இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 28-06-2024

Total Views: 1325

     ஆசையாக  அத்தானின்  கன்னத்தில் மெல்ல தன் இதழை பதித்த அடுத்த வினாடி அவனின் கட்டிலில் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் கயல்விழி.  என்ன நடந்தது என்று உணரவே நிமிடங்கள் ஆகின.

    கதவு தட்டும் ஓசையில் கார்த்திகேயனுக்கும் விழிப்பு வந்து இருந்தது.  முரளியின் கயல் என்று பேச்சில் அவள் வந்ததை அறிந்தவன் கண் திறக்காமல் தூங்குவது போல படுத்துயிருந்தான்.  

   அவனின் இறுகிய அணைப்பில் இருந்தவளாள் சிறிது கூட விலகமுடியவில்லை.   அதிர்வில் அவளால் வாய் திறந்து கூட பேசமுடியாத நிலையில் இருந்தாள் கயல்விழி.

    அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து  வாசம் பிடித்தவன்  பின் மெல்ல அவள் முகம் நோக்கி சென்று அவளின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவன் அடுத்த கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டு அவளின் இதழ் நோக்கி சென்றன அவனின் முரட்டு இதழ்கள். 

     மலரில் உள்ள தேனை பருக தேனிக்கள் மலரின் இருப்பிடம் கண்டு செல்வது போல் அவளின் இதழ் தேனை பருக அவளின் இதழ் நோக்கி சென்று தஞ்சம் புகுந்தன அவன் இதழ்கள்.  இவை அனைத்தும் சில வினாடிகளில் நடந்து இருக்க  கயல்விழி திகைத்து போயிருந்தாள்.

    சிறிது நேரம் கழித்தே தன் நிலை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விடுபட  முடியவில்லை.  அவன் இன்னும் இன்னும் என்று அவளின் இதழ் தேனை பருகிக்கொண்டு இருந்தான் என்றால் அவன் கைகளே
 இடுப்பை இறுக்கி அனைத்து இருக்க சிறிது நேரத்தில்  கைகள் மெல்ல நகர்ந்து அவளின் நாபியை சுற்றி வருட அதுவரை விடுபட முயற்சித்தவளின் முயற்சிகள் நின்றன.  உடல் முழுவதும் சொல்லமுடியா அவஸ்தையில் தத்தளித்தாள் பெண்ணவள். 

      அவனின் உதடுகள் இடைவிடாமல் தேனெடுக்க அவனின் கைகள் மெல்ல மேலேறின அங்கே அவள் அணிந்து இருந்த உடை தடுக்க அதை விடுவிக்கும் முயற்சியில் இறங்கினான்.  அதுவரை அவன் செய்த செயலில் உணர்ச்சியின் பிடியில் இருந்தவளை பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு மேலெழ அவன் செய்து கொண்டு இருக்கும் செயலை கண்டவள் உடல் பலத்தால் அவனிடம் இருந்து விடுபட முடியாது என்று எண்ணி அவனின் தலைமுடியை பிடித்து இழுக்க அது தந்த வலியில் அவனின் கைகள் சற்று தளர  வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து இடுப்பில் கை வைத்து நின்றவளின் தோற்றம் இன்னும் அவனுக்கு போதையேற்றியது.

    தன் அத்தானை பார்க்க வந்தவள் பாவாடை தாவணி அணிந்து வந்து இருக்க அவனின் கைவண்ணத்தில் தாவணி ஒதுங்கி இருக்க அனைத்தும் வெட்டவெளிச்சமாக  தெரிந்தன.  

    அப்போது தான் கண்கள் திறப்பது போல பார்த்தவனின் கண்ணுக்கு விருந்தளித்தன அவள் நின்ற கோலம்.   ஐயோ கொல்லுறாளே இந்த இரட்சசி... அழகான இரட்சசி.... என்று மனதுக்குள் நினைத்தவன். 

