இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 30-06-2024

Total Views: 772

     அந்த வார்த்தைக்காக காத்து இருந்த வீரராகவன் சாந்தி இருவருக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. கண்களில் நீரும் முகத்தில் புன்னகையுமாக இருந்த தன் தாய் தந்தையை சில வினாடிகள் கண்டுவிட்டு திரும்பிக்கொண்டான்.

    " வீரா என்னப்பா சொல்லுற உன் பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்" என்றார் பெரியவர். 

   வீரராகவன் சாந்தி தம்பதியர்கள் எழுந்து வந்து பெரியவரின் முன் கைகூப்பி நன்றி சொல்லினர்.

     "ரொம்ப சந்தோஷம் சித்தப்பா நீங்கள் தான் இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சிங்க அதேபோல் நீங்க முன்ன நின்னு என் பிள்ளைகள் கல்யாணத்தையும் நடத்தி வச்சுடுங்க சித்தப்பா" தழுதழுத்த குரலில் கூறினார் வீரராகவன்.

     "நீ சொன்னாலும் சொல்லலினாலும் என் அண்ணன் பேரன் பேத்தி கல்யாணத்திற்கு நான் முன்ன நிற்பேன் வீரா.  அடுத்து நடக்கவேண்டியதை பார்ப்போம் இப்படி உட்கார்" என்று பக்கத்தில் இருந்த சேரில் உட்கார வைத்தவர் கோதண்டத்தையும் அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். 

    "சரி இப்பவே நல்ல நாளை பார்த்திடலாம் அய்யரும் இங்க தான் இருக்கார் என்று கூறி அய்யரையும் அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார் பெரியவர்.

     இந்த தாத்தா எல்லாம் முன்னேற்பாடாகத்தான் செய்து இருக்கார் அது தெரியாமல் வந்து சிக்கிட்டேன் என்று நினைத்தவன் அமைதியாக அமர்ந்து இருந்தான் கார்த்திகேயன்.

    "அய்யா இன்னைக்கு தான் ஆனி மாதம் பிறந்தது. இன்னையிலிருத்து பதினெட்டாவது நாளில் ஒரு முகூர்த்தமும் இருபத்தி ஐந்தாம் நாளில் ஒரு முகூர்த்தமும் தான் நீங்க கொடுத்த நாலு ஜாதகத்திற்கும் பொருத்தமாக இருக்கு அந்த இரண்டு முகூர்த்தம் விட்டால் ஆவணி கடைசி முகூர்த்தம் தான் இவங்களுக்கு பொருத்தமாக இருக்கு" என்றார்.

    என்னது இந்த மாதத்திலேயே?... என்று நினைத்தவன் தன் போனை வேகமாக எடுத்து நாட்களை கணக்கிட்டான்.  இந்த தாத்தா கிட்ட இரண்டு மாதத்திற்கு பிறகு கல்யாணம் வைக்கலாம் என்றால் அதற்கும் பஞ்சாயத்து வைப்பார் போல என்று நினைத்தவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

    "ஏன் வீரா அடுத்த மாதம் வரை தள்ளி போடனும் இந்த மாதத்தில் வர முகூர்த்தத்திலே வச்சிடலாம் இல்லையா" என்று கேட்டார் பெரியவர்.

     "சரி பெரியப்பா எந்த தேதி என்று நீங்களே சொல்லுங்க அதிலே முடித்து விடலாம்" என்றார்.

   இந்த அப்பா என்ன எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போடுறார் என்று நினைத்தவன் பின் ஆமாம் இந்த தாத்தா என்னையே பேசி சம்மதிக்க வைத்துவிட்டார் அப்பா எம்மாத்திரம் என்று மனதில் புலம்பிக்கொண்டு இருந்தான். 

    " அப்ப இருபத்தி ஐந்தாம் நாள் வர முகூர்த்தத்திலே வச்சுக்கலாம்" என்றவரை இடைமறித்தான் கார்த்திகேயன்.

