Total Views: 2691
பாகம்-21
கிளம்புவதற்கு முன்....
"மேடம்! உங்க பையன பாக்கலாமா ?" நிரஞ்சனா தான் கேட்டாள்.
"அதோ அங்க இருக்கான் "
சாதாரண வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தான் . வருங்கால மனைவியுடன் நின்று கிளிகளுடன் பேசிக் கொண்டிருந்தான். கையில் சில உணவுப் பொருட்களுடன்.
"சுதா! இவங்க யார்" அவளிடம் அவன் கேட்டான்.
"உன்னோட அக்கா! நான் உன்னோட பெரியம்மா. இவரு உன்னோட அண்ணா" பூரணியே அறிமுகப் படுத்தினார்.
"அப்படியா ! ஆனா உங்களை இது வரைக்கும் பார்த்ததே இல்லையே?"
"நான் வேற ஊர்ல இருந்தேன். அதான் நீ எங்களை பார்த்ததே இல்ல. உன்னோட பேரு என்ன? "
"பெரியம்மான்னு சொல்லறீங்க. என்னோட பேரு கூட தெரியலையா?"
அவன் அன்னை அனைத்தையும் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
"வயசானதுல மறந்து போச்சு. நீ இப்ப சொல்லு. நான் நினைவு வச்சுக்கறேன்"
"இல்ல! இல்ல! வேணாம். அப்பவும் வயசாகிடும். மறந்துருவீங்க. உங்க போன் குடுங்க. நானே என்னோட பெயர் சேவ் பண்ணறேன்"
அன்னையின் போனை வாங்கித் தன்னை போட்டோ எடுத்து பெயர் சேமித்தான்.
சின்ன குழந்தை போல பேசும் தம்பியை கன்னம் கிள்ளி கொஞ்சினாள் நீரு .
"சீக்கிரமா அக்கா வீட்டுக்கு வரணும். வரியா?"
"சுதாவிடமும், யாரும் இல்லன்னு நினைக்காத சுதா. நாங்க இருக்கோம். எதுக்கும் என்னிக்கும் யோசிக்கவே யோசிக்காத. அப்பப்ப கால் பண்ணி பேசு.இனிமே உனக்குன்னு நிறைய பொறுப்புகள், கடமைகள் இருக்கு. உங்க ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு. பெயர் பொருத்தம் சூப்பரா இருக்கு. இந்த வீடு ஒனக்கானதுன்னு கடவுளோட முடிவ உங்க பேருலேர்ந்தே சொல்லறாரு போல "
"ஆமா ! அதுனாலதான் எனக்கு இவளை புடிச்சுது. இனிமே என்னோட பேரு மட்டும் இல்ல, என்னோட வீட்டுல எல்லாமே இவளுக்குத் தான் முதல்"
கிளம்பி விட்டார்கள். காரில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணம்.
"எவ்ளோ அழகான பெயர் பொருத்தம் பார்த்தியா நீரு ? சுதா, சுதாகர்"
"ஆமாம்மா! இனிமே அவனோட பெயர், வாழ்க்கை எல்லாத்துலயும் அவதான் முதல்லன்னு வேற சொல்லறான் . அப்படி பாடவனுக்கு கொஞ்சம் அரி வளர்ச்சி கம்மின்னு சொன்ன என்னால நம்பவே முடியல. அவனுக்காக அவள்னு சொல்லுவாங்களே அது இவங்க விஷயத்துல தான் நேர்ல பாக்கறேன் "
"ஏன் நீயும் மாப்பிள்ளையும் கூட அப்படித்தான்"
"என்னம்மா? நல்ல ஜோக் அடிக்கற?புல் பார்ம்ல இருக்கியா?"
"பாரு இது மட்டும் நடக்குதா இல்லையான்னு"
"என்னோட வாழ்க்கைல எல்லாமே உனக்குத் தான் முதல்ல. சுதாகர் சொன்னது போல செந்தில் என்றாவது சொல்லுவாரா? மனம் ஏங்கியது. மறு நொடியே .'அவரு சொல்லறது இருக்கட்டும். நீ சொல்லுவியா? ஒனக்கு உன்னோட பிஸ்னஸ் பெருசுன்னா அவருக்கு அவரோட ஈகோ பெரிசு? 'அவள் மனம் அவளுக்கு எதிராகவே வாதிட்டது.
அன்றைய இரவு நிரஞ்சனாவுக்கு அவள் மாமியாரிடம் இருந்து கால் வந்தது.பூரணி தான் பேசினார் .
