இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -65 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-06-2024

Total Views: 5481




நந்தனின் கோவம் ஓரளவிற்கு மட்டுப்பட.. அவளை விலக்கி நிறுத்தினான்.

இதழின் ஓரம் ரத்தம் சிந்திக் கொண்டிருக்க.. அதை துடைத்து விட்டவன்.

“என்னைய மனுசனா இருக்க விடறதும் மிருகமா மாத்துறதும் உன் கையில தான் இருக்கு. இனி அவ சொன்னா இவ சொன்னானு உன் தகுதியை நீயே கீழே இறக்கிட்ட இன்னிக்கு கன்னம் பழுத்துருக்கு நாளைக்கு முகுது தோளை உறிச்சிடுவேன்.”

கன்னத்   தில் அமைத்த தடத்திற்கு விரல் என்ற வண்டியை செலுத்தி அழுத்தம் கொடுத்தான்.

“ஸ்ஸ்ஆஆஆஆ எரியுது.”

“ம்ம் ஆயில்மெண்ட் வாங்கிட்டு வந்தில அதை போடு.”

‘நான் ஆயில்மெண்ட் வாங்குனது இவனுக்கு எப்படி தெரியும்?’ என முழிக்க.

“உன்னோட ஒத்த முடி அசைஞ்சா கூட எனக்கு தெரியும்டி.” என்றவன் அவளை வளைத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து,

“சமத்தா இந்த நந்தனை மட்டும் நினைச்சிட்டு கல்யாணம் கனவு கட்டுட்டு இருந்தின்னா உனக்கு நல்லது இல்லனா..”

“அடி வெளுத்துடுவீங்க”

“பார்டா பிள்ள பூச்சி பேசுது.”

“எனக்கு நீங்கன்னா தான் பயம்..”

“மத்தபடி வாய் பேசுவ..”

“ம்ம்”

“அந்த யுகிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னேன் பயம் இருந்திருந்தா பேசியிருக்க மாட்ட..” என்றவனின் கை நெற்றில் ஊர்வலம் செல்ல, கன்ன எரிச்சலையும் தாண்டி கூச்சம் ஏற்பட்டது.

“நா..ன் ஒன்னு கே..க்..க..வா”

“ம்ம்”

“அது அது”

“உங்க பிளான் சக்ஸஸ் ஆனதும் என்னைய போக சொல்லிடுவீங்களா..?”

“மேபி”

‘மேபியா..!! என்னோட வாழ்க்கை இவனுக்கு மேபி ஆகிடுச்சா?' என மனதுக்குள் புலம்பியவள் வெளியே முகத்தை உர்ரெண்டு வைத்திருக்க,

“அது நீ நடந்துக்கறதைப் பொறுத்து இருக்கு.”

“என்ன நடந்துக்கனும்?” அவளுக்கு புரியவில்லை.

“நான் சொல்ற மாதிரிலாம் நடந்துகிட்டா எப்போவும் என்கூடவே இருக்கலாம்?”

“என்ன சொல்லுவீங்க?”

“ம்ம் சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு..”

“நான் போட்டுடுவேன்” என்றாள். மற்றவர்களிடம் அறிவாளியாக இருந்தாலும் நந்தனிடம் முட்டாள் தானே. அவன் அருகாமையில் வேறு எதையும் யோசிக்க முடிந்ததில்லை.

“லூசு” என அவளது தலையில் மெதுவாக கொட்டியவன். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை கிஸ் பண்ணனும்ன்னு சொன்னேன்ல..”

“ம்ம்”

“அது மாதிரி சில விஷயம் சொல்லுவேன் செய்யனும்.”

“அப்போ நீங்க செய்ய மாட்டிங்களா..?”என என்ன பேசுகிறோம் என தெரியாமலே உளறி வைக்க, நந்தனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.. ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

“ஐயோ!!!” என எட்டி அவன் வாயை மூடியவள், “மெதுவா சிரிங்க கீழே இருக்கறவீங்களுக்கு கேட்டுடும்.”

அவன் வாயை மூடிய உள்ளங்கையில் அழுத்தி இதழ் பதித்தான். சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள்.

“நைட் இங்கயே தங்கிடவா.”

“இங்கயேவா..??” என விழிகளை விரித்தவளை அப்படியே சுருட்டி தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“இங்க இருந்தா என்ன?”

“கல்யாணத்துக்கு முன்னாடி... எப்படி?”

“உன் கற்புக்கு எந்த பிரச்சனை வராதும்மா.”

“நீங்க போய்ட்டு காலையில வாங்களேன்.”

