இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -69 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 28-06-2024

Total Views: 3570

“என்ன ஏட்டு? சார் இந்த அளவுக்கு கோவமா இருக்காரு.” 

“பின்ன இருக்காதா? சார் கட்டிக்கற பொண்ணு தான் இந்த ரோகனுக்கு எதிரா சாட்சி சொல்லுது, அதையே போடப் பார்த்துருக்கான். சும்மா விடுவாரா..?” 

“இது என்ன கணக்குய்யா சாட்சி சொல்ற பொண்ணை கட்டிக்கப் போறாரா.?” 

“ஆமா, இவன் கொலைப் பண்றதை பார்த்த ஒரே சாட்சி அந்தப் பொண்ணுதாய்யா. அதை சாட்சி சொல்ல வைக்கற வரைக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்ன்னே கல்யாணம் பண்ணிக்கறாரு தெரியுமா?” 

“அப்படிக்கூட பண்ணிக்குவாங்கலயா.” 

“இவரு பன்னாரே. நைட்ல அந்த பொண்ணை அட்டாக் பண்ணிடுவாங்களோன்னு ரெண்டு வாரமா கூடவே இருக்காருய்யா. 

“அப்படி என்னையா இவனைப் புடிச்சே ஆகணும்னு இருக்கு?” 

“எத்தனை போர்ஜரி வேலைப் பார்த்து வெச்சிருக்கான்னு உனக்கு தெரியாதுய்யா. கிட்ட தட்ட ஆயிரம் கோடி இவனும் இவன் அப்பனும் சேர்ந்து அடிச்சிருக்கான்ங்க. அதுக்காக இவன்ங்க பண்ணாத வேலையே இல்ல. இந்த கேஸை மட்டும் பிராப்பரா முடிச்சிட்டா நந்தன் சார் தான் அடுத்த கமிஷ்னர் தெரியும் தானே. இந்த வயசுல கமிஷ்னர் ஆகறதுன்னா சும்மாவா..?” 

“அதுக்குன்னு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிப்பாங்களா..?” 

“அவர் கணக்கு என்னவோ யாருக்கு தெரியும்?” என்றார். 

அவர்கள் பேசுவது போல் நிலாவை சாட்சி சொல்ல மட்டும் பயன்படுத்திக் கொள்வானா..? அப்படி நடந்தால் நிலாவின் நிலை. 

ரோகனை மிதித்து ஓய்ந்தவன். காதில் இருந்த அலைபேசி அணைந்திருக்க, அதை தூக்கி ஓரமாக போட்டவன், “உன்னைய கொல்லாம வெறி அடங்காதுடா.. இருக்கு உனக்கும் உன் அப்பனுக்கும்.. எப்படிலாம் ஆட்டம் காட்டறேன் பாருங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொலைப்பேசியின் அழைப்புமணி மாறி மாறி அடித்தது. 

பெரிய இடத்தில் கை வைத்தாலே சிபாரிசு பண்ண ஓடி வந்துவிடுவார்கள் தானே. இங்கும் மட்டும் நடக்காமல் இருக்கும்மா என்ன.. 

“சார் போன் அடிச்சிட்டே இருக்கு.” 

“எடுக்காதீங்க” 

“கமிஷ்னர் சார் சத்தம் போடுவாரு சார்.” 

"நான் பார்த்துக்கறேன்." என்றவன் எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் உள்ளே இழுக்கவில்லை. 

“நந்தா அவனை பிடிச்ச விஷயம் காட்டு தீ மாதிரி பரவிட்டு இருக்கு ஏதாவது பண்ணி இது பேக்ன்னு நிரூபி.” மீண்டும் நந்தனுக்கு அழைத்து சத்தம் போட்டார் கமிஷ்னர். 

“விடுங்க சார் பார்த்துக்கலாம்.” 

“அவன் மேல கையை வெச்சிடாத நந்தா..” 

“ச்ச ச்சா கையெல்லாம் வைக்க மாட்டேன் சார்.” 

“நீ சொல்ற டோன்னே சரியில்லையே..” 

“கால் மட்டும் ஒரு இருபது தடவை வெச்சேன்.” 

“அடப்பாவி.. நாளைக்கு கோர்ட்ல ஹேண்ட்ஓவர் பண்ணும் போது என்னடா பண்ணுவ..?” 

“சிம்பிள் பாத்ரூம்ல குச்சி தடுக்கி விழுந்தான்னு சொல்ல வெச்சிடுவோம்.” 