"என்ன சம்பந்தி எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் மீனாட்சி. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? "
"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் பூரணியம்மா. பவித்ரா அன்னிக்கு பஸ்சுக்கு காத்திருந்தப்போ நம்ம பாஸ்கர் தம்பி தான் வீட்டுல விட்டுட்டு போச்சு. ஆனா வீட்டுக்கு உள்ள கூட வரல. அவசரமா போய்டுச்சு. யாரையோ வெட்டிக் கொன்னுட்டாங்களாம்! என்னாச்சும்மா? ரொம்ப வேண்டியவங்களா ? சொந்தமா? மனசுக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. அதான் போன் பண்ணேன். நம்ம புவித்ராவும்," அண்ணி பாவம்மா! ஏதாவது உதவி தேவைப்படும் போன் பண்ணு சொல்லிகிட்டே இருந்தா"
"செத்தவர் எங்களுக்கு ஒன்னும் எங்களுக்கு வேண்டியவரு இல்ல மீனாட்சி ரொம்ப ரொம்ப வேண்டாதவங்க"
"வேண்டாதவங்களா? அது யாரு?"
"செத்துப் போனவர் தான் கல்யாணத்தன்னிக்கு ஆபிசுல நெருப்பு வைச்சது"
"அப்படி என்ன அவருக்கு மனசுல வெறுப்பு? புள்ள வாழக் கூடாதுன்னு அப்படி பண்ணி இருக்காரு?"
"என் மேல இருந்த வெறுப்புக்கு என்னோட மகளை பழி வாங்கிட்டான் .பழைய பழிக்கு புதுசா பலி தேடி வந்தான்"
"விடுங்கம்மா. பண்ண தப்புக்கு எல்லாம் கடவுள் தான் பெரிய தண்டனையா கொடுத்துட்டாரு . ஆனா அவரோட பொண்டாட்டி புள்ளைங்க. வாழ்க்கைல என்னிக்குமே மாறாத காயமாவே இருக்கும்"
"ஆமா! நீங்க சொல்லறது சரிதான்"
"ஏதோ கடவுள் இனிமேலாவது நம்ம பொண்ண நல்லா வாழ வச்சா சரி. வேற என்ன வேணும்? மத்தபடி வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே சம்பந்திமா? "
"எல்லாமே அப்படியேத்தான் போய்கிட்டு இருக்கு மீனாட்சி. அப்புறம் மாப்பிளைகிட்ட பேசினீங்களா ?"
"இல்ல சம்மந்திமா! இன்னும் சரியான நேரம் வரல. அவன் கிட்ட போய் அப்படி எல்லாம் டக்குனு பேசிட முடியாது. நேரம் பார்த்து நானே பேசறேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க"
"சரி மீனாட்சி! பொறுப்பு உங்களோடது. நீங்கதான் என் பொண்ண பத்திரமா பார்த்துக்கணும்"
"என் மருமகளை பார்த்துக்கறது என்ன கஷ்டம்? தங்கம்.நிரஞ்சனா அங்க இருக்களா சம்பந்தி?"
"இருக்கா . இதோ தரேன்"
"ஹலோ! அத்தை!"
"நல்லா இருக்கியமா?"
"நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க? ரேணு, பவித்ரா எப்படி இருக்காங்க?டிரஸ் புடிச்சுருந்துச்சா?"
"எல்லாரும் நல்லாருக்கோம். எல்லா துணியும் ரொம்ப நல்லா இருக்கும்மா. பார்த்து பார்த்து வாங்கி இருக்க. எல்லாத் துணியும் ரொம்ப விலையா இருக்கேம்மா? எதுக்கு இத்தனை செலவு பண்ணிக்கிட்டு?"
"உங்களுக்கு செய்யாம என்ன அத்தை காசு பார்த்துகிட்டு ?
"இருந்தாலும் மனசு கேக்கலியே ?"
"அத்த ப்ளீஸ் இனிமே இந்த மாதிரி பேசாதீங்க. எனக்கு புடிக்காது"
"சரி! பேசல" அடங்கித்தான் போனார்.
"நினைக்கவும் கூடாது"
"சரி !சரி! நீ சொன்னா சரி! போதுமா "
"போதும். சாப்டீங்களா அத்தை ?
"இல்லமா! செந்திலு இப்பதான் வந்தான். அவனுக்கு போட்டுட்டு தான் நான் சாப்பிடணும்"
"ஓ ! அவரு நல்லா இருக்காரா அத்தை ?"
"அவனுக்கென்னமா ? கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கான். பேசறியா ?
