இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 26-06-2024

Total Views: 2101

     அமிர்தவள்ளி  மகேஸ்வரி பள்ளி படிக்கும் போது எப்போதும் தன் அண்ணன் பற்றி புகழ்ந்து பேசும்  அமிர்தவள்ளியை கிண்டல் செய்வாள்.  அப்போது அமிர்தவள்ளி தன் அண்ணன் பற்றி பேசுவதை நிறுத்த மாட்டாள். 

    போகப்போக மகேஸ்வரிக்கு மனதில் மாற்றங்கள் நிகழ சரவணனை பற்றி இவளே என்ன இன்னைக்கு உன் அண்ணன் புராணம் எதுவும் இல்லையா என்று கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டாள்.  மெல்ல மெல்ல அவள் மனதில் வந்து அமர்ந்து விட்டான் சரவணன். 

       அந்த சமயத்தில் தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்து இருக்க அவனை கண்டாள் பேச்சு வராமல் முகம் சிவந்து புதுவித உணர்வுகளை கொடுத்தது.  சரவணனை ஓரக்கண்ணால் காண்பதை கயல்விழி கண்டு கொண்டு கேட்ட போது அவள் விரும்புவதை திக்கித்திணறி கூறினாள்.  கயல்விழியும் அமிர்தவள்ளி திட்டுவார்கள் என்று எண்ணியிருக்க அவர்கள் சந்தோஷம் அடைந்தனர்.  ஆனால் சரவணன் எதுவும் சொல்லவும் இல்லை அதன் பிறகு வருவதும் குறைந்தது. 

   ஆனால் அமிர்தவள்ளி அண்ணனுக்கு உன்னை பிடித்துதான் இருக்கு என்று காரணங்கள் சொன்னபோது மனம் ஆறுதல் அடைந்தாலும் சரவணனிடம் இருந்து அவளுக்கு எந்தவித பதிலும் இல்லை என்று வறுத்தப்பட்டு தான் இருந்தாள். 

     அன்று அடிப்பட்ட போது அவனின் தவிப்பை கண்ட பிறகே அவனுக்கு தன்னை பிடித்து இருக்கிறது அறிந்தாள். 

      அன்று திடீரென அவன் அவளிடம் சகஜமாக பேசியது அவளுக்கு திகைப்பை கொடுக்க அவளால் பதில் பேசமுடியவில்லை.  அதற்கு பிறகு போனில் மெசேஜ் அவன் அனுப்ப ஆரம்பத்தில் தயங்கியவள் பின் அவளும் அவனுக்கு மெசேஜ்கள்  அனுப்பி பேசிக்கொண்டனர். 

     அவளுக்கு நேரில் பேச இன்னும் தயக்கம் இருந்த போதும் மெசேஜ்கள் மூலம் நன்றாக பேசினர். 

      மற்ற காதலர்கள் போல் வெளியே சுற்றுவது காதல் பேச்சுக்கள் இல்லாமல் அவர்கள் காதல் வளர்ந்து கொண்டு இருக்கிறது.  

    இன்றும் அவளுக்கு மெசேஜ் அனுப்பி எங்கு இருக்கிறாள் என்று அறிந்து அவள் பின்னே கேன்டீன் வந்திருந்தான். 

    உணவுகளை வாங்கிக்கொண்டு வரும்போது சரவணன் அன்பழகனிடம் கார்த்திகேயன் எங்கே என்று கேட்க அவனை வேலையாக வெளியே அனுப்பி இருப்பதாக கூறினான் அன்பழகன். 

      அதை கயல்விழியிடம் வந்து கூறியிருந்தான் சரவணன் அதனால் சாப்பிட்டு விட்டு மீண்டும் பணிக்கு சென்றனர் நால்வரும். 

    அடுத்த மூன்று நாட்கள் கார்த்திகேயனை பார்க்கமுடியவில்லை முதல் நாள் மட்டுமே பஸ்சில் வந்த மூன்று நண்பர்களும் அடுத்த நாளில் இருந்து வரவில்லை.   

    கேன்டீனிலும் அவனை பார்க்க முடியவில்லை.  அமிர்தவள்ளியிடம் பேசாமல் இருந்தவள் பின் கார்த்திகேயனை பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு பேசினாள் கயல்விழி. 