     "இல்ல தாத்தா பதினெட்டாம் நாள் வர முகூர்த்திலே வச்சிடுங்க" என்றவனின் பேச்சை கேட்டு சுற்றி இருந்த உறவினர்கள் அனைவரும் கொல்லென சிரித்தனர்.  சிலர் மாப்பிள்ளைக்கு அவசரத்தை பாரேன் என்றும் கிண்டல் செய்தனர்.

   அதை கேட்டவனுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்து அமர்ந்தவன் அடேய் கார்த்திகேயா  உன்னை எல்லோரும் கல்யாணத்திற்கு அலையுறான் என்று கிண்டல் பண்ணுறாங்கடா இது உனக்கு தேவையா என்றது மனச்சாட்சி.

    அடேய் என்ன பண்ணுறது அந்த நாளில் எனக்கு வேலை இருக்கு அதான் முன்னாடியே வைக்க சொன்னேன் என்று சொன்னால் நம்புவாங்களா அப்படியே நம்பினாலும் அப்படி என்ன பெரிய வேலை என்று கேட்பாங்க எல்லாருக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது.

   அவங்க என்னவென்றாலும் நினைத்துக்கட்டும் நீ முதலில் உள்ள அமைதியாக உட்கார் என்று மனசாட்சியுடன் பேசிக்கொண்டு இருக்க அங்கிருந்தவர்கள் அவனின் கல்யாணத்தை பேசிமுடித்து இருந்தனர்.

    "அப்ப என்னப்பா வீரா, கோதண்டம் பதினெட்டாம் தேதி முகூர்த்ததிலேயே கல்யாணம் வச்சுடலாம் நாள் குறைவா இருக்குறதால் நிச்சயம் தனியாக வேண்டாம் பெண் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு வச்சிட்டு அப்பவே நிச்சயம் பண்ணிடலாம்." 

     "அய்யர் முகூர்த்த நேரத்தை இப்பவே எழுதி கொடுத்திடுவார்  கல்யாண பத்திரிகை அடிக்க நாளைக்கே கொடுத்திருங்க. பத்திரிகை வந்ததும் குலதெய்வத்திற்கு படைச்சிட்டு கொடுக்க ஆரம்பித்திடலாம் நானும் உன் சித்தியும் இன்னும் இரண்டு நாளில் வந்து விடுகிறோம்" என்று அனைத்தையும் அவரே பேசிவிட அனைவரும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தனர்.

    அனைத்தும் பேசிமுடித்து மதிய உணவும் அங்கேயே முடித்துக்கொண்டே வீடு திரும்பினர்.  கார்த்திகேயன் அவர்கள் உடன் ஊருக்கு வராமல் அங்கு வந்து அவனுக்காக காத்திருந்த முரளியுடன் வெளியே சென்றான்.

    வீட்டில் வந்து லலிதா இளவரசனை அழைத்து திருமண மண்டபத்தில் நடந்த அனைத்தையும் கூறினார் வீரராகவன்.

    கோதண்டமும் கயல்விழியும் அங்குதான் இருந்தனர். கயல்விழிக்கு கேட்டதை நம்பவே முடியவில்லை.  இப்போதே தன் அத்தானை பார்க்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது அதனை அடக்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள் கயல்விழி.

    "உங்க விருப்பம் கேட்காமல் நாங்களே பேசிமுடித்ததில் எதாவது வருத்தம் இருந்தால் மன்னித்து விடுமா லலிதா, இளவரசா" என்று கூறினார்.

    "அண்ணா என்ன பேசறீங்க" என்று லலிதாவும்

    "மாமா என்ன இது" என்று இளவரசனும்

   "மச்சான்" என்று கோதண்டமும்

   "மாமா...." என்று கயல்விழியும் ஒரே நேரத்தில் பேசினர்.

    "இல்லமா என் பிள்ளையை எப்படியாவது நல்லா வாழவச்சு பார்க்கனும்  என்ற ஆசையில் தான் என் சித்தப்பா கேட்டதற்கு எல்லாம் சரி என்று சொல்லிட்டு வந்தேன்."

    "ஆனால்  உங்க விருப்பத்தை கேட்காமல் நானே முடிவு செய்தது தப்புதான்" என்றார் வீரராகவன்.

