இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 29-06-2024

Total Views: 772

அத்தியாயம் 30 

அந்தகனுக்கு பேசுவதற்கு நா எழவே இல்லை. நம்ம குழந்தை என்று அஞ்சனா சொன்னதில் இருந்தே அவன் இவ்வுலகில் இல்லவே இல்லை. அவனது பூரிப்பையும், அளவில்லாத கர்வத்தினையும் கண்டவளுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. அதுதான் குழந்தையின் முகத்தினைப் பார்த்த உடனேயே அவன் அனுமானித்துவிட்டானே.. கிடைத்தற்கரிய பெரும்பாக்கியம் இது என மைந்தன் உச்சி முகர்ந்தவன் அவள் முகத்தின் அருகே நெருங்கி வந்து முத்தமிட அவள் கரங்கள் இறுக்கமாக அணைத்திருந்தது. கண்ணீர் வழிந்து அவள் கன்னத்தினை தீண்ட.. "அழறியா அந்தகா! ஏன்?" என கேள்வியை எழுப்பினாள்.

"அஞ்சனா! நான் அழவில்லை.  உவகையின் உச்சத்தின் வெளிப்பாடு அது. மனதினை அழுத்திக் கொண்டிருந்த பாரமும் காயப்படுத்திக் கொண்டிருந்த சாபமும் என்னை விட்டு தூரம் சென்ற உணர்வு. இலகுவாய் என் மனம் இப்போது விண் நோக்கி பறக்கிறது. உயிர்களை எடுத்துத் எடுத்துப் பழகியிருந்த இந்த கரங்களில் இப்போதென் உயிர்.. நீ எனது அத்தனை சாபங்களுக்கும் விமோச்சனம் தந்திருக்கின்றாய் அஞ்சனா.. காதல் எவ்வளவு வலிமையானதென்பதை இப்போது புரிந்துக் கொண்டேன். அன்று முதன்முதலாக அந்த மருத்துவமனையில் வைத்துப் பார்க்கையில் என் மனம் எவ்வளவு ஆனந்தம் கொண்டிருந்ததோ இன்றும் அப்படித்தான் ம்ஹ்ம் சொல்லப் போனால இன்னும் அதீத அளவில் ஆனந்தமாய் இருக்கிறது. இதெல்லாவற்றையும் விட. இதோ மைந்தன் இவனை கையில ஏந்திய கணம்.. ஆஹ்.. இப்போதே என் உயிர் போனாலும் கூட..."

"ப்ச் வாயை மூடு அந்தகா. நீ உயிரை விடுறதுக்காகத்தான் உன் உயிரை மீட்டுத் தரச் சொல்லி சிவன்கிட்டயே கேட்டேனாக்கும்"

நடந்ததை அவள் ஞாபகப்படுத்திச் சொன்னதில் அவன் "ஏய் அஞ்சனா உனக்கு.. உனக்கு" என அதிர்வோடு வினவ, "எனக்கு எந்த விஷயமும் ஞாபகம் இல்லை அந்தகா" அவளது பதில் கேட்ட மறுகணம், "பொய் சொல்லாத. நான் நம்ப மாட்டேன்" என அந்தகன் சொல்லவும்,

"எனக்கு அந்தகன் நினைப்பெல்லாம் மறந்து போகணும்னு சாபம் குடுத்தது யாரு" என்று எதிர்கேள்வி வைத்தாள்.

"ஈசன்"

"அதையும் மீறி எனக்கெப்படி ஞாபகம் வரும்"

"ஆனால் நீ சொன்னது மெய் அஞ்சனா. ஈசனின் கேட்டு என் உயிரை மீட்டுத் தந்தவள் நீ. அது உனக்குத் தெரிய வந்தால் என்னைப் பற்றியான சகலமும் ஞாபகத்திற்கு வந்திருக்கும் தானே.."

"ஞாபகம் வராதுன்னு தான் நானே எனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டேன்"

"புரியவில்லை"

"சொல்லுறேன்"

அன்று, 

சித்திரகுப்தனிடம் பேசியவள் தனது உயிரை கொடுத்து அந்தகனை காக்க வேண்டும் என்ற யோசனையோடு எமலோகத்தினைத் தாண்டி நடந்து வந்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் ஓர் உறுத்தல். அது ஈசன் தரும்  தண்டனை பற்றியாகவே இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக யாரோ ஒருவரின் மீது மோதி நிற்க நிமிர்ந்து பார்த்த பின்னர்தான் தெரிந்தது அவன் திருவென்று.