   அவளுக்கும் அண்ணன் பற்றி எதுவும் தெரிந்து இருக்கவில்லை.  ஒரு வேளை கேன்டீனில் உணவுகள் செய்யும் உள்பகுதியில் இருக்கிறானே என்ற எண்ணம் தேன்றியது.  அன்பழகனையும் பார்க்கமுடியவில்லை அதனால் இருவரும் எங்காவது சென்று இருப்பார்கள் என்று நினைத்தாள். 

   நான்காம் நாள் டீம் லீடர் மீட்டிங் நடந்ததால் மதிய உணவு நேரம் கடந்தே உணவு உண்ண அவர்கள் டீம் மெம்பெர்ஸ் கேன்டீன் வந்தனர்.  அந்நேரத்தில் கேன்டீன் காலியாக இருந்தது. 

    ஒரே ஒரு டேபிளில் மட்டும் அமர்ந்து இருந்தனர்.  யார் என்று பார்த்த போது கார்த்திகேயன் அவன் அருகில் ஐஸ்வர்யா எதிரில் அன்பழகன், முரளி நால்வரும் பேசிக்கொண்டு உணவு உண்டு கொண்டு இருந்தனர். 

    அதுவும் அவளிடம் கோபத்தை காட்டும் அவளின் அத்தான் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்.  அந்த பெண் யார் என்று வந்த இரண்டு நாளிலேயே விசாரித்து தெரிந்து இருந்தாள் கயல்விழி. 

    கே கே  வின் பி ஏ என்று மட்டும் அறிந்து இருந்தாள்.  இவளுக்கு என்ன வேலை எப்பப்பார்த்தாலும் அத்தானுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறாள் .  கே கே சார் ஊரில் இல்லை என்றால் அவர் கொடுத்த வேலைகளை செய்யாமல் என் அத்தானுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறாள் என்று அவளை மனதில் திட்டிக்கொண்டு இருந்தாள். 

   அந்நேரம் ஐஸ்வர்யாவுக்கு புரையேறியது.  அவளின் தலையை தட்டிவிட்டவன்  "அவள் தான் உன்னை திட்டிட்டு இருக்கா என்று நினைக்கிறேன்" என்று கூறிக் கொண்டு அவளுக்கு நீரை எடுத்து கொடுத்தான் கார்த்திகேயன். 

     அதை வாங்கி பருகிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தாள் ஐஸ்வர்யா. 

    கயல்விழி அவர்களைத்தான் முறைத்து கொண்டு இருந்தாள். 

   "ஐயோ என்ன பார்வை விட்டா பார்வையாலே எரிச்சுடுவாங்க போல உங்க ஆளு" என்று கார்த்திகேயனிடம் சொல்ல அவன் முகத்தில் புன்னகை பூத்தது. 

    அதை தூரத்தில் இருந்து பார்த்த கயல்விழிக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும் அவர்கள் சிரித்து பேசியது கோபத்தை கொடுத்தது. 

   அவள் வந்தபோதே அவன் அவளை பார்த்தான்.  வா என்றும் அழைக்கவில்லை மூன்றாம் மனிதரை பார்ப்பதை போல பார்த்து விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேச ஆரம்பித்து விட்டான். 

    உணவை வாங்கி வந்து அமர்ந்தவளுக்கு ஒரு வாய் உணவு கூட இறங்கவில்லை அருகில் இருந்த தோழிகள் கேட்டதற்கு பசியில்லை என்று கூறிவிட்டு கார்த்திகேயனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். 

   மனதில் ஏன் அத்தான் என்னை உங்களுக்கு பிடிக்காமல் போச்சு சின்ன வயசில் என் முகம் கொஞ்சம் வாடினால் கூட தாங்காத நீங்க இப்போ தினம் தினம் அழவச்சுட்டு இருக்கிங்க நான் என்ன தப்பு செய்தேன் அத்தான். 

