இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 01-07-2024

Total Views: 662

பாகம்-25

அனைவரின் நடுவில் அவள் அவனுக்கு முத்தமிட்டது அவனுக்கு பிடிக்கவில்லை. அதிலும் அத்தை , அம்மா அனைவரும் இருக்கும்போது? முதலில் எல்லாரும் ஒரு மாதிரி இருந்தாலும் பின்னர் அவள் சொன்ன காரணம் அனைவருமே ஏற்றுக் கொண்டனர். அதிலும் அங்கே இருப்பவர்கள் அனைவருமே இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். 
"மீனாட்சி! நீங்க  போய்  படுங்க. நாங்கதான் இருக்கோமே! நாங்க பார்த்துக்கறோம்"
"இல்ல! பரவால்ல இருக்கட்டும். அவனுக்கு தோசை சுட்டு கொடுத்துட்டு படுக்கறேன்"
"அதான் நான் இருக்கேனே! நான் பார்த்துக்கறேன் நீங்க  போய்படுங்கமா" ரேணு, 
பாஸ்கர் சொல்லியும் கேட்காதவள் பிரதீப்பின் சொல்லுக்கு கட்டுப்பட்டார்.
"ஏன் ஆன்டி உங்க மருமக  உங்க பையனை பட்னி  போட்டுடுவான்னு நினைக்கறீங்களா?"
அதெப்படி புன்னைகை மாறாமல் ஊசி குத்துவது போல பேச முடியும்? விழி விரித்து பார்த்திருந்தாள்  ரேணுகா. 
"இல்ல அப்படி இல்ல"
"அப்புறம் என்ன?  போய்  ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பொழுது எப்படி இருக்குன்னு தெரியாது" சரிங்க தம்பி"
அம்மாவையும்  ஆட்டி  வைக்கிறாரே ? ரேணுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
"என்ன உங்களுக்கு தனியா சொல்லணுமா ? அதான் உங்க தோழி போயாச்சில்ல . உங்களுக்கு என்ன வேலை? பாஸ்கர் நீயும் தான் "
இப்போது ரேணுகாவும் இவனும் மட்டும்தான் தனியாக இருந்தார்கள்.
"என்ன உங்க அண்ணன் நீருவ கண்ணுலையே  எரிக்கறாரு? இந்த நிலமைல நாம் எதுவும் பேசா வேண்டான்னு வாய மூடிக்கிட்டு இருக்கேன். என் நீருவுக்கு ஏதாவது நடந்துச்சு ..."
"ஏன் நீங்கக் கூடத்  தான் என்னை மிரட்டறீங்க. என்ன மட்டுமா? எங்க அம்மாவையும் மிரட்டறீங்க"! நாங்க எல்லாம் வாய மூடிக்கிட்டு தானே இருக்கோம்."
"ஓ ! ஒனக்கு நான் பேசறது மிரட்டற மாதிரி இருக்கா?"
கோபத்தோடு எழுந்துச் சென்று விட்டான்.
மூஞ்சியில் அடித்தது போல அவன் சென்றது அவளுக்கு கண்ணை கரித்துக்  கொண்டு வந்தது.
"சே! என்ன அவருகிட்ட இப்படி வாய் நீண்டு போச்சு. யாருன்னே தெரியாதவாரு .காலைலேர்ந்து கூட இருக்கறதுனால வாய்க்கு வநத படி பேசுவேனா? போய்  சாரி கேப்போமா? 
 இவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பூரணி வந்து விட்டார். அவர் எதிரில் எதுவும் பேச விரும்வில்லை அவள்.  பூரணியிடம் உங்கள் வீட்டுப் பிள்ளையை நான் மரியாதை இல்லாமல்  பேசிவிட்டேன் என்று எப்படி உரைக்க மூடும்?
பூரணி வந்ததும் அவனும் எதையும் வெளிக்காட்டவில்லை., 
"என்ன பெரியம்மா தூங்க  வேண்டியதுதான? தூக்கம் வரலயா ?" கோபத்தோடு எழுந்து சென்றவனா அவன்! சாயலே இல்லை.
"எங்கடா? முதன் முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துருக்காரு. ஒரு இனிப்பு கூட செஞ்சு போட  முடியல. அட்லீஸ்ட் டின்னராவது செஞ்சு கொடுக்க வேணாமா?" 