"நீங்க இங்க என்ன" என அவள் பேச "அஞ்சனா எப்படி இருக்க?" என்றான் இவன் அதுவும் எங்கோ பார்த்தபடி. அவனது நடத்தையில் சந்தேகம் வரவும் அவள் "திரு மச்சான். நீங்க எப்படி இங்கன்னு கேட்டேன். என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள்.

"அது அஞ்சனா.." அவள் முகத்தினைப் பார்த்த பிறகு அவனுக்கு பொய் பேச மனம் வரவில்லை. கடகடவென்று அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.

"மச்சான் நீங்களுமா?" அவள் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டவன் "என்னை மன்னிச்சுடு அஞ்சனா. நான் தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்" என்று அவளிடம் புலம்ப அவளே "மச்சான் எனக்கு நீங்க ஓர் உதவி செய்யணும்" என்றாள்.

"என்னென்னு சொல்லு அஞ்சு செய்யுறேன்"

"இந்த யாகத்தை நாளைக்கும் பண்ணிட்டு இங்க வாங்க நான் என்ன உதவின்னு சொல்லுறேன்" சொன்னது போலவே அவன் வந்து நின்றதும் அவனிடம் அவள் ஒரு பெட்டியினை நீட்டியிருந்தாள். 

"என்ன அஞ்சனா இது.."

"அந்தகனுக்கு சிவன் எந்த தண்டனை வேணும்னாலும் தரலாம். இவ்வளவு ஏன் நானும் அவனும் பிரியணும்னு கூட சொல்லலாம். என் ஞாபகத்துல அவனும் அவன் ஞாபகத்துல நானும் இருந்தால் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் எப்படியாவது சேர்ந்துடுவோம். பிரிவு எங்களைத் தடுக்காது. ஆனால், துஷ்யந்தன் நினைப்புல இருந்து சகுந்தலா மறையணும்னு சாபம் குடுத்த மாதிரி ஈசனும் கொடுத்துட்டா என்ன பண்ணுறது. அதுக்காகத்தான் நான் நடந்ததை எல்லாம் இதுல நினைவுகளா சேர்த்து வச்சுருக்கேன். எல்லாத்தையும் மறந்து நான் அங்க வந்து நின்னால் எனக்குப் பொறுமையா ஞாபகப்படுத்துங்க.. பார்த்ததும் ஓரளவுக்கு நான் புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். அதுக்குள்ள என்னோட அந்தகனும் வந்துடுவான். அவனோட கண்ணைப் பார்த்தாலே போதும். எனக்கு எல்லாமே ஞாபகம் வந்துடும்"

"இதை என்கிட்ட தர்றயே அஞ்சு.. ஒருவேளை நான் இந்த விஷயத்தினை எனக்கு சாதகமாக்கி உன்னை அடைஞ்சுட்டா..."

"உங்க மேலயும் உங்க மனசாட்சி மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு மச்சான். கண்டிப்பா நீங்க எனக்கு நல்லது தான் பண்ணுவீங்க" என்று சொல்ல அவன் "நிச்சயமா அஞ்சு.. இது இப்போ பண்ண தப்புக்கான பிராயச்சித்தமாவும் இருக்கும்" என்று சொன்னான். 

ஈசனின் சாபத்தினால் அவள் அந்தகனை மறந்து வீடு வந்து சேர்ந்த போது அவன் அவளை அழைத்து ஈசன் கோவிலுக்கு சென்று முதலில் திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்டான். அதைத்தான் இயமனும் கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள் பேசிக் கொள்வதை சகிக்க முடியாமல் அவன் சென்றுவிட அதன்பிறகுதான் திரு அவளிடம் கல்யாணத்துக்கு "நீ சரின்னு சொன்னா மட்டும் போதுமா? உன் புருஷன் சம்மதிக்க வேண்டாமா?" என்றான்.

"புருஷனா என்ன சொல்லுறீங்க மச்சான். எனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு. விளையாடதீங்க"

"விளையாடல அஞ்சு உண்மையைத்தான் சொல்லுறேன். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன் கணவன் பேர் அந்தகன்.. உயிர்களை பாசக்கயிறு வீசி கொண்டு போற எமனைதான் நீ கல்யாணம் பண்ண. அதுவும் இந்த கோவில்ல வச்சுத்தான்"

"எமனா.. நான் இந்த உலகத்துல அதிகமா வெறுக்குறது எமனைத்தான். அது தெரியுமா உங்களுக்கு. பயப்படுறதும் அவனை நினைச்சுத்தான். அப்படிப்பட்டவனை நான்  கல்யாணம் பண்ணிருக்கேனே. உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு. வாங்க போகலாம்" கோபமாய் பேசியவளை சாந்தப்படுத்தியவன், "நீ  உன் கழுத்துல இருக்குற அந்த சங்கிலியை எடுத்துப் பாரு" என்றான்.

