இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 41 (இறுதி அத்தியாயம்) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 23-06-2024

Total Views: 5939

பார்வதி கடுமையாக பேச முதலில் அதிர்ந்து பின்னர் தான் செய்த செயலுக்கு இத்தனை கோபமாவது தேவை தான் என்று மனதை சமன் செய்து கொண்டு “அது வந்து அம்மா” என்று ஏதோ சொல்ல வர கை உயர்த்தி தடுத்த பார்வதி தானே சென்று கதவை திறந்து வாசல்படியை தாண்டி உள்ளே சென்று நின்று கொண்டு “நந்தா வாப்பா… வா அபி..” என்று அழைக்க

“அண்ணி வாங்க உள்ளே போய் எல்லாம் பேசலாம்.” என்று அச்சுவும் சொல்ல நந்தனும் அவனுக்கு ஒரு எட்டு பின்னால் என்று அபிலாஷாவும் வீட்டினுள் சென்றனர்.

ஹால் ஷோபாவில் அமர்ந்த பார்வதி பூஜைக்கூடையை அபிலாஷா கையில் தந்து விட்டு “போய் சாமி மாடத்துல வை பிரசாதம் இருக்கு எடுத்துக்கோ…” என்று சொல்ல அதிலிருந்து குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டாள் அபிலாஷா.

“அம்மா உங்கக்கிட்ட…” என்று அபிலாஷா மீண்டும் தொடங்க

“ம்ப்ச்… பேச்சு எல்லாம் அப்பறம் இருக்கட்டும். எனக்கு பசிக்குது. வயித்துப் புள்ளைக்காரி அச்சுவுக்கு பசிக்கும்ல…” என்று சொன்ன பார்வதியை மூவரும் விழியகற்றாது பார்க்க

“என்ன இன்னும் என்ன சமைக்கனும் எப்படி சமைக்கனும்னு சொல்லனுமா?” குரலில் கொஞ்சம் கடுமை கூட்டி கேட்க அபிக்கு விட்டால் அழுதிடுவாள் போல இருந்தது. 

“நான் சமைக்கிறேன் ம்மா.. என்ன செய்யனும்? அச்சு உனக்கு என்ன வேணும் சொல்லு?” அழுகை விழுங்கி கேட்க

“இல்ல அண்ணி எனக்கு எதுவும் வேணாம்.” என்று அச்சு சொல்லிக் கொண்டு இருக்க

“என்ன வேணாம்? அபி அங்க டைனிங் டேபிள்ல கீரை ஆஞ்சு வைச்சிருக்கேன். அதை நல்லா பாசிப்பருப்பு போட்டு கடைஞ்சு உருளை வறுவல் பண்ணிடு சாம்பார் கூட காலையில பண்ணினது இருக்கு சாதம் வைச்சு ரசம் வைச்சிடு சரியா?” என்று பார்வதி அடுக்க

“சரிம்மா” என்று அபி கிட்சன் செல்ல நந்தனோ தாயின் குண மாற்றம் புரியாமல் தங்கள் அறைக்கு செல்ல அக்சயா மட்டும் தாயை முறைத்த படி அமர்ந்திருந்தாள். 

“என்னடி முறைக்கிற?” ஓரக்கண்ணால் பார்த்து பார்வதி கேட்க

“என்னம்மா பண்ணிட்டு இருக்க நீ? இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி கூட அண்ணி மனசு மாறிட்டாங்கனு சொன்னதும் சந்தோஷப்பட்டு வேண்டுதலுக்குனு கோவிலுக்கு கூட்டிட்டு போன… அண்ணா கிட்ட நல்ல நேரம் பார்த்து அண்ணியை கூட்டிட்டு வரச்சொல்லி சொன்ன… இப்போ அண்ணியே நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நீ என்னடான்னா அண்ணியை வெடுக்கு வெடுக்குனு பேசிட்டு இருக்க? அண்ணி மேல உனக்கு கோபமா ம்மா?” அக்சயா கேட்க

