இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 26-06-2024

Total Views: 2202


பாகம்-19
 சில நாட்கள் கடந்திருந்தன. அன்று நிரஞ்சனா பிரதீப்பிடம் பேசவில்லை என்றாலும் மறு நாள் விடியலில் கால் செய்தாள்.
"என்ன எங்கையாவது  கூட்டிட்டு போ"
வந்து நின்றான் பிரதீப் தனது  புது கேடீஎம் பைகோடு. 
முதலில் அவன் ஓட்டினான். பிறகு அவள் மாற்றிக் கொண்டாள். அவளுக்கு மனம் வேதனையில் இருக்கும்போது இதுபோலப் பைக்கில் செல்வது மிகவும் பிடிக்கும். ஆனால் தந்தையின் இறப்பிற்குப்  பிறகு தனியாக  வண்டி ஓட்டக் கூடாது என்று பூரணி சொன்னதால் அவள் பைக்கை பாஸ்கரிடம் கொடுத்துவிட்டாள். இப்போது அவன் வைத்திருக்கும் அப்பாச்சி இவளுடையது தான். மற்ற பெண்களைப் போல ஸ்கூட்டி ஓட்டும் ரகம் தான் இவள் இல்லையே!  இதோ அவனுடைய வண்டி ஈசியார் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தது. மனம் முழுவதும் கவலை நிறைந்திருந்தாலும் அவளுக்குப் பிடித்த விஷயத்தை ஆர்வத்துடனே செய்வாள். மனம் லேசானது போல இருந்தது. மீண்டும் கொண்டு வந்து வீட்டில் விட்டான். அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள். அவன், அவள் கைகளை இறுக்கிக் கொண்டான்  இப்போதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். இருப்பினும் தோழிக்குத் தோள்  கொடுப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். 
"சரி! எழுந்திரு. கிளம்பு ஆபிஸ் போகணும். 
"போடா இன்னிக்கு சண்டே "
அப்போது தான் நினைவு வந்தவனாய்,
"ஓ! சாரி! ஸாரி! "
"என்னடா உன்னோட கடைமைக்கு ஒரு அளவே இல்லையாடா?"
அமைதியாகவே இருந்தான்.
"அது சரி சண்டே கூட ஆபிஸ் போகற  அளவுக்குச் சாருக்கு என்ன விஷயம்? ஏதாவது மேட்டரா ? கீழ் உதடு மடித்து இடுப்பில் கை  வைத்துக் கேட்டாள்.
"ம்! எஸ்"வெட்கபட்டுக் கொண்டே சொன்னான்.
"என்னடா சொல்லற? அவளுக்கு உண்மையிலேயே அதிர்ச்சிதான்.
"ஆமாண்டி நான் புதுசா ஒரு பிகர சைட் அடிக்கறேன்" கண்ணடித்துக் கொண்டே சொன்னவனைப் பார்த்து வாய் பிளந்தாள் நிரஞ்சனா.
"அடப் பாவி!  ஒரு நாலு நாள் உன்கிட்ட நான் சரியா பேசலைன்னா அதுக்குள்ள ஒரு பிகர கரக்ட் பண்ணிடுவியா நீ ?
"எங்க பார்த்த ? பேரு என்ன? என்ன பண்ணறா? "
" தினம் பஸ் ஸ்டாப்புல தான் பாக்கறேன். பேரு  ஊரு எல்லாம் அப்புறமா சொல்லறேன்" அவள் மூக்கின் நுனியில் லேசாகத் தட்டினான்.
"எப்ப? உங்க குழந்தைங்களுக்கு பேரு வைக்கும்போதா ?"
"மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல சாப்பாடு மிக முக்கியம் அமைச்சரே" உள்ளிருந்து பூரணியின் குரல் வந்தது.
"பெரியம்மா! நான் அமைச்சர் இல்ல. எங்க  அப்பா தான் அமைச்சர்"
"சரி! வருங்கால அமைச்சர், துணை முதல்வர், முதல்வர்.பிரதமர்  என்ன வேணுமோ போட்டுக்கோ "
"அது சரி நான் நல்லா  இருக்கறது உங்களுக்குப் புடிக்கலியா?"
"ஏம்பா? நான் சொன்னதுல என்ன தப்பு?"
"அம்மா!  அவன்  அரசியல் பக்கம் போகக் கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கான். தெரியாதா  உனக்கு?"
"அது அப்பச் சொல்லிக்கிட்டு இருந்தான் சரி. இப்பவுமா?
"எப்பவுமே அதான்"
"ஏய் பன்னி!  என்னோடது தொடாத. நிரஞ்சனா  கையிலிருந்து தனது  பூரியை பிடுங்கிக்  கொண்டான்"
"சீப்பே  அல்ப"
திட்டி விட்டுக் கைக்கழுவிக் கொண்டாள்.
"அவளே அவனிடம், ரொம்ப தேங்க்ஸ் டா! இப்பதான்  மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்சா இருக்கு.