"தன்னவள் தன்னிடம் பேசுவாளா?" ஆர்வமாய் இருந்தது.
"வேண்டாம் அத்தை. ரொம்ப டயர்டா இருப்பாங்க. அப்புறமா பேசிக்கறேன்"
"சரிம்மா. நாம் அப்புறமா பேசலாம். நீயும் போய் ரெஸ்ட் எடு. ஏதேதோ விஷயம் கேள்வி பட்டேன் நாளெல்லாம் ரொம்ப டென்ஷனா இருந்திருக்கும். காலைல வேலைக்கு போகணுமில்ல? போய் தூங்கு டா கண்ணு"
"சரிங்க அத்தை. தேங்க்ஸ் பார் யுவர் கான்செர்ன் "
"அப்படின்னா?"
"அது... அது வந்து நீங்க அக்கறையா சொன்னீங்க இல்ல?அதுக்குத்தான் தேங்க்ஸ் சொன்னேன்"
"இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்க? சீ போ! நான் போன வச்சுடறேன் "
கால் கட் செய்து விட்டு புன்முறுவலுடன் நின்றாள் நிரஞ்சனா .
"என்ன சொன்னாங்க உன்னோட மாமியார்?"
" அவங்க பணத்திற்கு மயங்கறவங்களாத் தெரில.ரொம்ப நல்ல டைப் மா"
"உன் புருஷன் மாதிரி இல்லன்னு சொல்லறீயா?"
"நான் அப்படி சொல்லவே இல்லையே ?"
"அப்ப உன்னோட மாமியார் மாதிரி தான் உன்னோட புருஷனா ?"
"நாள் முழுக்க கவலையா இருந்திருக்கும். போய் தூங்குன்னு சொல்லறாங்க அவங்க. நீ என்னடான்னா நேரம் காலம் இல்லாம எங்கிட்ட வம்பிழுக்கற?"
சிடு சிறுது விட்டு அறைக்குச் சென்றாள் .
"சீக்கிரம் வந்து சேரு. ராத்திரில உக்காந்து டீவி பார்த்து கண்ண கெடுத்துக்காத"
"அது சரி! நீ உன் புருஷன் கூட கடலை போடுவ. அப்ப நான் வந்து அங்க உக்கார முடியுமா?"
"ஏன் நீ உன் புருஷன் கூட கடலை வறுக்கும்போது நான் அங்க இல்ல? அந்த மாதிரி தான் இதுவும் . நீயும் வரலாம்"
"ஏதேது ? பர்ஸ்ட் நைட்டுக்குக்கூட என்னையும் உங்க மாமியாரையும் உள்ள கூட்டிட்டு போவ போல இருக்கே ?"
"அப்படின்னு ஒன்னு நடந்தா பார்த்துக்கலாம்" அன்னையின் முகத்தை நேராக பார்த்துச் சொன்னாள் . அதில் ஆயிரம் அர்த்தங்கள் .
செந்திலுக்கு உண்ணும்போதும் உறங்குவதற்கு முன்னும். அவளிடமிருந்து அழைப்பு வர வேண்டும் என்று மனம் விரும்பியது. ஆனால் அதே நேரம் அவள் அழைத்தால் அவன் பேசத் தயாராக இல்லை. இருப்பினும் அவள் அழைத்திருக்க வேண்டும். கணவன் கோபத்தை அவள் தான் சமாதானப்படுத்த வேண்டும்." எனக்கு நீங்க தான் முக்கியம்" கெஞ்ச வேண்டும். கொஞ்ச வேண்டும். ஒரே வீட்டில் இருந்திருந்தால் ஊடலுக்குப் பின் கூடலும் வேண்டும். மனம் வாதிட்டது.
'அது சரி! மேடத்துக்கு எங்கிட்ட பேச கூட இஷ்டமில்லையா?' கோபம் வந்தது. அடக்க முடியவில்லை. மனதில் தீட்டிக் கொண்டிருந்தான். அந்நேரம் அவன் அன்னை வந்து நின்றாள்
"என்ன உன்னோட மருமக கிட்ட கொஞ்சியாச்சா ?"