“என் மருமக மேல நான் ஏன்டி கோபப்படனும்?” என்று கேட்ட பார்வதியை அக்சயா மட்டுமின்றி டைனிங் டேபிளில் இருந்த கீரையை எடுக்க வந்த அபியும் பெட்ரூமில் இருந்தபடி நந்தனுக்குமே அவர் குரல் கேட்க அவர்களும் ஆச்சரியமாக பார்க்க

“என்னம்மா சொல்ற? அப்பறம் ஏன் அண்ணி பேச வந்தப்போ பேச விடாம வெடுக்குனு பேசுன?” அச்சு கேட்க

“அபி என்ன பேச வந்தான்னு எனக்கு தெரியாதா அச்சு..‌ இவ்வளவு நாள் நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்கனு மன்னிப்பு கேட்பா.. நாம எல்லாரும் மறக்கனும்னு நினைக்கிற இந்த கஷ்டமான நாட்களை பத்தி திரும்ப பேசுற மாதிரி ஆகும். அதான்… அவளை பேச விடலை…” பார்வதி சொல்ல

“சரி அதை கொஞ்சம் அன்பா பொறுமையா சொல்லாம ஏன் இப்படி வெடுக்குனு பேசுற அண்ணி சங்கடப் படுவாங்க ல்ல?” மீண்டும் அச்சு கேட்க

“ம்ம்… அப்போ நாம ஏதோ பெருசா விட்டுத்தர மாதிரி ஆகும். அபிக்கு இன்னும் மனசுல குற்றவுணர்ச்சி அதிகமாகும். இது நான் அபிக்காக மட்டும் செய்யல அச்சு.. நந்தாக்கு அபியை எவ்வளவு பிடிக்கும்னு அபியோட கையை பிடிச்சிட்டு அவ வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தானே அப்போவே ஒரு அம்மாவா எனக்கு புரிஞ்சுது. அதான் நான் மறுப்பே சொல்லாம மறுநாளே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்.

அபிக்கு இருக்கிற பிரச்சினை பத்தி உன் வீட்டுக்கு வந்தப்போ சம்மந்தி சொந்தக்காரங்க அபியை தப்பா பேசுனாங்களே அப்போ தான் தெரியும். அதுவரை அவன் அதை மனசுல போட்டு எவ்வளவு வருத்திட்டு இருந்திருப்பான். ஏன்டா என்கிட்ட சொல்லலைனு நான் கேட்டப்போ இந்த விஷயம் தெரிஞ்சா லாஷா என்னை விட்டு போயிடுவாளோனு பயமா இருக்குனு சொன்னான். இன்னைக்கு வக்கீல் ஃபோன் பண்ணினப்போவும் இப்போ அபி வீட்டு வாசல்ல நின்னதை பார்த்தும் அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான்னு எனக்கு புரியும்டி. 

ஆனா நாம இவ்வளவு தப்பு பண்ணியும் நம்மளை எல்லாரும் இப்படி அன்போட ஏத்துக்கிட்டாங்க இவங்க பிரிஞ்சு சங்கடப்படுத்திட்டோம்னு அபி மனசு வருந்த கூடாது. அதான் அவ மேல கோபமா இருக்க மாதிரி பேசுனா என்னை சமாதானம் பண்ண தான் யோசிப்பா…” என்று பார்வதி சொல்லிக் கொண்டு இருக்க ஓடி வந்து அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள் அபிலாஷா.

“சாரிம்மா… அம்மானு கூப்பிட்டாலும் அன்னைக்கு நீங்க எனக்கு அம்மாவா தான் இருக்கீங்கன்றதை மறந்து போய்ட்டேன். நான் நான் தப்பு எதுவும் பண்ணலம்மா… என்னை சுத்தி நிறைய நிறைய தப்பு நடந்து போச்சு…” என்று அவள் கேவலோடு சொல்ல

“அபி.. அபிம்மா இப்படி நீ அழக்கூடாதுனு தானே நான் இவ்வளவு நேரமும் கோபமா பேசுற மாதிரி இருந்தேன். ஏன்டா அழற.. போனது எல்லாம் போகட்டும் ம்மா இனி நீயும் நந்தாவும் எப்போவும் பிரியாம சந்தோஷமா இருக்கனும்.” என்று தலையை கோதி ஆறுதல் உரைத்துக் கொண்டு இருக்க அவர் தோளில் சாய்ந்தவாறு அறை வாசலில் தன்னை காதலோடு பார்த்திருந்த தன்னவனை புன்னகையோடு பார்த்தாள் அபிலாஷா.

