இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 30-06-2024

Total Views: 675

பாகம் -24

அவன் சிரிப்பைப் பார்த்து ரசித்தவளை பார்த்து ஒற்றை கண்ணைச் சிமிட்டினான். பயந்துவிட்டாள்  பேதை.
ஒரு நாள் அவளே அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் அவனின். இந்தச் சிரிப்பைப் பார்க்க முடியாமல் தவித்துப் போகப் போகிறாள். அந்த வேடிக்கையும் பார்க்கலாம்......
அந்த நொடி அவளிடம் விளையாடினாலும் அதற்குப் பிறகு வந்த பேச்சுக்கள் சீரியசாகவே இருந்தது.
" நீ என்ன சொல்லற? நான் பாஷ்யம் சார் கிட்ட பேசவா ?"
"இல்லடா! செந்தில் இல்லாம நாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அவரு வரட்டும். அப்புறமா தான் எந்த முடிவும் எடுக்க முடியும்"
"சார்! ஒரு நிமிஷம்"
அவள் முகத்தை ஏறிட்டான். 
"இது நாம மட்டும் எடுக்கற முடிவான்னு எனக்குத் தெரியல. அங்க இருக்கற பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கிட்டையும் பேசிப் பார்க்கணும்"
"எஸ்! ரேணுகா சொல்வதும் சரிதான். நாம மட்டும்  இதுல யோசிக்க முடியுமான்னு தெரியல. இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து கேஸ் போட்டாத்தான்  கேஸ் நிக்கும். சீக்கிரமா முடியும்" அவனும் அதை ஒத்துக் கொண்டான்.
தயங்கித் தான் சொன்னாள். தன்னுடைய பேச்சைக் கேட்பார்களா? 'இத்தனை படித்தவர்களிடத்தில் எடுபடுமா?'
ஆனால் அவர்களுக்கு எதுவும் தயக்கம் இல்லை போலும். அவள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அதிலும் அவன் ஏற்றுக் கொண்டது மனதில் ஒரு சிறு பூப்பூத்தது.  அவளால் அந்த மகிழ்ச்சி ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 
" சரி! எதுக்கும் பாஷ்யம் சார் கிட்ட ஒரு தடவை பேசிடலாம்.  அவரு என்ன சொல்லறாரோ  அப்படி    கேட்டுக்கலாம்"
"செந்தில் எப்ப வருவாரு?"
"இன்னிக்கு ராத்திரி. அண்ணா இந்நேரம் பஸ்ஸுக்கு வந்துருக்கும்"
"நைட்டா ! ஓகே "
அவர்கள் அறியாதது செந்திலுக்கு விஷயம் தெரியும் என்பது. பேருந்தில் வரும்போது கடைக்கு அழைத்து எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று  விசாரித்துக் கொண்டான்.
உண்மை விளிம்பு ஊழியர் 

"இப்ப எங்க இருக்கீங்க தம்பி? வீடு விஷயம் என்ன ஆச்சு? "கேட்டு விட்டார்.
"என்ன வீட்டு விஷயம்?" 

