இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -66 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-06-2024

Total Views: 5385

சூர்யாராஜ் அரசியலில் இருக்கும் போது. அவருக்கு எதிரிகள் இல்லாமல் இருக்குமா? எப்போதுடா சிக்குவான் அவனை கிழித்து தோரணம் கட்டுவோம் என காத்திருக்கும் எதிர்கட்சி ஆளிடம் சூர்யாராஜ் செய்த கொலை, கொள்ளைகளில் மொத்த ஆதாரமும் கிடைத்துவிட்டது.

மகனும் தந்தையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொலை செய்வதில் வல்லவர்கள்.

உடனே அவன் கிடைத்ததை போலீசிடமும் தராமல், மீடியாவிடமும் சொல்லாமல் சூர்யராஜிற்கே அழைத்தான்.

“ஹெலோ சார்.. நான் விவேக் பேசறேன் ------- மாவட்ட செயலாளர்.”

“ம்ம்”

“உங்களோட பிராடுத்தனத்தை எல்லாம் பைல்லு போட்டு வெச்சிருந்த இடத்தை இப்படியா எல்லோருக்கும் தெரியுற மாதிரி வெச்சிருப்பிங்க. "

“டேய் என்னடா சொல்ற.? என்ன பிராடுதனம் தம்பி இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேசக்கூடாதுப்பா கிளம்பி நேர்ல வா பேசிக்கலாம்.”

“டேய் நீ கொலைப் பண்ணதுக்கான எவிடன்ஸ் வெச்சிருக்க எவனாவது உன்னைய நேர்ல வந்து பார்ப்பானாடா..”

“தம்பி நீங்க வெச்சிருக்கீங்கன்னு நான் எப்படி நம்பறது?”

“உன் போனுக்கு ஒரு சாம்பில் அனுப்பறேன் பாரு.” என கோப்பை புகைப்படம் எடுத்து அனுப்பினான்.

அதைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டார் சூர்யராஜி.

“ஒழுங்கா எடுத்ததைக் கொண்டு வந்து கொடுத்துரு..”

“இல்லனா என்ன பண்ணுவீங்க? உங்க குடுமி என் கையில எக்ஸ் மினிஸ்டரே. ஒழுங்கா பாதிக்கு பாதி ஷேர் கொடுக்கறேன்னு சொல்லுங்க. நான் எடுத்ததைக் கொண்டு வந்து கொடுத்தறேன். பாதியாவது மிஞ்சும், அதில்லாம நாலு கொலை வேற பண்ணி வெச்சிருக்கீங்க.. எவிடன்ஸ் ரெடி பண்ணிட்டு கொலைப் பண்ற ஆள நீங்களா தான் இருப்பிங்க.”

“சரி தரேன் எங்க வரணும்.”

“நீங்க வர வேண்டா நானே இடம் சொல்றேன் அப்புறம் வந்தா போதும்.”

“சரி” என்றவர் ரோகனை அழைத்து அவன் இருக்கும் இடத்தை தேடச் சொன்னார்.

அவனும் தேடிக் கண்டுபிடித்த இடம் தான் பெங்களூர்.

“பெங்களூருல போய் ஒளிஞ்சிருக்கான்ப்பா."

“அவனை விட்டுராத ரோகன், தேடிப் பிடிச்சி போட்டுரு.. அவன் கிட்ட  இருக்குற எவிடன்ஸ் ரொம்ப முக்கியம், கொலை பண்ணுன பென்ட்ரைவ் ஒவ்வொன்னையும் செக் பண்ணி வாங்கிட்டு அவன் கதையை முடிச்சிடு, அவன் மட்டும் தப்பிச்சிட்டா கண்டிப்பா நம்ப மாட்டிப்போம்.” 

“ம்ம் சரிப்பா” என்றவன் அவன் அடியாட்களுடன் பெங்களூருவிற்கு சென்றனர்.

விவேக் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தவன். அவன் ஆட்களை விட்டு மிரட்டிப் பார்த்தான்.

விவேக் அடிப்பணிய மாட்டேன் என்று விட, அவனை கொன்றாவது ஆதாரங்களை கைப் பற்றி வேண்டும் என வெறியாகினான்.

