகிட்டயாவது என்ன நடந்துச்சுன்னு சொல்லு"
"நான் எதையும் யாரு கிட்டையும் மறைக்கலடா. ஆனா சொல்ல முடியாத அளவுக்கு காய பட்டிருக்கேன் . கொஞ்சம் டைம் குடுங்க. நானே சமாதானம் ஆகிடுவேன்"
:என்ன காதல் தோல்வியா?"
அவளிடம் மௌனம் .
" நீ இந்த மாதிரி இருக்கறது உனக்கும் நல்லதில்லை. வேலைக்கும் நல்லதில்லை, நம்மள நம்பி வேலை செய்யறவங்களும் இருக்காங்க. கிளைண்ட்ஸ்ஸும் இருக்காங்க"  சொல்லி விட்டு நகர்ந்து விட்டான் பாஸ்கர்.
அதீத கோபத்தில் வந்து கொண்டிருந்தவனுக்கு அவன் அழகி காட்சி கொடுத்தாள்  சிக்கனலில். அவன் காருக்கு வெகு அருகில்.

தொடரும்.....


Leave a comment


Comments


Related Post