இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 24-06-2024

Total Views: 3751

     கல்லூரி ஹாஸ்டலில் தங்காமல் தனியாக பிளாட் எடுத்து  இருவரும் தங்கினார்கள் அனைத்து செலவுகளையும் கே கே வே செய்தான்.  கல்லூரியில் ஆரம்பத்தில் இவர்களை கேலி கிண்டல் செய்தவர்கள் இவர்களின் படிப்பை கண்டு நண்பர்கள் ஆகினர். 

   ஹரிஷான்த் மிகப்பெரிய ஐடி கம்பெனியின் வாரிசு என்றும் பணக்காரன் என்ற திமிரும் அதிகமாக இருக்க அவன் பின் அனைவரும் வரவேண்டும் என்று நினைப்பவனுக்கு  இந்த இருவர் மட்டும் அவன் பின் வராமல் தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தவர்களை கண்டு அவர்களை கேலி கிண்டல் அதிகம் செய்தான். 

     அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தவர்களை பார்த்த ஹரிஷான்த்துக்கு போகப்போக அவர்களை பிடித்து போனது அவர்களின் திறமையை கண்டு அவர்களின் நட்பு வட்டத்தில் நுழைந்தான் அதன் பிறகே தன்பின் வருபவர்கள் தன்னிடம் இருக்கும் பணத்திற்குத்தான் என்றும் உண்மை நட்பு என்றால் என்ன என்றும் அறிந்தான். 

    அதன் பிறகு மூவரிடமும் நெருங்கிய நட்பு உண்டாகியது.  தன் வீட்டிற்கு இதுவரை எந்த நண்பர்களையும் அழைத்து செல்லாதவன் கே கே, முரளி இருவரையும் அழைத்து சென்று தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.   வாரவிடுமுறைகளில் நண்பர்கள் மூவரும் ஒன்றாக சுற்றுவர். 

      பண்டிகை நாட்களில் ஹரிஷான்த் வீட்டில் தான் நண்பர்கள் இருப்பர் இது ஹரிஷான்த் தாயின் கட்டளை.   ஐஸ்வர்யா ஹரிஷான்த் தாயின் தூரத்து உறவு அவளின் தாய் தந்தை காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள் வீட்டில் ஏறற்றுக்கொள்ளாததால் தனியாக வசித்து வந்தவர்களுக்கு ஹரிஷான்த் தாய் மட்டுமே ஆதரவு கொடுத்து தன் கணவரிடம் கூறி அவர்களின் கம்பெனியில் பணி அமர்த்தியிருந்தார். 

    சந்தோஷமாக பத்து வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு ஒன்பது வயதில் ஐஸ்வர்யா இருந்தாள்.  ஹரிஷான்த் வீட்டில் ஐஸ்வர்யாவை விட்டு விட்டு நண்பர் வீட்டு விழாவிற்கு சென்றவர்கள் திரும்பிய போது உயிரற்ற உடலாகத்தான் வந்து இருந்தனர்.   அதில் இருந்து ஐஸ்வர்யா அந்த வீட்டிலேயே மகளாக வளர்த்தாள். 

    தாய் தந்தை இறப்புக்கு பிறகு தன் துருதுரு செயல்களை எல்லாம் நிறுத்தி அமைதியாக வளைய வந்தவளை பதினான்கு வயதில் அங்கு வந்து செல்லும் கே கே முரளியின் பேச்சால் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தாள்.  அதற்காகவே நண்பர்களை விடுமுறை நாட்களில் அழைத்து வருவான் ஹரிஷான்த். 

   அண்ணனிடமும் தன்னிடமும் பேசக்கூட தயங்குபவள் நண்பர்களிடம் நன்றாக பேசுவதால் ஹரிஷான்த்தும் நண்பர்களை அழைத்து வருவான் வெளியே செல்லும்போது அவளையும் அழைத்து செல்வான். 

    இப்டியே நாட்கள் செல்ல ஐஸ்வர்யா பழையபடி துருதுரு பெண்ணாக ஆகியிருந்தாள்.  

