இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 29-06-2024

Total Views: 1012

      நன்றாக விடிந்து சூரியக்கதிர்கள் அவர்கள் மீது படும்போது தான் முழிப்பு வந்தது.  மெல்ல  கண்விழித்தவள் அத்தானின் நெஞ்சில் படுத்து இருப்பது தெரிய தலைதூக்கி பார்க்க கார்த்திகேயனும் கண்விழித்து அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

    அவள் பார்ப்பதை கண்டவன் அவளின் இடையில் கைகொடுத்து தூக்கி தன் முகத்துக்கு நேராக தூக்கி அவளின் இதழில் மெல்லிய முத்தம் ஒன்றை கொடுத்தான். 

     மீண்டும் ஆழமான முத்தம் பதிக்க அவளின் இதழை நாட சட்டென்று அவனிடம் இருந்து விலகி எழுந்தாள் கயல்விழி.

   "ஏய்..."  என்று  கிறக்கமாக அழைக்க அதை காதில் வாங்காமல் சமையலறை நோக்கி சென்றாள்.  சில வினாடிகளில் சமையலறையில் சத்தம் கேட்கவே எழுந்து சமையலறை சென்று பார்க்க அங்கு ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

     "என்னடி பூனைக்குட்டி மாதிரி உருட்டிட்டு இருக்க" என்றான்.

   திரும்பி அவனை பார்த்து முறைத்தவள் மீண்டும் பாத்திரத்தை  திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

     அவளின் அருகில் வந்து கை பிடித்து தன் புறமாக திருப்பி  "என்னடி தேடுற சொன்னாதானே தெரியும்" என்றான்.

   " பசிக்குது அத்தான் அதான் எதாவது சாப்பிட இருக்கா என்று பார்க்கிறேன்.  இன்னேரம் அம்மா வீட்டில் சூடா எதாவது செய்து வைத்து இருப்பாங்க" என்று உச்சுக்கொண்டினாள்.

     அவளின் தலையில் சொல்ல குட்டு வைத்து  "தீனிப்பண்டாரம்" என்றவன் தன் கைதூக்கி மேல் செல்பில்  இருந்து ஒரு கவரை எடுத்து சமையல் மேடை மீது வைத்தான்.

     வேகமாக அதை திறந்து பார்க்க அதில் பிரட் பாக்கெட், ஜாம், முட்டை,  பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தன.

    ஒரு பிஸ்கட் பாக்கெட் எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.   அதை கண்டு சிரித்தவன்  சில பொருட்களை எடுத்து வைத்தான். அதைக்கண்டவள் 

    "என்ன அத்தான் பண்ணுறீங்க" என்றாள்.

   அவளின் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை காட்டி  "இது மட்டும் உனக்கு பத்தாதே அதான் டிபன் செய்யறேன்" என்றவன் வேகமாக வெங்காயத்தை உரித்து சிறியதாக வெட்ட ஆரம்பித்தான்.

   அவன் வெட்டும் வேகத்தை பார்த்தவள்  "அத்தான் நீ இப்ப தானே அன்பு அண்ணா கேன்டீனில் வேலைக்கு போற  ஆனால் நீ வெங்காயம் வெட்டுவதை பார்த்தால் பல வருஷமா செய்யறது மாதிரி இருக்கு.  அப்ப இதுக்கு முன்னாடி எங்காவது ஓட்டலில் வேலை செய்தீங்களா?..." என்று கேட்டாள்.