"அது சரிதான். உங்க பொன்னும் மாப்பிள்ளையும் கெஞ்சி கொஞ்சி முடிச்சுட்டு வர்றதுக்குள்ள நா ஒரு தூக்கம் போடப் போறேன்"
பெரியம்மாவின் மடியில் உரிமையுடன் தலை வைத்தவன் காலை தூக்கி வைக்கும் போது  அங்கே  அமர்ந்த ரேணுகாவின் தொடையில் கால் பட்டு விட்டது. சடக்கென எழுந்தவள் அங்கே நிற்க முடியாமல் அன்னை இருந்த அறைக்குச் சென்று விட்டாள் .
உடனே திரும்பி வந்தவள்,
" ஆன்டி நான் உள்ள போறேன்" சொல்லி விட்டு அவன் முகத்தை ஏறிட்டாள் . வேண்டுமென்றே கண்ணை மூடி இருந்தான். அமைதியாகச் சென்று விட்டாள் .
"அசோ பெரியம்மா! நான் கிளம்பறேன். அங்க அம்மா தேடுவாங்க" அவள் சென்றதும் திடீரென எழுந்து அமர்ந்தான். 
"இருடா மகனே! பதறாத. நீ இங்க தான் இருக்கன்னு அவளுக்கு சொல்லிட்டேன்.  ஒரு நாலு நாளைக்கு அவனை அங்கேயே வச்சுக்கோங்க. எனக்கும் லிங்கத்துக்கும்  கொஞ்சமாவது ப்ரைவேட்  ஸ்பேஸ் கிடைக்குன்னு சொல்லிட்டா. தயவு செஞ்சு  அங்க போய் கதவை தட்டிகிட்டு நிக்காத "
"எங்காம அப்படியா சொன்னாங்க"
"அப்டியேத்தான் சொன்னாங்க"
"கொஞ்சமாவது பையன பத்தின நினைப்பு இருக்க பாரு. புருசனோட ரொமான்ஸ் பண்ணணுன்னு சொல்லுது. இப்பதானே ஏதோ எலேச்டின் முடிஞ்சதுன்னு சிக்கிம் மேகாலயா எல்லா இடமும்  போயிட்டு வந்தாங்க. இன்னும் என்ன?"
"போனா போகட்டுமே. வாழ்க்கையை என்ஜாய் பண்ணட்டுமே? 
"அதுக்குன்னு புள்ளைக்கு கல்யாணம் பண்ணற வயசுல இது என்ன?"
"ஏண்டா! அவளுக்கு அப்படி என்னடா வயசாச்சு? நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அதுக்கு அவ என்ன பண்ண முடியும். ஒழுங்கா இந்நேரம் நீ  ஒரு கல்யாணம் பண்ணி இருந்ததா அவ இந்த மாதிரி வாய் விட்டு கெஞ்ச வேண்டிய நிலைமை வந்துருக்குமா? நீ ஒன்  பொண்டாட்டி முந்தானைய புடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்திருப்ப. அவளுக்கும் எந்த தொந்தரவும் இருந்திருக்காது"
"அட நீங்க வேற ஏன் பெரியம்மா? அங்க வீட்டுக்கு போனா அப்பா எப்ப அரசியலுக்கு வர போறன்னு உயிரை எடுக்கறாரு . அம்மா எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு உயிரை எடுக்கறாங்க. இங்க வந்தா நீங்களும் அதே பாட்டு தான்"
"அது சரி! இத்தனை நாள் ஏதோ கத சொல்லிக்கிட்டு இருந்த.ஒத்துக்கிட்டோம். இப்பதான் மனசுக்கு புடிச்சவ வந்துட்டாளே  அப்புறம் என்ன?"
"உங்களுக்கு எப்படி தெரியும்? நீரு  ஏதாவது சொன்னாளா ?"
" அவ எதுக்குடா சொல்லணும். நானே தான் பார்த்துட்டேனே ?
"என்ன சொல்லறீங்க?"
"ரொம்ப அழகா திருட்டு முழி முழிக்கறியே? ஏன்டா போக்கிரி  நீ அந்த ரேணுகாவை பார்த்து வழியறிது நான் பாக்கலைன்னு  நினைச்சியா?" லேசாக முதுகில் அடித்தார்.
"ச! ச! நானா?  இப்ப கூட அவகிட்ட சண்டை. அதான் உள்ள போய்ட்டா?"