    நண்பர்கள் கேலி கிண்டல் செய்யும் போது அவளும் அவர்களுக்கு ஈடுகொடுத்து கிண்டல் கேலி செய்வாள்.  

    கே கே வும் முரளியும் படிக்கும் போதே நிறைய ப்ராஜெக்ட் செய்து கொடுத்தனர் அதில் நிறைய வருமானம் வந்தது.  நான்கு வருடம் முடித்து மேற்படிப்பும் அதே கல்லூரியில் சேர்ந்தனர்.  

    அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு ஐஸ்வர்யா வந்து சேர்ந்திருந்தாள்.   படிக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்தே கே கே, முரளி இருவரும் லட்சங்களில் வருமானம் ஈட்டினர்.  அடுத்த இரண்டு ஆண்டுகளும் வேகமாக சென்றுயிருந்தனர்.

  
     படிப்பை முடித்து ஹரிஷான்த் கம்பெனியிலேயே வேலையில் சேர்ந்து இருந்தனர்.  ஐஸ்வர்யா மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள். 

     விடுமுறை நாட்களில் நண்பர்கள் ஊர் சுற்றச்சொல்லும் போது ஐஸ்வர்யாவும் அவர்களுடன் அடம்பிடித்து வருவாள். 

     அப்படி ஒரு நாளில் நண்பர்கள் மூவரும் வெளியே செல்ல முடிவு செய்து இருந்தனர்.  ஹரிஷான்த் வீடு  வந்து அவனை அழைத்து செல்ல பைக்கில் வந்த நண்பர்களுடன் செல்ல தன் பைக்கை எடுத்த ஹரிஷான்த்தின் பின் வந்தாள் ஐஸ்வர்யா. 

     "ஏய் நீ எங்க வர?..." என்றான் கே கே. 

     "நானும் உங்க கூட வரேன் அண்ணா" என்றாள் ஐஸ்வர்யா. 

     "ஏய் நாங்க பாய்ஸ் எங்காவது போவோம் நீ எதற்கு எங்கூட வர" என்றான் ஹரிஷான்த். 

    "ஏன் பாய்ஸ் தான் ஊரை சுத்தனும் கேர்ள்ஸ் சுத்தக்கூடாதா?..." என்று கேட்டவள் வழியனுப்ப வந்த தாயிடம்  "அம்மா பாரும்மா இந்த அண்ணன் என்னை கூட்டிட்டு போகமாட்டானாம்" என்று கம்ப்ளைன்ட் செய்தாள். 

     " டேய் அவளையும் கூட்டிட்டு போங்கடா குழந்தை கேட்கிறா இல்லையா" என்றதும் 

      குழந்தையா?... என்று மூவருக்கும் தோன்ற அதில் முரளியின் பார்வையே அவளை முழுவதுமாக வருடிச்சென்றது. 

    இவளை பார்த்தா குழந்தை மாதிரியா இருக்கு என்று எண்ணங்கள் எங்கெங்கே செல்ல அவன் மனமோ  ச்சே... புத்தி எப்படி எல்லாம் போகுது பார் அவள் நண்பனின் தங்கை என்று மனம் அறிவுறுத்தியது. 

      அந்நேரம் ஹரிஷான்த் அம்மாவிடம்  "இவளை பார்த்தா குழந்தை மாதிரியாகவா இருக்கு நல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பீப்பாய் மாதிரி இருக்கா" என்றதும் அங்கிருந்த குச்சி ஒன்றை எடுத்து கொண்டு அவனை அடிக்கப்போக ஹரிஷான்த் அதை கண்டு வேகமாக ஓடினான். 

     "எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கா இவளைப்போய் பீப்பாய் போல் இருக்கா என்கிறான் ஹரி"  என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான் முரளி. 

