இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 26-06-2024

Total Views: 1991

     கயல்விழி மதிய உணவு நேரத்தில் கேன்டீன் வந்தபோது அவளுடைய கண்கள் அவளின் அத்தானை தேடின ஆனால் அவன் எங்கும் இல்லை.  அந்நேரம் அமிர்தவள்ளி தன் தோழி மகேஸ்வரி உடன் வந்து கயல்விழியின் எதிரில் அமர்ந்தாள். 

     "ஹாய் அக்கா" என்றாள் மகேஸ்வரி அவளை கண்ட கயல்விழி 

     "ஏய் மகேஷ் நீயும் இங்க தான் ஜாய்ன் பண்ணியிருக்கியா" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். 

    "ஆமாம் அக்கா" என்றவள் கயல்விழி சுற்றும் முற்றும் பார்ப்பதை பார்த்து  "யாரை தேடுறீங்க அக்கா" என்றாள் மகேஸ்வரி. 

    "வேறயாரு நீ இங்க இருக்க என்று தெரிந்தால் இன்னேரம் வந்து இருப்பாரே அவரைத்தான் தேடுறேன்" என்றாள் கயல்விழி. 

    மகேஸ்வரி முகத்தில் வெட்கப்புன்னகை வந்தது. 

     "ஹாய்" என்று வந்து கயல்விழியின் அருகில் அமர்ந்தான் சரவணன்.  கயல்விழி மகேஸ்வரியை பார்த்து எப்படி நான் சொன்னது சரிதானே என்று ஜாடை செய்தாள்.  மகேஸ்வரியின் முகம் சிவந்தது, மகேஸ்வரி பள்ளியில் இருந்து அமிர்தவள்ளி உடன் படித்தவள்.  சரவணனுக்கும் அவளை தெரியும்.  அமிர்தவள்ளியின் தோழிகளில் இவள் மட்டுமே நெருக்கமானவள் தங்கள் குடும்ப விஷயங்கள் அனைத்தும் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய தோழிகள். பள்ளி விடுமுறை நாட்களில் டவுனுக்கு சரவணன் தான் அழைத்து சென்று வருவான்.  

     மகேஸ்வரியின் வீடு டவுனில் தான் உள்ளது.  அதனால் டவுனுக்கு அமிர்தவள்ளி வரும்போது அவளும் வந்து இணைந்து கொள்வாள்.  அப்படி வரும் போது சரவணன் உடன் நன்றாக பேசுவாள்.  ஆனால் மகேஸ்வரி  கல்லூரி சேர்ந்தபின் சரவணனுடன் பேசும் பேச்சுகள் குறைந்து போயின.  

     அதை கவனித்தவன் அதனை கண்டறியும் பொருட்டு அடிக்கடி அவன் பார்வை அவளை பார்த்தபோது அவள் இவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் கன்னம் சிவப்பதையும் கண்டு கொண்டான் சரவணன். 

     தன்னை ஒரு பெண் பார்ப்பதும் வெட்கப்படுவதையும் கண்டால் எந்த ஆண்பிள்ளைக்கு பிடிக்காமல் போகும் அதுவும் அப்போது தான் கல்லூரி முடித்து வேலைக்கு சென்று கொண்டு இருந்த சரவணனுக்கு  அது புதுவித உணர்வை கொடுக்க அவனும் அவளை பார்க்க ஆரம்பித்தான். 

     அதில் இருந்து அவர்களின் பேச்சுக்கள் குறைந்தது.  அமிர்தவள்ளி அதனை அறியவில்லை ஆனால் கயல்விழி அவர்கள் உடன் வரும் போது கண்டுகொண்டு நேரடியாகவே மகேஸ்வரி இடம் கேட்டு விட்டாள். 

    மகேஸ்வரி திணறி போனால் என்றாள் சரவணனுக்கு சங்கடமாகிப்போனது தன் வீட்டு பெண்கள் முன் இப்படி நடந்து கொண்டோமே என்று வறுத்தப்பட்டான். 