“ரோகன்”

“சொல்லுண்ணா”

“வெளியே போலீஸ் நிற்குது இப்போ இவனை போட்டினா சேப்பில்ல.”

“ம்ம் நாளைக்கு போடறதுக்குள்ள நாயி எங்கையாவது ஓடிடும்.”

“கட்டிப் போட்டு வை, நாளைக்கு பேசிக்கலாம்.” என அங்கிருந்து  ரோகனை அழைத்து வந்து விட்டனர் ஆட்கள்.

ஆனால் அடுத்த நாளே தன் அடையாளங்களை மறைத்து விவேக்கை வெட்டி சாய்த்திருந்தான்.

ரவுடி என்றாலே அருகில் செல்ல அனைவரும் பயப்படுவார்கள் இதில் கொலை வேறு செய்திருக்கிறான் பயப்படாமல் இருப்பார்களா...?

விவேக் தங்கியிருந்த இடம் நிலாவின் தோழி கயல்விழியின் வீட்டின் அருகில் இருக்க, தன் தோழியைப் பார்க்கப் போன போது தான்  விவேக்கை ஓட ஓட வெட்டி சாயித்திருந்தனர்.

“ஏண்டி என் உயிரை வாங்குற.. காலேஜ் போனோமா? படிச்சமான்னு வர வேண்டியது தானே..”

“அம்மா... அவன் கொலைப் பண்ணிருக்கான் பார்த்துட்டு எப்படி வர சொல்ற..?”

“அதுக்குன்னு கொலைப் பண்ணவனையே அடிப்பியா..? அதான் அந்த போலீஸ்காரர் சொன்னாருல அவனோட அப்பன் மினிஸ்டர்ன்னு வம்பு வேணா போய்டுங்கம்மான்னு சொல்லிருக்கார்ல, ஏண்டி எழவெடுத்தவளே கேக்காம என் உயிரை வாங்கற. உன்னால வளவனுக்கும் பிரச்சனை..”

“அம்மா அம்மு பண்ணதுல என்ன தப்பு? கொலைப் பண்ணிருக்கான் எல்லார் மாதிரியும் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க முடியுமா..?”

“ஆமாடா தங்கச்சின்னதும் சொம்பு தூக்கிட்டு வந்துடு விடிஞ்சா திருப்பூர் போகணும்.. இப்போ கோர்ட் கேஸ்ன்னு அலைய முடியுமா?”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பார்த்துக்கலாம். விடுங்க”

“தம்பி”

“சொல்லுங்க”

“எதுக்கும் நந்தன் தம்பி போலீசா இருக்குல்ல அதுகிட்ட ஒருவார்த்தை..”

“அம்மா... “ மகன் மகள் இருவருமே ஒருசேரக் கத்த.

“என்னமோ பண்ணித் தொலைங்க நான் சொல்றதை எங்க கேக்கப் போறீங்க?” என்றவருக்கு மகள் செய்து வைத்திருக்கும் வேலையை நினைத்து உடல் நடுங்கியது.

தன் தோழியின் வீட்டிற்கு சென்று வருகிறேன் என போனவள் நடு ரோட்டில நடந்த கொலையை தட்டிக் கேக்கிறேன் பேர்வழி என்று கொலை செய்தவனை கன்னத்தில் அறைந்து அவனுக்கு எதிராக சாட்சி சொல்லுவேன் என்று வேற கத்திவிட்டு வந்திருக்கிறாள்.

அவள் கத்தும் போதே அங்கு போலீஸ் வந்துவிட்டது இல்லை என்றால் நிலாவையும் ஒரே சொருகாக சொருகியிருப்பான்.

போலீஸ் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று ஓடியவனின் மனதில் நிலாவின் முகம் ஆழப் பதிந்துவிட்டது.

அவனை அடித்தவளை கறுவருக்காமல் விடக்கூடாது என வெறியுடன் தான் அங்கிருந்து ஓடினான்.

“ஏம்மா இங்க என்னமா பண்ற?” என்றார் கான்ஸ்டபிள்.

“ம்ம் வடைப்பாயசத்தோட சோறுப் போடுவாங்களான்னு பார்த்துட்டு இருக்கேன். என்ன சார் கேனத் தனமா கேள்வி கேக்கறீங்க.. ஒருத்தன் இத்தனை பேருக்கு முன்னாடி கொலைப் பண்ணிட்டு தப்பிச்சி ஓடுறான் அவனைப் புடிக்காம என்கிட்ட வந்து என்ன பண்ற நொண்ணப் பண்றன்னு கேக்கறீங்க.?”