"ஊ! நீ சண்டை போடற அளவுக்கு அவகிட்ட பேசிட்டியா?"
"ஏன் நான் என்ன பொண்ணுங்க கிட்ட பேசமாட்டனே என்ன?
"டேய் என்கிட்டையேவா. நீ அவளை பார்த்து கண்ணடிக்கல?"
"அது சும்மா அவளை பயபடுத்த தான். மத்தபடி நானாவது ஒரு பொண்ணு மூஞ்சிய பாக்கறதாவது ?
"அப்ப இட்லி போடி எடுக்க அவ போன போது எதுக்குடா ராசா நீயும் பின்னாடியே போய் அவளை இடிச்சுக்கிட்டு நின்ன?"
"அது.,  அவளுக்கு இந்த வீட்டுல என்ன எது எங்க இருக்குன்னு தெரியாதில்ல. ஆளு வேற குட்டியா இருக்கா . ஹைட்ல இருந்தா எப்படி எடுப்பா . அதான் ஹெல்ப்புக்குப்  போனேன் "
"அதக்குத் தான் நீ போன. சரி! நான் நம்பிட்டேன். அப்ப  இப்ப எதுக்குடா அவ மேலே கால வச்சு இடிச்சுட்டு படுத்த ? " 
"ஐயோ பெரியம்மா! நீங்க தெய்வம். இதுக்கு மேல எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க" படுத்தே விட்டான். 
"டேய் ! நீ படிக்கற ஸ்கூல்ல  நான் ப்ரின்ஸிபல்  டா . எங்க வீட்டுக்காரரு பண்ணாதது என்னடா நீ புதுசா பண்ண போற? போடா. போய்  கல்யாணதுக்கு வழிய பாரு"
"பண்ணலாம் பண்ணலாம் இப்பவே என்ன அவசரம்?" மல்லாக்க படுத்திருந்தவன் காலி ஆட்டிக் கொண்டிருந்தான். 
"அது சரி! நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்த ?எனக்கும் எங்க  வீட்டுக்காரருக்கும் சேர்த்து தான் பத்திரிக்கை வைக்கணும் "
"ஏன் இப்படி பேசற?" பட்டென வாயில் ஒரு அடி  விழுந்தது.
"என்ன டா இது பட்டுன்னு இப்படி அடிச்சுட்ட? வயசுல பெரியவாடா?"
"அதெல்லாம் பேசுற  பேச்சுல இருக்கணும். இன்னொரு முறை இப்படி பேசுனா என்ன நடக்குன்னே தெரியாது"
"அது சரி. எனக்கு என்ன வயசு சின்ன வயசா என்ன ? "
"ஆமா ! எனக்கு ஒரு சந்தேகம். சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணுன்னு சொல்லறீங்க? "நம்ம நீரு  வாழ்க்கை சரியாகாம எப்படி என்ன பத்தி  யோசிக்க முடியும்?"
"நம்ம பாஸ்கருக்குத்தான் கமிட்மென்ட் இருக்கு. உனக்காவது சீக்கிரம் ஆகும்ன்னு பார்த்தா நீயும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருக்க. போடா"
இங்கே இவர்கள் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள் அங்கே நீரு  செந்தில் குளிக்கும் அறையில் இருந்தாள் .
மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தாலும் செந்திலுக்கு அவளின் செய்கை பிடிக்கவில்லை. அவள் என்ன காரணம் சொன்னாலும் சரி, அதை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் அண்ணியும் தந்தையும் சேர்ந்து அமரக் கூட மாட்டர்கள் மற்றவர்களின் எதிரில். ஆப் ஹாலில் இருக்கும்போது அம்மா வேறு எங்கோ ஏதோ வேலை செய்து கொண்டிருப்பார். அவர்கள் மட்டுமில்லை. சின்ன அத்தை பெரிய அத்தை எல்லாரும் அப்படித் தான். அதுவே இதே காரணத்தை சொல்லி அவள் தனிமையில் அவனை கொஞ்சி இருந்தால் நிச்சயமாக அவளை அவளின் முத்தங்களை வாரி எடுத்துக் கொண்டிருப்பான். இப்படி பொது வெளியில் ச!  வெறுப்புடன்  உள் அறைக்கு குளிக்க சென்று விட்டான்.  அவன் பின்னோடே ஓடிச் சென்று ரேணு குளியல் அறையை காட்டினாள். 