      சண்டை முடிந்து அவளை அழைத்துக்கொண்டே மாலுக்கு வந்தவர்கள் அவள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அவளை கேம் விளையாடும் இடத்தில் விட்டு ஒரு மணி நேரத்தில் வருகிறோம் என்று சென்றவர்கள் இரண்டு மணிநேரம் கழித்தே அதுவும் முரளி நியாபகம் செய்த பிறகே அவள் இருக்கும் இடம் வந்தனர். 

    அவர்களை கண்டு முறைத்தவள் நேராக உணவு உண்ணும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.  கே கே  ஹரிஷான்த்தின் காதருகில் வந்து  "சாப்பிட்டு இரண்டு மணி நேரம் தாண்டா ஆச்சு இவள் திரும்ப இங்க கூப்பிட்டு வந்து இருக்கா?..." என்றான். 

     "அவளுக்கு கோபம் வந்தா அதை சரி செய்ய இப்படித்தான் சாப்பிடுவா" என்றான் ஹரி. 

      அவர்கள் பேசுவது காதில் விழாமல் போனாலும் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று அறிந்து அவர்களை முறைக்கவும் நண்பர்கள் இருவரும் அமைதியாகினர். 

       உணவை அவளே அனைவருக்கும் ஆர்டர் செய்தாள்.  உணவை உண்டு கொண்டு இருக்கும் போது அவளுக்கு தேவையான உணவுகளை மூவரையும் அதை எடு இதை எடு என்று ஏவிக்கொண்டே சாப்பிட்டாள். 

   அப்போது ஹரிஷான்த் ஒன்றை கவனித்தான் தன்னையும் கே கே வையும் ஹரி அண்ணா கே கே அண்ணா என்று அழைத்தவள் முரளியை ஒரு முறை கூட அண்ணா என்று அழைக்காமல் முரளி என்று மட்டுமே அழைத்தாள் ஐஸ்வர்யா. 

     இதை எப்படி கவனிக்கவில்லை என்று நினைத்தவன் அவளிடமே  "ஐஸ் என்னையும் கே கே வையும் அண்ணா என்று சொல்லுற ஆனால் ஒரு முறை கூட முரளியை அண்ணா என்று கூப்பிடவில்லையே" என்றான். 

     அவளே சாப்பிட்டுக்கொண்டே  "அதைத்தான் நானும் கொஞ்சநாளாக யோசித்தேன் ஏன் முரளியை அண்ணனாக நினைக்கமுடியவில்லை என்று அப்புறம் தான்  நான் அவனை லவ் பண்றேன் என்று தோன்றியது" என்றாள் ஐஸ்வர்யா. 

      சாப்பிட்டுக்கொண்டு இருந்த மூவருக்கும் ஒரே சமயத்தில் புரையேறியது. 

      மூவரையும் பார்த்தவள்  "மூனுபேருக்கும் புரையேறுவதுக்கூட ஒன்றாக வருமா?... " என்றாள் ஐஸ்வர்யா. 

    ஹரிஷான்த், கே கே இருவரும் தங்களை சரி செய்துகொண்டு முரளியை பார்க்க அவனே புரையேறியதில் கண்ணில் நீர் வழிய அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். 

     ஹரிஷான்த் கே கே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஐஸ்வர்யாவை பார்க்க அவளோ உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.  

       நண்பர்களுக்கு அவள் அப்படி சொன்னாளா இல்லை தங்கள் காதில் தான் தவறாக விழுந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. 

     "ஐஸ் நீ இப்ப என்ன சொன்னாய்?.. என்றான் ஹரிஷான்த். 

    " என்ன சொன்னேன்?... "என்று திருப்பி அவனையே கேட்க

   " அதான் முரளியை பத்தி எதுவோ சொன்னாயே" என்றான். 

    " அதுவா நான் அவனை லவ் பண்றேன் என்று தோன்றியது என்றேன்" என்றாள். 

    " ஏய் நிஜமாகத்தான் சொல்லுறியா?..." என்றான் ஹரிஷான்த். 

     "இதில் கூட யாராவது விளையாடுவாங்களா?... " அண்ணா. 