    மகேஸ்வரி திக்கித்திணறி அவளின் விருப்பத்தை கூறிவிட்டாள்.   ஆனால் அதன் பிறகு சரவணன் அமிர்தவள்ளி உடன் டவுனுக்கு செல்வதை தவிர்த்துவிட்டான். 

   வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஊருக்கு வரும் சரவணன்  தங்கையுடன் செல்வதை தவிர்த்து வந்தான்.  ஆனால் அது மிகவும் மனதுக்குள்  பாரத்தை கொடுத்தது.  ஏனோ மகேஸ்வரியை பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியது.  

    அமிர்தவள்ளியே சில சமயம் வற்புறுத்தி அழைத்து செல்வாள்.  செல்லும்போதே தன் தோழிக்கு மெசேஜ் செய்துவிடுவாள்.  மகேஸ்வரியும் அவள் சொல்லும் இடத்திற்கு வந்துவிடுவாள். 

     அவளை கண்டதும் சரவணனின் முகம் மலரும் சில வினாடிகளில் அதனை மறைத்து அவள் புறம் பார்ப்பதை தவிர்த்து விடுவான். 

   இரண்டு வருடங்கள் இப்படியே கழிய அமிர்தவள்ளி மகேஸ்வரி கல்லூரி மூன்றாம் வருடம் படித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் சரவணனை அழைத்துக்கொண்டு அமிர்தவள்ளியும் கயல்விழியும் டவுனுக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று சென்றனர்.  

    அமிர்தவள்ளி எப்போதும் போல் தன் அண்ணனுடன் வருவதை மகேஸ்வரிக்கு மெசேஜ் அனுப்பினாள்.   அவளின் அருகில் இருந்த கயல்விழி அதை பார்த்து  "என்னடி உன் பிரண்டுக்கு மெசேஜ் அனுப்பியாச்சா?....  அவளும் இரண்டு வருஷமா லவ் பண்றேன் உன் அண்ணன் பின்னாடி சுத்துறா ஆனால் உன் அண்ணன் அவளை திரும்பி கூடப்பார்க்கலை" என்று மெல்லிய குரலில் பேசினாள். 

    "ஏய் அண்ணனுக்கு கண்டிப்பா அவளை பிடிக்கும் ஆனால் ஏதோ காரணத்தால் அதை மறைக்கிறார் என்று தோன்றுகிறது" என்றாள் அமிர்தவள்ளி. 

  " எதை வைத்து அப்படி சொல்லுற வள்ளி" என்றாள் கயல்விழி. 

   " அவள் அண்ணனை விரும்புவதை உன்கிட்ட சொல்லும் போது அவரும் தானே இருந்தார்.  பிடிக்கவில்லை என்றால் அப்போதே மறுத்து இருப்பார். நான் அவளுக்கு மெசேஜ் அனுப்பி கூப்பிடுவது அண்ணனுக்கும் தெரியும் அதையும் அவர் ஒரு முறை கூட தடுக்கவில்லை அப்போ அவருக்கு பிடிக்குது என்றுதானே அர்த்தம்" என்றாள். 

   " ஓஓஹே அப்படியா இன்னைக்கு எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்" என்று கயல்விழி கூறினாள். 

    அதற்கு அவசியமே இல்லாமல் அவன் மனதில் மகேஸ்வரி இருப்பதை கண்டுகொள்ளும்படி நடந்தது அந்த சம்பவம். 

    செல்லவேண்டிய இடம் வந்ததும் கடைக்கு முன் காரை நிறுத்தி விட்டு சுற்றி அவனின் கண்கள் அவளை தேடியது அவளும் இல்லை அவளின் ஸ்கூட்டியும் கண்ணில் படவில்லை. காரை விட்டு இறங்கி அவள் வரும் பாதை பார்த்த போது தான் அது நிகழ்ந்தது. 