“யாருக்காக இந்த வெறி நந்தா?” 

“அவன் என்ன சின்ன வேலையா பார்த்து வெச்சிருக்கான் போனா போகுதுன்னு விட. இவன் சொகுசா வாழ பல உயிரை எடுத்துருக்கான்.” 

“அதுக்கு கோர்ட் இருக்கு.” 

“எங்கப் போனாலும் தப்பிச்சிடுவான் சார், இவனை எல்லாம் விடவே கூடாது. நீங்க மட்டும் எதும் கண்டுக்காம விட்டுருங்க மத்ததை நான் பார்த்துக்கறேன்.” 

“என்னமோ பண்ணு அவன் உயிர் ரொம்ப முக்கியம் அதை எடுக்காத சாமி.” 

“அதை மட்டும் விட்டுட்டு மத்ததை எடுத்தேன்.” 

“கல்யாணத்துக்கு போகலையா?”

“நாளைக்கு நைட் தானே பார்த்துக்கலாம்.”

“அந்தப் பொண்ணுக்கும் ஆசை இருக்கும்ல நந்தா. நீ கூடவே இருக்கணும்னு..” 

“அவளுக்கு ஆசை, ஏன் சார்? வைங்க” என அழைப்பைத் துண்டித்து விட்டான்.

அவர் சொன்னது போல் நிலாவிற்கு அவன் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருந்தால் இந்நேரம் ஒரு அழைப்பாவது செய்திருப்பாள் எதுவும் செய்யவில்லை என்றதும் கோவம் அதிகமாக அதற்கும் ரோகனை தான் வெளுத்துக் கொண்டிருந்தான்.

“நாலு நாள் ஆச்சிடி என்னைய பார்க்கணும்னு கூட தோணலையா? தினமும் வர்றவன் வரலைனோன அப்பா நிம்மதின்னு இருந்திட்டியா?” என மனதில் சொல்லிக் கொண்டே அவளை அடிக்க முடியாத பாவத்திற்கு ரோகனின் அடியாட்களை அடித்து நொறுக்கியிருந்தான்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

பூவாரம் பூக்க பொன்னாரம் வெடிக்க என அனைவருக்கும் நந்தன் வருவானா? மாட்டானா? என்ற பயத்துடனே விடிய, யுகிக்கு மட்டும் நந்தன் வரக் கூடாது என வேண்டுதலுடன் நாள் விடிந்தது.

இன்று கூட நேரம் இருக்கிறது எப்படியாவது நிலாவிடம் பேசி அவள் மனதை மாற்றிவிட வேண்டும் அதற்கான வேலையில் முழு மூச்சாக இறங்கி விட்டான்.

யுகிக்கு வாய்ப்பு தானாகவே அமைந்தது. நந்தனும் வீட்டில் இல்லாதது யுகிக்கு வசதியாகப் போனது.

வேக வேகமாக நிலாவின் வீட்டிற்கு போனான். அவன் வீட்டில் ஷாலினிக்கு நலுங்கு வைத்துக்கொண்டிருக்க எல்லோரும் அதை கவனிக்கும் போது இவன் மட்டும் பூனையை காணப் போயாச்சி.

“எங்கடா இவ்வளவு அவசரமா போற?” என மணிமேகலை கேக்க, 

“போறப்பையே எங்கப் போறன்னு கேட்டா போறக் காரியம் உருப்புடுமா?”

“அப்படி எந்த கோட்டையைப் பிடிக்க சார் போறீரு..”

“கோட்டை தான், சக்ஸஸ் ஆனா சொல்றேன்." என்றவன் வேக வேகமாக படிக்களை ஏற நிலா இவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“பூனை பூனை உன்கிட்ட தான் பேச வந்தேன் நில்லு.”

“உன்கிட்ட பேச எனக்கு ஒன்னுமில்ல.”

“எனக்கு நிறைய இருக்கு ப்ளீஸ், நான் பேசறதைக் கேளு.”

அவள் அமைதியாக நிற்க, யுகி பேச ஆரம்பித்து விட்டான்.

“பூனை நான் சொல்றதைக் கேளு அவன் உன்னைய நல்லாப் பார்த்துக்க மாட்டேன். இப்போ பாரு நைட்  ரிசப்ஷன் இருக்கு இன்னும் அவன் வீடு வந்து சேரல, இவன் கூட உன் வாழ்க்கை எப்படி சந்தோசமா இருக்கும்ன்னு நினைக்கற? இப்போக் கூட நேரம் இருக்கு நல்லா யோசிச்சி  முடிவு எடு. காலம் முழுக்க அவன் எப்போ வருவான் வருவான்னு பார்த்து பார்த்தே நாள் போய்டும்.”