வாசலில் கார் சத்தம் கேட்க நால்வரும் வெளியே பார்க்க ப்ரதீப் மோகன்ராம் பத்மாவதி மூவரும் இறங்கி வந்தனர். “வாங்க சம்மந்தி வாங்க மாப்பிள்ளை…” பார்வதி வரவேற்க

“வாங்க சார் வாங்க ப்ரதீப்..” அபிநந்தன் சொல்ல “ம்கூம்” என்று உதட்டை சுழித்து அக்சயா முகத்தை திருப்பி கொள்ள

“அம்மாடி மருமகளே உங்க சண்டை சமாதானம் இதைப்பத்தி எல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் ம்மா..” என்று பத்மாவதி சொல்ல ஸ்ஸ்.. என்று அக்சயா நாக்கை கடிக்க ப்ரதீப் சிரித்துக் கொண்டான்.

அபிலாஷா “என்னாச்சு ஆன்டி?” என்று கேட்க மோகன்ராமிடம் கூறியதை இவர்கள் முன்பும் கூற தன் மகளும் மாப்பிள்ளையும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை என்று பார்வதி பெருமூச்சு விட

இவர்கள் விளையாட்டை அறிந்து “அச்சு” என்று செல்லமாக காதை திருகினான் அபிநந்தன்.

“ஏன்டா ப்ரதீப் பொய் சண்டையா இருந்தாலும் தினமும் அச்சுவை நீ கத்த வைச்ச தானே..‌ அங்கிள் சொன்னாரு. கொஞ்சம் அமைதியா பேசிருக்கலாம்ல?” அபிலாஷா நண்பனை கடிந்து கொள்ள

“எது? நான் சத்தமா பேச வைச்சேனா? அபி… உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் புரியல இவ இங்க ஃபோன்ல கத்தி பேசுவா நான் அந்தப்பக்கம் தயவுசெஞ்சு அமைதியா பேசு அக்ஷூ உனக்கு பீபி ஏறிட போகுதுனு கெஞ்சிட்டு இருப்பேன். ஒரு நாள் அப்படி கெஞ்சும் போது தான் அம்மா பார்த்துட்டாங்க நீ வேணும்னா அம்மாகிட்ட கேளு..” அப்பாவியாக தன்னை மாட்டி விட்ட கணவனை செல்லமாக முறைத்தாள் அக்சயா.

“சரி சரி எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் மதியத்துக்கு சமையலை பார்க்குறேன்.” என்று பார்வதி எழ

“அம்மா நான் சமைக்கிறேன்.” என்ற அபியை “ம்ம்… இத்தனை நாள் நீயே ஒழுங்கா சாப்பிடாம ஓமக்குச்சி மாதிரி ஆகிட்ட… நீ கொஞ்சம் உட்காரு நான் பார்த்துக்கிறேன்.” என்று பார்வதி சொல்லி செல்ல நானும் வரேன் என்று பத்மாவதி அவர் கூடவே சென்றார். 

மதிய உணவு முடிய பார்வதி பத்மாவதி கிச்சனை சுத்தம் செய்கிறோம் என்று அங்கிருந்து நகர மோகன்ராமும் “சரி ப்ரதீப் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. எப்படியும் நீ இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்ட அதனால அம்மா இங்கேயே இருக்கட்டும் நான் அவளை சாயங்காலம் வந்து கூட்டிட்டு போறேன். வரேன் நந்தா” என்றவர் மற்றவர்களிடமும் விடை பெற்றார் மோகன்ராம்.

