இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 28-06-2024

Total Views: 1173


பாகம்-23
 
என்னதான் மனதை தேற்றிக் கொண்டு  வேலை செய்தாலும் நிற்காமல் வந்த பவித்ராவின் கண்ணீர் பாஸ்கரை உலுக்கி விட்டது. அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"சரி பவி! அதெல்லாம் நினைக்காத. கடவுள் தான் இப்ப நல்லா  வச்சிருக்காரே " லேசாக முதுகை நீவினான்.
 இந்த மாதிரி ஒரு காரணத்திற்க்காக தான் ஒரு பெண்ணை தான்  சமாதானப் படுத்துவோம்  என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. விஷயம் எதுவாக இருந்தாலும் கழிப்பறை வசதி இல்லாத கொடுமை யாருக்குமே  வர வேண்டாம்.
பின்னோடு வந்து நிரஞ்சனாவும் அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.
"பவிம்மா போதும். லாரி வந்துடும். வா! எல்லாத்தையும் ஏறக்  கட்டணும்"
தலை  நிமிர்ந்தவளின் நெற்றியில் லேசாக முத்தமிட்டான் பாஸ்கர். அந்த நேரம் அவளுக்கும் அது தேவைதான்.எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம். சரியா?"
சாதாரணமாக அவனிடமிருந்து இதழ் ஒற்றலை வாங்கி கொண்டாள் பவி. இவளுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. 
"என்ன டா? என்ன நடக்குது உங்களுக்குள்ள? இதெல்லாம் எப்படா ஆரம்பிச்சீங்க? வாயே திறக்கலையே டா நண்பா" முழித்தாள் நிரஞ்சனா . 
பிறகு ஸ்விகியில் வந்திருந்த இட்லியை அவளுக்கு மெதுவாக ஊட்டினாள் நிரஞ்சனா.
"எனக்கு அது போனது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா கட்டினது தான் இந்த ரெண்டு ரூமும். உங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு அந்த இடத்தை குடுத்துட்டு நாங்க எல்லாரும் முன்னாடி ரூமுல இருந்துக்கலான்னு  நினைச்சோம். அண்ணன்  கூட நீங்க  வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு புடிச்ச மாதிரி கட்டிலும்  பீரோவும் வாங்கலான்னு  இருந்துச்சு. கடைசில எதுவுமே நடக்கல" 
பேசிக் கொண்டே அண்ணி கொடுத்ததை உண்டு முடித்தாள் .
"சாரி அண்ணி. நீங்களே ரொம்ப கவலைல இருக்கீங்க. உங்கள போய்  நானும் அழ  வச்சிட்டேன்.
"இல்ல பவி . நாம கை கழுவுற  தண்ணி எவ்ளோ லக்ஸுரின்னு இல்லாதவங்களுக்குத் தான் தெரியும்.அதே மாதிரிதான். , கழிவு வெளியேத்தற பாத்ரூமும் . அது  ரொம்ப லக்ஸுரியா  இருக்கணும் அங்க  போகறவங்க ரொம்ப ரிலாக்சிடா இருக்கனுன்னு நான் பார்த்து பார்த்து செஞ்சு குடுப்பேன். பட் கழிவறையே பல பேருக்கு  லக்ஸுரின்னு எனக்கு இப்பதான் புரிஞ்சுது. தேங்க்ஸ். நீதான் இதை  சொல்லிக் கொடுத்திருக்க"
===========================================================
"வாங்க மீனாட்சி. வாம்மா  ரேணுகா"
"இருங்க வரேன். கையில் ஆரத்தி எடுத்து பிள்ளையாரை வர வரவேற்றார் பூரணி. சாமி அறையில் அவரை அமர வைத்து பால் நைவேத்தியம் வைத்தார். பாவம் குழந்தை பசிக்குமில்ல. சிறு பிள்ளையை போல கவனித்துக் கொண்டார் பிள்ளையாரை. பூரணியின் நடவைக்கைகள்  தன்னை பார்ப்பது போலவே இருந்தது மீனாட்சிக்கு. 
"ப்ச்! என் செல்லத்துக்கு இன்னிக்கு கேசரியும் சுண்டலும் வைக்கனுன்னு நினச்சேன் எதுவுமே இல்லாம போச்சு. கண்ணீர் கொட்டியது. இந்த கண்ணீர் அதற்கானது இல்லை என்பது பூரணியால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?"
அதற்குள் அங்கே வந்த பிரதீப் மீனாட்சியை  தோளில்  தாங்கி கொண்டான்.
சமாதானப்படுத்த வந்த பூரணியை தடுத்து விட்டான். அவங்க அழட்டும் ஆன்டி. , விடுங்க.
"சாப்டீங்களா ?" இதோ அவனின் கண்ணழகியை பார்த்து தான் கேட்டான். அவளை பார்த்த மாத்திரத்தில் குத்தாட்டம் போட்ட மனதை திட்டி அடக்கினான். 