    என் அப்பா செய்த தப்புக்கு எனக்கு தண்டனை கொடுக்கிறீங்க அத்தான்.  உங்க மனசுல எவ்வளவு வேதனை அனுபவிச்சு இருப்பிங்க என்று எனக்கு தெரியும் அத்தான்.  அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் இல்லையே பத்து வருஷம் அனுபவித்து இருக்கிங்க.  அதுவும் இல்லாமல் உங்க வாழ்க்கை பாதையும் மாறி இன்னைக்கு இப்படி இருக்க காரணமும் என் அப்பா தான் அதான் நீங்க அந்த கோபத்தை என் மீது காட்டிறீங்க என்று எனக்கு தெரியும் அத்தான். 

  அதான் அமைதியா இருக்கேன் ஆனால் உங்களை யாருக்கும் விட்டு தரமாட்டேன் அப்படி ஒன்று நடந்தா அதுக்கு முன்பே என் உயிர் போயிருக்கும் என்று மனதில் பேசிக்கொண்டு இருந்தவளின் எதிரில் அன்பழகன் வந்து அமர்ந்தான். 

   "கயலு ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க சாப்பாடு பிடிக்கலையா?..." என்றான் அன்பழகன். 

   அவன் பேச்சில் நினைவு வந்தவள்  "இல்லை அண்ணா  பசியில்லை" என்றாள். 

   "ஏம்மா கயலு ஏற்கனவே சாப்பாடு நேரம் தாண்டி வந்து இருக்க பசியில்லை என்று சொல்லுற இந்த சாப்பாடு பிடிக்கலைனா சொல்லு வேற சாப்பாடு எடுத்திட்டு வரேன்" என்றான். 

   " அய்யோ வேண்டாம் அண்ணா இந்த சாப்பாடே நல்லா இருக்கு" என்று கூறிவிட்டு கஷ்டப்பட்டு உணவை உண்டாள்.  

    உணவை முடித்துவிட்டு கைகழுவச்சென்ற போது அங்கு யாரும் இல்லை அவள் கை கழுவிக்கொண்டு இருந்த போது அவள் பின்னிருந்து ஒரு வலிய கரம் நீண்டு அவள் திறந்து கை கழுவிக்கொண்டு இருந்த குழாயிலேயே கையை கழுவியது. 

   அந்த கையை கண்டவுடன் யார் என்று அறிந்தவளின் முகத்தில் புன்னகை வந்தது.  அவள் அப்படியே நிற்க கை கழுவிய கார்த்திகேயன் அவள் அணிந்து இருந்த சுடிதார் துப்பட்டாவில் தன் கையையும் வாயையும் துடைத்துக்கொண்டு  அவளின் காதருகில் வந்து  "இன்னும் எவ்வளவு நேரம் கை கழுவிட்டு இருப்ப வேலை செய்யும் எண்ணம் இல்லையா?..." என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். 

    இவ்வளவு நேரம் அவள் மனதில் ஏறியிருந்த பாரம் அனைத்தும் அவனின் அந்த ஒற்றை செய்கையில் அனைத்தும் மறைந்து சந்தோஷம் பொங்கியது. 

   உரிமையாக உடல் உரச நின்று கை கழுவிவிட்டு தன் உடையிலேயே துடைத்தவனின் செயல் அவளுக்கு மட்டுமே அவன் உரிமையானவன் என்பதை அல்லவா கூறிச்சென்றிருந்தான்.  

    அந்த மகிழ்ச்சியுடனே அவளுக்காக காத்திருந்த தோழிகளுடன் சென்றாள். 

    அவள் சென்ற பின் அன்பு அவனை பார்த்து முறைத்தவன்  "டேய் கார்த்தி நீ ஓவரா போற சாப்பிடக்கூடமுடியாமல் கலங்கிட்டு உட்கார்ந்து இருக்கா  எதுக்குடா கயலை அழவைக்கிற சதாரணமாவது பேசினால் கயலு இவ்வளவு வறுத்தபடாது இல்லையா" என்றான். 

     "டேய் அவள் கண்ணில் படக்கூடாது என்று தான் ஒதுங்கி இருக்கேன்.  இன்னைக்கு எப்படியே பார்த்துட்டா இன்னும் கொஞ்ச நாள் தாண்டா இப்படி இருப்பா அப்புறம் சரியா போயிடுவா"  என்றவன் எழுந்து தன் வேலையை பார்க்க சென்று விட்டான். 

