இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 28-06-2024

Total Views: 1809

இதரம் -16


வைஷாலியை கூர்மையாக பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜெகதீஷ்வரி.


"ஆன்ட்டி ஏதாவது பேசுங்க.?" என்று வைஷாலி கடுப்பாக சொல்ல 


"கண்டிப்பா தெரியுமா அது அந்த பொண்ணு தான்னு..." என்று கேட்க


"ப்ப்ச்,அவ டாக்டர் நேத்ரா வீட்டில் உங்க பையன் கூட இருக்கிறதை என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்." என்று சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்தாள் வைஷாலி. 


"ஏதாவது எவிடென்ஸ்?" என்று கேட்கவும் மேலும் எரிச்சலாகிப் போனது வைஷாலிக்கு. 



"ஆன்ட்டி என் கூட இப்பவே வாங்க. நான் நேரிலேயேக் காட்டுறேன்" என்று கூறவும்," சரி வா போகலாம்." என்று கிளம்பினார் ஜெகதீஸ்வரி.


அங்கோ நேத்ராவின் வீட்டில் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. 


"வீடு பூட்டி இருக்கு "என்றபடி வைஷாலியைப் பார்க்க


"இங்க தான் எங்கேயாவது இருப்பாங்க" என்று சுற்றும் முற்றும் தேடினாள்.


"ப்ப்ச்  டாக்டர் நேத்ரா அன்ட் திரு டேராடூன் கேம்ப் போயிருக்காங்க. அதற்கான அஃபிசியல் லெட்டர் சைன் பண்ணது நான் தான். அப்புறம் எப்படி இங்கே இருக்க முடியும்.? உன் பேச்சை நான் நம்பவில்லை என்றால் மறுபடியும் மறுபடியும் அதையே பேசுவ. ஸோ வந்துட்டேன் இங்கே யாரும் இல்லையும் கூட. அந்த பொண்ணு நினைவு எங்களை விட உனக்கு அதிகமா இருக்கும் போல வைஷாலி. நல்ல சைக்கார்டிஸ்டை கன்சல்ட் பண்ணு" என்றவர் காரில் சென்று அமர்ந்து கொண்டார். 


"நோ ஆன்ட்டி ஐம் டேம்ன் ஸ்யூர்,அது அவங்க தான்" என்று உறுதியாய் பேச


"தென் ஷோ மீ வைஷாலி. எங்கே அவங்க எனக்கு காட்டு பார்க்கலாம்" என்று சொல்ல வைஷாலிக்கு குழப்பமாக இருந்தது. 



'சற்று முன் நான் பார்த்தது உண்மை தானே அப்புறம் எப்படி?' என்று யோசிக்க ஜெகதீஸ்வரியின் கைபேசி ஒளிர்ந்தது. 


அதில்  சில புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக வந்து விழுந்தது. 


"ம்ம்ம் இதைப் பாரு" என்று புகைப்படத்தை ஒவ்வொன்றாக காட்ட, அதில் நேத்ராவும் திருவும் பொதுநோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். 


"பட் இது எப்படி...? ஜஸ்ட் நவ் தானே பார்த்துட்டு வந்தேன்"மனதில் தோன்றிய குழப்பத்தை தூரம் வைத்து விட்டு ஜெகதீஸ்வரியின் முகம் பார்த்தாள் வைஷாலி. நிர்மலமாயிருந்தது அவரின் வதனம். எந்த உணர்வுகளும் தென்படாமல் இருக்கவே இன்னும் குழப்பம் தான் அதிகரித்தது அவளுக்கு. 


'ஒரு வேளை இவருக்கு தெரிந்திருக்குமோ திருவும் மல்லியும் சேர்ந்திருப்பது?' என நினைத்தபடி பார்க்க


"வாட் அகெய்ன்?" என்று சிறு எரிச்சலை வார்த்தையில் காட்டிவிட 


"நத்திங் ஆன்ட்டி, ஏதோ கன்ஃப்யூஷன் ஐம் சாரி" என்றாள் உள்ளடங்கிப் போன குரலில். 