ப்ரதீப் தன் மனைவி அருகில் அமர்ந்து அவளின் நலத்தோடு வயிற்றில் வளரும் தங்கள் குழந்தை பற்றி அவள் கையோடு கை கோர்த்து பேசிக்கொண்டு இருக்க இன்னொரு ஷோபாவில் நந்தனும் லாஷாவும் அருகருகே அமர்ந்தும் கூட எதுவும் பேசாமல் இன்னமும் ஏதோ தடுக்க அமைதியாக ஒருவர் அறியாமல் ஒருவர் பார்ப்பதும் வேறு பக்கம் முகத்தை திருப்பவும் என்று இருக்க அதை கவனித்த அக்சயா, 

“எனக்கு தூக்கம் வருது வாங்க ப்ரதீப் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்.” என்று அழைத்து சென்றிடசட்டென்று “இதோ வரேன்..” என்று மட்டும் சொல்லி விட்டு எழுந்து சென்றான் அபிநந்தன். 

அவன் செய்கைக்கு அர்த்தம் புரியாமல் அபி அமர்ந்திருக்க “அபிலாஷா…” என்று கூவலோடு உள்ளே வந்தாள் சந்தியா அவளை அபி தயக்கமாக பார்க்க “என்ன அபிலாஷா உள்ளே கூப்பிட மாட்டியா?” புன்னகையோடு அவள் கேட்க

“ஐயோ அப்படி இல்ல… வாங்க சந்தியா..” என்றிட

“என்ன திரும்ப வாங்க போங்கனு.. எப்போதும் போல கூப்பிடு அபிலாஷா.” என்றிட மற்றவர்கள் இவர்களை வெறுமனே பார்த்து நின்றிருந்தனர்.

“ஆ.. சரி.. சாரி சந்தியா நான் பண்ணின தப்பால அதிகமா நோகடிக்கப் பட்டது நீங்க தான்.. சாரி நீதான்…” என்று வருந்தி மன்னிப்புக் கேட்க

“ச்ச் விடுப்பா… ஆக்சுவலா அபி மாதிரி ஒரு ஹஸ்பண்ட் இருக்கும் போது உன் அளவுக்காவது பொசசிவ் இருக்கனும் இல்லையா அத்தை?” என்று பார்வதியிடம் கேட்க

“அதுசரி என்ன சந்தியா வரும்போதே அபியைத்தான் கூப்பிட்டுகிட்டு வர… அவ வந்தது உனக்கு எப்படி தெரியும்?” பத்மாவதி கேட்க

“அது வந்து ஆன்டி” என்று சந்தியா சொல்லும் முன்னர்

“நந்தன் சொல்லிருப்பாரு… இல்லையா சந்தியா?” அபி கேட்க ஆச்சரியமாக விழி விரித்த சந்தியா

“ப்பா… எப்படி அபிலாஷா? பரவாயில்ல அத்தை உங்க மருமக உன் மகனை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கா… நீ கேஸ் வாபஸ் பண்ணின உடனே அபி எனக்கு அதை ஷேர் பண்ணிட்டான் எப்படியும் நீ இன்னைக்கே இங்க வந்திடுவனு தெரிஞ்சு தான் நான் வந்தேன் எங்கே..‌ ஹீரோ சாரை காணோம்?” . என்று வீட்டில் அபிநந்தனை சந்தியா தேட

“அவர் ஏதோ வேலையா போனாரு சந்தியா… எனக்கும் எங்கனு தெரியாது.” சோகமாக அபிலாஷா சொல்ல 

“சரி வந்திடுவான்.” என்று அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க நந்தன் வந்தான். 

ஹாய் சந்தியா நீ எப்போ வந்தே? என்று கேட்டவன் நான் ரெஃப்ரஷ் ஆகிட்டு வரேன் என்று அறைக்கு சென்று வந்தான்.