"அண்ணா டவல்" அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே பட்டென கதவை சாத்தி இருந்தான். 
முகம் சுருங்கி விட்டது தங்கைக்கு .
'அன்ணனை  எப்படி சமதனப் படுத்துவது ? ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இது வேறு. இப்ப அண்ணி எதுக்கு இப்படி பண்ணாங்க? நல்ல வேளை  பவித்ரா இல்ல. இருந்திருந்தா சின்ன பொண்ணு வேற. இவங்க எல்லாம் இடம் பொருள் கூட பாக்க மாட்டாங்க போல. ( ஒரு நாள் அந்த ஒரு நாள் நீ பிரதீப்பை கட்டி புடிச்சுகிட்டு பஸ் ஸ்டாப்புல நிப்பியே அப்ப நாங்களும் இத சொல்லுவோம் ரேணு. வெயிட் அண்ட் வாட்ச்)
அண்ணாவை எப்படி சளிக்கப் போறோமோ? தவித்தது மனம்.
"என்ன டி இது? என்ன சொன்னாலும் சரி. இப்படியா  விவஸ்தை இல்லாம நடப்பாங்க?"
"சாரி மாம்! ஏதோ ப்ச் நான் பண்ணது தப்புதான்"
"நீ நினைக்கற மாதிரி ஜாலி டைப்  செந்தில் கிடையாது நீரு "
"எஸ் பாஸ்கர். நான் பொய் அவரு கிட்ட சாரி கேக்கறேன்"
"முதல்ல அதைப் பண்ணு . இல்லன்னா  குற்றம் குற்றமேன்னு  அவரு உன்ன கண்ணுலயே எரிசுடப் போறாரு"
அசால்டாக சொன்ன  பிரதீப்பை முறைத்து விட்டுச் சென்றாள் நிரஞ்சனா .
உள்ளே குளித்துக் கொண்டிருந்தவனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் வீட்டுப் பிரச்சனை. இன்னொரு புறம் இங்கே இவள் வீட்டில் உக்கார வேண்டிய நிலை. இன்னும் சில நாட்களில் கடைக்கு வாடகை கட்ட வேண்டும். இந்த நேரத்தில் இப்படியாகிவிட்டது . இருக்கும் செலவு பத்தாது என்று புது செலவாக வீட்டை சரி படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் பணத்திற்கு என்ன செய்வது?முதல் வேலையா காலைல அவங்களையும் கூட்டிகிட்டு இங்கே இருந்து கிளம்பியாகணும். அங்கே தங்க அசிங்கமாக உணர்ந்தான். மனைவி என்ற உணர்வே வரவில்லை. இதில் எப்படி அவள் வீட்டில் மட்டும்  உரிமை வரும்?. எப்போதடா இந்த இடத்தை காலி செய்வோம்  என்று  இருந்தது.
நீரில் நின்றாலும் நெருப்பில் இருப்பது போலவே உணரத்தான். ஷவரை நிறுத்தி விட்டு பார்த்ததும்தான் ரேணு டவல் என்று அழைத்து நினைவிற்கு வந்தது. நெற்றியில் அடித்துக் கொண்டான். 
அங்கே  வந்த நிரஞ்சனா  ஷவர் சத்தம் நின்றதும்,
"செந்தில் நீங்க  இன்னும் டவல் எடுத்துக்கலை . தரவா?"
"இது என்ன கேள்வி? குடு " வள்ளென  எரிந்து விழுந்தான். 
உங்களோடது பேக்ல  இருக்கறது ஈரமா இருக்கு. இந்தாங்க இது என்னோடது. ஓகே வா? 
" எதையோ ஒன்னு குடு " 
அவன் துடைத்து முடித்து வெளியில் வரும்போது அவன் பையில் இருந்த அழுக்குத்  துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். 
'பரவால்லையே பாக்கெட்டுல எதுவும் இல்ல. குட்' மனதிற்குள் மெச்சினாள் . அவன் உடைகள் ஒன்றும் பெரிய விலை உயர்ரகம் என்று எல்லாம் சொல்ல முடியாது. சாதாரண உடைகள் தான் ஆனால் நல்ல விதமாக இருந்தது. 