     "ஆமாம் ஆமாம் ஜெயிலில்" என்று கூறப்போனவனின் வார்த்தை ஜெ என்று நிறுத்திவிட்டு " சரியா கண்டுபிடிச்சிட்டியே" என்றான் கேலிப்புன்னகையுடன்

   " ஏய்....  அப்ப நீங்க ஓட்டலில் தான் வேலை செய்தீங்களா அப்ப ஜெயிலுக்கு போனேன் என்று சொன்னது பொய் தானே அத்தான்" என்றாள் சந்தோஷக்குரலில் 

    அவளின் புன்னகையை ரசித்தவன் ஆமாம் என்று மட்டும் தலையாட்டி விட்டு மீண்டும் வெங்காயத்தை வெட்டினான்.  அனைத்தும் கட் செய்தவன் அதனை பாத்திரத்தில் போட்டு சில பச்சை மிளகாய்களையும் சிறிதாக வெட்டி சேர்த்து விட்டு உப்பு மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கியவன் தோசை காடாய் அடுப்பில் வைத்து ஆம்லெட் ஊற்றியவன் அதன் நடுவில் இரண்டு பிரட் துண்டுகளை வைத்தான். 

   அதை கண்டவளுக்கு நாவில் எச்சில் ஊரியது.  கடாயில் இருந்தது வெந்ததும் எடுத்தவன் மீண்டும் அதே போல் ஆம்லெட் ஊற்றினான்.  மூன்றாவது முறை ஆம்லெட் ஊற்றப்போனவனை தடுத்து 

     "நான் பண்ணுறேன் அத்தான்" என்று அவனை பின்னால் இழுத்து விட்டு அவள் செய்தாள். 

   அவள் பின்னிருந்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஒரு கையால் அனைத்தவன் மறுகையால் செய்து வைத்த பிரட் ஆம்லெட்டை எடுத்து அவள் வாயில் வைத்தான். 

   அவள் ஒரு வாய்  அவன் ஒரு வாய் என்று சாப்பிட்டனர்.  ஆம்லெட்டை எடுத்து விட்டு ஸ்டவ்வை அனைத்தவள் 

    "அத்தான் உட்கார்ந்து சாப்பிடலாம் வாங்க" என்றாள். 

     "இதுவே நல்லா இருக்கு இப்படியே சாப்பிடலாம்" என்றவனின் ஒரு கை அவளின் வெற்று இடையை அழுத்தியது. 

    "அய்யோ அத்தான்" என்று அவன் கையை விலக்க அது உடும்புப்பிடியாக இருந்தது. 

    "அத்தான் இங்க வேர்க்குது அதான்" என்றாள் சினுங்களாக 

   " சரி" என்று அவளை விட்டவன் கையில் உணவு இருந்த தட்டை கொடுத்தவன் " எடுத்துட்டு போ சாப்பிடாத நான் வரேன்" என்றவன் மற்றொரு அடுப்பில் சூடாக்கி இருந்த பாலில் காபியை போட்டு எடுத்து சென்றான். 

   கட்டிலில் அமர்ந்து இருந்தவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டு சமையலறையில் விட்ட பணியை இங்கு தொடர்ந்தான்.  சாப்பிட்டு முடித்து காபியையும் குடித்து முடித்து இருக்க எழுந்து கொள்ளப்போனவளை  "ஏன்டி" என்றான். 

    "உங்களுக்கு கால் வலிக்கும் அத்தான்" என்றாள். 

     "அதெல்லாம் வலிக்காது அப்படியே இரு" என்றவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தான். 

     அந்நேரம் அவனின் போன் ஒலித்தது.  

     "ச்சே..."  என்ற சலிப்புடன் எடுத்து பார்க்க அதில் முரளி என்று இருந்தது.  அவளை கட்டிலில் அமரவைத்தவன் சற்று தொலைவில் சென்று பேசியவன் இன்னும் அரை மணி நேரத்தில் வரேன் என்று கூறி போனை அணைத்தான். 

     கேள்வியாக நோக்கியவளிடம் முரளி வெளியே போக கூட்பிடுறான் கொஞ்சம் நேரம் இரு குளித்து விட்டு வரேன் என்று பின் பக்கம் சென்றவன் சிறிது நேரத்தில் ஈரம் சொட்டச்சொட்ட இடையில் டவல் மட்டும் காட்டிக்கொண்டு வந்தவன் அங்கிருந்த அறைக்குள் புகுந்து கொண்டான். 