"என்னப்பா இது? ஏதோ ஒரு நாள் சந்தர்ப்பம் சரியில்ல. அதான் என்னன்னு விசாரிச்சேன்"
"ஆமா!ஆமா! உனக்கென்ன? கடைக்கு வந்து அவகிட்ட சிரிச்சு பேசுவ. அவ குடுக்கற துணிய பல்ல இளிச்சுகிட்டு வாங்கிப்ப .வீட்டுக்கு வந்து சம்மந்தி அம்மா சம்மந்தி அம்மானு பேசுவ "
"அதுல என்னடா தப்பு? அவ என்னோட மருமக. அவகிட்ட தானே வாங்கிக்கறேன்"
"மருமகனா புருஷன் வீட்டோட அடக்க ஒடுக்கமா இருக்கணும்"
"சரி! போ! அவளை இங்க கூட்டிட்டு வா. கல்யாணம் ஆகியும் நாளாச்சு. தாலி பிரிச்சு கோக்கணும். கல்யாணத்த கெடுத்த பாவியும் செத்துட்டானாம் . இனிமே எந்த தொல்லையும் இருக்காது. தாலி பிரிச்சு கோக்கற நேரம் எல்லாமே நல்லதா இருக்கட்டும்.போய் அவளை கூட்டு வந்துருவோம்டா
"அவ என்ன ஆடி மாசாத்துக்கா அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா? அங்க போய் கொஞ்சி குலாவி கூட்டிட்டு வர்றதுக்கு? நான் வேண்டான்னு தாலி ஏறினதுமே மாலையை அவுத்து வச்சுட்டு ,என்னையும் உங்களையும் ஏன் நம்ம குடும்பத்துல இருக்கற எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு போய் இருக்கா . இன்னொரு தடவை அவ இங்க வற்ரத பத்தி பேசுன, என்ன நடக்குன்னே தெரியாது"
கோபத்தில் கண்கள் சிவக்க நடையை கட்டினான் .
'அவ என்னோட பொறுப்புன்னு இவானா நம்பி வாக்கு குடுத்துட்டோம். எப்படி அவளை இங்க வர வைக்கறது? ஒரு தடவை , ஒரே ஒரு தடவை அவ இங்க வந்துட்டான்னா போதும். அப்புறம் அவ இவனை பார்த்துப்பா, கெட்டிக்காரி . ஆனா எப்படி அவளை இங்க கூட்டிட்டு வர்ரது ?பதில் தெரியவில்லை. பெரு மூச்சு விட்டுக் கொண்டார்.
'கடவுளே இனிமே பொறுப்பை நீங்கதான் எடுத்துக்கணும். என்னால முடிஞ்சதை செஞ்சுட்டேன். இனி நீயே ஒரு வழி காட்டு. மனதார வேண்டிக் கொண்டார். இனி இறைவன் விட்ட வழி. நானும் ஒதுங்கி கொள்கிறேன்.
அடுத்த சில நாட்கள் பரபரப்பாக இல்லை என்றாலும் சாதாரணமாகச் சென்றுக் கொண்டிருந்தது.
வழக்கம்போல பிரதீப் அலுவலகம் செல்வதும், கண்ணழகியைப் பார்ப்பதும் மனதிற்குள் ரசிப்பதும் நாட்கள் போய் கொண்டுதான் இருந்தது. இன்னிக்கு என்ன கலர் டிரஸ் போடுவா ? எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஆரம்பித்திருந்தது.
பாஸ்கர் பவித்ரா நட்பும்தான் முன்னேற ஆரம்பித்திருந்தது.
"நீ என்ன ? தினம் நான் வருவேன்னான்னு காத்திருக்கியா ?"
"அது சரி. உங்களுக்காக காத்திருக்க நான் என்ன உங்க காதலியா? இல்ல பொஞ்சாதியா?"
திமிராக சொல்லி விட்டாள் . உள்ளூர நடுங்கியது. வெளியில் காட்டவில்லை. கேட்டது காட்டினாள் .
"எப்படி புதுசா பாக்கற ஆளுகிட்ட உன்னால இவ்ளோ திமிரா பேச முடியுது?"
"மத்தவங்க கிட்ட எல்லாம் அப்படி இல்ல. ஆனா நீங்கன்னா வேற"
"வேறன்னா ?" இப்போது இவனுக்கு நடுக்கம் வந்து விட்டது. "எனக்கு உங்களை பிடிச்சுருக்கு" என்று படக்கென சொல்லி விடுவாளோ?
"வேணாம் விடுங்க. சொன்ன சங்கடப்படுவீங்க?" பழைய காலத்து ராதிகா பேசுவது போல பேசினாள் .
"என்ன உள்குத்து வச்சுருக்க ?"
"ஒன்னும் இல்லையே ?"
"நம்பிட்டேன்" சொன்னாலும் அவனின் நம்பாத தண்மை நன்றாக்வேத் தெரிந்தது.