“என்ன அபிநந்தா இவ்வளவு நாளா பொண்டாட்டி கோபமா இருக்கா கோவிச்சுக்கிட்டு போய்ட்டானு ஃபீல் பண்ணிட்டு இருந்த… இன்னைக்கு அவ வீட்டுக்கு வந்ததும் அவளை கொஞ்சுறதை விட்டு எங்கடா காணமா போன?” சந்தியா அனைவர் முன்பும் வைத்து கேலியாக கேட்க

“உன்னை..” என்று கோபமாக வந்தவன் அபிலாஷா சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து அமர

“டேய் சிஸ்டர்ஸ் பேசிட்டு இருக்கோம்ல இடையில வந்து உட்காருற?” சந்தியா சொல்ல நக்கலாக அவளை பார்த்தவன் பதில் கூறாமல் 

“நாளைக்கு ஒரு அப்பாய்ண்மெண்ட் வேணும் சந்தியா.” என்றிட

“யாருக்கு அபி?” அவள் மட்டுமின்றி அனைவரும் அந்த கேள்வி தாங்கி பார்க்க

“லாஷாக்கு தான் சந்தியா… அன்னைக்கு ஒருநாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டுனு சொன்ன. ஆனா அன்னைக்கு ஏதேதோ நடந்து லாஷா போய்ட்டா கண்டிப்பா அதுக்கப்புறம் ஃபர்தரா எந்த ட்ரீட்மெண்ட்ம் எடுக்கலைல… அதான் ஒரு செக்கப் பண்ணிக்கலாம்.” என்றிட அவன் அன்பில் நெக்குருகி போனாள் அபிலாஷா. 

“நானே சொல்ல நினைச்சேன் அபி. ஓகே நாளைக்கு மார்னிங் ரெண்டு பேரும் வந்திடுங்க.” என்று சந்தியா சொல்ல அதன் பின்னர் அனைவரும் அரட்டையில் இணைய மாலை டீ ஸ்நாக்ஸ் செய்து தந்து விட்டு இரவு சமையலுக்கு பார்வதி ஆயத்தமாக அபிலாஷா அவருக்கு உதவினாள். பத்மாவதி சந்தியா தங்கள் இரவுணவை முடித்துக் கொண்டு கிளம்ப பத்மாவதி மோகன்ராமுக்கும் உணவை எடுத்து கொண்டு கிளம்பினார்.

தங்கள் அறைக்குள் நுழைய முதலில் சற்று தயங்கியபடி வந்தவள் சாளரம் வழியே நுழைந்த தென்றலின் சுகித்துக் கொண்டிருந்தவனை ரசனையான பார்த்தாள்.

“நந்தன்..” மெல்லிய குரலில் அழைக்க மந்தகாச புன்னகையோடு திரும்பினான். முதல் முறை இந்த புன்னகை தானே தன்னை வீழ்த்தியது… என்ற நினைவில் அவள் கரைய

“வா… லாஷா” என்ற அழைப்பில் தெளிந்தாள்.

“நந்தன்… உங்களுக்கு உண்மையாவே என் மேல கோபம் இல்லையா?” என்றிட அழகாய் சிரித்தான் அவன்.

“எதுக்கு லாஷா? சொல்லப்போனா நான்தான் உங்கிட்ட சாரி சொல்லனும்.. லாஷா சாரிமா… உனக்கு அபார்ஷன் பண்ணலாமானு கேட்டது வேணும்னா நானா இருக்கலாம்.. ஆனா” என்று அவன் தன்நிலை உணர்த்த முயல அவள் பூங்கரம் கொண்டு அவனின் வாய் மூடி தடுத்தாள்.

“போதும் நந்து… ஆல்ரெடி நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கனு தெரிஞ்சு அந்த காதலுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்னு தெரியாம முழிச்சு நிக்கிறேன்… எனக்கு எல்லாமே தெரியும் நந்து…” என்று சொல்ல புரியாமல் பார்த்தான் அபிநந்தன். அவன் வாய் மூடிய கையை எடுத்தவள் தலை குனிந்து அவனை நெருங்கி நின்றபடியே 

“சந்தியா நேத்து என்னை பார்த்து என்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொடுத்தா… முகில் பேச்சை நம்பி தப்பான முடிவுகளை எடுத்த நான் சந்தியா பேச்சை கேட்டு குழம்பி போய் காலையில ப்ரதீப்பை பார்த்து பேச வந்தேன். நீங்க காலையில பேசிட்டு இருக்கும்போது நான் அங்கதான் இருந்தேன் நீங்க பேசுன எல்லாமே கேட்டேன்… எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்.. என்மேல உங்களுக்கு கோபமே இல்லையா நந்து?” என்று கண் கலங்க கேட்டவளின் கன்னங்களை தன் கையில் ஏந்தினான்.