    அவனை அந்த கோலத்தில் கண்டவளுக்கு தான் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. 

   சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் அணிந்து  தலையை கோதிக்கொண்டே வந்தான். 

   மிக அழகாக இருந்தவனை கண் கொட்டாமல் பார்த்தவளின் முன் வந்து செடக்கிட்டவன் என்ன அத்தான் எப்படி இருக்கேன் என்றான். 

    "கண்றாவியாக இருக்கு" என்றாள். 

    "ஏய் கண் சிமிட்டாமல் பார்த்து விட்டு கண்றாவியா இருக்கு என்று சொல்லுற" என்றான். 

      "நான் சொன்னது இதை" என்றவள் நீண்டு வளர்ந்து இருந்த தாடியை இழுத்து காட்டினாள். 

   அவன் வலியில் "ஆஆ.."  என்றான்.  

     "சாமியார் மாதிரி இப்படி தலையிலும் முகத்திலும் வளர்த்து வச்சு இருக்கிங்களே இதை கட் செய்யவேண்டியது தானே" என்றாள். 

     "சாமியாரா?...    சாமியார் என்ன செய்வாங்க என்று காட்டவா?..." என்றவன் அவளை நெருங்கினான். 

    கயல்விழியே வேகமாக வெளிக்கதவை நோக்கி ஓடினாள்.  அவன் புன்னகையுடன் பின் சென்றான். 

    அவன் ஸ்கூட்டியின் பின் அமர்ந்து கொள்ள கயல்விழி ஓட்டினாள்.  அவளின் இடையில் கைபோட்டு நெருங்கி அமர சட்டென்று ஸ்கூட்டியை நிறுத்தினாள். 

     "ஏன்டி நிறுத்தின" என்றான் ஒன்று அறியாதவன் போல 

   "அத்தான் இது ரோடு" என்றாள். 

   "நான் என்ன இதை வீடு என்றா சொன்னேன்" என்றான். 

    "வண்டியில் இருந்து இறங்கி அவனை முறைத்தவள் நீங்க ஓட்டுங்க நான் பின்னாடி உட்காருறேன்" என்றாள். 

     "ஏய் எனக்கு ஓட்டத்தெரியாது நீயே ஓட்டு" என்றான். 

     "எல்லாம் ஓட்டுவிங்க  நகருங்க" என்று அவனை நகரச்செய்து பின் அமர்ந்தாள். 

    வேறுவழி இல்லாமல் ஸ்கூட்டியை ஓட்டிச்சென்றான். முரளி வீடு தாண்டி தான் போகவேண்டும் என்பதால் முரளி வீடு வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு  ஹாரன் ஒளியை எழுப்பினான். 

    முரளி வெளியே வந்தான் அவன் கையில் சில பைல்கள் லேப்டாப் பேக் இருந்தது.  அதனை  காரை திறந்து பின் புறம் வைத்து விட்டு கார்த்திகேயன் கயல்விழியை பார்த்தான். 

    இருவரும் கண்களால் பேசிக்கொண்டு இருந்தனர்.  இவன் பார்ப்பதை கண்ட கயல்விழி சட்டென்று வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றாள். 

    கார்த்திகேயனை கண்ட முரளி "என்ன மச்சான் காலையிலே நல்ல கவனிப்பா" என்று கிண்டல் செய்ய அதில் முகம் சிவந்த கார்த்திகேயன் தன் தலைகோதி சமாளித்தவன் 

    "ஐஸ் உன்னை தினம் கவனிப்பதை விடவா" என்றதும் முரளியின் முகத்திலும் வெட்கச்சாயல் வந்தது.  

    "போதும்டா இப்படியே ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தா வேலையை முடிக்கமுடியாது வண்டியை எடு" என்று கூறி பின் புறம் ஏறிக்கொண்டான்.  முடிக்க வேண்டிய வேலை நியாபகம் வரவே முரளியும் காரை எடுத்தான். 