"இல்லை. அம்மாவுக்கு காலைலேர்ந்து உடம்புக்கு முடியலன்னு சொன்னாங்க. நான் தான் சமைச்சேன். ஆனா டிபன் சாப்பிடறதுக்குள்ள இந்த மாதிரி ஆகிடுச்சு"
"ஆன்டி! இவங்களுக்கு சாப்பிட என்ன  இருக்கோ குடுங்க. வயத்துக்கு போட்டாதான் எதையும் யோசிக்க முடியும்"
பூரணியிடம் சொல்லி விட்டு திரும்பி ரேணுகாவிடமும் அதையே கூறினான். "சாப்பிட்டாதான்  எதையும் யோசிக்க முடியும், போங்க முதல்ல ஏதாவது வயத்துக்கு போடுங்க.
ரேணுகாவிற்கு ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது . இது தன்  வீடு என்ற உரிமை வரவில்லை. 
'யாரிவன்? ஏன்  என் அன்னை அழும்போது அவன் தோள்  கொடுக்கிறான்? அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
டைனிங் டேபிளில் இவர்கள் இருவரும் அமர, பூரணியையும் அமர வைத்து விட்டு  இவனே பொருட்களைக் கொண்டு வந்தான். அவன்தான் பரிமாறினான் . பரிமாறும்போது ரேணுகாவின் தோளில்  லேசாக இடித்தது அவ்வபோது. அவன் கண்டு கொள்ளவில்லை.  ரேணுகாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டான். கால் மீது கால் போட்டு அந்த பத்திரங்களை படித்துக் கொண்டிருந்தான். அவ்வபோது அவன் முகத்தை இவள் பார்த்துக் கொண்டாள் .
எலுமிச்சை வர்ணத்தில்  டீ  ஷர்ட்  போட்டிருந்தான். கருப்பு நிற பாண்ட் .அஜித் குமார் நிறம். அதே போல சிகப்பும் வெள்ளையும் கலந்திருந்த முகம். முகம் என்ன நிறமோ அதற்கு ஏற்றது போல வெள்ளையும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் அவன் நீளமான  கைகள் இருந்தது. நான் எப்படி இருக்கேன் வாட்ச் கேட்டது. நான்தானே அவன் விரலுக்கு அழகு மோதிரம் ரீங்காரமிட்டது. விரல் நுனி நகமும் நான் ரொம்ப ரிச்  என்றுக் கூவியது. நேரான நாசி, அழகான நெற்றி, லேசான விபூதி கீற்று. இன்னும் அழியவில்லை.  அளவான மீசை, எல்லாமே அவனின் பண பலத்தைச் சொன்னது. சாதாரண உடை தான் . ஆனால் ஏதோ ஒரு கெத்து. மிடுக்கு. மற்ற பெண்கள் தன்னை  ஆராய்வதை எளிதில் அறிந்து  கொள்பவன் கண்கள் அவளை அறிந்து கொள்ளாமல் இருந்து விடுமா என்ன? ஒரே ஒரு வேறுபாடு. மற்றவர்கள் பார்ப்பார்கள். ஜொள்ளு விடுவார்கள். அவனின் காருக்கும் பணத்திற்கும் அலைவார்கள். 
இவளோ ,"ரொம்ப பெரிய ஆளா இருப்பார் போல இருக்கே. இவரு ஏதாவது கேள்வி கேட்டா தெரியாதே என்ற பயத்துடன் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"என்ன மேடம்! என்னோட மூஞ்சிய பார்த்தாச்சா? நல்லா  இருக்கா ? கல்யாணம் கட்டிக்கறீங்களா? " நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
"இல்ல அப்படி இல்ல தப்பா பாக்கல . என்ன மன்னிச்சுடுங்க. ஏதாவது கேள்வி கேட்டா பதில் தெரியாதேன்னு பயந்து தான் பார்த்தேன். மத்தபடி நான் எதுவும் தப்பா  எல்லாம் பார்க்கல. இதோ நான் வெளியில் வருகிறேன் சில சொட்டு கண்ணீரும் வெளியில் வந்து விட்டது.
"சீ என்னடா விளையாட்டு இது. பாவம் புள்ள.கை  எல்லாம் சில்லிட்டு போச்சு"
"இவரு சொல்லற மாதிரி எல்லாம் இல்ல ஆன்டி! ப்ளீஸ் அம்மா கிட்ட சொல்லுங்க ஆன்டி. அண்ணனுக்கு தெரிஞ்சா தோலை  உரிச்சுடும்."
"அச்சோ .ஒன்னும் இல்ல ரேணுகா. அவன் உன்ன சும்மா பயப்படுத்ததான் அப்படி சொல்லறான். இரு இரு அவனை ரெண்டு அடிப் போடறேன்"
"அம்மா! என்ன பெத்த ஆத்தா. இங்க பாரு உங்க அக்கா என்ன அடிச்சு கொல்லுது" சும்மா விளையாட்டுக்கு கத்தினான். அந்த நேரத்திலும் தன்னை மறந்து புன்னகை சிந்தினார் மீனாட்சி. 
 ஆமா!ஆமா!  உன்ன அடிச்சா நாந்தான் ஆஸ்பத்திரில போய்  படுக்கணும். போக்கிரி"
சிரித்துக் கொண்டே, நிரஞ்சனாவுக்கு அழைத்தான்.
அவன் அப்போது செய்த  செயல் ரேணுவுக்கு பயத்தை உண்டு பண்ணியது.

தொடரும்........


Leave a comment


Comments


Related Post