இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 28-06-2024

Total Views: 1079

பாகம் -22
"ரேணுகா இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையாருக்கு சுண்டலுக்கு ஊற போடு. நான் சாயங்காலம் சுண்டல் செஞ்சு நைவேத்தியம் செஞ்சுக்கறேன்" 
"காலைலயே போட்டுட்டேன் மா. முடிஞ்ச கேசரியும் செஞ்சு வை மா "
"முடிஞ்சா பாக்கறேன். முந்திரி, நெய்  இருக்கா ? "
"இருக்கும்மா"
"குங்கும பூவும் இருந்தா கலர் போடாம அது ரெண்டு இதழ் போட்டுக்கறேன்"
"அதுவும் இருக்கு. அஞ்சறைப் பெட்டில வச்சுருக்கேன் மா . ரேஷன்ல வாங்கின சர்க்கரை வெள்ளை டப்பாவுல கொட்டி வச்சுருக்கேன். எடுக்கும்போது பார்த்து நிதானமா எடு . கொட்டிடப் போகுது.
"சரி டா  கண்ணு . நான் பார்த்துக்கறேன். நீ சீக்கிரம் கிளம்பு. அப்புறம் பஸ்ஸு கிளம்பிடும்.
"ஆமாம்மா" சொல்லி விட்டு அவசரமாக தலை சீவ வெளியில் சென்றாள்  அங்கே அருகே இருந்தவர்களின் சத்தம் கேட்டது. பலரும் அங்கே கூடி இருந்தனர்.  
'மாதவன் சார்  இப்படி கத்த மாட்டாரே? அவரே கத்திக்கிட்டு இருக்காரு?  என்ன விஷயம்?என்ன ஆச்சு? காலைல கோலம் போடறச்சே யாரும் இல்லையே? '
"என்னடி சத்தம்? என்ன ஆச்சு ? மீனாட்சியும் பவியும் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்.  
என்ன விஷயம் என்று புரிவதற்குள் மட மடவென ஆட்கள் வந்தார்கள் ஜேசிபி வந்தது. ஆக்ரமிப்பு பகுதிகள் இடிக்க.ஆரம்பித்தனர். பெண்கள் மூவருக்கும் என்ன ஏதுவென்று எதுவுமே புரியவில்லை. என்ன செய்வது. தவித்தார்கள். யாரின்  வீட்டுப் பத்திரமும் கூட  அதிகாரிகள் சரி பார்க்கவில்லை. 
"ஐயோ எதுக்கு வீட்டை இடிக்கறீங்க? என்ன ஆச்சு? இடிக்காதீங்க"
 யாரின் குரலும்அழுகையும்  அவர்கள் கண்டு கொள்ளவில்லை. 
"ப்ச்! இந்த நேரம் பார்த்து அண்ணா வேற இல்ல. என்ன பண்ணறது?  பயத்தில் அழுகை வந்தது . அந்த இடம் முழுவதுமே அழுகையின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது. சிலர் மண்ணை  வாரி சாபமிட்டனர். 
அது ஒன்றும் பெரிய வசதியான ஆட்கள் வாழும் இடமில்லை. ஓரளவு வசதியானவர்கள் என்றும் சொல்ல முடியாது. நடுத்தர வர்க்கத்தினர் வாழும் இடம் என்று சொல்லலாம். அவர்கள் யாருக்கும் கடனை வாங்கி ஆடம் பரமாக வாழத்  தெரியாது. வீட்டிற்கு ஒரு கைப்பேசி, சாதாரண தொலைக்காட்சியுடன் வாழ்பவர்கள். வாயை கட்டி வயத்தை கட்டி வாழ்ந்துக்கலாம். கடன் வாங்கக் கூடாது என்று நினைப்பவர்கள்.இந்த காலத்தில் இது போன்ற மக்களை பார்ப்பது கடினம் தான். பெரும்பாலும் அங்கே அந்த பகுதியில் யாரும் மொத்தமாக வீடு கட்டி குடியேறியவர்கள் இல்லை வெகு சிலரைத் தவிர. கஷ்டப்பட்டு காசு சேர்த்து ஊருக்கு ஒதுக்கு புறமா  ஒரு மஞ்ச வீடு. குண்டு பல்பு, இப்படி வ்நதவர்கள் தான் பலரும். அவர்களுக்கு இது கனவு இல்லம் என்பதையும் தாண்டி வீடு தான் கனவே என்று வாழ்க்கையின் சாதனையாக கட்டிய வீடுகள் தான் அதிகம். சில ஒட்டு வீடுகள் இருந்தன. பலஓட்டு  வீடுகள் புதிதாக  சீலிங் வீடுகளாக மாறி இருந்தன. 
