இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 30-06-2024

Total Views: 498

      வேலைக்கு சேர்ந்து இரண்டரை மாதங்கள் முடிந்து இருந்தது.  கம்பெனியில் வேலையில் மூழ்கி விடுபவள் கேன்டீன் வரும்போது எல்லாம் அவனை தேடும் கண்கள் ஆனால் அவனின் கண்களில் படாமல் மறைந்து பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர அவள் முன் வருவதில்லை. 

     வீட்டிலும் புலம்பிக்கொண்டு இருப்பாள் ஏனெனில் தங்கையிடமும் அத்தையிடமும் போனில் பேசுபவன்  அவளிடம் பேசுவதில்லை.  ஏன் அவனின் போன் நம்பர் கூட அவளுக்கு தெரியாது.

    தங்கைக்கும் அத்தைக்கும் போன் நம்பரை கொடுத்தவன் அவளிடம் அவன் நம்பரை கொடுக்கவில்லை.  அவளும் அவனை கண்ட போது நம்பரை கேட்கவில்லை.   அவனாக கொடுக்கவேண்டும் என்று இருந்தாள்.

      அவனிடம் பேசவேண்டும் என்றாள் அன்பழகன் போனில் தான் பேச வேண்டும்.  அதனாலே அவள் போனிலும் அவனிடம் பேசவில்லை நேரிலும் பார்க்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாரங்கள் அவனை சந்தித்தவள் அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து அவன் சனிக்கிழமையே வெளியே செல்வதாக அத்தையிடம் கூறிவிடுவான்.

   தான் வருவது பிடிக்காமல் தவிர்க்கிறானே என்று தாய் கூறியதையும் மீறி சென்றவளுக்கு ஏமாற்றமே வீடு பூட்டி இருந்தது.  எப்போதும் அவனை திட்டிக்கொண்டும் இல்லையென்றால் ஏன் தன்னை தவிர்கிறான் என்ற சிந்தனையிலேயே இருந்தாள்.

    இளவரசன் அவளை கவனித்து விசாரித்த போது கண்ணீருடன்   "அத்தான் என்கிட்ட பேசவே இல்லை பார்த்தே மூன்று வாரத்திற்கு மேல ஆகிவிட்டது அண்ணா அம்மாகிட்டையும் வள்ளிகிட்டையும் போனில் பேசுறார் ஆனால் என்கிட்ட பேசவே இல்லை" என்றாள். 

    அவளை அணைத்து ஆறுதலாக முதுகை தட்டிக்கொடுத்தவன் "கயல் அத்தானுக்கு எல்லாரையும் விட உன்னை தான் ரொம்ப பிடிக்கும்.  உன் கிட்ட பேசலை என்றாள் அதுக்கு கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும் அதுவும் உன் கிட்ட அத்தான் சொல்லி இருப்பார் நல்லா யோசித்து பாரு."

    "அப்புறம் அத்தான் இப்போதைக்கு அன்பு அண்ணாகிட்ட வேலை செய்யுறார்.  அதையே கடைசி வரை செய்ய முடியுமா அத்தான் எவ்வளவு புத்திசாலி என்று எல்லாருக்கும் தெரியும் அவர் ஒரே இடத்தில் இருக்கனும் நினைப்பவர் இல்லை தனக்கான வழியை தேடி அதில் சக்சஸ் ஆகனும் என்று வேலை செய்திட்டு இருப்பார்.  அதான் இப்போதைக்கு விலகி இருக்கார்.  கண்டிப்பா அவர் நினைத்தது நடந்தால் முதலில் தேடி வருவது உன்னைத்தான்" என்று கூறினான் இளவரசன்.

    அண்ணன் கூறியதை சிந்தித்தவளுக்கு சரியாகவே பட்டது அன்று கூட அவளிடம் சொன்னானே உன்னை பார்த்தால் இழந்தது எல்லாம் நியாபகம் வருது என்றானே.  அது அத்தானை வறுத்த வைப்பதோடு அவரின் முன்னேற்றத்தையும் தடுக்கிறது என்பதாலே தன்னை தவிர்க்கிறார் என்று புரிந்தவள் அதன் பிறகு சந்தோஷமாக வளைய வந்தாள்.