“துளிகூட கோபம் வரலை லாஷா… உன் காதலோட ஆழம் தான் தெரிஞ்சது” என்றவன் மார்பில் சாய்ந்து கொண்ட பாவையவள் தோள்கள் குலுங்க கேவ அவள் அழுகிறாள் என்று புரிந்து “லாஷா என்னாச்சு ஏன்டா அழற?” அவள் தலை நிமிர்த்தி கேட்க

“அந்த முகில்… அவன் நல்லவனே இல்ல நந்து… அடிக்கடி அவன் மும்பை கல்கத்தானு போனது எல்லாம் அவனுக்கு போதை மருந்து பொண்ணுங்க கடத்துற கும்பல்னு அவங்க கூடல்லாம் தொடர்பு இருந்திருக்கு அவனுக்கு.. அந்த பொறுக்கி சொன்னதை நம்பி நான் உங்களை சந்தேகப்பட்டேன்.” என்று அவள் அழ

“லாஷா… இட்ஸ் ஓகே முதல்ல நீ இதிலிருந்து வெளியே வா.. ரிலாக்ஸாகு நான் உன்கூட தான் இருப்பேன் எப்போவும்…” என்று பேசியபடி கட்டிலில் அமர்த்தி தோளோடு  அணைத்துக் கொண்டவன் சட்டென்று ஏதோ நினைவு வர “ஸ்ஸ்… ஒரு நிமிஷம் லாஷா…” என்று அவளை விட்டு விலகி தான் வெளியே சென்ற போது வாங்கி வந்திருந்த பையிலிருந்து கை கொள்ளா அளவில் மல்லிகை சரத்தை வெளியே எடுக்க அழுகை மறைய பெண்ணவள் முகத்தில் சற்றே வெட்கம் தோன்றியது.

அருகில் வந்தவன் அவன் கையாலேயே அவள் தலையில் பூவினை சூடிவிட கன்னம் சிவந்தவள் “எதுக்கு நந்து இவ்வளவு பூ?” என்று கேட்க

“இத்தனை நாள் வாங்கி தராததுக்கும் சேர்த்துனு வைச்சுக்கோ பூ மட்டும் இல்ல… எல்லாமே இனி வட்டியும் முதலுமா வசூல் பண்ணுவேன்.” என்று சில்மிஷமாக பேசி கண்ணடிக்க

“ச்சீ போங்க நந்து… நீங்களா இப்படி பேசுறீங்க?” என்றாள் வெட்கத்தோடு…

“உங்கிட்ட பேசாம வேற யார்க்கிட்ட பேச?” என்று புருவம் உயர்த்த அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் வாகாக..

“நந்து.. நான் சில முடிவுகள் எடுத்தேன் உங்ககிட்ட சொல்லணும்ல…” என்று பேச்சை துவங்க

“ம்ம் சொல்லுங்க மகாராணி என்ன முடிவு?” கேலியாக கேட்க

“நந்து..‌ நான் இனி ஆஃபிஸ் போகப்போறது இல்ல… ப்ரதீப் பிஸ்னஸை முழுசா கவனிச்சுக்கட்டும். ஏதாவது எமர்ஜென்சி நான் கண்டிப்பா தேவைன்னா மட்டும் தான் நான் ஆஃபிஸ் போவேன். அதுவரை முடிஞ்ச அளவுக்கு உங்ககூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும். அம்மாவை பத்திரமா பார்த்துக்கிறது அப்பறம் அச்சுவையும் அவளுக்கு பிறக்கப்போற குழந்தையும் பார்த்துக்கனு பிஸியாகப் போறேன்.” என்றிட