"வைஷு திரும்ப சொல்றதா நினைக்காத யூ நீட் எ கவுன்சலிங் ஸோ நல்ல சைக்கார்டிஸ்டை கன்சல்ட் பண்ணு " என்று சொல்லியபடியே தான் டிரைவரை கிளம்பும்படி பணித்தார். 


'ஒரு வேளை...' என்று யோசிக்கும் போதே அவளது கைபேசி விடாது தொணதொணத்தது. ஜெயராஜ் தான் அழைத்துக் கொண்டே இருந்தார் அவளுக்கு. 


தான் வந்த விஷயம் நடக்காமல் போகவே, கோபத்தை யாரிடமும் காட்ட முடியாமல் அடக்கிக் கொண்டு வந்தவள், சிறு தனிமை கிடைத்ததும் ஜெயராஜை வார்த்தைகளால் வதைத்து விட்டாள். 



"உங்களை நம்பி இருந்ததுக்கு எனக்கு மென்டல் பட்டம் கட்டுறாங்க" என கத்தி விட்டு இணைப்பைத் துண்டித்தாள். 


*********

ரகுவர்மன் விழிகள் சிவக்க மேசையில் பேனாவை சுழற்றிக் கொண்டிருந்தான். எதிரே இருந்தவர்கள் நடுங்கிப் போய் அமர்ந்திருந்தனர். 


"ஸோ என்ன நடந்தது? என்று சொல்லும் எண்ணம் ஒருத்தருக்கும் இல்லை. அப்படித்தானே?!" என அடிக் குரலில் சீற 


"சார்..." எனும் போதே," பேசுங்க மிஸ்டர் நந்தன். இது எவ்வளவு பெரிய கான்ட்ராக்ட், எல்லாம் உங்களுக்குத் தெரியும். வருஷா வருஷம் நாம தான் டேக் ஓவர் பண்றோம் அதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த வருஷம் எப்படி மிஸ் ஆச்சு. ஐ வான்ன ரீசன் தட்ஸ் ஆல்!" என்றான் கடுமையான தொனியில். 


நந்தன் நிமிர்ந்து அமர்ந்தவன்," எல்லாம் சரியா கோட் பண்ணி இருந்தோம் சார். ஃபைனல் காப்பி உங்களுக்கு அனுப்பிய மறுநொடி எல்லா இடங்களிலும் டெலிட் பண்ணிட்டேன். நானே என் கைப்பட தான் பண்ணேன். நம்ம கோட் பண்ண அமவுன்ட் விட கம்மியா யாரும் பண்ண வாய்ப்பு இல்லை. பட் நடந்திடுச்சு. உங்களுக்கேத் தெரியும்" என்று சொல்லும் போதே 



"வெய்ட் ஃபைனல் காப்பி எப்போ எனக்கு அனுப்பினிங்க?" என்று சந்தேகத்துடன் தனது லேப்டாப்பை குடைந்தான். 



நந்தன் தேதி, நேரம், நிமிடம், நொடி கூட மறவாது ஒப்புவித்தான் அவனிடம். 



ரகுவர்மன் பார்வையை அலைய விட்டபடி யோசித்தவன்,"ஓகே நீங்க கிளம்புங்க" என்று அவர்களை ,"இனியும் கேர்ஃபுல் நந்தன். திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங் ஃபார் ஆல் ஹைஸ்" என்று அவர்களையும் எச்சரித்து விட்டு கைபேசியை எடுத்து நயனிகாவை அழைத்தான். 



"நயனி என் ஆபிஸ் லேப்டாப்பை வேற எதுக்காவது எடுத்து யூஸ் பண்ணியா?" என அவசரமாய் கேட்க


"என் கிட்ட இருக்கும் போது நான் ஏன் எடுக்கப் போறேன். அதுவும் ஆபிஸ் லேப்பை "என்று கேட்டவள்," ஏன் என்னாச்சு ?"என்றாள். 