   வீரராகவன் சாந்தி தம்பதியருக்கு தங்கள் மகனை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு வழி தான் தெரியவில்லை. 

    அந்த வழியை காட்டவே வந்தனர் உறவினர் குடும்பம்.  அவர்கள் வீரராகவரின் தந்தை வழி சொந்தம் அவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து தங்கள் மகனுக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைக்க வந்து இருந்தனர்.

     அவர்களை வரவேற்று உபசரித்து விட்டு பேசிக்கொண்டு இருந்த போது வந்திருந்தவர்களில் பெரியவர் ஒருவர் வீரராகவருக்கு சித்தப்பா முறையில் இருந்தார்.   அவர் தான் பேச்சை தொடங்கினார்.

   "ஏன் வீரா உன் பெரிய மகன் கார்த்திகேயன் தான் வந்துட்டானே  அவனுக்கு கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே" என்றார்.

    "அது சித்தப்பா அவனுக்கு இன்னும் எங்கள் மேல் இருக்க கோபம் போகலை வீட்டுக்கு வராமல்  அவன் தாத்தா வீட்டில்  போயிருக்கான்" என்றார் வீரராகவன்.

    "கோபம் இருக்கத்தானே செய்யும் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்தா அதுக்குன்னு அவனை அப்படியே விட்டுவிடுவியா எப்படியாவது பேசி கல்யாணத்தை முடித்து வச்சா கட்டிக்கப்போறவ பேசி மெல்ல இங்க சேர்த்துடுவா."

    " பெண் என்ன வெளியவா தேடப்போற  பெண்ணு இவதான் என்று என் அண்ணனே சொல்லி இருக்காரே உன் மச்சான் பெண்ணு தானே.  கயலுக்கும் எல்லாம் தெரியும் அவனை பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுவா..."

   " கார்த்திகேயன் என் பெரிய பேரனை விட ஒரு வயசு பெரியவன்.  என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி இரண்டு பிள்ளையே பிறந்துவிட்டது.
  இப்ப கல்யாணம் பண்ணப்போற பேரன் நம்ப சரவணன் வயசு தான்."

    "சரவணுக்கே கல்யாணம் பண்ணுற வயசு வந்திடுச்சு.  கல்யாண வயசில் ஆண்பிள்ளைகள் மட்டும் இல்லாமல் நம்ப அமிர்தவள்ளி வேற இருக்கா அவளுக்கும் கல்யாணம் முடிக்கனும் எதையும் பண்ணாம இப்படி பிள்ளை வீட்டுக்கு வரலையே என்று கவலை பட்டுட்டு இருந்தா எல்லாம் நடந்து விடுமா?...."

    " நம்ப முயற்சி பண்ண ஆரம்பித்தால்தான் எல்லாம் நடக்கும்" என்றார் பெரியவர்.

    " சரி சித்தப்பா நீங்க சொல்லுற மாதிரியே செய்யுறேன்" என்றார் வீரராகவன்.

    " வீரா கார்த்திகேயன் இப்போ எங்க இருப்பான் கேட்டு சொல்லு நாங்க போயி அவனுக்கு பத்திரிகை கொடுத்துட்டு கல்யாணத்துக்கு கூப்பிடறேன்.  அவன் கல்யாணத்துக்கு வந்தால் அங்கேயே பேசலாம் இல்லை என்றால் கல்யாணம் முடிந்து ஒரு நாள் வந்து நானே அவன்கிட்ட பேசுறேன்" என்றார் பெரியவர்.

   வீரராகவருக்கு சித்தப்பா பேசியது சரியாக தேன்றியது.  எப்படியும் தன் இடம் மகன் பேசமாட்டான் சித்தப்பா பேசினால் ஒத்துக்கொள்வான் என்று நினைத்தவர் முரளிக்கு போன் செய்து கார்த்திகேயனை பார்க்க வேண்டும் என்று தன் சித்தப்பா கேட்பதாகவும் எங்கே இருக்கிறான் என்று சொன்னால் அவரே வந்து பார்க்க வருவதாகவும் கூறினார்.