     அந்த வாரம் முழுவதும் கயல்விழி கண்ணில் கார்த்திகேயன் படவில்லை இந்த அத்தான் எங்க தான் போவார் என்று புலம்பினாள். 

     அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் முந்திய வாரம் போல ஐந்து மணிக்கே கிளம்பினாள் கயல்விழி.  கிளம்பியவளின் கையில் சமைக்க தேவையான சில பொருட்கள் இருந்தன. 

     கதவை தட்டியதும் முரளி தான் திறந்தான் அவள் தான் வந்து இருப்பாள் என்று அறிந்து அன்பும் வேகமாக எழுந்து அனைத்தும் எடுக்கொண்டான்.  உள்ளே வந்தவளை பார்த்து "வரேன் கயல்" என்று வெளியேறினான். 

     கதவை மூடிவிட்டு வந்தவளை கட்டிலில் படுத்து பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

    அவளை கை நீட்டி வா என்றதும் அவனின் அருகில் சென்றவளை இழுத்து தன் மீது படுக்கவைத்தவன் அவளின் இடையை மறைத்து இருந்த உடையோடு இறுக்கியவன்  

     "ஏன்டி சுடிதார் போட்டுட்டு வந்த" என்றான். 

      அவனின் கை மீது அடி போட்டவள் "சும்மா இருங்க அத்தான் எனக்கு தூக்கம் வருது" என்றவள் கண்மூடி அவன் மார்பில் தலைவைத்துக்கொண்டாள். 

    "ஏய் தூங்கறவ உன் வீட்டிலே தூங்க வேண்டியது தானே இங்க எதுக்கு வந்து தூங்கறவங்களை எழுப்பி விட்ட" என்றான். 

    "நீங்க தான் கண்ணுலையே படமாட்டுறீங்க.  வாரம் முழுவதும் என் கண்ணில் படாமல் ஓடி ஒளியறீங்க இந்த நேரத்தில் தான் உங்க கூட இருக்கமுடியும் விடிந்தால் முரளி அண்ணா அன்பு அண்ணா கூட வெளியே போகிறீங்க அதான்" என்றவளை அணைத்துக்கொண்டு அவனும் உறங்கிப்போனான்.  உறங்கி எழுந்த பிறகு சென்ற வாரம் போலவே காலை உணவை சமைத்து சாப்பிட்டனர். 

   அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அதேபோல் கதவை தட்ட கார்த்திகேயன் கதவை திறந்தான்.  சுற்றும் முற்றும் பார்ப்பவளை 

   " என்னடி பார்க்கிற" என்றான். 

    "இல்ல முரளி அண்ணா, அன்பு அண்ணாவை காணுமே என்று பார்த்தேன்" என்றாள். 

    "இப்படி பாதி தூக்கத்தில் வந்து கதவை தட்டுனா என்ன பண்ணுவானுங்க அதான் வரலை அவங்க வீட்டிலே படுத்துக்கிறோம் என்று சொல்லிட்டாங்க" என்றான். 

    அன்றும் அவன் அனைப்பில் படுத்து உறங்கி எழுந்து அவனுக்கு வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களை வைத்து காலை உணவை சமைத்து இருவரும் ஒன்றாக உண்டு முடித்து அவள் ஸ்கூட்டியில் அமர்ந்து முரளி வீடு சென்று அவனை விட்டு விட்டு புன்னகையுடன் விடைப்பெற்றாள் கயல்விழி. 

    இதுதான் அவர்களின் கடைசி சந்தோஷமான தருணம் என்று அறியாமல் இருவரும் புன்னகையுடன் பிரிந்து சென்றனர். எந்த அளவுக்கு அவள் மீது காதல் பொழிந்தானே அதே அளவுக்கு அவளின் மீது வெறுப்பையும் காட்டப்போகிறான் என்று அறியாமல் புன்னகையுடன் வீடு சென்றாள் கயல்விழி. 





Leave a comment


Comments


Related Post