"ஏஆரொட கான்ட்ராக்ட் கைவிட்டுப் போயிடுச்சு" என்றான் யோசித்தவண்ணமே 



"ஏஆர்..." என்று அவளும் யோசித்தபடி," இயர்லி ஒன்ஸ் அவங்க ஹோட்டல்ஸ் நாம தானே ரினோவேட் பண்ணுவோம்" என கூறியவள்," சரி விடுங்க நெக்ஸ்ட் டைம் கிடைச்சுட்டு போகுது "என்றாள் அசட்டையாக. 


"நூற்றைம்பது கோடி நயனி. பணம் ஒரு விஷயம் இல்லை. இது இல்லாட்டி வேற ப்ராஜெக்ட் வரும் பார்த்துக்கலாம். பட் இது ப்ரெஸ்டீஜ் சம்பந்தப்பட்டது. நம்ம தாத்தா காலத்தில் இருந்து பண்ணிட்டு இருக்கோம். அவங்க ஹோட்டல் கட்டினதில் இருந்து இன்னவரை வேற யாருக்கும் கான்ட்ராக்ட் போனதே இல்லை. அவங்களே கால் பண்ணி கேட்கிறாங்க ஏன் சார் விட்டீங்கன்னு?" என்றான் கவலையாக. 


நயனிகா யோசித்தவள்," நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க. யோசிப்போம்" என்று இணைப்பைத் துண்டித்தாள். 


ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டேயிருந்தது அவளுக்கு. நயனிகா சில விஷயங்களில் தன் கர்வத்தைக் காட்டினாலும் சமயோசிதமாக யோசிப்பதில் வல்லவள். கணவனின் முன்னேற்றத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவள். அவளின் நிறைய ஆலோசனைகள் ரகுவர்மனிற்கு கைகொடுத்திருக்கிறது. மதியுக மந்திரியாக செயல்படுபவள். ஜீவரெத்தினம் இதை எல்லாம் யோசித்து தான் அவளை ஜெஆர்எம் பேலஸின் மருமகள் ஆக்கியது. 



நயனிகா ரகுவை வரச் சொல்லி இருந்தாலும் அவன் வீட்டிற்கு செல்லவில்லை. 


மனவுளைச்சலில் அங்கேயே இருந்து கொள்ள, இங்கு மதிய உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர். 


நயனிகா ரகு கூறியதை ஜீவரெத்தினத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். 



உடலின் வயது தான் அதிகமே தவிர மனச் சிந்தனையின் வயது ஜீவரெத்தினத்திற்கு இன்னும் நன்கு சூட்சுமாய் சிந்திக்கும் வயதே என பறைசாற்றியது அவரது யோசனைகள். 


"எல்லாம் சரியா வருமா பாட்டிமா...?" தயக்கத்துடன் கேட்ட பேரனின் மனைவியை தோளோடு அணைத்தவர்," கிட்டத்தட்ட நாற்பது வருட அனுபவம்" என்றார் நம்பிக்கையாக. 


உணவு மேசையில் மாறன் ரகுவைத் தவிர அனைவரும் இருந்தனர். துர்காவின் குடும்பமும் சேர்ந்தே இருக்க தண்ணீரில் மிதக்கும் எண்ணைத்துளி போல வைஷாலி அங்கு இருந்தாள். ஒட்டாமல் இருந்தாலும் பிரித்தெடுக்க முடியாத வகையில் அமர்ந்திருந்தாள். 


கான்ட்ராக்ட் கையை விட்டு போன செய்தி தான் உணவு மேசையில் விவாதப் பொருளாகியிருந்தது. எப்போதும் அமைதியாய் இருக்குமிடம் அது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்த இடம் போல அத்தனை சலசலப்பு. காரணம் வேறு யாராக இருக்க முடியும். சாட்சாத் ஜெயராஜே தான். தன் அண்ணன் மகன்களின் பொறுப்பின்மையை சாடிக் கொண்டிருந்தார். கைவிட்டு போனது நமது கௌரவம் என்று அத்தனை பேச்சு, அத்தனை நக்கல் அவரிடத்தில். 