'"ரேணு மாமாவுக்கு போன் போடு"
"அவங்கதான் சிங்கப்பூர் போய்  இருக்காங்களே அம்மா "
"ப்ச்  ஆமா  மறந்தே போச்சே. இப்ப என்ன பண்ணறது. என்னடி இப்படி பண்ணிட்டாங்க?" முகத்தில் அறைந்து கொண்டு கதறினார் மீனாட்சி.
"அம்மா இரும்மா அழாதம்மா "
"ரோட்டுல நின்னு இட்லி வித்த காசு டி இது. நானும் அவரும் எவ்ளோ கஷ்டப்பட்டு காட்டினோம் தெரியுமா. புள்ள பசி தூக்கம் பாக்காம கட்டின இடம். இப்படி வந்து  ஒரு நொடில இடிச்சுட்டுப் போய்ட்டாங்க"
அன்னையுடன் சேர்ந்து அழுது கொண்டே பவித்ரா  ,
"அம்மா நாம ஏன் அண்ணிகிட்ட உதவி கேட்க கூடாது?"
"இல்ல பவி! அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" ரேணுகாவும் அழுது கொண்டு தான் இருந்தாள் .
"ஆனா அண்ணி இருந்தா இந்த நிலைமையை அழகா ஹாண்டில் பண்ணிடுவாங்க. நமக்குத் தான் எந்த விவரமும் தெரியல. அவங்களுக்கு இது எல்லாம் படிக்க தெரியும்" 
"அவ சொல்லறதும் சரிதான். நிரஞ்சனாவுக்கு கூப்பிடு"
"ஆனா அண்ணா"
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ரேணு . நீ முதல்ல அவளை கூப்பிடு பவி "
 பகல் வேளையில் நிரஞ்சனாவுக்கு செந்தில் அன்னை  எண்ணில் இருந்து அழைப்பு வந்தது 
"ஹலோ யார் பேசறது?"
"சார் நான்  பவித்ரா பேசறேன். அண்ணி இருக்காங்களா?"
"அவங்க இன்னொரு கால் பேசிகிட்டு இருக்காங்க. என்ன விஷயம் சொல்லு பவித்ரா "
"இங்க கார்ப்பரேஷன் ஆளுங்க வந்து  வீட்டை இடிச்சுட்டாங்க" சொல்லும்போதே கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டாள் . அவள் சொல்வது விவரம் எதுவும் அவனுக்குப் புரியவில்லை.  ஆனால்  ஏதோ தப்பு என்பது மட்டும் புரிந்தது. 
"உங்க அண்ணன்  எங்க?"
"அண்ணா  அவரோட க்ளோஸ் பிரண்டு கல்யாணத்துக்காக புதுக்கோட்டை வரைக்கும் போயிருக்கு.  போனே போக மாட்டேங்குது. வேற யார் நம்பரும் கூட போகல"
 இப்போது செந்திலும் அங்கே இல்லை. அவன் போனில் சிக்னல்  வரவில்லை. பெண்கள் மூவரும் பயந்து போய்  இருந்தார்கள். விஷயத்தை கேட்ட நிரஞ்சனாவும் பாஸ்கரும் உடனே விரைந்தனர். நேரில் பார்த்தபோது தான் பவித்ரா சொன்னது சரிதான் என்பது புரிந்தது.  