"அட நான் சொல்லுறேன் நீங்க அதைக் கேட்காமல் என்று சொன்னாலும் வேண்டா வெறுப்பாக எடுத்துப் பார்த்து "இதுவா தாலி.. ஆனால் தாலி மாதிரியே தெரியலையே மச்சான்.. எனக்கு கல்யாணம் ஆன மாதிரி ஞாபகமும் இல்லை. நான் ஐயாவை நினைச்சு பயந்தேன்தான் அதுக்குன்னு இப்படிப்பட்ட ஒருத்தனை கல்யாணம் பண்ணியிருப்பேன்னு நம்பிக்கையே இல்லை. இது வெறும் சங்கிலிதான்" என்றாள் உதட்டை பிதுக்கியபடி.

"நீ ஈசன்கிட்ட வாங்கிட்டு வந்த சாபத்தால உனக்கு அந்தகன் சம்பந்தப்பட்ட எல்லாமே மறந்து போச்சு"

"சாபமா.."

"கொஞ்சம் இதைப் பாரு" என்று அதே பெட்டியினை அவளிடம் நீட்டியிருந்தான் அவன். 

அதில், 

அந்தகன் யார்? அவளுக்கும் அஞ்சனாவிற்கும் இடையே இருந்த காதல் எப்படிப்பட்டது.. அவர்களது காதல் வாழ்க்கை எப்படியிருந்தது.. சித்திரகுப்தன் சொன்ன விஷயங்கள் இயமன் செய்து வைத்த விதிமீறல் இந்திரனின் வருகை.. இப்படி  அத்தனையும் இருந்தது. அத்தனைக்கும் மேல் அந்த அடர் கானகத்தின் நடுவில் இருந்த வீட்டில் இவளும் அந்தகனும் இருப்பது போன்ற சித்திரம் அவளை நெக்குருக வைத்தது. அதிலிருப்பது அவளே தான். அவனது கண்களிலும் அவளது கண்களிலும் மையல் போட்டிப் போட்டு வழிந்துக் கொண்டிருந்தது. அந்தகனின் கண்களைப் பார்த்தவள் ஒரு நிமிடம் திடுக்கிட்டே போனாள். அவளது நிலையை உணர்ந்த திரு மெல்ல அவளிடம் பேசத் தொடங்கினான்.

"இதை நீதான் என்கிட்ட கொடுத்து வச்சுருந்த அஞ்சனா. உனக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என்னோட கடமைன்னு கேட்டுக்கிட்ட"

"சும்மா எதை எதையோ காட்டி என்னை ஏமாத்த பார்க்குறீங்க. என்னை ஆளை விடுங்க. நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன்" அவளது நிலை அவளை இவ்வாறுதான் பேச வைத்தது.

"இல்லை அஞ்சனா. இரண்டு பேரோட காதல் ரொம்பவும் உண்மையானது"

"உண்மையானதா இருந்தால் அதுவே சேர்ந்துடும் நீங்க கவலைப்பட வேண்டாம்"

"வீட்டுல நம்ம கல்யாணப் பேச்சு நாம போனதும் கிளம்பும். ஏன்னா அம்மாகிட்ட நடந்ததை எல்லாம் சொல்லிட்டுத்தான் வந்தேன் அஞ்சனா"

"திரு இப்போதைக்கு இதை என்னால ஏத்துக்கவே முடியல. இது உண்மைதானா என்னென்னு எனக்கு ரொம்பவே குழப்பமா இருக்கு. அம்மா ஏற்கனவே ஏதோ சொன்னாங்க.. அவனை நம்பி போனன்னு...  நான் கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பார்க்குறேன். எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால் உங்க மேல வச்ச நம்பிக்கைக்காக நான் இதைப் பத்தி யோசிச்சுப் பார்க்குறேன்"

"என்ன முயற்சி பண்ணாலும் உன்னால நடந்ததை ஞாபகத்துக்கு கொண்டு வர முடியாது. நீங்க இப்படித்தான் வாழ்ந்தீங்கன்னு இருக்குற குறிப்பை அடிப்படையா வச்சு இனி வாழலாம்"