   முரளியும் கார்த்திகேயனிடம் பேசிவிட்டு கம்பெனியில் இருப்பதாகவும் அவர்கள் செல்லும் வழியில் தான் கம்பெனி இருப்பதால் அங்கேயே வரச்சொல்லியதாக முரளி வீரராகவரிடம் கூறினான்.

  அதையே தன் சித்தப்பாவிடம் கூறி போகும் வழியிலே பார்த்து விட்டு சொல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

    அவர்களும் சென்று கல்யாணத்திற்கு வருமாறு கூறி பத்திரிகை கொடுத்து சென்றனர்.

   அடுத்த இரு வாரங்கள் கடந்து திருமண நாளும் வந்து இருந்தது.  முன் தினமே குடும்பத்துடன் சென்றார் வீரராகவன்.

    கார்த்திகேயன் முன் தினம் வராமல் சரியாக முகூர்த்த நேரத்தில் வந்தான்.  அவனை கண்டவுடனே குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.  எங்கே தங்கள் மீது இருந்த கோபத்தில் கல்யாணத்திற்கு வராமல் இருந்து விடுவானே என்று கவலையில் இருந்தவர்களுக்கு அவனை கண்டவுடன் தான் நிம்மதி அடைந்தனர்.  முகத்தில் சந்தோஷமும் வந்தது.

    திருமணம் முடிந்ததும் கிளபம்பியவனை பிடித்து தன் அருகில் அமர்த்திக்கொண்டனர் வீரராகவரின் சித்தப்பா.

    "எவ்வளவு வருஷம் கழிச்சி வந்து இருக்க நம்ப சொந்தபந்தங்கள் எல்லாம் உன்னை தான் கேட்டாங்க உன் அப்பாவிடம்  அவன் பதில் சொல்லமுடியாமல் தவிச்சுட்டு இருந்தான்." 

      "கொஞ்ச நேரம் இருந்தா நம்ப முக்கியமான செந்தங்களை பார்த்திடலாம்" என்றார்.

     வேறு வழி இல்லாமல் அமர்ந்து இருந்தான்.  சிவந்த நிறத்தில் மிகவும் கம்பீரமாக  சினிமா ஹீரோ போல் இருந்தவனை பார்த்து விட்டு அனைவரும் பெரியவரிடம் விசாரித்தனர்.  அவரும் நம்ப வீரராகவன் பையன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

    அனைவருமே அவனிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றனர். திருமணம் முடிந்து பெண் மாப்பிள்ளையை ஓய்வு எடுக்க அனுப்பி விட்டு முக்கிய சொந்தங்கள் அனைவரும் வந்து அமர்ந்தனர்.

    பெரியவர்  "அப்புறம்  கார்த்திகேயா எப்ப நீ கல்யாணம் பண்ணிக்க போறாய்?..." என்று நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தார்.

    அவரின் கேள்வியில் திகைத்தவன் அங்கு அமர்ந்திருந்த தன் தாய் தந்தை மாமா கோதண்டம் மூவரையும் பார்த்தான்.  அவர்கள் அவனின் பதிலுக்காக ஆவலாக அவனைத்தான் பார்த்து இருந்தனர்.

    தன் பதிலுக்காக காத்திருந்த பெரியவரிடம் " இப்ப என்ன அவசரம் தாத்தா இன்னும் இரண்டு வருடம் கழித்து பார்க்கலாம்" என்றான்.

    "என்ன சொல்லுற கார்த்திகேயா உனக்கு வயது இருபத்தி எட்டு முடிந்துவிட்டது.  உன்னை விட சின்னவங்களுக்கு கல்யாணம் பண்ணி குழந்தையே பிறந்திடுச்சி நீ என்ன என்றால் இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்கிறாய்."

   " கல்யாணம் பண்ண நீ மட்டும் இல்லை உன் தங்கச்சி தம்பி இரண்டு பேருமே இருக்காங்க.  பெரியவனுக்கு பண்ணிட்டு தான் மத்தவங்களுக்கு என்று உன் அப்பா கம்முனு இருக்கான்."

    " பெண்ணுக்கு முதலில் முடிக்க சொன்னேன் ஆனால் மாப்பிள்ளை என் தங்கச்சிக்கு ஆகாமல் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லுறாரு என்று சொல்லுறான் உன் அப்பா நீயே என்ன பண்ணலாம் சொல்லு" என்று பேச்சை அவன் புறம் திரும்பி விட்டு அமைதியாகி விட்டார் பெரியவர்.