"இப்ப என்ன? அர்த்தம் தெரியணும் அவ்வளவுதான. நீங்க ஒரு சிரிப்பு போலீசு. அதான் உங்ககிட்ட எனக்கு பயமே வரல"
"நானா காமெடி போலீசு. இரு டீ உங்க அண்ணனுக்கு போன போடறேன்"
"எதுக்கு?" இப்தெரிந்தது.போது பயமும் வெளி வந்தது. உதறலும் வெளிப்படையாகவேத்
"என்னடா செந்திலு உன்னோட .தங்கச்சி எப்ப பார்த்தாலும் ஊர சுத்திக்கிட்டே இருக்குன்னு கேக்கறேன் "
"அசோ! அப்படி எல்லாம் சொல்லிடாதீங்க. பெல்டால அடிக்கும்"
வண்டி கீரிச்சுட்டு நின்றது.
"என்ன சொன்ன? பெல்டால அடிப்பாரா?"
இப்போது இவனுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. அப்பா நீரு ? நொடியில் மனம் வருங்காலத்தில் வந்து நின்றது.
"ஆமா ! எங்க அப்பா செம்மையா பெல்டால அடிப்பாரு. இது வரைக்கும் அண்ணன் கிட்ட வாங்கினது இல்ல. ஆனா பெல்ட்டு பிஞ்சுரும்னு திட்டும். ஒடனே நாங்க பயந்து அடங்கிடுவோம்"
"அப்ப உங்க அண்ணன் தான் உண்மையான காமெடி போலீசு"
"பெல்டால் அடி வாங்கினது இல்லன்னு தான் சொன்னேன். கையால அடி வாங்கினது இல்லன்னு சொன்னேனா ?இவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அப்ப நீருவையம் அடிப்பாரா? மனம் இன்னும் கவலை கொண்டது. காட்டிக் கொள்ளவில்லை .
" அப்ப.. இந்த மாதிரி அடிக்கடி என் கூட வண்டில வரியே. அதுக்கு அடிக்க மாட்டாங்களா?"
"நான் ஒன்னும் தப்பா நடக்கலியே. அதோட நீங்க ஒன்னும் யாரோ ஒருத்தரும் இல்லையே! எங்க அண்ணியோட பிரண்டு. அதனால ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அது மட்டுமில்லாம நான்தான் போய் கரெக்ட்டா அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேனே . அப்புறம் எதுக்கு அடிக்கணும்?"
"எல்லாத்தையும் சொல்லிடுவியா?"
"ஆமாம் "
"யாராவது ஐ லவ் யூ சொன்னா ?"
"அதைத்தானே முதல்ல சொல்லணும்.முதல்ல விரும்பறேன்னு சொல்லுவாங்க. அப்புறம் அங்க இங்க கூப்பிடுவாங்க. கைய வணப்பங்க. ஆசிட் ஊத்துவாங்க . எதுக்கு. எல்லாத்தையும் வீட்டுல சொல்லிட்டா ஒரு சேப்டி தானே?"
"இவ்ளோ தெளிவா பேசறியே. இந்த மாதிரி எல்லாம் பொம்பள புள்ள இன்னொரு ஆம்பளையோட வண்டில வரக் கூடாதுன்னு தெரியாதா ஒனக்கு?"
"நான் என்ன உங்க மேல இடிச்சுக்கிட்டா வரேன் . அதான் நமக்கு நடுவில இவ்ளோ பெரிய பை இருக்கே?"
"அது சரி. நீ புல் பார்ம்ல தான் இருக்க. இறங்கு. வீடு வந்துருச்சு. உங்க அம்மாவை கூப்பிடு"
மீனாட்சி யிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.
"எதுக்கு தம்பி பாக்கும்போதெல்லாம் வீட்டுல விட்டுகிட்டு. பாவம் உங்க வேலையும் கெட்டு ப் போகும்.
"அதுக்கு என்னம்மா? எங்க வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்கு. இவளுக்கு இன்னும் பெரிசா விவரம் பத்தலை . அதோட நீங்க நிரஞ்சனாவோட குடும்பம். அப்ப எங்களுக்கு கடமை இருக்கு. பார்த்தும் பாக்காம எப்படி தவிர்த்துட்டு போக முடியும்? நான் போயிட்டு வரேன் மா . லேட்டாகிடுச்சு"
அங்கிருந்து கிளம்பியவன், பவித்ராவின் மனதில் ஏறி அமர்ந்து விட்டான்
தொடரும்...........