"ட்ரெஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.  ஆனா காம்பினேஷன் தான் சரியா இல்லையே"
"வெறும் டவலோடு வந்தவனை பார்த்ததும் அவளுள் ஆசை துளிர் விட்டது. அவளும்தான் இதுவரைபெரியதாக எந்த ஆண்  மகனையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. ஏன் என்று எல்லாம் தெரியாது. ஆனால் பார்க்கத் தோன்றியதில்லை. ஆனால் இவனை பார்க்கத்  தோன்றியது. முத்தமிட  ஆசை வந்தது. கட்டிக்க கொள்ள ஆசை வந்தது. காட்டிக் கொண்டாள் . அவன் என்ன சொல்லுவான்? யோசிக்கவில்லை. அவனை அழுத்திக் கட்டிக் கொண்டாள் .
என்னதான் மனம் அவளை திட்டினாலும் அவளின் டவலில் வந்த அவளுக்கான வாசனையே அவனின் ஆசைகளைத் தூண்டி விட்டிருந்தது. இள வயது ஆண் மகன். இதில் அவள் வேறு அருகில் இருந்தால், எப்படி தவிர்க்க முடியும்? அவனும் அவளை  இறுக்கி அனைத்துக் கொண்டான் தன்னை மறந்து .
"வீடு பத்தி ரொம்ப கவலையா இருக்கா செந்தில்?"
"இல்லாம இருக்குமா? நான் வேற இந்த நேரம் பார்த்து ஊருல இல்லாம போட்டேன். ரொம்ப க்ளோஸ் பிரெண்டு கல்யாணம் . தவிர்க்க முடியாம போச்சு. நல்ல வேளை  எல்லாருமே போகறதா  இருந்தது. பவிக்கு ஏதோ எக்ஸாம் வரர்துனால அவ வரலன்னு சொல்லிட்டா. இல்லாட்டி நாங்க ஊருலேர்ந்து வந்து பாக்கறப்போ என்ன நிலைமை ஆகி இருக்குமோ?"
"அது சரி! அரசு அதிகாரிகள் எதை பத்தியும் கவலையே பட மாட்டாங்க. வந்தோமா வேலைய முடிச்சோமான்னு பொய்கிட்டே இருப்பாங்க"
"ரொம்ப தேங்க்ஸ் நிரஞ்சனா"
"அவளின் இளஞ்சூடுக்கு அவனின் குளிர்ச்சியான உடல் இதமாக இருந்தது. முகத்தை அவன் வெற்று  மார்பில் தேய்த்துக் கொண்டாள் "
அவனுக்கு உடல் என்னவோ பண்ணியது. அவளைத் தள்ளி  நிறுத்த வேண்டும்.மனதால் இணையாத போது  எப்படி உடல் மட்டும்?அப்படிப் பட்ட விஷயத்தை  அவனால் யோசிக்க முடியவில்லை.  
"என்னடி! இந்த நேரத்தை பயன்படுத்த என்ன மயக்க பாக்கறியா?"
சுரீரென்று இருந்தது அவளுக்கு . 
அவனின் எண்ணம் உணர்ந்தவள் சட்டென அவனிடமிருந்து  நகர்ந்துக் கொண்டவள், 
"சாரி! ஏதோ"
" இந்த துணி எல்லாம் செக் பண்ணிட்டேன். மிஷின்ல  போடவா ? நீங்க டிரஸ் மாத்திட்டு சாப்பிட வாங்க" 
அவள்  சென்றதும் பெரு மூச்சு விட்டான். அவளைப் போல அவனால் நொடியில் மாற்றிக் கொள்ள முடியவில்லை.அவனின் வாலிப வயது படுத்தியது. அவனின் இந்த உணர்வு அவளுக்கானது. அவளால் மட்டுமே வெளிப்பட கூடியது. தன்  மீது முழு உரிமையும் அவளுக்குத்தான். அதே போலதான் நானும் எனக்கானவள் அவள். எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். நீங்க  தான் முக்கியம். எல்லாவற்றையும் விட்டு விட்டு வரட்டும். என் மனதை, காதலைக் காட்டுவேன். 
பசி வயிற்றைக் கிள்ளியது. உண்ணுவதற்கு அமர்ந்தான்.
"வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க. கல்யாணம் முடிஞ்சு முதல் தடவை நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க. நீங்க  ரெண்டு பெரும் சேர்ந்து தான் சாப்பிட்டிருக்கணும். ஏதோ நிலைமை சரி இல்ல. ஸ்வீட் எதுவும் பண்ணல. இந்த நிலமைல எதுவும் செய்ய வேண்டான்னுதான். அதான் இங்க ஓரத்துல கொஞ்சமா சர்க்கரை வைக்கறேன்.முதல்ல அதை எடுத்துக்கிட்டு அப்புறமா சாப்பிடுங்க.  தோசையும்  வெங்காய சட்னியும் இருந்த பசிக்கு அமிர்தமாக இருந்தது. 
"அம்மா ! நீ போ நான் செஞ்சு போட்டுக்கறேன்"
"பரவால்லம்மா!இருக்கட்டும் நானே பார்த்துக்கறேன். நீ போய்  அவருகிட்ட உக்காரு. என்ன வேணுன்னு கேட்டுப்  போடு "
"ப்ச் சொல்லறதை கேளும்மா. நீ போ. நான் செய்யறேன்"
"ஏண்டி என்ன விரட்டுற?"
"இல்லமா! அவங்க ரொம்ப பசில இருக்காங்க.  இன்னும் எத்தனை செய்யணுமோன்னு   நீ நினச்சுடீனா திருஷ்டி பட்ட  மாதிரி ஆகிடும். அவரு ரொம்ப வேலை செய்யறவரு. ரொம்ப பசிக்கும். நான் பார்த்துக்கறேன். நீ போ"
"சரி நீரு. நான் போறேன். நீ சொன்னதுக்காக இல்ல. நீயே அவருக்கு செய்யட்டுமேன்னுதான். மத்தபடி நாங்க  யாரும் உன் புருஷன் சாப்பிடறத கண்ணு போட்டுட்டு மாட்டோம். நீ பார்த்து எல்லாம் முடிச்சுட்டு வா "
அவள் சொன்னது போலவே ஆறு முடிந்து ஏழாவது சாப்பிட்டான் .
"செந்தில் சாரி! சட்னி காலி. . பொடி  கொஞ்சம் போடவா ?
"ம்!" அதை உண்டு முடித்து  விட்டு அமைதியாக எழுந்து சென்றான்.
அவன் கை  கழுவி விட்டு வந்த போது  அவள் சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் .
அவன் வருவதை பார்த்து,
 "செந்தில்! இந்தாங்க இதுல வீட்டோட போட்டோஸ்  இருக்கு"
போனில் அதைப் பார்த்தவனுக்கு மனதிலே ஏதோ  ஒரு பேய் அமர்ந்து அழுத்துவது போல இருந்தது .
சோபாவில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தவனை லேசாக தொட்டு எழுப்பினாள் .
கண்ணை திறந்தவன் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது. மடியில் படுக்க வைத்து தலை கோதி  அமைதியாக்க உரிமை பட்டவள் கடினப்பட்டு கைகளை அடக்கிக் கொண்டாள் 
"வாங்க படுக்கலாம்"
அவனுக்கு தலையணைகளை கொடுத்துவிட்டு, அவள் கீழே தந்து குழதை விரித்துக் கொண்டாள் .
"பரவால்ல நீயும் இங்கேயே வந்து படு"
அவளும் வந்து படுத்துக் கொண்டாள் . இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகர்ந்து தான் படுத்து உறங்கினார்கள். இருவருக்குமே ஏதோ அரைகுறையான உறக்கம்தான். புது இடம். மனக்கவலை. உறக்கம் வராமல் தவித்தவனை அவள் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள் . அவன் மனம் அமைதியானது. விடியலில்  எப்போது எழுந்தாலோ தெரியாது. அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். ரேணுகாவோ வழக்கம் போலவே விடியற் காலையில்  எழுந்து விட்டாள் .  இங்கே கோலம் போடும் வேலை இல்லை. என்ன செய்வது? பல் விலக்கிவிட்டு காபி போடலாமா? மீனாட்சி, பவித்ரா, பூர ணி அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
மாடியில் இருந்த அறையில் விளக்கு ஒளிர்ந்தது. அங்கே  அவள் நிரஞ்சனாவையும், ப்ரதீப்பையும் பார்த்த காட்சி? நொடியில் நாக்கு வறண்டு விட்டது.....எச்சில் கூட்டி விழுங்கி கொண்டாள் 
தொடரும்.........


Leave a comment


Comments


Related Post