      ரோடை கிராஸ் செய்ய இண்டிகேட்டர் போட்டு  சரியாக வண்டியை ஓட்டிக்கொண்டு வருபவளின் எதிரில் சென்ற ஒருவன் ராங்காக சென்று மகேஸ்வரி வண்டியை இடித்ததும்  அவள் வண்டியுடன் கீழே விழுந்து விட்டாள்.  அதை கண்டதும் வேகமாக  "மகி" என்று அழைத்துக்கொண்டே ஓடியவன் அவளை தூக்கி நிறுத்தி  அவளுக்கு  எங்காவது அடிப்பட்டு இருக்கா என்று ஆராய்ந்தவன்  அவளிடம்  "எங்காவது அடிப்பட்டு இருக்கா மகிமா" என்றான். 

    அவள் இல்லை என்று தலையாட்டியதும் அவன் பின் வந்து இருந்த அமிர்தவள்ளி கயல்விழியிடம்  "இவளை கூட்டிட்டு போய் எதாவது குடிக்க வாங்கி கொடுங்க" என்றவன் அவளை இடித்தவனை சிலர் பிடித்து வைத்து இருக்க அவனிடம் சென்றவன் ஓங்கி அறைந்தான். 

     "ஏன்டா அவள் சரியா தானே வந்தாள் அவளை எதுக்குடா இடிச்ச" என்று மீண்டும் மீண்டும் அடித்தான்.  அங்கு இருந்தவர்கள் தடுத்த பிறகே அவனை விட்டான். 


     மீண்டும் பெண்கள் இருந்த இடத்திற்கு வந்தவன்  "மகிமா வா டாக்டர் கிட்ட போகலாம்" என்றதும் 

   அவள் வேண்டாம் என்று கூறியும் அவளின் கை பிடித்து அழைத்து சென்று பக்கத்தில் இருந்த பெண் மருத்துவரிடம் காட்டி ஒன்றும் இல்லை என்ற பிறகே அவன் முகம் தெளிந்தது.  இவை அனைத்தையும் கண்ட கயல்விழி அமிர்தவள்ளி இருவரும் கண்ணால் பேசிக்கொண்டனர்.  அவர்களுக்கு சரவணன் மகேஸ்வரியை விரும்புவது தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வு உணர்த்திவிட்டது. 

    வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிய பிறகு அவள் வீட்டுக்கு செல்கிறேன் என்றபோது  அவளை ஸ்கூட்டி ஓட்டவேண்டாம் என்று கூறி  அவளின் ஸ்கூட்டியை கயல்விழியை ஓட்டி வரச்சொல்லி விட்டு மகேஸ்வரியை காரில் அழைத்துச்சென்றான்.  கயல்விழியுடன் அமிர்தவள்ளியும் ஸ்கூட்டியில் வருவதாக கூறிச்சென்றுவிட்டாள். 

    காரில் சரவணனும் மகேஸ்வரி மட்டும் இருக்க அவளை முன்புறம் அமரச்சொல்லி அழைத்துச்சென்றவன்.  காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு "மகிமா எங்காவது வலிக்குதா?..." என்றான்.  

     மகேஸ்வரிக்கு ஏற்கனவே அவனுடன் தனியாக செல்வது ஒரு மாதிரி இருக்க அவனின் அழைப்பு மேலும் அவளை சிலிர்க்க செய்ய இனம்புரியாத அவஸ்தையில் அமர்ந்து இருந்தாள். 

    "ஏய் இங்க பாரு மகிமா" என்றான்.  அவள் மெல்ல அவனை பார்க்க  "எங்காவது வலிக்குதா?..." என்றான்.  அவள் இல்லை என்று தலையாட்ட 

     "சில சமயம் உடனே வலி தெரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் தெரியும் அதான் கேட்கிறேன்" என்றான். 

     இல்லை என்று மீண்டும் தலையாட்டிவிட்டு  தன் போனை பார்ப்பது போல குனிந்து கொண்டாள். 

     காரை ஓரமாக நிறுத்தியவன் அவள் கையில் இருந்த போனை பிடுங்கினான். 

     அவள்" அய்யோ" என்னும் போதே அவளின் போனில் தன் நம்பரை கால் செய்து தனக்கு கால் வந்ததும் ஆப் செய்து அவளின் கையில் வைத்து விட்டு காரை எடுத்தான்.  