"அது சரி! என்ன பிரச்சனைன்னு மட்டும் சொல்ல மாட்ட"
"நீ அந்தப் பொண்ணோட பேரு  சொல்லு. நானும் என்னோட பிரச்சனை சொல்லறேன்" கிடுக்கிப் பிடி போட்டாள்.
"அது சரி. எதுக்கு வீட்டுல சொல்லி மாட்டி விடவா?அது மட்டும் இல்லாம நான் எத்தனை  விஷயம் சொன்னாலும் நீ உன்னோட விஷயம் சொல்லவே மாட்ட. ஏன்னா  உன்னோட குடும்ப விஷயம். காதலிச்சாலும் சொல்ல மாட்ட. கைக்கலப்புன்னாலும் சொல்ல மாட்ட. உன்னோட அவரு பத்தின விஷயம்.எதுவுமே உன்கிட்ட இருந்து வாயில வராது "
"அப்படி இல்லடா. இன்னும் எங்களோட விஷயம் ஒரு முடிவுக்கே வரல. அப்புறம் எப்படி டா நான் உன்கிட்ட வந்து சொல்ல முடியும். நீ எந்த அளவுக்குச் சிரிச்சு பேசறியோ அந்த அளவுக்குக் கோபத் காரன். பாஸ்கருக்கே  உன்ன பார்த்தா பயம். அப்புறம் நா எப்படி மனசு விட்டு உன்கிட்ட சொல்ல முடியும்?"
"அப்ப  உன்னோட அழுகைக்கு அவரு தான் காரணம் கரெக்ட்டா?" சரியாக நூல் பிடித்துவிட்டான் 
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கா  எப்ப தோணுதோ சொல்லட்டும். விடு அவளை "
"அம்மா கரெக்டா பொண்ணுக்கு சப்போர்ட் பண்ண வந்துடுவீங்களே?"
"நான் மட்டுமில்லடா. உங்க அம்மாவும் அப்படித்தான்"
"ஆமா ! சித்தப்பா ஏதாவது ஒரு வார்த்தை பையனைச் சொன்னாலே பாய்ந்து  வந்துடுவாங்க சித்தி. நமக்குத் தெரியாதா ?".
கிண்டலடித்துக் கொண்டே நீரு  சமையல் அறையைச் சுத்தம் செய்தாள். தட்டைக் கழுவி, டம்பளரில் நீர் வைத்துப் பெரியம்மாவின் அருகில் அமர்ந்து  கதை அளந்துக் கொண்டு செய்திருந்த பூரியை பூரணியை  உண்ண  வைத்தான் பிரதீப்.
சில நாட்களாகப் பொழுது சரி இல்லை என்றாலும் அன்றையபொழுது நன்றாகவே முடிந்தது.
=========================================================================
மறுநாள் மாலை  பாஸ்கர் க்ளயண்டை பார்த்து விட்டு வரும் வழியில் பவித்ரா  பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தாள்.
"என்ன எப்ப பார்த்தாலும் நீ இப்படியே தெரு தெருவா பஸ் ஸ்டாப்புல தான் நிப்பியா?
'நீங்க என்ன இப்படித்தான் தெரு தெருவா சுத்திகிட்டு இருப்பீர்களா?" பதில் கேள்வி கேட்டாள். அனால் பதில் சொல்லவில்லை.
"என்ன வாய் ரொம்ப நீளுது?"
"சாரி"
"என்ன ஆச்சு? எதுக்கு இங்க நிக்கற?மழை  நேரம் வேற? ஏறு வீட்டுல விட்டுடறேன்.
மெதுவாக அவனைப் பிடித்துக் கொண்டு இரு பக்கமும் காலைப் போட்டு ஏறிக் கொண்டாள். இருவருக்கும் நடுவில் புத்தகப் பையை  வைத்துக் கொண்டாள்.
அவள் வீட்டிற்கு சற்று தோற்றம் செல்லுமுன் திரும்பும் வழியில் இருக்கும் பீடிக் கடையில் தொங்க விட்டிருந்த போஸ்டரைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.
பிரபல தொழில் அதிபர் ராஜவேலு வெட்டிக் கொலை. கொலை செய்த வீட் டு வேலைக்காரன்  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண்.
"வண்டியை மெதுவாக்கியவன், இந்தா உங்க அண்ணிக்கு  கால் பண்ணு "
அவள் போனில் பேச ஆரம்பிக்கும் முன் அவள் வீட்டில்  இருந்தாள்  பவித்ரா.
"ஏ நீரு!  நியூஸ் பார்த்தியா ?"
"இல்லையே!"
"ராஜவேலுவை கொன்னுட்டாங்களாம்"
பவித்ரா வீட்டு வாயிலில் அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லக் காத்திருந்தாள். அவனோ போனில் பேசிக் கொண்டே அவசரமாகச் சென்று  விட்டான். 
பவித்ராவின் முகம் வாடி இருந்தது.