     தன்னை முறைத்து கொண்டு இருந்தவளின் அங்கங்களை விழியால் பருகிக்கொண்டு 

    "ஏய் நீ எப்படி இங்கே வந்த அதுவும் இப்படி ஒரு கோலத்தில் நிக்குற ச்சீ ச்சீ..." என்றான். 

      அவனை இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருந்தவள் அவன் சொன்ன இந்த கோலத்தில் என்றதும் தான் தன்னை குனிந்து பார்த்தவள் அதிர்ந்து சட்டென்று திரும்பி தன்னை சரி செய்தாள். 

   " மீண்டும் ஏய் கேட்கிறேன் இல்ல எப்படி இங்க வந்த கதவு தாள் போட்டு தானே இருந்தது.  இங்க படுத்துட்டு இருந்த முரளி அன்பு எங்கே?..." என்றான்.

     அவன் செய்த செயலில் கோபத்தில் இருந்தவள் "ஆங்... அவங்க ரெண்டு பேரையும் காக்கா தூக்கிட்டு போயிட்டு என்னை இங்க தூக்கி வந்து போட்டுட்டு போயிடிச்சு" என்றாள். 

   கார்த்திகேயனுக்கு புன்னகை பூத்தது அதனை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு "கொழுப்பாடி உனக்கு  இன்னும் விடியக்கூட இல்லை இங்கு என்ன உனக்கு வேலை அதுவும் அப்படி ஒரு போஸ் கொடுத்திட்டு நின்னுட்டு இருக்க."

   "என்ன என்னை மயக்கிடலாம் என்று அப்படி போஸ் கொடுத்தையா அதுக்கெல்லாம் மயங்குற ஆள் நானில்லை"  என்றவனின் மனச்சாட்சியே எது... நீ... மயங்கமாட்டியா அல்ரெடி அவளை பார்த்தே மயங்கிப்போய் தான் அவளை பார்க்கக்கூடாது என்று ஓடி ஒளிந்திட்டு இருக்க என்று காரிஉமிழ்ந்தது.  ஏய் அதெல்லாம் உனக்கு எதுக்கு கம்முனு உள்ள உட்கார்ந்துட்டு இரு இப்படி வெளியே வந்து சீக்ரெட் எல்லாம் வெளியே சொல்லாதே என்று மனசாட்சியை அடக்கினான். 

      அடேய் என்னை அடக்கிறதை பிறகு பார் இப்போ உன் எதிரில் காளி மாதிரி நிக்குறாள் பாரு அவளை அடக்கு நான் பார்த்திட்டு உள்ளே போறேன் என்றது மனச்சாட்சி. 

      எதிரில் காளி அவதாரம் தான் எடுத்து இருந்தாள் கயல்விழி செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாது போல் அவள் மீதே பழி போடுபவனை என்ன செய்தால் தகும் என்று கோபமூச்சிக்களை விட்டுக்கொண்டு இருந்தாள். 

   "ஏன்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமல் முறைச்சுட்டு இருக்க" என்றான். 

    "அப்ப என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாது இல்ல அத்தான்" என்று கேட்டாள். 

     "என்ன நடந்தது என்று எனக்கு எப்படி தெரியும் நான் தான் தூங்கிட்டு இருந்தேனே" என்றான் கார்த்திகேயன். 

   " ஓஓஹே.... அப்படியா அப்ப  என்னை கட்டிலில் இழுத்து படுக்கவச்சது யாரு?..." என்றாள். 

    "என்னது  உன்னை கட்டிலில் இழுத்து படுக்கவச்சது யாரா?... நீயே பக்கத்தில் படுத்திட்டு பழியை என்மேல் போடுறீயா?... நான் என் டார்லிங் கூட டூயட் பாடிட்டு இருந்தேன்.  நீ முடியை பிடித்து இழுத்து எழுப்பி விட்டுட்டு இப்ப முறைச்சுட்டு நின்னா எல்லாம் பண்ணது நானாகிடுமாடி"  என்று கார்த்திகேயன் கூறியதும் 

   கயல்விழியின் கோபம் அதிகமாக அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடித்து கொண்டே   "எவ்வளவு கொழும்பு உனக்கு செய்யறது எல்லாம் செய்துட்டு பழியை என்மேல் போடுற" என்று அவனை அடித்து கொண்டுயிருந்தாள். 