“அவன் பெரிய அரசியல்வாதியோட பையன்ம்மா"

“அதான் யாருன்னு தெரிஞ்சிருக்குள்ள போய் புடிங்க.”

“நான் புள்ளைக் குட்டிக்காரம்மா..”

“அப்போ நீங்க இந்த வேலைக்கே வந்துருக்கக் கூடாதும்மா..” என்றவள், “அவன் யாருனு மூஞ்சை பார்க்கல, ஆனா அடியாளம் காட்ட சொன்னா காட்டுற அளவுக்கு நியாபகம் வெச்சிருக்கேன். எங்க வேணாலும் வந்து சாட்சி சொல்றேன் நீங்களா கேஸ் போடறீங்களா? இல்ல நான்தான் கம்பளைண்ட் கொடுக்கணுமா.?”

“இந்த ஏரியா ஸ்டேஷன்ல தான் கம்பளைண்ட் கொடுக்கணும். நீ போம்மா நாங்க பார்த்துக்கறோம்.”

“என்ன பாப்பீங்கன்னு தான் பார்த்தேனே.” என்றவள் இறந்து கிடந்த ஆளை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டேப் போனாள்.

“சார் அந்தப் பொண்ணு”

“சொல்லியும் கேக்கலையா?”

“ஆமா சார். அவனை எதிர்த்து சாட்சி சொல்றேன்னு சொல்லுது.”

“சொல்லட்டும்”

“அப்பறம் எதுக்கு சார் என்னைய போய் தடுக்கச் சொன்னீங்க?” என்ற கேள்வியில் எதிரியில் இருந்தவன் புன்னகைத்துக் கொண்டான். அது நந்தனே தான்.

ரோகன் விவேக்கை கொலைச் செய்யப் போகும் விஷயம் யார் மூலமோ கமிஷனருக்கு தகவல் வந்திருந்தது.

“நந்தா..”

“சொல்லுங்க சார்.”

“இந்த முன்னாள் அமைச்சர் சூரியராஜோட கேசை முடிச்சி விடச் சொல்லி இப்போ இருக்க அமைச்சருங்க பிரஷர் பன்றாங்கப்பா.”

“அவ்வளவு சீக்கிரம் முடிக்கிற கேஸ் இல்ல சார் அது. அவர் நிறைய கொலை பண்ணிருக்காரு அவருக்கு எதிரா ஒரு சாட்சி இல்ல.”

“இப்போ ஒருத்தன் சாட்சி வெச்சிருக்கேனு சொல்லி போன் பண்ணான். ஆனா அவனை நாளைக்கு பெங்களூருல வெச்சிப் போடப்போறதா சொல்லிக்கிறாங்க.”

‘போடட்டுட்டும் சார்.”

“என்ன நந்தா அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட?”

“இவங்களா என்ன தியாகியா சார்? மக்களை சுரண்டி பொழைக்கறது  எப்படிங்கறதுல பிஎச்டி படிச்சவீங்க தானே சார். இவன் நாலுக் கொலைப் பண்ணிருக்கானா அவன் ரெண்டாவது பண்ணிருப்பான் தானே.”

“அதுக்குன்னு என்ன வேணா நடக்கட்டும்ன்னு நம்ம இருக்க முடியாது நந்தா. நம்ப கண்ட்ரோல்ல வந்துருக்கு. இந்த தடவை எலெக்ஷன் முடியறதுக்குள்ள சூர்யராஜூம் அவன் பையனும் பண்ண கிருமினல் வேலையை கண்டுபிடிச்சிடனும் இல்லனா எலெக்ஷன்ல ஜெயிச்சிட்டா நம்மளால எதுமே பண்ண முடியாம போய்டும். அதுக்கு ஒரு வாய்ப்பா இருக்கறவனை சாக விட்டுட்டோம்னா நம்ப நினைச்ச மாதிரி நடக்க வாய்ப்பில்லை.”

“அவனுக்கு எதிரா ஒரு ஆதாரம் கிடைக்கட்டும் வெச்சி செஞ்சிடறேன் சார்.”