எல்லாம் தெரிந்து விட்டது. 
ஓகே ரைட்டு. இனி எல்லாமே தப்பாதான் போகப் போகுது. ரெடியா இருங்க மக்களே!
சாமான்களை எல்லாம் அட்டை பெட்டிகளில் மாற்றிப் பாக்  செய்து இருந்த இடங்களில் அடுக்கித் தேவையான சில துணிகளை எடுத்துக் கொண்டு வந்தார்கள். பெரும்பாலும் இவர்கள் யாரும் சாமான்கள் சேர்ப்பதில்லை. சில முக்கியமான புத்தகங்கள் தான் இருக்கும் அதையும் அழகாகப் பேக் செய்து தான் வைத்திருந்தார்கள். வேலை சற்று அதிகம் தான். இருந்தாலும் சீக்கிரமே முடித்து விட்டார்கள். இடிபாடுகளில் நடுவே வேலை செய்வது மிகவும் களைப்பாக இருந்தது. முடித்து விட்டு மாலையில் வந்தவர்கள் மிகவும் சோர்ந்து போய்  இருந்தார்கள். பவிக்கு அழுது அழுது  கண்கள் வீங்கி இருந்தன. 
நிரஞ்சனாவின் முகவரிக்கு வந்து இறங்கினான் ஆட்டோவில். ரொம்ப பெரிய அடுக்ககம். ஏற்கனவே நிரஞ்சனா காவலாளியிடம் விவரம் சொல்லி விட்டாள். அதனால் பெயர் கேட்டு விட்டு,
"நீங்கப் போகலாம் சார். மேடம் சொல்லிட்டாங்க" மரியாதையாக நடத்தினான்.
வெளியிலிருந்து நடந்து போக எப்படியும் ஐந்து நிமிடங்களாவது ஆகும். ஒன்பதாவது தளம். எதிரும் புதிருமாக நான்கு லிப்டுகள் இருந்தன. அதைத் தவிரவும் சாமான்கள் ஏற்ற இன்னும் இரண்டு இருந்தது. கீழே இருந்து வருவதற்கு சில நிமிடங்கள் ஆனது. இவனால் பொறுக்க முடியவில்லை. இருந்த ஆத்திரத்தில் இன்னும் அவளை அடிக்க முடியவில்லையே என்று கைகள் பரபரத்தது.  அவ யாரு வந்து என் வீட்டுல மூக்கை நுழைக்க?  கோபம் கொப்பளித்தது.
பெல்லை அழுத்தினான். பூரணி தான் கதவைத் திறந்தார்.
"வாங்க மாப்பிள்ளை"
"நல்லா இருக்கீங்களா?" அத்தை என்னும் வார்த்தையைத் தவிர்த்துவிட்டான்.புன்னகையும் தான்.
"கடவுள் அருளாலே நல்லா இருக்கேன் மாப்பிளை"
"அம்மா…?"
"வாங்க முதல்ல உள்ள வாங்க. இவ்ளோ நேரம் அழுதுகிட்டு இருந்தாங்க. இப்ப தான் சமாதானம் பண்ணி தூங்க வச்சோம்"
தயக்கத்துடன் உள்ளே அடி எடுத்து வைத்தான். முன்னே சிறு அறைபோல இருந்தது.   
பெரிய பிள்ளையார் படம் மாட்டி இருந்தது.
"இது நம்ம நீரு  வரைஞ்சது தான். வாங்க உள்ள வாங்க"
உள்ளே வலது புறமாகப் பெரிய சோபா இருந்தது. அதில் பிரதீப் நடுவில் அமர்ந்திருக்க ஒரு தொடையில் நீருவும்  மறு தொடையில் பாஸ்கரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிரதீப்பின் ஒரு கைச்செல்போனில் எதையோ ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்க மறு  கைத்தோழியின் தலையை வருடிக்  கொண்டு இருந்தது 
அண்ணனின் முகம் கண்டதும், மெதுவாக "வாண்ணா "ரேணு அழைத்துக் கொண்டே அருகில் இருந்த ஒற்றை தலையணையை பவிக்கு வைத்து விட்டு மெல்ல எழுந்தாள்.
"காலைலேர்ந்து அங்க வேலை செஞ்சுட்டு வந்து இப்பதான் கொஞ்ச நேரம் முன்னதான் வந்து படுத்தாங்க"
"ஓ ! " அதற்கு மேல் என்ன பேச வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய மனைவி இன்னொருவனின் மடியில் உரிமையாகப் படுத்திருக்கிறாள். பொறாமை லேசாக எட்டிப் பார்த்தாலும் தவறான எண்ணம்  வரவில்லை. தவறாக நடப்பவர்கள் இப்படி அனைவரின் எதிரிலும்  ஒன்றாக இருக்க மாட்டார்கள். பாஸ்கரை அந்த  ஆடவன் எப்படி நினைக்கிறானோ அதேப் போல த்தான்  தன்  மனைவியும் என்பது நொடியில் புரிந்து கொண்டான் செந்தில். அவளைப் பார்ப்பதற்கு முன்னே இருந்த அனைத்துக் கோபமும்,

 அயற்சியாக உறங்கும் சிறு பெண்ணைப் பார்த்ததும் மறைந்து விட்டது.
"ஹலோ! நான் பிரதீப். இவளோட பிரண்ட்" அமர்ந்தபடியே கைக்கொடுத்தான்.
"பிரண்டுனாப் பிரண்டு மட்டும் இல்ல. என்னோட கணவரும் இவனோட அப்பாவும்  சின்னப் பிள்ளைலேர்ந்தே ஒண்ணா படிச்சு ஒண்ணா வளந்தவங்க"
இப்போது எதற்கு இந்தக் கதை? செந்திலுக்கு 