   " ஆஆ.. அம்மா... ஹேய் வலிக்குடி" என்று அவள் அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு கூச்சலிட்டவனுக்கு பஞ்சு தலையணையில் அடிப்பது மசாஜ் செய்வதுப்போல் தான் இருந்தது. 

    சிறிது நேரம் அடித்தவளுக்கு அவளின் கைகள் தான் வலித்தது.  தலையணை தூக்கி கட்டில் மீது போட்டு விட்டு கட்டில் மீது அமர்ந்து வேகமூச்சுக்களை விட்டு விட்டு தலைநிமிர்ந்து பார்க்க அங்கு கார்த்திகேயனை காணவில்லை. 

     சுற்றி பார்க்க பின் பக்க கதவை திறந்து கொண்டு சென்று கொண்டு இருந்தான்.  அப்படியே கட்டிலில் படுத்துக்கொண்டு சற்று நேரத்திற்கு முன் நடந்தவைகளை நினைத்து பார்த்தவளின் உடல் முழுவதும் சிவந்தது. 

    கண்மூடி இருந்தவளின் நாசியில் காபியின் வாசம் வர  கண் விழித்து பார்த்தவளின் முன் மந்தகாச புன்னகையுடன் இரண்டு டம்ளர்களை வைத்துக்கொண்டு நின்று இருந்தான் கார்த்திகேயன். 

    வேகமாக எழுந்தவளை  "ஏய் மெதுவாகடி எதுக்கு இவ்வளவு அவசரம்" என்று கூறிக் கொண்டே அவளின் கையில் காபி டம்ளரை கொடுத்தவன் அவளின் அருகில் அமர்ந்து தன் கையில் இருந்த காபியை குடித்தான். 

    காபியை வாசம் பிடித்தவள்   "அத்தான் உங்களுக்கு காபி போடத்தெரியுமா?..." என்றாள் ஆச்சரியமாக 

   " ஏன்டி இவ்வளவு ஆச்சரியம் நான் இப்ப என்ன வேலை பண்ணிட்டு இருக்கேன் தெரியாதா அன்பு கேன்டீனில் தான் கத்துக்கிட்டேன்" என்றான். 

    அதுவரை மலர்ந்து இருந்த முகம் கார்த்திகேயன் வேலையை பற்றி சொன்னது சோகத்தை காட்டியது. 

     அதை கண்ட கார்த்திகேயன்  "என்னடி?..." என்றான். 

     " அத்தான் நீங்க ஏன் அன்பு அண்ணாகிட்ட வேலை  செய்யுறீங்க" என்றாள். 

   " ஏன் அவன் கிட்ட வேலை செய்தால் என்ன?..." என்றான் சற்றே கடினமான குரலில்.. 

     "இல்லை அத்தான் அதான் உங்களுக்கு அவ்வளவு நிலம் இருக்கு இல்லையா அதில் விவசாயம் பார்க்கலாம் இல்லையா நீங்க எதுக்கு இன்னொருத்தர்கிட்ட வேலை செய்யனும்"  தயக்கத்துடன் கூறினாள். 

   அவளை முறைத்தவன்  "அவங்க பிள்ளையே இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு துரத்துனவங்க சொத்து எப்படி எனக்கு உரிமையாகும்" என்றான் எங்கோ பார்வையை பதித்து. 

   " அத்தான் நீங்க தான் எந்த தப்பும் பண்ணவில்லை என்று தெரிந்து மாமாவும் அத்தையும் மன்னிப்பு கேட்டாங்களே" என்றாள். 

    "மன்னிப்பு கேட்டாள் மட்டும் நான் அனுபவித்த வலி போயிடுமா?    ஒரு வேளை உண்மை தெரியாமல் இருந்து இருந்தால் என்னை தப்பாக தானே நினைச்சிட்டு இருந்து இருப்பாங்க."