"என்னடி என்ன ஆச்சு? பைகுலாயா வந்த?  செந்திலா வந்துருக்கான்? கேட்டுக் கொண்டே வந்த தாயிடம் விஷயத்தைச் சொன்னாள்.
"பாஸ்கர் சார் கூடத்  தான் வந்தேன். ஆனா அண்ணிகிட்ட கவலையா பேசிகிட்டே கிளம்பிட்டாரு.யாரோ தொழிலதிபர் ராஜவேலுவை கொன்னுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். எனக்குப் பாய் கூடச் சொல்லல, அப்படியே கிரளம்பிட்டார்."
"அப்டின்னா ரொம்ப வேண்டியவராக இருக்குமோ?" கவலை ஆனார் மீனாட்சி.
"அப்ப அண்ணிக்கு நம்ம உதவி தேவைப்படுமா?" கவலையுடன் கேட்டாள்  பவித்ரா. 
"சரி! நாமளா எதுவும் யோசிக்க வேணாம். நாளைக்கு அண்ணிக்கிடையே கேட்டுடுவோம்.
"சரி மா! எனக்குக் கொஞ்சம் காபி குடு"
"போப்போய்க் கைக்கால் கழுவிட்டு வந்து உப்மா சாப்பிடு. அப்புறம் காபி தரேன்"
போனில் பேசிய நீரு,
"என்னடா சொல்லற?அது அந்த ராஜவேலுதானா ?"
""ஆமா ! இப்பதான் கூகிள் பார்த்தேன். அவனேதான் "
அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
"ஏ! சும்மா கத்தாத. எந்தப் பொண்ணு மேல கைய வச்சாலும் நான் சும்மா விட மாட்டேன்னு தெரியுமில்ல. அதுலயும் எங்க வீட்டு பொண்ணு மேலையே கை வச்சா சும்மா விட முடியுமா?"
'அவ்வளவுதான் சொன்னான்.வேறு எதுவும் சொல்லவில்லை. அப்படி என்றால் சும்மா  மிரட்டி விட்டுருப்பானா ?அப்பப் பிரதீபுக்கு இதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லையா? ' மூளை யோசித்தது.
"என்ன நீரூ? என்ன ஆச்சு? லைன்ல இருக்கியா?"
"எதுவா இருந்தாலும் நாம நேர்ல பேசிக்கலாம். ஒடனே ஆபிசுக்கு வாப்பாஸ்கர்"
பறந்து வந்து  நின்றான் அலுவலகத்தில். இருவருக்குமே பதட்டமாக இருந்தது. நீருவின் டேபிளில் இருந்த தண்ணீரை மடக் மடக் எனக் குடித்து காலி செய்தான்.
"டேய் அன்னிக்கு நான் பிரதீப் கிட்ட கேட்டபோது  அவன் எதுவுமே சொல்லல. இன்னிக்கு இந்த நியூஸ் பார்த்தா  அவனுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல போல இருக்கே ?
"நீ இரு. நான் பேசறேன்" 
போன் அட்டண்ட் செய்தவன்," அப்ப அவனைத் தூக்கிட்டு வந்து உயிர் இருக்கும், தொழில் இருக்காதுன்னு மிரட்டி அனுப்பிட்டேன். அதனால தான் அவன் நம்ம நீரூ  பக்கம் வரல. ஒரு வேளை  மறுபடியும் வந்திருந்தா அவன் கொலைக்கும் எனக்கும் நிச்சயம் சம்பந்தம்  இருந்திருக்கும். அவன் அடக்கி வாசிச்சதால நான் ஒன்னும் பண்ணல. மத்தபடி அவன் கொலைக்கும் எனக்கும் இப்ப எந்தச் சம்பந்தமும் இல்ல"
"டேய் நீ சொல்லறதை நாங்க நம்பலாம். போலீஸ் நம்பாதேடா"
"அதான் குற்றவாளி சரணடஞ்சுட்டானே  அப்புறம் என்ன?"
"இருந்தாலும் போலீஸ் அப்படியே எல்லாம் விடமாட்டாங்கடா"
"எதுக்குடா ஒன்னும் இல்லாத விஷயத்தை இவ்ளோ பெரிசாக்கற. எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன். ஜெயிலுக்கு போகணுமா. நம்ம நீருவுக்காக அதுக்கும் தயார் போதுமா ?"
"எப்படிப்பட்டவன் இவன்!" நீருவுக்கு சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் அவனுக்கு எதுவும் ஆகி விடக கூடாதே என்றும் கவலையாக இருந்தது. 
"பாஸ்கர் முதல்ல அம்மாவுக்கு இந்த விஷயத்தைச் சொல்லணும்".
விஷயம் கேள்வி பட்டதும் பூரணிக்கு சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. 

அதற்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது நீருவுக்கும் பாஸ்கருக்கும் அவர் கேட்ட கேள்வியில்.

தொடரும்





Leave a comment


Comments


Related Post