அர்ணவ் பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், பாதி உணவிலேயே எழுந்து சென்று விட்டான். 


"அரு வாட் இஸ் திஸ்?"என்று கடிந்த வைஷ்ணவியை ஆழ்ந்த பார்வை பார்த்தவன், அவ்விடத்தில் நிற்கவில்லை. 


"ஜெயராஜ் சாப்பிடும் போது பிஸ்னஸ் பத்தி பேசாதேன்னு சொன்னா புரியாதா உனக்கு?" என்று கடிந்து கொண்ட ஜீவரெத்தினம்," அர்ணவ் சங்கடப்படுற மாதிரி இனி எது நடந்தாலும் நான் மனுஷியா இருக்க மாட்டேன்." என்று அழுத்தமாய் சொல்ல ஜெயராஜின் முணுமுணுத்த இதழ்கள் பூட்டுப் போட்டுக் கொண்டது. 


இளமாறனுக்கோ தன்னைவிட இளையவன் பேசும்படி மகன் நடந்து விட்டானே என்ற ஆதங்கம். அதுவும் அனைவர் முன்னிலையிலும் என அத்தனை தலையிறக்கமாய் போனது அவருக்கு. 


இதுதான் சாக்கென்று மகனை பொறுப்பில் அமரவைக்க வேண்டும் என்று திலகவதியும், வைஷ்ணவியும் வேண்டுகோள் வைக்க இளமாறன் முகம் கன்றிவிட்டது அவமானத்தில். 



அர்ணவ் நரேன் இருவருக்குமே ரகுவைப் போலவே சமமான பொறுப்பு தந்தபோதிலும் இறுதி முடிவு இன்று வரை இளமாறனிடம் தான் செல்லும். மருத்துவமனை நிர்வாகம் எப்போதும் ஜெகதீஸ்வரியின் கைகளில் தான். 


மூத்த மகனுக்கும், மருமகளுக்கும் அதிகாரத்தை மொத்தமாய் தூக்கி கொடுத்து விட்டார் ஜீவரெத்தினம் என்று கூட திலகவதிக்கும் , வைஷ்ணவிக்கும் எண்ணமிருந்தது. 


ஜீவரெத்தினம் இருமகன்களுக்கும் மகளுக்கும் தொழில்களை சமபங்கிட்டு இருந்தாலும் ஆதியில் துவங்கிய கட்டிடம் கட்டும் நிறுவனம் இளமாறன் வசம் தான் தந்திருந்தார் அவர். ஏனெனில் இளமாறன் அடிப்படையில் ஒரு கட்டிடவியல் நிபுணர் என்று தான் கூறவேண்டும். இளம் வயதிலேயே தந்தையின் தொழிலை நேர்த்தியாக காலத்திற்கு ஏற்ப முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றது அவர் தான். ஜெயராஜ் என்ன தான் திறமையிருந்தாலும் குணத்தில் முன்கோபி. சட்டென கைநீட்டும் பழக்கம் அவரிடம் உண்டு. அதனாலேயே வாடிக்கையாளர்கள் பக்கம் அவரை விடுவதில்லை. 


அர்ணவ் எழுந்து சென்ற பின்பும் ஜீவரெத்தினம் ஜெயராஜை அடக்கிய பின்பும்,வாய் இருக்க மாட்டாமல் திலகவதி பேசிவிட ஜெயராஜ் மீண்டும் ஆரம்பித்து விட்டார். 



நயனிகா எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இறுதியாக துர்காவைப் பார்த்தாள். 