“ஆல்ரெடி முடிவு பண்ணித் தான் இவ்வளவு தூரம் வந்துருக்குன்னு நினைக்கறேன்.”

“நிலா..”

“நிலாவே தான் இனி பூனைன்னு  செல்லப்பேரு வைச்சி கூப்பிடறதை விட்டுட்டு அண்ணின்னு மரியாதையா கூப்பிட்டு பழகு. அண்ணி" என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து நிற்காமல் சொல்லிக்கொண்டேப் போய்விட்டாள்.

நின்றால் மேலும் மேலும் பேசிக் கொண்டே இருப்பான். முதலில் விருப்பம் இல்லாமல் ஒத்துக்கொண்டாலும் இப்போது நந்தனின் அருகாமைக்கு ஏங்கும் போது யுகி சொல்வது எதுவும் நடக்க வாய்ப்பேயில்லை. பிறகு எதற்கு பேச விட வேண்டும் அதனாலயே அங்கிருந்து சென்று விட்டாள்.

யுகிக்கு தான் மன உளைச்சலாக இருந்தது.

அவனுக்காக பார்த்த நாட்களை விட அவன் பூனைக்காக பார்த்த நாட்கள் தானே அதிகம். இன்று அவள் யாரோ போல நிற்கும் போது திரும்ப திரும்ப மனதை ரம்பம் கொண்டு அறுத்ததுப் போல் வலித்தது. வலியை போக்க குடிக்கச் சென்றான்.

இதுநாள் வரையிலும் எந்த கெட்டப் பழக்கத்தையும் பழகாத யுகி முதன்முறையாக குடியைத் தேடிச் சென்றான்.

நந்தன் இன்று ரோகனையும் அவனைச் சேர்ந்த ஆட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ரோகன் சார்பாக ஜாமீன் வழக்குப் போட்டிருக்க, ஜாமீன் கொடுக்கக் கூடாது மேலும் ரோகனை 15 நாள் கஷ்டடியில் விசாரிக்க வேண்டும் என நந்தன் தரப்பு வழக்குப் போடப்பட்டிருக்க நந்தன் சார்பாக அரசு வக்கீல் ஆஜராகினார்.

ரோகன் செய்த தவறு, கொலை.  மற்றும் அவன் தந்தை சூரியராஜ்  செய்த குற்றங்கள் அனைத்தையும் விளாவாரியாக சொல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சொல்ல, நீதிமன்றமும்  ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

பிறகு ரோகனை நந்தனின் கஷ்டடிக்கு கொண்டு வர கையெழுத்து போட்டுவிட்டு அனைத்து சட்டத்திட்டங்களையும் முடிக்க மாலை நான்கு மணிக்கு மேலாகி விட்டது.

“என்னங்க இன்னும் நந்து வரலையே போன் போடுங்க.”

“போன் போட்டா எடுக்க மாட்டிங்கிறான்.” என நெற்றியை தடவிக் கொண்டவருக்கு ஓரே தலை இடியாக இருந்தது.

“வருவான் தானேன்ங்க”

“எனக்கு மட்டும் என்ன தெரியும்? போன் எடுத்தா தானே சொல்ல முடியும்.” என கோபமாக பேச, எப்போதும் போல் மணிமேகலை அமைதியாகிவிட்டார்.

அவரின் அமைதிக் கூட மார்த்தியை கஷ்டப்படுத்த, “சாரிடி ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். நீ இன்னும் டென்சனைக் கூட்டுனா எப்படி? அதான் கோவமா பேசிட்டேன்.” என  முதல்முறை மன்னிப்பு கேக்கும் கணவனை உலக அதிசயம் போல் வாயைப் பிளந்துப் பார்த்தார்.

ஷாலினிக்கு நல்லபடியாக நலுங்கு வைத்து முடிக்க.. அவளை குளிக்க அனுப்பிய மணிமேகலைக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

நந்தனுக்கு நலுங்கு வைத்து கையில்  கங்கணம் கட்டிவிட வேண்டும். மூன்று நாட்களுக்கு முன்பே செய்ய வேண்டியதை நந்தனின் வேலைக் கருதி அனைவருக்குமே இன்று வைத்திருந்தனர். இன்றும் அவன் வரவில்லை என்றதும் மனம் பிசைய ஆரம்பித்தது.