அவர்களின் வீடு முன்னும், சைடில் ஒரு பகுதியும் இடிக்கப் பட்டிருந்தது.  தெரு முனையில் இருந்ததால் இவர்களுக்கு இரண்டு பகுதிகள் போய்  விட்டது. மற்றவர்களை விட இவர்களுக்குத் தான் இழப்பு அதிகம். இப்போதுதான் முதன் முதலாக செந்திலின் வீட்டிற்கு  வருகிறாள் நிரஞ்சனா. 
'ச ! எனக்கு  மட்டும் ஏன் இப்படி?' தலையில் கை  வைத்துக் கொண்டாள் . அருகில் இருந்தவர்கள் சிலரும் அழுது கொண்டு இருந்தார்கள். வேறு சில ஆண்கள் அங்கே வந்திருந்தவர்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அடுத்த நாளே இடிக்க வந்து விட்டார்கள். என்றோ ஒரு நாள் நடக்கும் என்று தெரிந்த விஷயம் தான். இருப்பினும் அவகாசமே இல்லாமல் வீட்டை இடித்திருந்தனர். கோர்ட்டின் உத்தரவாம் . காலையில் இருந்து சண்டை போட்டிருந்தாலும் அதிகாரிகள் காவலர்களின் உதவியுடன் தங்கள் வேலையை செய்து விட்டார்கள். இனி யாரிடமும் சண்டை போட்டு எந்தப் பயனும் இல்லை. நீதிமன்றத்திற்குத் தான் போக வேண்டும். நிரஞ்சனாவும் பாஸ்கரும் இவர்களின் வீட்டுப்  பத்திரத்தை வாங்கிப் பார்த்தார்கள். இவர்கள் வீடு சற்று அதிகப் படியாகத் தான் கட்டப் பட்டிருந்தது. அந்த அதிகப்படியான இடம் மட்டுமே இடிக்கப் பட்டிருந்தது. அதனால் ஹாலும் சமையல் அறையும் நல்ல வேளை எதுவும் ஆகவில்லை. ஒரே ஒரு படுக்கை அறை பாதி போய் விட்டது.. அதற்கு சைடில் கட்டப் பட்டிருந்த கழிவறை முழுதும் காலி . 
"பிரதீ!ப் எனக்கு இப்ப உன்னோட ஹெல்ப் வேணும்" 
அவளிடமிருந்து போனை வாங்கி, "நான் பேசிக்கறேன். நீ போய்  உங்க மாமியாரை பார்"போனை பாஸ்கர் பிடுங்கி கொண்டான்.
மீனாட்சி அங்கே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். 
"அத்தை அழாதேங்க ப்ளீஸ்"
"அம்மா வீடு இடிச்சதுக்கு மட்டும் அழல அவங்களோட குட்டிப் பிள்ளையாரை காணும். இங்க வாசல்ல வச்சுருந்தோம்" ரேணுகாவும்தான் அழுது  கொண்டிருந்தாள் . 
"ஓ ! அத்தை இருங்க அழாதீங்க . நான் பாக்கறேன்"
அங்கே இங்கேத் தேடி எப்படியோ அந்த விநாயகரை கண்டுபிடித்து விட்டாள்.
இது எங்க செந்தில் பொறந்த உடனே  வாங்கி வச்சது. அவரு வந்ததுக்கு அப்புறமாத்தான் இந்த வீடே கட்டினோம். கண்களில் கண்ணீர் வழிந்தாலும் தன்  குட்டிக் குழந்தையை நெஞ்சில் கட்டிக் கொண்டார் மீனாட்சி. இனி எதையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் வது விட்டது போலும்.
வீட்டு  பத்திரங்களை தெளிவாக பார்த்ததில் . இவர்கள் மீது தான் தவறு. சாலை விரிவாக்கத்திற்கு என்று ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள். 
"நான் அங்க வரல. மந்திரி பையன்னு பிரச்சனை பண்ணுவாங்க. நான் நேரா  நீரு  வீட்டுக்கு போறேன். யாரவது அங்க கொண்டு வந்து டாகுமெண்ட்ஸ் குடுங்க. இப்போ அவங்க எங்க தங்கப் போறாங்க?"