      "அப்ப முரளிகிட்ட பிரபேஸ் பண்ணிட்டியா?... " என்றான் ஹரிஷான்த். 

     "அதான் இப்ப சொல்லிட்டேனே" என்றாள். 

    நண்பர்கள் இருவரும் முரளியை பார்க்க அவனோ பிரம்பை பிடித்தது போல அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். 

     " ஐஸ் நீ மட்டும் லவ் பண்ணா போதுமா அவன் உன்னை லவ் பண்ண வேண்டாமா?....  இல்லை அவன் வேறு யாரையாவது லவ் பண்ணா என்ன செய்வாய்" என்று கேட்டான் கே கே. 

    முரளி பார்த்து  "நீ யாரையாவது லவ் பண்ணுறியா முரளி" என்று கேட்டாள் ஐஸ்வர்யா. 

     அவன் தலை தானாக இல்லை என்று ஆடியது. 

    " அப்ப என்னை லவ் பண்ணு" என்று கூறிவிட்டு உணவில் கவனம் செலுத்தினாள். 

     முரளி திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தான். 

     அதை கண்ட ஹரிஷான்த் கே கே வாய்விட்டு சிரித்தனர். 

    " ஐஸ் உலகத்திலேயே யாரும் இப்படி பிரபேஸ் பண்ணி இருக்கமாட்டார்கள்" என்று கூறி நகைத்தான் கே கே. 

   கே கே வை பார்த்து முறைத்தாள் ஐஸ்வர்யா. 

      "பின்ன என்ன நீ கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் திரு திரு என்று முழிச்சிட்டு இருக்கான்." 

     " நீ  என்னவே லவ் கடையில் விற்கிற பொருளை வாங்கிறதை போல  ஃபீலிங்ஸ் இல்லாமல் லவ் பண்ணிடு என்று அவன்கிட்ட சொல்லுற" என்றான் கே கே. 

     "அதுவா அண்ணா  இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லையாம் அதனால் இன்னும் எனக்கு ஈர்ப்புக்கும் காதலுக்கு வித்தியாசம் தெரியாதாம்.  படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போய் வெளியுலகம் எப்படி என்று தெரிந்து கொள்ளும்போது எனக்கு வந்தது ஈர்ப்பா லவ்வா என்று தெரியுமாம் அதனால் அதுவரை மனசை அலைபாய விடாமல் படிப்பில் மட்டும் கவனம் இருக்கனும் என்று சொன்னாங்க" என்றாள். 

    " யாரு ஐஸ் சொன்னது?... " என்று கேட்டான் ஹரிஷான்த். 

     " அம்மாவும் அப்பாவும் தான் அண்ணா" என்றாள் ஐஸ்வர்யா. 

      அதை கேட்ட முரளி அதிர்ந்து எழுந்தேவிட்டான். 

   மற்ற இருவருக்கும் அதிர்ச்சி தான் யாராவது தோழிகள் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு அம்மா அப்பா என்றதும் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும். 

     " ஏய் என்னடி சொல்லுற அம்மா அப்பாவுக்கு தெரியுமா?..." என்றான் ஹரிஷான்த். 

      "தெரியும் ஏன்னா எனக்கு குழப்பமாக இருந்ததும் அவங்ககிட்ட தான் போய் சொன்னேன்.  அதை கேட்டுட்டு தான் அப்பாவும் அம்மாவும் அப்படி சொன்னாங்க அதனால் படிப்பு முடிக்கிறவரைக்கும் இவன் எனக்கு பிரண்ட் மட்டும் தான்" என்றாள். 

     " சுத்தம் நல்லா குழப்புறாடா பாவம் நம்பளுக்கே இப்படி இருக்கே அவனைப்பார் பேய்யறைந்தது போல் உட்கார்ந்துட்டு இருக்கான்.  வாழ்க்கை முழுவதும் இவளை வச்சு என்ன பாடுபடப்போறானோ" என்றான் கே கே.


Leave a comment


Comments


Related Post