"நீங்க நடந்ததை பார்த்தவங்க அப்படிங்கிறதால இப்படிச் சொல்லுறீங்க. எதுவுமே ஞாபகம் இல்லாத எனக்கு சட்டுன்னு எல்லாத்தையும் ஏத்துக்க முடியல மச்சான்.. இதுல அவசரப்பட வேண்டாம்னு தான் தோணுது. அவ்வளவு வெறுப்போடு நினைச்சுட்டு இருந்தவனை கல்யாணம் பண்ணியிருப்பேன்னு தோணவே இல்லை. அதுவும் எமனை கல்யாணம் பண்ணுறது எல்லாம் எப்படி சாத்தியம். நான் ஒன்னு சொல்லுறேன் அது படி கேக்கிறீங்களா மச்சான்"

"நீ என்ன சொன்னாலும் நான் அதுபடியே கேட்டு நடப்பேன் அஞ்சு"

"நாம கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி வீட்டுல சொல்லிடலாம்"

"அப்படித்தான் நானும் நினைச்சேன் அஞ்சனா. நாம அப்படியே சொல்லிடலாம்"

அப்போதே இருவரும் திருமணம் முடிந்தது போல் தங்களைக் காட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து நின்றார்கள். லட்சுமி சிவகாமி திட்டினாலும் இருவரையும் ஏற்று அதன்பின் எதுவும் பேசாது விட்டார்கள். 

"அன்னைக்கு அவங்க இரண்டு பேரும் திட்டிட்டு எங்க வாழ்க்கையை நினைச்சு சந்தோஷமா இருந்தாங்க அந்தகா. எனக்கு மட்டும் ரொம்ப வெறுமையா இருக்கும். திரு என்கிட்ட மறுபடியும் மறுபடியும் வந்து என்னோட காதல் கதையையே சொல்லச் சொல்ல எரிச்சலா வரும். எதுவுமே ஞாபகம் வரலையேன்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு கோபப்பட்டிருக்கேன். திருதான் பொறுமையா என்கிட்ட பேசி கட்டுப்படுத்துவான். அவனோட ஆறுதல் தான் எனக்கு ரொம்ப பெரிய பக்கபலம். வெளிய நாங்க ஆதர்ஷ தம்பதி போல காட்டிக் கிட்டாலும் அது உண்மையில்லைன்னு எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். கொஞ்ச நாள்ல  நான் கர்ப்பமா இருக்குறது தெரிஞ்சதும்... எனக்குள்ள இருந்த வருத்தம், கோபத்தை மீறி சின்னதாய் ஓர் ஆறுதல். திருகூடத்தான் நான் எப்படி வாழ்றேன்னு எனக்குத் தெரியுமே.. அதுக்கப்பறம் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. என் ஞாபகத்துல நம்மளோட காதல் வாழ்க்கை இல்லை. அது என் வயித்துக்குள்ள வளர ஆரம்பிச்சுருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்போ என் மனசுல சின்னதா சலனம். உன்னை ரொம்பவே தேடுனேன். அதனாலேயே மச்சான் கூட கிண்டல் பண்ணுவாங்க அப்பாவை நினைச்சுட்டு இருந்தீங்களா இரண்டு பேரும்னு"

"அப்போ ஏன்டி நான் உன் கையைப் பிடிச்சதுக்கு அடிச்ச.."

"நீ இப்படி எங்க வழக்குல பேசும் போது நல்லா இருக்குடா.. என்ன கேட்ட ஏன் அடிச்சேன்னா.. பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா..?"

"கொஞ்சிக் கொஞ்சிதான்டி இப்போ குழந்தையோட இருக்கோம்"

"ஆங்.. அன்னைக்கு இந்த எமா எங்க போனாராம்.. எனக்குத்தான் ஞாபகம் இல்லை. உனக்கு இருந்ததுல. நீ என்னைத் தேடி வந்து என் கையில கால்ல விழுந்தாவது கூப்பிட்டுப் போயிருக்கணுமா இல்லையா? ஏன் பண்ணலை? சொல்லு ஏன் பண்ணல"