     "பெயின் இல்லை என்று டாக்டர் கொடுத்த டேப்லெட் போடாமல் விடாதே சாப்பிட்டு விட்டு போடனும் நான் நைட் மெசேஜ் பண்ணுவேன் எனக்கு பதில் அனுப்பு" என்றான் சரவணன். 

   அதற்கும் அவள் தலையை மட்டும் ஆட்டினாள். 

    அதற்குள் அவளின் வீடு இருக்கும் தெரு வந்திருக்க வண்டியை நிறுத்தியவன் " இனி வண்டி ஓட்டும் போது ஜாக்கிரதை" என்றவனுக்கு மீண்டும் தலையசைத்தவளை கண்டு 

    " ஏய் வாயைத்திறந்து பேசமாட்டியா நீ என்ன ஊமையா?..." என்றான் கோபத்தை அடக்கிய குரலில் 

    அவனின் பேச்சில் பயந்தவள் "இல்லை.. பேசுவேன்..." என்று திக்கித்திணறி பேசியவள் "நான் வரேன்"  என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு கார் கதவை திறந்து கொண்டு வேகமாக சற்று தள்ளி கயல்விழியும் அமிர்தவள்ளியும் தன் வண்டியை வைத்துக்கொண்டு நின்ற இடத்திற்கு சென்றாள். 

    இவளை கண்டதும் நமட்டு சிரிப்பை உதிர்க்க மகேஸ்வரியின் முகம் சிவந்தது. அதை மறைத்துக்கொண்டு வேகமாக தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு  "வரேன்" என்று கிளம்பிவிட்டாள். காரில் இருந்து சரவணன் பார்த்துக்கொண்டு இருப்பதால் இவர்களும் எதுவும் கேட்காமல் வழியனுப்பி விட்டு வந்து காரில் ஏறிக்கொண்டனர். 

    அதன் பிறகு மகேஸ்வரியை பார்க்கும் போது சில வார்த்தைகள் பேசுவான்.  அவளை பார்க்க வேண்டும் என்றால் அவளின் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு வரும்படி மெசேஜ் அனுப்புவான். 

     மகேஸ்வரியும் கோயில் வருவாள் அவள் அருகில் சென்று பேசமாட்டான் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு செல்வான். 

     ஆரம்பத்தில் தன் வீட்டில் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு அவர்கள் முன்பே இப்படி காதல் செய்வது தவறு என்று நினைத்து ஒதுங்கியவனுக்கு அதன் பிறகே மகேஸ்வரி மீது காதல் அதிகரித்தது.  எப்போதும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று மனம் ஏங்கியது.  இருந்தும் தன் மனதை அடக்கிவைத்து இருந்தவனுக்கு தன்னையும் மீறி அவளுக்கு அடிபட்ட போது வெளிப்பட்டுவிட்டது.  

    எப்படியும் தங்கையும் கயல்விழியும் தன் மனதை அறிந்து கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்தது.  அவர்களும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை இவனும் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டான்.  எப்படியும் அமிர்தவள்ளி கயல்விழிக்கு திருமணம் முடித்த பிறகு தனக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும் போது மகேஸ்வரியை திருமணம் முடிக்கலாம் என்று நினைத்தான். 

    மகேஸ்வரியும் இவர்கள் இனம் என்று அறிந்து இருந்ததால்  திருமணம் செய்து கொள்ள எந்த தடையும் இருக்காது என்றும் திருமணத்திற்கு பிறகு அவளை திகட்ட திகட்ட காதல் செய்யலாம் இப்போ வீட்டு பெண்களை வைத்து கொண்டு வேண்டாம் மகேஸ்வரியும் படித்து கொண்டு இருக்கிறாள் என்றே அமைதியாக இருந்தான். 

    தன்னையும் மீறி அவளை மனம் தேடும் போதுதான் கோயிலுக்கு வரச்சொல்லி பார்த்து விட்டு மட்டும் செல்வான்.  இன்று வரை அது தொடர்கிறது.  அவளிடம் காதல் பார்வையே பேச்சே பேசியது இல்லை. 


Leave a comment


Comments


Related Post