"இன்னும் யோசிக்கலடா "
"வேணுன்னா என்னோட கெஸ்ட் ஹவுஸுக்கு போக சொல்லு. இல்ல செக்கூரிட்டி வில்லாவுக்கு அனுப்பு நீரு " .
"இல்லடா! அவங்கள நான் எங்க வீட்டுக்கு அனுப்பிடறேன். அங்க அம்மாவும் இருக்காங்க இவர்களுக்கும் கொஞ்சம் ஈஸியா இருக்கும். வேற எங்கையாவது போனா செந்திலுக்கு பதில் சொல்லணும். அவருக்கு கோபம் வந்துரும்.
"ஆமா ! உங்க வீட்டுக்கு அனுப்பினா மட்டும்? உங்க  வீட்டுக்காரருக்கு எதுக்கு கோபம் வருன்னு  அவருக்கேத் தெரியாது"
"சரிடா விடு! இப்ப அது இல்ல பிரச்சனை. முதல்ல நீ எங்க வீட்டுக்குப் போ. எனக்கு ஒரு லாரியும் ஆளுங்களும் அனுப்பு. இந்த இடத்தை க்ளியர் பண்ணனும்" 
லாரி வருவதற்குள், தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள் .
"ரொம்ப சாரி அண்ணி. எங்களால  உங்களுக்கு ரொம்ப கஷ்டம்"
"என்ன ரேணு இது? நீங்க  எல்லாருமே என்ன வேறையாத்தான் பாக்கறீங்க. நான் ஒன்னும் வானத்துலேர்ந்து வந்தவ இல்ல. உங்கள மாதிரி சாதாரண மனுஷி தான். நீ முதல்ல இந்த டாகுமென்ஸ் எடுத்துக்கிட்டு எங்க வீட்டுக்குப் போ. அங்க எங்க அம்மாவும் பிரதீபும்  இருப்பாங்க. அவங்க மிச்சத்தை பார்த்துப்பாங்க. அத்தையை கூட்டிட்டு  போ. முதல்ல நீங்க  ரெண்டு பேரும்  ஏதாவது சாப்பிடுங்க. நான் பவித்ராவை இங்க கூட வச்சுக்கறேன். நாங்க பார்த்துக்கறோம் எதுவா இருந்தாலும் போன் பண்ணு . வீட்டுல போய்  சார்ஜ் போட்டுக்கோ"
"ஓகே அண்ணி. பவி குட்டியும் இன்னும் சாப்பிடல. இங்க நான் சமைச்சதே இருக்கு"
சமையல் அறை  இடிபடவில்லை என்றாலும் அதிர்வில் பொருட்கள் விழுந்திருந்தன. உணவுப் பொருட்களும் வீணாகி விட்டது. 
"விடு பவி . அந்த சாப்பாட்டு பாத்திரங்களை மட்டும் லேசா கழுவி வச்சுடு. நாம தேவை இல்லாத சாமான்களை இங்க வச்சு லாக் பண்ணிடலாம். உனக்கு  நான் இங்கையே ஏதாவது ஆர்டர் பண்ணி வாங்கி குடுக்கறேன்"
வந்திருந்த உபேர்  கார் ரேணுவும் மீனாட்சியும் ஏறிக்  கொள்ள மனம் முழுவதும் துக்கங்களுடன் அவரகளை  ஏற்றிக் கொண்டு  விரைந்தது.
அவர்கள் செல்லும் வரை அன்னைக்காக அழுகையை கடினப்பட்டு அடக்கியவள் கண்ணில் இருந்து கார் மறைந்ததும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் .
"என்ன பவி இது? நீ தைரியமான பொண்ணு இல்ல? நீ இப்படி அழுவியா?" தோளில்  சாய்த்துக் கொண்டாள் . இருந்த துக்கத்திற்கு அவளுக்கு நிரஞ்சனாவை விட வலியத்  தோள்கள்  தேவைப்படும். 