மனம் தவித்தது. 
பிரதீப் லேசாக அசைந்ததில் நீரு  விழித்துக் கொண்டாள்.
"வாங்க செந்தில்" லேசாகக் கண்ணைக் கசக்கி  கொண்டே அழைத்தாள்.
பாஸ்கரும் எழுந்து விட்டான். 
"ஹாய் "
"ஹெலோ செந்தில்"
"சாரி! என்னால உங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம்"
"இதுக்கு என்ன சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு. நீருவுக்காக இது கூடச் செய்ய மாட்டோமா?"
நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். லீகலா என்ன செய்ய வேண்டும் என்று பிரதாப் விளக்கினான்.
தான் இல்லாத போதும்  எல்லா  வேலைகளும் முடிந்து விட்டன. ஒருபுறம் நிம்மதி. அதே சமயம் தன்னுடைய வீட்டு விஷயத்தில் யார் யாரோ வந்து மூக்கை நுழைத்து,

 இது என்ன? கோபமும் வந்தது. மற்றவர்கள் எதிரில் காட்ட முடியவில்லை.  அடக்கிக் கொண்டான். எப்படியும் இந்த இருட்டில் அங்க போய் என்ன செய்யப் போறீங்க? உங்களுக்குத்தான் ரெண்டு பக்கம் போய் இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் பெரிசா சேதாரம் எதுவும் இல்ல. அதனால் எல்லாரும் அப்பவே கொஞ்சம் கத்திட்டு   அப்புறம்  கலைந்து போய்ட்டாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம சைட்ல தான் தப்பு. என்ன ஒரே ஒரு விஷயம் அவங்க நேத்து நோட்டீஸ் குடுத்துட்டு நமக்குன்னு கால அவகாசமே கொடுக்கல. மத்தபடி நாம வேற எதையும் வச்சு கேஸ் போட முடியாது.

பாஸ்கர் தான் விளக்கினான். 
"அது சரி! நாங்க இந்த இடம் வாங்கி பட்டா  வாங்கினபோது கூட இங்க சுத்தமா ரோடே கிடையாது.    ஊரைப் பாக்க போகவே ரொம்ப தூரம் போகணும்"
"இருந்திருக்கலாம். ஆனாலும் அது பொறம்போக்கு இடம் தான். நாம் சட்டப்படி கிளைம்  பண்ணவே முடியாது"
பவித்ரா உறங்கிக் கொண்டிருப்பதால் இவர்கள் வேறொரு அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தார். 


     படுத்திருந்தாலும் இது போன்ற நிலையில் அமைதியாக உறங்க முடியுமா?அல்லது உறக்கம்தான் வருமா? மகனின் குரல் கேட்டு அப்போதே வந்து விட்டார் மீனாட்சி.
பாஸ்கரை ஏற்கனவே தெரியும் என்றாலும் இப்போது பிரதீப் பாஸ்கர் இருவரின் மீதும் செந்திலுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வந்திருந்தது. 
அப்படியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
"பாவம் பவித்ரா தான்  ரொம்ப தவிச்சு போய்ட்டா. நாங்க ரேணுகாவை பக்கத்துல வச்சுக்கிட்டு பவிய இங்க அனுப்பி இருந்திருக்கணும். நீங்கப் பட்ட கஷ்டமெல்லாம் அவ சொன்னா. வீடு கட்டறதுங்கறது ஒவ்வொருத்தரு க்கும் எத்தனை பெரிய கனவுங்கறது ரொம்ப தெளிவா தெரிஞ்சது"