“அதுக்கு தான் நந்தா இப்போ நீ பெங்களூரு போகணும்.”

'என்னது பெங்களூரா.?அங்க அந்த ராங்கி இருப்பாளே சொல்லாமக் கூடப் போனாள அவ ஊருக்கு நான் போறதா?' என்ற கோவம்  முனுக்கென்று வர.

“வேற ஆளை அனுப்புங்க சார். என்னால போக முடியாது.” என்றான் பட்டென்று.

“இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல நந்தா. நீ இந்த ஜாப்க்கு பர்பெக்ட்டா இருப்ப. நமக்கு காரியம் தான் முக்கியம்.”

“எந்த ஏரியா? “

“-------- பிளாட்ல தான் அந்த விவேக் இருக்கிறதா சொன்னாங்க.”

“அங்கையா.?”

“ஏன் நந்தா உனக்கு அங்க யாரையாவது தெரியுமா?”

“தெரியாது.”

“ம்ம் சரி" என்று நந்தனுடன் ஒரு கான்ஸ்டபிளையும் பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு வந்து தான் நிலா அவனை அடித்ததைப் பார்த்தான்.

ரோகன் விவேக்கை கொலை பண்ணிறக் கூடாது என நினைத்திருந்தால், நந்தனால் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும். ஆனால் அவன் அதை செய்யாமல் தூர நின்று வேடிக்கைப் பார்க்க. ரோகன் விவேக்கை குத்திவிட்டான்.

சுற்றி நின்றவர்கள் யாரும் தடுக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரையிலும் தனக்கு எதற்கு வீண் வம்பு, எவன் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைவது இந்த அவசர உலகத்துல கீழே விழுந்தவர்களை தூக்கி விடவே ஆள் இல்லாத போது, கொலையை தடுக்கவா முன் வருவார்கள்.

நந்தன் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க பளார் என  கன்னம் கிழியும் சத்தம் கேட்டது.

'யாருடா அது..?' என வியப்பில் தான் பார்த்தான். அது நிலாவாக இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

“அட இது நம்ப லிஸ்ட்லையே இல்லையே. பூனை எப்போ புலியாச்சு..”

நந்தன் சொல்வது போல தான் நிலா பெண் புலியாக சீறிக் கொண்டிருந்தாள்.

“கான்ஸ்டபிள் அண்ணா"

“சொல்லுங்க சார்.”

“அந்த கத்திரிக்கா கிட்ட போய் இவனோட பூர்வீகத்தை சொல்லி ஓட விடுங்க பார்ப்போம்.”

“இதோ போறேன் சார்” என நிலாவிடம்  போக.. அதற்குள் போலீசைப் பார்த்த ரோகன் ஓடி விட்டான்.

நந்தன் சொன்னதை அந்த   கான்ஸ்டபிளும் நிலாவிடம் சொல்லி நாலு வாங்கிக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

“சார்...”

'குட்டச்சிக்கு வாயும் கையும் நீண்டு போச்சுப் போல.. ம்ம் பார்க்க நல்லா தான் இருக்கா..' என நினைத்துக் கொண்டான்.

அதற்கு பிறகு நந்தன் செய்த வேலைகள் ஏராளம்.

ரோகனுக்கு எதிராக சாட்சி சொல்ல யாருமே முன் வரவில்லை. இந்த கொலை மட்டும் அல்ல இதுப் போன்று பலக் கொலைகளை செய்யும் போது அவனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல வரமாட்டேன் என்றுவிட.. வழிய வந்து தலையைக் கொடுத்தது பாடிசோடா.

“அந்த கொலைக்கு நான்தான் சாட்சி, நான் சாட்சி சொல்லுவேன், எந்த கோர்ட்க்கு வரவும் ரெடி." என ராஜிக்கு தெரியாமல் பூனை வேலைப் பார்த்து வைத்திருந்தது.

நிலா, சாட்சி சொல்லும் வரை அவளை பாதுக்காக்க தான் இந்த கல்யாணம். அப்படி தான் கமிஷனரிடம் சொல்லி வைத்திருக்கிறான். இனி யார் கேட்டாலும் அவன் பதில் இதுதான்.



Leave a comment


Comments


Related Post