"இல்ல அண்ணி ! உங்களுக்குத் தெரியாது. எல்லாருக்கும் இது கக்கூசு. ஆனா நம்மள மாதிரி பொண்ணுங்களுக்கு இது தெய்வம் மாதிரி. முதல்ல இங்க ஒரே ஒரு ரூமும் குளிக்க ஒரே ஒரு தென்னை ஓலை போட்ட இடமும் தான்  இருந்தது. அப்ப இங்க எல்லாம் இத்தனை வீடு கிடையாது. பாத்ரூம் போக விடியல் காலையிலேயே  போய்டணும். யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கும். அம்மா மாசாமாசம் தூரமாகும் போது எல்லாம் எவ்ளோ கஷ்டப்படுவாங்கத் தெரியுமா? இப்ப  இருக்கற மாதிரி எல்லாம் அப்ப பேட்ஸ்  சீப் கிடையாது. அம்மாவுக்குத் துணி தான். மறைச்சு மறைச்சு வைக்கறதுக்குள்ள எவ்ளோ கஷ்டப்படுவாங்கத்  தெரியுமா? நான் சின்ன பொண்ணுதான். ஆனா எனக்கு அந்த கஷ்டமெல்லாம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு. அப்பத்தான் அம்மா படற  இந்த கஷ்டம் ரேணுகாவுக்கு வரக் கூடாதுன்னு அண்ணா வேலைக்கு போக ஆரம்பிச்சு. தனக்குன்னு எதுவும் வாங்கிக்காம கஷ்டப்பட்டு ஒரு ஒரு ரூபாவை சேர்த்து இந்த ரெஸ்ட் ரூம்  கட்டிச்சு . கதவு வைக்க வசதி இல்ல. அப்பாவுக்கும் நிரந்தர வருமானம் இல்ல. அம்மாவும் ரோட்டுல இட்லி வித்துட்டு இருந்தாங்க. துணி திரைசீலையும் தென்னங்கீத்தும்  வச்சுட்டு தான் உள்ள போவோம். ரோட்டுல போன  போது எனக்கும் ரேணுகாவுக்கும் உடம்பெல்லாம் முள்ளு கிழிச்சு எத்தனையோ நாலு அழுதுருக்கோம்.அதே தான் மத்தவங்களுக்கும் . ஆனா  வீட்டுல மத்தவங்க யாரும் சொன்னதில்லை. இந்த கழிவறை கட்டினது மனசளவுல  எங்களுக்கு எத்தனை நிம்மதி தெரியுமா? இப்ப எல்லாம் ராத்திரில வந்தா நாம் எழுந்து போறோம். அப்பல்லாம் ராத்திரி ஒண்ணுக்கு வந்துடுமேன்னு பயந்து பயந்து மதியத்துக்கு மேல தண்ணி கூட குடிக்க மாட்டோம். 
பழைய நினைவுகளில் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே தான் சொல்லிக் கொண்டிருந்தாள் . 
கழிவறைக்குச் செல்வது எத்தனை பெரிய வசதி? இப்போதுதான் நிரஞ்சனாவுக்கும் பாஸ்கருக்கும் புரிந்தது. திக்குவாய் தங்கைக்காக தான் எத்தனை கவலை பாட்டிருக்கிறோமோ அதே போலத் தான் செந்திலும். உடன் பிறந்தவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுக்க  கூட வசதி இல்லாமல் அவர்களுக்காக தன்னையே உருக்கிக்  கொண்டிருப்பவன். அவன் வீட்டுப் பெண்கள் அண்ணனுக்கு பயப்படவில்லை. அது அவர்கள் தரும் மரியாதை என்பது புரிந்தது. அதற்க்காக  அவன் கொடுக்கும் விலையும் பாசமும் என்ன என்பதை புரிந்து கொண்டாள்  நிரஞ்சனா. அந்த நொடி அவளுக்கு செந்தில் சொன்னது எல்லாம் மறந்து போனது. ஆவணி பார்க்க வேண்டும் போல இருந்தது. கால் செய்தாள் . ரிங் போனது. ஆனால்  எடுக்கவில்லை. மேள சத்தத்தில் கேட்கவில்லை.  அந்த திருமண காதசியை பார்த்தவனுக்கு அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. தவிர்க்க முடியாமல் தான் அவன் திருமணத்திற்கு வந்தான். இருந்தாலும் அவனின் திருமண நினைவுகள் அவனை ஆடிப் படைத்தன. பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பெயருக்கு உண்டு விட்டு எழுந்து கொண்டான். ஏனோ மனம் சரியில்லை. அதற்கு காரணம் தன திருமண நின்டுவுகள் தான் என்று நினைத்துக் கொண்டான். இத்தனை நேரம் சிக்னல் வரவில்லை. இபோதுதான் வந்திருக்கிறது. அன்னைக்கு அழைப்போம். போன் எடுத்தாள் சில நொடிகள் முன்புதான் நிரஞ்சனா அழைத்திருந்தாள் . மூன்று மிஸ்ட் கால் இருந்தது.