    தன் தங்கையை இதுவரை குழந்தையாகவே நினைத்து இருந்தவனுக்கு தாத்தாவின் பேச்சில் தான் திருமண வயதை தொட்டு விட்டாள் தங்கை என்று அவனுக்கு உரைத்தது.

    மாப்பிள்ளை என்றதும் அவனுக்கு தோன்றியது இளவரசன் தான்.  அவன்கிட்ட பேசி தங்கை திருமணத்தை முடித்து வைத்துவிடலாம் நான் சொன்னால் கேட்பான் என்று நினைத்தவன்.
பெரியவரிடம்

    "தாத்தா நான் இளவரசன் கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்.  தங்கச்சி கல்யாணம் நடத்திடலாம்" என்று கூறினான்.

    "என்ன கார்த்திகேயா பேசுற  அவன் உன்னை விட சின்னவன் வீட்டில் பெரியவன் இருக்க அவன் எப்படி கல்யாணம் செய்ய சம்மதிப்பான்.  அப்புறம் அவன் வீட்டிலும் பெண் இருக்கா அவள் அமிர்தவள்ளியை விட பெரியவள் அவளுக்கு கல்யாணம் பண்ணாமல் அவன் எப்படி கல்யாணம் பண்ண சம்மதிப்பான்."

    " இது எல்லாத்துக்கும் மேல சின்ன வயசிலே உன் தாத்தாங்க கயல்விழி தான் உனக்கு என்று சொல்லி வச்சிட்டாங்க  ஊர்காரங்களுக்கும் நம்ப சொந்தபந்தங்கள் எல்லாருக்கும் இந்த விசயம் தெரியும் .  அதனால் வெளியேயும் கயல்விழிக்கு மாப்பிள்ளை பார்க்க முடியாது" என்று பெரியவரின் பேச்சில் கோபம் வந்தது கார்த்திகேயனுக்கு

    என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்ப்பிங்களா என்று மனதிற்குள் நினைத்தவன் பல்லைக்கடித்து கைமுஷ்டி இறுக தன் கோபத்தை அடக்கி அமர்ந்து இருந்தான்.

    பெரியவரும் அதைத்தானே எதிர்பார்த்தார்.  அவர் வயதுக்கு எவ்வளவு பேரை பார்த்து இருப்பார் எப்படி பேசினால் அவனை வழிக்கு கொண்டு வரலாம் என்று தானே கயல்விழியின் பேரை சொன்னார்.

   தன் ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பம் இப்படி பிரிந்து இருக்கே என்று வருந்தியவர் எப்படியாவது சேர்த்து வைத்து தன் அண்ணன் குடும்ப நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே தான் இதையெல்லாம் செய்து கொண்டு இருந்தார்.

     "என்ன கார்த்திகேயா ஒன்னும் சொல்லாமல் இருக்க நீ சொல்லப்போற வார்த்தையில் தான் நாலு பேர் வாழ்க்கை இருக்கு" என்றதும் அவரை கேள்வியாக பார்த்தான்.

    "ஆமாம் கார்த்திகேயா சரவணனுக்கும் கல்யாணம் பண்ணுற வயது தானே இப்ப கல்யாணம் முடிந்ததே அவன் வயசு தான் சரவணனுக்கும் உன் ஒருத்தன் வார்த்தையில் தான் மற்ற நாலுபேர் வாழ்க்கையும் இருக்கு"  என்று கூறினார் பெரியவர்.

    கார்த்திகேயனுக்கு சம்மதம் சொல்வதை தவிர வேறு வழியில்லாமல் அனைத்து பக்கங்களையும் அடைத்துவிட்டார் பெரியவர்.

    சிறிது நேரம் அமைதியாக  தூரத்தில் அமர்ந்து அவர்கள் வயது உள்ளவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த தன் தங்கை தம்பியை கண்டவன் தன்னால் ஏற்கனவே அவர்கள் பட்ட கஷ்டம் போதும் இனியும் வேண்டாம் என்று நினைத்து  "சரி தாத்தா கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்" என்றான்.


Leave a comment


Comments


Related Post