  அடுத்தடுத்த நாட்களில் அவனை பார்க்க முடியவில்லை.  வேலையும் ஆரம்பித்து விடவே வேறு நினைப்பு இன்றி அதில் மூழ்கினாள் கயல்விழி.  கேன்டீன் வரும்போது எல்லாம் அவனை பார்க்க முடியவில்லை.  அந்த வாரயிறுதியில் காலையிலேயே அவன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவன் இல்லை.  அன்பழகன் உடன் டவுனுக்கு சென்று உள்ளதாக கூறினான்.  

     அடுத்த இரண்டு வாரங்கள் கடந்து இருந்தன.  அன்று ஞாயிற்றுக்கிழமை இன்று எப்படியாவது அவனை பார்த்து எதற்கு இந்த ஓட்டம் என்று கேட்க வேண்டும் என்று அலாரம் வைத்து நாலரை மணிக்கு எழுந்து குளித்து ஐந்து மணிக்கு தாய்க்கு தெரியாமல் கிளம்பி இருந்தாள் கயல்விழி. 

    நீண்ட நேரம் கதவு தட்டும் ஓசை ஓசையில் எழுந்த முரளி, அன்பழகன் இருவரும் தூக்ககலக்கத்தில்  "இவ்வளவு விடியற்காலையில் யாருடா?..." என்றான் முரளி 

    "எனக்கு எப்படி தெரியும் போய் கதவை திறடா" என்றான் அன்பழகன். 

   மெல்ல எழுந்து கட்டிலில் படுத்து இருந்த கார்த்திகேயனை பார்த்தான் அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.  மணியை பார்க்க ஐந்து ஆகியிருந்தது.  

    " படுத்ததே லேட் இவ்வளவு காலையில் எழுப்பி விட்டாங்க" என்று கோபத்துடன் கதவை திறக்க அங்கு கயல்விழி நின்று இருந்தாள்.  கோபம் மறைந்து திகைப்பு ஏற்பட்டது. 

    "கயல் நீ எங்க இங்க அதுவும் இவ்வளவு காலையில்" என்றான் முரளி. 

    முரளியை எதிர் பார்க்காதவள்  "அது... அண்ணா... அத்தானை.. பார்க்கவே முடியலை எப்ப வந்தாலும் வெளியே போயிட்டார் என்று சொல்லுறாங்க அதான் இன்னைக்கு பார்த்திடலாம் சீக்கிரம் வந்தேன்" என்றாள் கயல்விழி தயங்கிய குரலில். 

    அன்பழகனுக்கு ஏற்கனவே கதவு தட்டியதிலே பாதிமுழிப்பு வந்து இருக்க முரளியின் கயல் என்ற குரலில் மீதி தூக்கமும் கலைந்து எழுந்து தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தவன் முரளியிடம் பொருட்களை கொடுத்தவன் 

    கயல்விழியை பார்த்து  "நீ உள்ளே போ கயல் அவன் தூங்கிட்டு இருக்கான் ராத்திரி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்.  ராத்திரி பால்காய்ச்சியது இருக்கு அவனுக்கு காபி போட்டு கொடு" என்று கூறிவிட்டு முரளியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். 

    முரளியும் அன்பழகனும் சென்றதும் உள்ளே வந்தவள் கதவை மூடிவிட்டு மெல்ல உள்ளே வர அங்கு கயிற்று கட்டிலில் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

    மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அவன் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டு அப்படியே நின்று இருந்தாள் கயல்விழி. 

      தூங்கும் போது தான் ஒருவரின் உண்மையான குணம் தெரியும் என்பதற்கு ஏற்ப அவன்  முகம் நிர்சலமாக இருந்தது. 

     காற்றில் அலைபாய்ந்த முடிகளை ஒதுக்கியவள் கையை எடுக்காமல் அவன் தலைகோதி விட்டவள் மெல்ல குனிந்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தவளுக்கு  அடுத்து என்ன நடந்தது என்று புரிய  நிமிடங்கள் ஆகின. 

     
   
     

    


Leave a comment


Comments


Related Post