நிலாவையும் வளவனையும் தனி தனியாக அமர வைத்து பெரியவர்களால் நலுங்கு வைத்தனர்.  நிலாவின் கண்கள் அழைப்புறுதலைப் பார்க்க முடியவில்லை. ராஜிக்கு கண் கலங்கியது.

திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் எப்படி எப்படியோ ரசிக்கிறார்கள். தன் மகளுக்கு இப்படியா நடக்க வேண்டும்? என அவரின் கலக்கம், வளவனையும் தாக்காமல் இல்லை.

“பொண்ணுக்கு நலுங்கு வெச்சாசி போய் குளிச்சுட்டு வர சொல்லுங்க.”

குளித்துவிட்டு வந்தால் அடுத்து மண்டபத்திற்கு தான் செல்ல வேண்டும், பெண் அழைப்பும் மாப்பிள்ளை அழைப்பும் ஒரு சேர நடக்க இருக்கிறது. பெண்கள் இருவர் இருக்கிறார்கள் மாப்பிள்ளை..

“இங்க பாரு ராஜி இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் யோசிச்சிட்டு நிற்க முடியாது, பிள்ளையை குளிக்க அனுப்பு. மேக்கப் போடறதுக்குள்ள அவன் வந்துடுவான்." என அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொல்ல வேறு வழியின்றி நிலாவை குளிக்க அனுப்பினார்.

“எவ்வளவு பிரச்சனை, நிம்மதியா கல்யாணம் கூட பண்ண முடியலை.”  என நொந்து போய் நின்றார் ராஜி.

மாப்பிள்ளை அழைப்பும் பொண்ணு அழைப்பு தயாராகி நின்றது. நந்தன் தான் வரவில்லை.

இருக் கல்யாணம் நடக்கும் போது ஒரு ஜோடியை மட்டும் எப்படி அழைத்துச் செல்வது.

“டேய் மார்த்தி நந்துக்கு கூப்பிட்டுப் பாருடா..” கிருஷ்ணம்மாள் கூட பதறிப் போனார். 

“ஆள் ஆளுக்கு கூப்பிடுன்னா இவ்வளவு நேரம் கூப்பிடாமலா இருப்பாங்க, அவன் தான் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருக்கான் கமிஷ்னருக்கு கால் பண்ண அவன் அப்போவே கிளம்பிட்டான்னு சொல்றாங்க என்ன பண்ண சொல்றிங்க. தெரு தெருவா போய் தேடி அலையட்டுமா?” என கத்திக் கொண்டிருந்தார் மார்த்தி. 

பாவம் அவரும் தான் என்ன செய்வார். நந்தன் வருவான் என்ற நம்பிக்கை தானே இவ்வளவு ஏற்பாட்டையும் செய்தார். மகன் மேல் இப்போது கூட நம்பிக்கை இருக்கிறது. அவன் கண்கள் நிலாவைப் பார்க்கும் போது தோன்றும் உணர்வை அவன் உணராமல் இருக்கலாம் பெற்ற தந்தை உணராமல் இருப்பாரா? அவளை ஏமாத்த ஒருநாளும் நினைக்க மாட்டான் என நம்பினார். 

என்ன பண்ணுவது என யாருக்குமே தெரியவில்லை. வளவன் வேறு ஒரு பக்கம் குதித்துக் கொண்டிருந்தான். 

“எங்கள சபையில வெச்சி அவமானப்படுத்தணும்னு எவ்வளவு நாள் காத்திருந்தீங்க?” 

“மாப்பிள்ளை தயவு செஞ்சி பொறுமையா இரு, அவன் வேலை அப்படி? என்ன சொல்ல முடியும்.” 

“அப்படி வேலை முக்கியம்ன்னு போறவன் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருக்கக் கூடாது. இப்போ அவ நிர்கதியா நிற்கறாளே அதுக்கு யாரு பதில் சொல்றது? நீங்க சொல்றிங்களா.?” 

“நந்தன் இல்லைனா என்ன அதான் யுகி இருக்கான்ல அவனை நிலாவுக்கு கல்யாணம் பண்ணி வைங்க, நந்தனை விட யுகி தான் நிலாவை நல்லாப் பார்த்துப்பான்.” என கூட்டத்தில் ஒருக் குரல் வர நிலா விக்கித்துப் போய் நின்றாள். 

“என்ன பேசறீங்க நாளைக்கு காலையில தானே மூக்கூர்த்தம் அதுக்குள்ள நந்து வந்துடுவான், புதுசா எதையாவது கிளப்பி விடாதீங்க.” 