"உன் கண்ணுல காதலை பார்த்துருக்கேன், என் மேல இருக்க மயக்கத்தைப் பார்த்துருக்கேன். அதுல நீ யாருன்னே தெரியலைங்கிற மாதிரியான பார்வையை பார்க்க தெம்பில்லாமல் தான் நான் உன் பின்னாடியே சுத்துனேனே தவிர உன்ட்ட வந்து பேச முயற்சி பண்ணல. ஆனால் உன் வயிறு நாளுக்கு நாள் வளருறதைப் பார்க்குற அப்போ ஏக்கமா இருக்கும். என்னமோ தெரியல. தொட்டுப் பார்க்கணும்னு தோணிட்டே இருந்தது. திரு கூட கல்யாணம் ஆகிடுச்சு. இந்த வாழ்க்கையை நான் தொல்லை செய்யக் கூடாதுன்னு நினைச்சதையும் மீறி அந்த ஏக்கம் பெருசா எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. அதான் அன்னைக்கு வந்தேன்"

"இத்தனை நாள் வராமல் இப்போ வந்துருக்கயேன்னு அவ்வளவு கோபம் உன்மேல தெரியுமா? அதான் அடிச்சேன் "

"நம்மளோட காதலை காப்பாத்திக்க நீ எவ்வளவோ பண்ணியிருக்க.. ஆனால் நான் எதுவுமே பண்ணாம இருந்துட்டேன்.."

"நீ எதுவுமே பண்ணலையா.. அந்தகா! பார்த்த உடனே ஒருத்தி மேல காதல் வசப்பட்டு அவளுக்காக விதியையே மாத்தி எழுதுனயே அதை விடவா நான் பண்ணது பெரிய விஷயம்.. அது சரி நீ திடீர்னு என்னை இங்க கூட்டிட்டு வந்தயே என்ன காரணம். என்னை விடமுடியாமல் எடுத்த முடிவா.. இல்லை வேற எவனாவது குறுக்க வந்தானா?"

"அது இந்திரன் மறுபடியும் உன்னை.." சொல்லி முடிக்க முன்னரே "ஓஹோ அப்போ அவன் குறுக்க வந்ததால தான் நீ என்கிட்ட வந்துருக்க. காதலுக்காக வரலை. போ என்கிட்ட பேசாத.." அவள் முறுக்கியதும் முதலுக்கே மோசம் வந்துடவிடக் கூடாதென பயந்தவன் 

"அவனுக்காகன்னு தான் உன்னை பாதுகாப்பா பார்த்துக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்தேன். அடுத்து பக்கத்துலயே நீ இருக்கவும் எனக்கு உன்னை விட்டு தள்ளி இருக்க முடியல. எப்படி என்னால முடியும். எனக்கு ஒரு தடை இருந்தது அஞ்சனா. அதுதான் திரு.. அவனை மீறி உள்ள வர ஒரு மாதிரி இருந்தது.  அதான் கூட்டிட்டு வந்துட்டு அதை சாக்கா வச்சு உன்கிட்ட அப்படிப் பேசுனேன். ஆனால் நீயிருக்கயே..?" தன்னையே ஏமாற்றி விட்டாளே என்ற ரீதியில் அவன் அழுத்தமாய் பார்த்தான்.

"உன் கண்ணு இருக்குல அந்தகா அது ரொம்பவே வசீகரமானது. அப்படியே ஆளை கவுத்துப் போட்டுடும். நான் திருகிட்ட திட்டம் போட்டு எதுவுமே கொடுக்காமல் வந்திருந்தாலும் கூட உன் கண்ணைப் பார்த்திருந்தால் நான் சட்டுன்னு நீ சொன்ன எல்லாத்தையும் நம்பியிருப்பேன். அந்தளவுக்கு அது அப்படியே உன்னோட காதலை பிரதிபலிக்கும்"

"அப்போ நானாத்தான் இத்தனை நாளை வீணாக்கிட்டேனா.."

"புரிஞ்சா சரி.. என்றவள் இடைவெளிவிட்டு "அந்தகா.." எனச் சொல்லி தன் கழுத்தில் இருந்த சங்கிலியினை வெளியே எடுத்து நீட்டி "நான் எப்போதும் உன்னவள் தான்" என்றிட அவளது கால்களில் அவனது கைவிரல்கள் அழுத்தமாக பதிந்தது.

"மன்னிச்சுக்கோ டி.. நான் உன்னை"

"அய்யோ சாமி மன்னிப்பெல்லாம் வேண்டாம்.. உன் காதல் போதும்" இப்படிச் சொன்னவளை இனியும் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பானா இயமன்..


காதலாசை யாரை விட்டது...!


Leave a comment


Comments


Related Post