    "என்ன மச்சான் பேசுறீங்க நானும் தானே வந்தேன் மாமா என்கிட்டையும் சம்மதம் கேட்டுத்தானே பேச்சை ஆரம்பித்தார்." 

    " ஏன் மாமா அப்ப நீங்க வேற நாங்க வேறையா எங்களை உங்க குடும்ப ஆட்களா நினைக்கலையா" என்றாள் கயல்விழி.

   " அய்யோ அப்படி நான் நினைக்கவே இல்லை கயலுமா நீங்க இந்த வீட்டுக்கு என்னைக்கு வந்திங்களே அன்னையில் இருந்து எல்லோரும் ஒரே குடும்பம் தான்மா நான் கேட்டது கல்யாணம் பண்ணிக்க போற உங்க கிட்டயும் உங்க அம்மா கிட்டயும் ஒரு வார்த்தை கேட்காமல் நாங்களே முடிவு பண்ணியதைத்தான் சொன்னேன்" என்றார் வீரராகவன்.

   " மாமா நீங்க எங்ககிட்ட கேட்கனும் என்று அவசியமே இல்லை எங்க மாமாவும் அத்தையும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா தான் அப்படி இருக்கும் போது நீ இதை செய் என்று சொன்னால் செய்யப்போறோம் அதை விட்டுவிட்டு மன்னிப்பு அது இது என்று பேசாதிங்க."

     "என்னென்ன வேலை செய்யனும் என்று சொல்லுங்கள் நானும் சரவணனும் போய் பார்க்கிறோம்  அதைவிட்டுட்டு இப்படி தேவையில்லாமல் கவலை பட்டுட்டு இருக்காதிங்க."

   " அத்தான் வரப்போறாரு அதை நினைத்து சந்தோஷமாக இருங்க அத்தையும் நீங்களும்" என்றான் இளவரசன்.

     எழுந்து வந்து அனைத்துக்கொண்டார் வீரராகவர் இளவரசனை.

    " அண்ணா அரசு சரியாக சொல்லிட்டான் கல்யாண வேலை என்னென்ன செய்யனும் சொல்லுங்க அதை பார்க்கலாம்" என்றார் லலிதா.

    " சரிம்மா" என்றவர் " நாளைக்கும் முகூர்த்த நாள் தான் அதனால் நாளைக்கு காஞ்சிபுரம் எல்லாரும் போயிட்டு பத்திரிகை அடிக்க கொடுத்திட்டு அப்படியே ஜவுளி எடுக்குற வேலையை முடித்து விடலாம். நீயும் சாந்தியும் நம்ப சொந்தங்கள் எவ்வளவு பேருக்கு துணி எடுக்கனும் நம்ப பசங்களுக்கு என்னென்ன எடுக்கனும் பேசி குறித்து வச்சுகிட்டா நாளைக்கே முடித்து விடலாம்" என்று மேலும் பலவற்றை பேசிக்கொண்டு இருந்தனர்.

     இளவரசன் அமிர்தவள்ளிக்கு சிறுவயதில் இருந்தே தெரிந்தது தான் என்றாலும் இதுவரை அவர்கள் சாதாரணமாகத்தான் பேசிக்கொள்வர்.  அதற்கு முக்கிய காரணம் இளவரசன் டீன்ஏஜ் இருக்கும் போது கார்த்திகேயன் வீட்டை விட்டு சென்றதே அந்த வயதுக்கான சந்தோஷங்கள் அனைத்தையும் மறக்கச்செய்து இருந்தது.

   வெளியாட்கள் யாரும் எதுவும் தவறாக பேசிவிடக்கூடாது அனைவரையும் தான் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தால் காதல் என்ற வார்த்தை கூட அவன் மனதில் வந்தது இல்லை. படிப்பு வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தான்.

    இன்று திருமணம் என்று முடிவு செய்ததும் அவன் மனதில் தென்றல் அடிக்க அங்கு அமர்ந்து இருந்த அமிர்தவள்ளியை பார்க்க அவளும் அவனைத்தான் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

    அதை கண்ட இளவரசனுக்கு தென்றலோடு சாரல் மழையும் பெய்ய சட்டென்று காதல் பூ பூத்தது அதில் பரவசம் அடைந்தவன் அமிர்தவள்ளியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான்.