“முதப் பையனை தான் காணாம்ன்னு பாத்தா, ரெண்டாவது பையனையும் தான் காணா போல, தங்கச்சிக்கு கல்யாணம் அண்ணன்ங்க பொறுப்பா பக்கத்துல இருக்க வேண்டாமா?” என ஒருத்தர் கத்த. 

அப்போது தான் யுகி இல்லாததைப் பார்த்தனர். 

இவன் எங்கடாப் போனான் என வளவன் கூட அப்போது தான் யுகியை காணவில்லை என்று கண்களால் தேட அவன் சுற்றி எங்கையுமே இல்லை. 

நிலாவிற்கு அதெல்லாம் கவனிக்கும் மனநிலை இல்லை, நந்தன் வந்துவிடுவான் என்று தானே நம்பி இருந்தாள். 

நேரம் சென்றுக் கொண்டே இருக்க யுகி தள்ளாடி படி வீடு வந்து சேர்ந்தான். 

“என்னடா இது புது பழக்கம் குடிச்சிருக்கியா?” 

“எல்லோரும் சேர்ந்து என் பூனையோட வாழ்க்கை கெடுக்கப் பார்க்கறீங்க. அந்த நாய் அவளை ஏமாத்திடுவான்.” என குளறிக் கொண்டே வாசற்படியில் விழா.. நிலா யுகியின் அன்பில் கதறிவிட்டாள். 

அவள் வாழ்க்கையை நினைத்து இவன் குடிக்கிறான் எவ்வளவு வலி இருந்தால் பிடிக்காத ஒன்றை செய்திருப்பான் என நிலை குழைந்து போனாள். 

சுற்றி எல்லோரும் அவளைக் கஷ்டப்படுத்த கல்யாணம் போலே இல்லாமல் ஏதோ துக்கம் நடந்தது போல் அவளது அறைக்குப் போய் கதவை மூடிக் கொண்டு கதறி அழுதாள். 

இரண்டாம் பாகம் முற்றுப் பெற்றது. 


மூன்றாம் பாகம் டீசர். 

நிலாவின் முன் ஒரு நோட்டைத் தூக்கி ஏறிந்த நந்தன். 

"இது என்னடி சொல்லு?" 

"இது என்னன்னா எனக்கு என்ன தெரியும்?" என அவள் நோட்டை எடுத்துப் பார்க்க. 

பக்கத்துக்கு பக்கம் ஐ லவ் யூ நிலா, நிலா நிலா என வண்ணமாக எழுதி அம்பு விட்டிருந்தான் யுகி. 

அதைப் பார்த்த நிலாவின் கண்கள் நிலைகுத்தி அப்படியே நிற்க.

"என்ன பார்க்கற.. அவன் உன்னைய லவ் பண்ணிருக்கான்."

"பைத்தியம் மாதிரி பேசாதீங்க."

"ஒ இப்போ நான் பைத்தியம் வேற. ஆகிட்டனா..?"

"அதில்லங்க..."

"வேற எதுங்க?"

"ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க."

"எனக்கு எல்லா தெரியும்டி."

"உனக்கு ஒரு மண்ணும் தெரியாது  போடா.. என்னைய சொல்றியே நீ முதல்ல உஷாவைப் பத்தி சொன்னியா.. இப்போ அவ வந்து உன் புருஷன் எனக்கு தான் சொந்தம்னு சொல்றாள, அதுக்கு முதல்ல பதில் சொல்லு." என மரியாதை காற்றில் பறக்க கேட்டவளை கன்னம் கன்னமாக அப்ப வேண்டும் போல் இருந்தது.

"கேக்கறால கொடுத்துடு."

"ஒ கொடுக்கணுமா கொடுக்கறேன்.  உன்னோட வேலை முடிஞ்சதும் கழட்டி விடப் பார்க்கற அதானே.."

"ஆமா, யூஸ் பண்ணிட்டேன் இனி எனக்கு நீ தேவையில்ல. உன்னைய வெச்சி உன் அண்ணனையும் பழி வாங்கியாச்சி."

"அப்போ நான் போகணும் நீ அவக் கூட சேர்ந்து கூத்தடிப்ப."

"நான் என்னமோ பண்றேன் உனக்கு என்ன?"

"அப்போ நான் என்ன பண்ணாலும் உனக்கும் கவலையில்ல.."

"இல்ல போடி." என்றதும் நிலா கண்களை துடைத்துக் கொண்டவள், நந்தன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.


Leave a comment


Comments


Related Post