“ஆளு செம உஷாரு தான்..” என்றவன் நாளைக்கு காலையில பத்து மணிக்கு எனக்கு வேலை இருக்கு முடிச்சிட்டு கடைக்கு வந்தரேன் நீ  கடைவீதி வந்துரு உனக்கும் எனக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாம்.”

“தனியாவா.?”

“நம்ப படையைக் கூட்டிட்டு போவாமா?”

“ம்ம், நாளைக்கு மாங்கலியம் செய்யப் போறாங்க.”

“மண்டையில்லையே ஒன்னு போட்டுடுவேன் சொன்னதை செய்டி. அவங்க அவங்க பாட்டுக்கு எடுக்கறதை எடுக்கட்டும், நம்பக்கூட அவங்க வேண்டாம்.”

“ம்ம்.”

“என் நம்பர் இருக்குல்ல”

“ம்ம்”

“கால் பண்ணிக்கோ.”

“ம்ம்”

“சும்மா ம்ம் போடாம இறுக்கி அணைச்சி ஒரு உம்மா கொடு.”

“ஹும்ஹும்”

“ம்ம் ஹும்ஹுமா மாறிடுச்சா சொன்னதை செஞ்சா கிளம்புடுவேன் இல்லனா நைட் இங்க தான் ஸ்டேப் பண்ணுவேன் எப்படி வசதி.?”

'இவன் பேசவே மாட்டிக்கிறான்னு எல்லோரும் பீல் பன்றாங்க, என் கிட்ட மட்டும் பேசியே உயிரை வாங்குறான்.'

அவளே போய் அவனை அணைத்து கன்னத்தில் இதழ் பதிக்க அவன் உதட்டைக் காட்டினான்.

“ஹும்ஹும் உம்மான்னு தானே சொன்னிங்க.”

“உங்க ஊர்ல இதுதான் உம்மாவா?”

“ம்ம்”

அதற்குள் அழைப்பு ஒன்று வந்துவிட. எடுத்துப் பார்த்தவன் நிலா இருப்பதையும் மறந்து அங்கிருந்து தாவிக் குதித்து கீழே இறங்கி சென்று விட்டான்.

“என்ன இவரு போறப்ப போயிட்டு வரேன்னு கூட சொல்லாம போறாரு. போலீஸ்க்கு வாக்கப்பட்டா இது தான் கதி." என புலம்பியவளுக்கு அவன் போனதும் தான் கன்னம் வலித்தது.

“கையா அது இரும்பு ராடு.. ச்சை என்னமா அடிக்கிறான்? இவன் கிட்ட அடி வாங்குற அகியுஸ்ட்லா செத்துடுவாங்க போல..” என அவளது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் நேரமாகவே கிளம்பி கமிஷ்னர் அலுவலகம் சென்று விட்டான் நந்தன்.

“என்ன நந்தா இப்போ இப்படி சொன்னா எப்படி..?”

“எனக்கு தெரியாது அந்த பொண்ணு என்னோட குரூப்ல இருக்கக் கூடாது. ஒன்னு வேற குரூப் போடுங்க இல்லனா டிரான்ஸ்பர் பண்ணிக்கோங்க. அது இருந்தா நான் ஒர்க் பண்ண மாட்டேன் வேற ஆள் வெச்சி கேஸை முடிச்சிக்கோங்க. அப்பவும் நான் கலெக்ட் பண்ண டீடெயில்சை தர மாட்டேன்.”

“ஒரு மாசம் போகட்டும் பண்ணிக்கலாம்.” 

“நானும் ஒரு மாசம் கழிச்சி வேலையைப் பார்த்துக்கறேன்.”

“என்னடா இவ்வளவு அடமெண்டா இருக்க?”

“என் குணமே அது தான் முடியுமா? முடியாதா?”

“திடீர்ன்னு பண்ணுனா ஆயிரம் கேள்வி வரும் டா.”

“பதில் சொல்லுங்க ஐ டோன்ட் கேர். நீங்களா மாதிட்டா டிரான்ஸ்பர் தான் ஆகும், நானா இறங்குனா கை காலை உடைச்சிடுவேன்.”

“நந்தன் எப்போ பொண்ணுங்க மேல கைய வைக்க ஆரம்பிச்சான்.”

“இதுவரைக்கும் நான் கை வெச்சது ஒருத்தி மேல மட்டும் தான், அந்த ஒருத்திக்காக எவ மேல வேணும்னாலும் கையை வைப்பேன் அந்த நிலைமை உருவாகாம பார்த்துக்கோங்க.”