    அதை கண்ட அமிர்தவள்ளிக்கு முகம் சிவந்தது சட்டென்று எழுந்து சமையலறை பக்கம் சென்றுவிட்டாள்.

    அவளின் முகச்சிவப்பையும் கண்டவன் பார்வை அவளின் பின்னே சென்றது.   அருகில் அமர்ந்திருந்த சரவணன் தொண்டையை செரும அதில் கலைந்தவன்  சரவணனை பார்த்தான்.

    சரவணன் இளவரசனின் காதருகில்  "வந்து ரொம்ப வழியுது மாப்பிள்ளை தொடச்சிக்கே அப்புறம் எல்லோரும் விசாரிக்க போறாங்க" என்றான் நமட்டு சிரிப்புடன்

      "நான் தொடச்சிக்கறது இருக்கட்டும் மச்சான் நீ தினமும் கம்பெனி கேன்டீனில் வழியுறது ஆறாக போகுதாமே" என்றான் இளவரசன்.

     "அடேய் உனக்கு எப்படிடா தெரியும்" என்றான்  ஆச்சரியமாக கேட்டான். ஏனெனில் இளவரசனை இதுவரை கேலி கிண்டல் பேசி பார்த்தது இல்லையே மற்றவர்களிடமும் அதிகமாக பேசிப்பழகியது இல்லை வேலை பற்றிய விசயங்களை மட்டுமே பேசுபவனுக்கு தன் காதல் விசயம் தெரிந்து இருக்கிறதே என்று இருந்தது. 

   " இப்ப இல்லை மச்சான் நீ மூன்று வருஷமாக வள்ளியை டவுனுக்கு கூட்டிட்டு போய் வருவது எதற்கு என்று தெரியும்" என்றான் குறும்பு சிரிப்புடன். 

   இளவரசனின் பேச்சும் புன்னகையும் இதுவரை கண்டிராதவன் அவனை ஆச்சரியமாக பார்த்து எப்படி என்றான். 

    "வேற யாரு உனக்கு அண்ணியாகப்போற என் தங்கச்சி தான் தினமும் என்கிட்ட பேசனும் என்று எதையாவது செல்லுவாள் அப்படித்தான் உன் விசயம் எனக்கு தெரியும்" என்றான். 

    இருவரும் புன்னகைத்துக்கொண்டனர் ஒரே குடும்பமாக அருகில் இருந்தாலும் இதுமாதிரி இருவரும் பேசி நீண்ட வருடங்கள் கடந்து இருந்தது.  இப்போது இருவர் மனதிலும் ஒரு நிம்மதி சந்தோஷம் பரவியது. 

    அவர்களுக்கு மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு சிரித்து இருந்தனர்.  எல்லாவற்றிற்கும் காரணம் கார்த்திகேயன் வீட்டிற்கு வரப்போகிறான் என்ற சந்தோஷமே. 

    அன்பழகனும் முரளியும் கூட கார்த்திகேயனை கிண்டல் செய்து கொண்டுதான் இருந்தனர்.  

   அடேய் என்னடா சொல்லுற இன்னும் பதினெட்டு நாளில் இவனுக்கு கல்யாணமா  ஆச்சரியம் நிறைந்த குரலில் கேட்டான் அன்பு. 

   டேய் எத்தனை வாட்டி சொல்லுறது அவன் தாண்டா எனக்கே சொன்னான் சந்தோகம் இருந்தால் அவனையே கேளு எனக்கு நிறைய வேலை இருக்கு என்று எழுந்து கிளபம்பியவனை தடுத்தான் அன்பு. 

    அவர்கள் ஆபிஸ் கேன்டீனில் தான் மாலை ஸ்நாக்ஸ்சும் டீயையும் குடித்துக்கொண்டு இருந்தனர்.  அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சில முக்கிய வேலைகள் இருப்பதால் முரளி வந்து இருந்தான். 

   




Leave a comment


Comments


Related Post