“ம்ம்… உன் இஷ்டம் லாஷா… நான் எப்போதும் உன் விருப்பத்துல தலையிடப் போறதே இல்ல… ஆனா கண்டிப்பா நீ இப்படி வீட்டுக்குள்ள அடங்கிப் போய் இருக்கிறதும் எனக்கு விருப்பம் இல்ல…” நந்தன் சொல்ல

“ச்ச் அதெல்லாம் அப்புறம் பாக்கலாம் நந்து.. இப்போதைக்கு எனக்கு ஆஃபிஸ் பிஸ்னஸ் எதுவும் வேண்டாம். அது மட்டும் இல்ல… சித்தி சித்தப்பா திவ்யா மூணு பேருக்கும் அப்பறம் அத்தை மாமாவுக்கு தனியானு நம்ம வீட்டு அளவுலேயே தனித்தனி வீடு பார்த்து அங்கே ஷிப்ட் பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு. அந்த வீட்டை அம்மா நியாபகமா ஆசிரமமா மாத்தவும் எல்லா ஏற்பாடும் பண்ணச் சொல்லி கோபாலன் அங்கிள்கிட்ட சொல்லிட்டேன்.” என்று லாஷா சொல்ல

“எல்லாம் சரி.. உன் ரிலேஷன்ஸ் அந்த வீட்ல இருக்கிறதால என்ன ப்ராப்ளம் லாஷா? அதுவும் திவ்யா வயசுப் பொண்ணு… ஏன் வெளியே எங்கேயோ தங்க விடனும்?” நந்தன் யோசனையாக கேட்க

“அவங்க என் வாழ்க்கையில புகுந்து பண்ணினதுக்கு இதெல்லாம் சாதாரணம் தான் நந்து… ப்ரதீப் முகிலை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்த மாதிரி இவங்களையும் ஏதாவது கேஸ்ல உள்ள போடலாம்னு சொன்னான். ஆனா அது இன்னும் நன்றி கெட்ட செயலாகும். அதான் மறுத்திட்டேன். 

சரி விடுங்க நந்து… போன எதைப்பற்றியும் நாம விவாதிக்க வேணாம். இனி நாம நம்மோட எதிர்காலத்தை பத்தி யோசிக்கலாம்.” என்று லாஷா பேச்சை மாற்ற

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகனும் லாஷா…” என்ற நந்தனை நிமிர்ந்து பார்க்க இவள் விழிகளோடு தன் விழிகளை கலந்து அவளின் இடக்கை விரல்களை தன் வலக்கையில் கோர்த்த படியே உரைத்திருந்தான் அந்த வார்த்தையை…

“ஐ லவ் யூ லாஷா…” என்று தன் காதலை வார்த்தைகளில் உரைத்திருக்க விழிகள் இரண்டும் ஆனந்தத்தில் கலங்க உதடு துடிக்க உள்ளம் பரவசத்தில் பறப்பதை போல உணர அவள் கைகளை சிறை பிடித்தான் நந்தன்.

“என்ன லாஷா? பதில் சொல்ல மாட்டியா?” அவன் காதலோடு கேட்க வாய் திறந்து அவன் உரைத்த வார்த்தைகளை இதழோடு இதழ் பொருத்தி அவன் உள்ளத்தோடு பகிர்ந்தாள் பெண்ணவள்.

நீண்ட பிரிவின் பின்னர் தன் மனைவி தந்த முத்தத்தில் கரைந்தவன் அவள் முடிக்கும் தருவாயில் இவன் வசப்படுத்திக் கொண்டான் அபிநந்தன்.

காதலது பகிராத போதே உயிரினும் அதிகமாக காதல் செய்தவன் பகிர்ந்த பிறகு சொல்லவா வேண்டும்… சொல்லிக் கொள்ளாத காதலே இவர்களை திருமணம் எனும் பந்தத்தில் இணைத்த போது இப்போது காதல் பகிரப்பட்டு தினமும் அழகாய் வளர்க்கப்பட இனி பிரிவென்பது ஏது இந்த மனமொத்த ஜோடிகளிடம்…

முற்றும்.


Leave a comment


Comments


Related Post