“டேய் ரொம்ப வாலு பண்றடா, அவ என்னோட வைப்க்கு தூரத்து சொந்தம்.”

“எந்த சொந்தமா இருந்தாலும் அது உங்கப்பாடு. முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லுங்க.”

“சரி பன்றேன் பண்ணித் தொலையறேன் வேற வழி.”

“உங்க பொண்டாட்டிகிட்ட அடி வாங்கவும் தயாராகிடுங்க.” என மெலிதாக சிரிக்க.

“சிரிப்படா இன்னும் ரெண்டு வாரம் தானே அதுக்கு அப்புறம் என் கதி தான் உனக்கும், நியாபகம் வெச்சிக்கோ.”

அவர் சொன்னதும் நிலா நந்தனை புரட்டிப் போட்டு அடிப்பது போல் நினைத்துப் பார்த்தான்.

இவ்வளவு நேரம் கடுகடுவென்றிருந்த முகம் மென்மையாக, ”அதுக்கு வாய்ப்பில்லை அப்படி நடந்தா அதை ரசிக்கிற முதல் ஆள் நானா தான் இருப்பேன்.” என்றான்.

அவன் முகம் மாற்றமே இவ்வளவு நாள் தாம்பத்திய வாழ்க்கையில் இருந்தவருக்கு உணர்த்த,

“ம்ம் பார்க்க தானே போறேன். கல்யாணத்துக்கு அழைப்பு இருக்கா.?”

“கண்டிப்பா. பத்திரிக்கை வரட்டும் அப்பாவை நேர்ல வந்து வைக்க சொல்றேன். இப்போ எனக்கு லீவ் வேணும்.”

“புது மாப்பிள்ளை எங்க போறீங்க?”

“கல்யாணத்துக்கு முன்னாடி அவுட்டிங் போகனும்ல அதான்..”

“யூனிபார்மோட போயிடாதப்பா..”

“பார்க்கலாம்” என நிலாவைப் பார்க்க சென்று விட்டான்.

நேற்று நிலா சொல்லும் போதே சரஸ்வதியை வெட்டி கூறுப் போடும் அளவிற்கு கோவம் வந்தது. எவ்வளவு தைரியம் இருந்தா விபசாரக் கேஸ்ல உள்ளே தள்ளுவேன்னு சொல்லிருப்பா. அவளை எதுவும் செய்யாமல் விட்டால் அவன் நந்தன் இல்லையே.

அவன் தொட்டு அடிக்கும் பெண் என்றால் அது நிலா மட்டும் தான். அவன் வண்டியில் இப்போது வரைக்கும் சென்றப் பெண்ணும் நிலா மட்டும் தான். வேறு யாரையும் விளையாட்டிற்கு கூட அவனாக சென்று அடித்தது இல்லை. இன்று சரஸ்வதியை அடிக்கவும் அவனுக்கு வெகுநேரம் ஆகியிருக்காது. அதை செய்ய விருப்பம் இல்லாம கமிஷனரிடம் சொல்லி இடம் மாற்றச் சொன்னான். உரிமை இல்லாத இடத்தில் அவனின் எந்த உணர்வும் பிரதிபலிக்காது.

நந்தன் கடைக்குப் போக அவனுக்கு முன்பு நிலா அங்கிருந்தாள்.

கன்னத்தின் வீக்கம் இன்னும் குறையாமல் இருக்க. அதைப் பார்த்துக்கொண்டே வண்டியை விட்டு இறங்கிவன்.

“என்ன ஆயில்மெண்ட் போட்டும் வீக்கம் குறையில போல..”

“ம்ம்”

“என்கிட்ட வேற டிரீட்மென்ட் இருக்கு பண்ணவா.?”

“இதுவே சரியாப் போய்டும்.”  'அடிச்சிட்டு கேள்வியைப்பாரு.'

“நைட் வரேன். வந்து மருந்து போட்டு விடறேன்.”

வேண்டாம் என்று சொன்னால் மட்டும் விட்டு விடவாப் போகிறான் என அமைதியாகி விட்டாள்.

“சாப்புடியா?”

“ம்”

“நான் சாப்பிடல”

“சாப்பிடுங்க”

“ஊட்டி விடு”

“என்னது?” என அதிர்ச்சியானவள்.. சுற்றி அனைவரையும் பார்த்துவிட்டு, “சுத்தி ஆள் இருக்காங்க” என்றாள் மெதுவாக.

“மண்டபத்தில அவனுக்கு மட்டும் ஊட்டி விட்ட அப்போ ஆள் இல்லையா?”

‘இதை எப்போடா பார்த்தான்.. இவனோட ஒரே ரோதனையா போச்சிப்பா..’