துர்கா சட்டென தலைதாழ்த்தியவள் நிமிர்ந்து அவளும் தன் பங்கிற்கு ஏதோ சொல்ல, நயனிகா கோபமாய் எழுந்து," ஷட் அப் துர்கா. நீயெல்லாம் பேசுற அளவுக்கு அவர் ஒன்னும் செஞ்சுடலை. இந்த கான்ட்ராக்ட் கையைவிட்டுப் போனது நஷ்டம் தான் இல்லைன்னு சொல்லலை அதை எப்படி சரிசெய்யணும்னு அவருக்குத் தெரியும் தி கிரேட் சிவில் இஞ்சினியர் அன்ட் ஃபேமஸ் பிஸ்னஸ்மேன் இளமாறனுடைய மகன் ன்றதை யாரும் மறந்திட வேண்டாம். அப்பாவுடைய பெயரை மறுபடியும் அதே நிலைக்கு கொண்டுவர அவருக்குத் தெரியும். இனி தேவையில்லாமல் என் புருஷனை பத்தி பேசினா நான் அமைதியாக இருக்க மாட்டேன்."  என்று சத்தமாக சொல்லி விட்டு நகர ஜெயராஜின் முகம் பேயடித்தாற் போல ஆனது. 



"ம்மா வாட் ...?"என்று அதிருப்தியை அவர் காட்ட


"இங்கே பேச வேண்டாமென்று சொன்னேன். யாரும் கேட்கலை. அவ புருஷனை பேசினா அமைதியா இருப்பாளா என்ன. வைஷ்ணவி நீ இருப்பியா?" என்று கேட்டுவிட்டு அவரும் சென்று விட உணவுமேசை மொத்தமாய் காலியாகியிருந்தது. 



கைகழுவும் இடத்தில் துர்காவிற்கு நயனி நன்றி தெரிவித்து கொண்டிருந்தாள். 


"தேங்க் யூ துர்கா, அவர் வாயடைக்க வேறு வழி தெரியவில்லை" என்றிட 


"ச்சில் அண்ணி. என் அண்ணாவை பேசினா நான் மட்டும் சும்மா இருப்பேனா என்ன?" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

இங்கு ஜெயராஜின் உள்ளமோ கொண்டாட்டத்தில் இருந்தது. பின்னே சத்தமின்றி இத்தனை வருடம் இருந்த நட்பு ரீதியான உறவை அல்லவா உடைத்திருக்கிறார். மகிழ்ச்சி இருக்கத் தானே செய்யும். 


அவரது கொண்டாட்டத்தை தடைசெய்யும் விதமாக மாறனும் மல்லியும் ஒன்றாய் இருந்த விஷயத்தைக் கூறினாள் வைஷாலி. 


"நிஜம் தானா நீ சொல்றது நிச்சயமாக அது அந்த பொண்ணு தானா? இல்லை நேத்ராவா?,மாறன் நேத்ரா கூட க்ளோஸ்னு எனக்கு சமீபமா தான் தெரிந்தது. அவனோட ஜூனியராம் அவ "என்று சொல்ல


"ஜூனியர்'னு உங்களுக்குத் தெரியாதா என்ன...?" 


"தெரிஞ்சிருந்தா அவ கிட்ட ஏன் மல்லியோட ஃபர்ஸ்ட் பேபியை அபார்ட் பண்ண சொல்லி சொல்லப் போறேன். இப்போ கூட. யார் கிட்டயாவது இதைப் பத்தி பேசினா அவ ஃபேமிலியை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டி வச்சிருக்கேன்" என்று கடுப்பாக சொல்லவும் 


"அப்போ நேத்ரா அந்த திருவிற்கு ஹெல்ப் பண்றாளா?' என்று யோசித்த வைஷாலி," உங்க கிட்ட இதை நான் எவிடென்ஸோட நிருபிக்கிறேன்" என்றிருந்தாள். 





*********

யாரோ எப்படியோ போங்கள் என்ற ரீதியில் மாறனும் மல்லியும் தங்கள் உலகில் இருந்தனர். 


.... தொடரும் 















Leave a comment


Comments


Related Post