    "அப்ப என்னை அந்த வீட்டில் சேர்த்து இருப்பாங்களா?  அவங்க சொத்தை உரிமை கொண்டாட விட்டு இருப்பாங்களா?..."

    "தாத்தா சொத்து பேரனுக்கு உரிமை இருக்கு என்பதால் எனக்கு சொத்தை பிரித்து கொடுத்து இருப்பாங்க."

   " தப்பே பண்ணாமல் எவ்வளவு தண்டனை கொடுத்து இருக்காங்க பாரு.  ஒரே ஒரு நிமிஷம் நம்ப பையன் தப்பு பண்ணியிருப்பானா என்று ஏன் யோசிக்கவில்லை  இல்லை என்ன நடந்தது என்றாவது கேட்டு இருக்கலாம் இல்லையா?.."

    "ஆயிரம் பேர் தப்பாக பேசினாலும் ஒரு முறை என்கிட்ட விசாரிக்கனும் என்று ஏன் தேணலை.   ஊருக்கே பஞ்சாயத்து தலைவர் அங்க விசாரித்து தானே தீர்ப்பு வழங்குவார் ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தண்டனை கொடுத்தார். 

     அன்னைக்கு அத்தை மட்டும் தான் நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னாங்க.  அவங்களுக்கு  இருந்த நம்பிக்கை என்னை பெற்றவருக்கும் பிள்ளையா வளர்த்தவங்களுக்கும் ஏன் இல்லாமல் போச்சு.   அத்தை மட்டும் இல்லைனா நான் என்ன ஆகியிருப்பேனே அவங்க ஒருத்தர் தான் இன்னைக்கு உன் முன்னாள் நான் இருக்க காரணம்."

     அவனின் ஆதங்கத்தை அனைத்தும் அவளின் அருகில் அமர்ந்து கூறிக்கொண்டு இருந்தவனை  எழுந்து நின்று இடையே அணைத்துக்கொண்டாள். 

    அதுவரை பேசிக்கொண்டு இருந்தவனின் பேச்சு நின்றது.  அவளின் வயிற்றில் முகம் புதைத்து இறுக்கி கொண்டான். 

     அவளின் கைகள் அவனின் முதுகை தடுவி ஆறுதல் செய்து கொண்டு இருக்க அவளின் வயிற்றில் ஈரத்தை உணர்ந்தவளின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து அவனின் உச்சியில் பட்டது. 

    அதில் உணர்வுக்கு வந்தவன் தலை நிமிர்ந்து பார்க்க கயல்விழி குனிந்து அவன் நெற்றியில் தன் உதட்டை பதித்தாள். 

    அவளின் கண்களில் கண்ணீரை கண்டவன் அவளை தன் மடியில் அமர்த்தி கண்களில் முத்தம் வைத்து கண்ணீரை தடுத்தவன்

    "இதுக்கு தான்டி உன்னை விட்டு தூர தூர ஓடிட்டு இருக்கேன்.  இப்படி பக்கத்தில் வந்தால் நான் இழந்தது எல்லாம் நியாபகம் வருது அதனால் உன்னையும் வருத்தப்பட வைக்கிறேன்" என்றான். 

    கயல்விழி எதுவும் பேசாமல் அவனின் மார்பில் முகம் புதைத்து அணைத்துக்கொண்டாள். 

    அவனும் அவளை அணைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தான். 

      நீண்ட நேரம் அப்படியே இருவரும் இருந்தனர்.   பிறகு மெல்ல கட்டிலில் படுத்தவன் அவளையும் தன் மீது சாய்த்து அணைத்துக்கொண்டான்.   இப்போது அவர்களின் அணைப்பு ஆறுதல் அணைப்பாக இருந்ததே தவிர அதில் துளி கூட காமம் இல்லை. 

    அமைதியாக அணைத்துக்கொண்டு படுத்து இருந்தவர்கள் தங்களையும் மறந்து உறங்கி போயினர். 




     


Leave a comment


Comments


Related Post