"இவ எதுக்கு கூப்டருக்கா"யோசிக்கும்போதே மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றான். பவி  தான் பேசினாள் .
"என்ன பவி அண்ணி. நீ எதுக்கு அவங்க போன்லெர்ந்து பேசற?"
அழுகையை அடக்க திண்டாடினாள் . 
அவள் உளறி விடாமல் போனை பிடுங்கியவள், 
"ஒன்னும் இல்ல செந்தில் . ஒரு க்ளையண்ட்டை பாக்க  வந்தேன். அதான் சும்மா உங்க.. நம்ம  வீட்டுக்கு வந்து  பாக்கலான்னு. அப்பதான் தெரிஞ்சுது. நீங்க  வெளியூருக்கு போய் இருக்கீங்கன்னு. அதான் நான் அவங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். நீங்க  எப்ப வருவீங்க ?"
"ராத்திரியா? சரி! நேரா அங்க வந்துருங்க. நீங்களே வந்து அவங்கள  அழைச்சுக்கிட்டு போறீங்களா? இல்ல ரெண்டு நாள் கழிச்சு நானே அனுப்பவா?"
"ஒன்னும் தேவை இல்ல. ராத்திரி நானே அங்க வரேன்"
மாரு வாரத்தை பேசாமல் டபக்கென கட்  செய்தான். இவளுக்கு மூஞ்சியில் அடித்தது போல இருந்தது.
"ஏன் அண்ணி விவரத்தை சொல்ல வேண்டியது தானே. அண்ணனுக்கு சொல்ல வேணாமா?"
"இல்ல பாவி என்ன பண்ணாலும் அவரால ஒடனே இங்க வர முடியாது. பஸ்  புடிச்சுதான் வரனும். அவரு வரட்டும்.நாம இப்பவே விஷயத்த சொன்னா  அவருக்கு டென்சன் ஆகிடும். முதல்ல அவரு பத்ரமா வந்து சேரட்டும். அப்புறமா பேசிக்கலாம்"
ஏதோ தோன்றியவன்,
"ஏ! நீ ஏதாவது பொய்   சொலலறியா? மீண்டும் அழைத்துக் கேட்டான்.
இவளுக்கு திக்கென்றிருந்தது. 'கண்டு புடிச்சுட்டாரா?'
"அம்மா எப்படி இருக்காங்க?"
அப்பாடி!ஒரு செகண்டு கண்ணுல விரலை விட்டு ஆடிட்டான் .
"வீட்டுல எல்லாரும் நல்லா  இருக்காங்க. நீங்க  பயப்படவும் வேணாம். என்ன சந்தேகப் படவும்  வேணாம். முதல்ல பத்திரமா வந்து சேருங்க"
இவர்கள் பேசிக் கொண்டிருக்க பாஸ்கர் ரேணுவுக்கு கால்  செய்து விஷயத்தை சொல்லி விட்டான்.
 "எதையும் ஒளறிடாத. கவனமா பேசு"
"சரிங்க சார்"
நினைத்த மாதிரியே ரேணுக்குவிக்கு அழைத்து விஷயத்தைக் கேட்டுக் கொண்டான் செந்தில். இருவரும் ஒரே மாதிரி பேசவும் நம்பிக்கை வந்தது. 

தொடரும்........


Leave a comment


Comments


Related Post