நிரஞ்சனா பேசியதில் உண்மையான அக்கறை இருந்தது. 
"ஆமா! எங்களுக்குத் தனி வீடுதான். இருந்தாலும் அது தாத்தா  காட்டின வீடு. அதனால் எங்களுக்கு அவரு எவ்ளோ கஷ்டப்பட்டு கட்டினாருன்னு புரிஞ்சுக்க முடியல. அடிக்கடி அப்பாவும் தாத்தாவும்  சொல்லுவாங்க தான். ஆனா  இன்னிக்கு பவி சொல்லி அழும்போது தான் அதோட உண்மையான கஷ்டம் என்னன்னு புரிஞ்சது" பாஸ்கர் சொன்னதும் 
அருகில் அமர்ந்திருந்த மனைவி சட்டெனக் கணவன் கன்னத்தில், முகமெங்கும் முத்தமிட்டாள். அவரவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பிரதீப் மட்டும் நமுட்டுச் சிரிப்புடன் ரேணுகாவைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கோ நொடியில் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள். அதையே ஆச்சர்யமாகப் பார்த்தான். தோழியோ எந்த வெட்கமும் இல்லாமல் கணவனுக்கு முத்தமழை பொழிந்து கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்தவளுக்கோ முகம் சிவந்து வெட்கப்படுகிறாள். எப்படிப் பட்ட பெண்கள் இவர்கள்!


     அண்ணாவுக்கு பயந்து பயந்து இதுவரை எந்த ஆணையும் அவள் தலை நிமிர்ந்து கூடப் பார்த்ததில்லை. அப்பா இருக்கும்வரை விஷயமே வேறு. பள்ளிக்குச் சென்று வந்தால் வீட்டிற்கு வெளியில் கூடச் செல்லக் கூடாது. கோலம் போடுவது கூட விடிவதற்கு முன்பே போட்டு விட வேண்டும். அதுவும் தாமதமாகி விட்டால் மீனாட்சி தான் செய்ய வேண்டும். 

 "பேப்பர் போடும் பசங்க வருவானுங்க. யாரு எதிரையும் போய் நிக்காத. மேல ஏன் துணி போடாம இருக்க? எதுக்கு வீட்டுல இந்தப் பாண்டு  உடுப்பு? தாவணியை கட்டு" கெடுபிடி அதிகம்தான். ரேணுவிற்கு பழகி விட்டாலும் பவித்ரா பழகிக் கொள்ள சற்று திண்டாடிப் போனாள். "அம்மா என்னம்மா இது ?வீட்டுல தான் அப்பா அண்ணா யாரும் இல்லையே? எதுக்கும்மா இந்த ஷால்? ஒடம்பு எரியுதுமா "
பிள்ளைகளின் நிலையைப் புரிந்து கொண்ட மீனாட்சி யாரும் இல்லாத நேரத்தில் சற்று இலகுவாக இருக்க அனுமதித்தார். அதுவும் யாருக்கும் தெரியாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற மிரட்டலோடு.
அப்படி வளர்ந்தவள் முதன் முதலில் பார்த்த ஆடவன் என்பதாலா  அல்லது மயக்கும் தோற்றமுடையவன் என்பதாலா ?எதனால் அவன் பால் ஈர்க்கப் பட்டாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்  ஒன்று மட்டும் தெரியும். தோழியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு தலை கோதியவனை பார்த்தால்  யாருக்குத்தான் அந்த இடத்துல,

 தான் இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் போகும். வயதிற்கு வந்தபிறகு அண்ணன்  சில சமயங்களில் தலை கோதி  விடுவான். அதற்கு மேல் தோளில் கூடச் சாய்ந்தது இல்லை.  நான்கடி தள்ளித் தான் நிற்க வேண்டும். இவனோ இத்தனை உரிமையாய் தோழியை மடியில் படுக்க வைத்துக் கொள்கிறானே!அப்படி என்றால் அவன் மனைவியை எப்படி  பார்த்துக் கொள்வான். கொடுத்து வைத்தவள் அவன் வீட்டு மகாராணி. மனம் ஏங்கியது.
"அது சரி அவருக்குக் கல்யாணம் ஆகி இருக்குமா ?" மனம் புழுங்கியது. 
======================================="இங்க யாரும் மூஞ்சிய திருப்பிக்க வேணாம். 
ஏ! மம்மி ! இங்க பாரு, வீட்டுல இருக்கற பொண்ணுங்களுக்காகப் படிச்சுக்கிட்டே வேலைக்குப் போய்க் கஷ்ட்டப்பட்டு காசு சேர்த்து தனக்குன்னு எதுவும் வச்சுக்காம  கழிவறை கட்டி  கொடுத்திருக்காரு  இந்த மாதிரி ஒரு வீட்டுக்காரரு யாருக்கு கிடைப்பா?"

இதற்கு எல்லாம் செந்தில் என்ன செய்வான்?

பயமாக இருக்கிறது. பார்க்கலாம் 

தொடரும்.....





Leave a comment


Comments


Related Post