“முடியுமா? முடியாதா?”

‘சத்தமாக பேசிப் பழகு நிலா இல்லனா இவன் உன்னைய தூக்கி சாப்புட்டுப் போயிடுவான்.’

“முடியாது” என ஒரு வேகத்தில் சத்தமாக சொல்லி விட்டாள்.

“எங்க என்னய்யப் பார்த்து சொல்லு.”

“ப்ளீஸ்ங்க இங்க ஆளுங்க இருக்காங்க, நமக்கான சின்ன சின்ன விசியத்தைக் கூட வெட்ட வெளிச்சமாகிட்டா நமக்குன்னு பர்சனலே இல்லாம போய்டும்.” என அவள் பக்கம் இருப்பதை உறுதியாக சொல்லி விட்டாள். நந்தனின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“சரி இப்போ வேண்டா நைட் வரும் போது உன் கையாள சமைச்சி ஊட்டி விடற.”

“இது வேறையா ம்ம் இப்போ விட்டானே அதுவரைக்கும் சந்தோசம்.” என நினைத்து அவன் சொன்னதற்கு மண்டையை மண்டையை ஆட்டினாள்.

அதன்பிறகு நிலாவிற்கு முகூர்த்த புடவையை நந்தனுக்கு பிடித்த மாதிரி வரைந்து அதை நெய்ய சொல்லி ஆடர் கொடுத்து விட்டு அதேக் கலரில் அவனுக்கும் உடை எடுத்து டிசைன் பண்ணச் சொன்னான்.

மொத்தம் மூன்று புடவை, இரண்டு லெகங்கா நிலாவிற்காக பார்த்து பார்த்து வாங்கியிருந்தான்.

இது நாள் வரையிலும் உடை எடுப்பதில் பெரிய ஆர்வம் காட்டியதில்லை நிலா. ஒன்று வளவன் எடுப்பான் இல்லையா யுகி எடுப்பான் இன்று நந்தன் எடுக்கிறான்.

ஆண்கள் மூவருமே அவளை ஒட்டுண்ணியாக ஒட்டி இருக்கிறார்களோ இல்லையோ இவள் அவர்களை ஒட்டி தான் தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

இவர்கள் மூவரும் இல்லை என்றால் அவளின் நிலை..

“டேய் அவளை போடச் சொன்னேனே ஏண்டா இன்னும் போடாம இருக்கீங்க?”

“நம்ப ஆளுங்க போடப் போயி தான் அந்த நந்தன் கையில மாட்டி இப்போ ஜெயில்ல இருக்காங்க.”

“அவளைப் போட ஆள் அனுப்புனா, அனுப்புன ஆளைப் போட இப்போ ஆள் அனுப்பனும் போல..”

“வேண்டா அவங்க விசுவாசமானவீங்க தான் எந்த சூழ்நிலையிலும் நம்ப பேரை சொல்ல மாட்டாங்க.”

“அதுக்காக ரிஸ்க் எடுக்க முடியாது.”

“இப்போ நந்தன் நம்பலை கண் கொத்தி பாம்பா வாட்ச் பண்ணிட்டு இருக்கான். இந்த சமயம் ஏதாவது பண்ணி மாட்டிக்கக் கூடாது.”

“ம்ம் சரி அவளையாவது போடுங்க. எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்கக் கூடாது."

“போட்டுருலாம். நந்தன் கொஞ்சம் அசரட்டும் ஜோலியை முடிச்சிருவோம்.”

“சீக்கிரம் முடிக்கப் பாருங்க.” என கணீர் குரலில் கத்திவிட்டுச் சென்றான்.

ஆம் அன்று போட வந்தது நிலாவை தான்.. எறும்பு தன்னை கடித்தால் கூட கடித்த இடத்தை ஓங்கி அடித்தால் எறும்பு செத்துவிடும் என நினைக்கும் நிலாவிற்கு உயிர் எடுக்கும் அளவிற்கு எதிரி இருந்தான்.

அது வேறு யாருமில்லை ரோகன் தான்.

ரோகன் முன்னாள் அமைச்சர் சூர்யாராஜின் ஒரே புதல்வன்.

பல கொலை வழக்குகள் அவன் பெயரில் நிலுவையில் இருக்க.. அவன் பெங்களூரு சென்றிருக்கும் போது தான் நிலாவைப் பார்த்தான்.

அவள் அழகில் மயங்கி காதலிக்க ஆரம்பித்து விட்டான் என பொய்யலாம் சொல்ல மாட்டேன்.



Leave a comment


Comments


Related Post