இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -70 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 01-07-2024

Total Views: 2028

நந்தன் வரவில்லை என்பது  ஒருபுறம், யுகி முதன் முறையாக குடித்துவிட்டு வந்தது ஒருபுறம் என நிலாவின் மனம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்க, அதன் விளைவாக கண்ணீரை பரிசளித்திருந்தது நிலாவின் கண்கள்.

கண்களில் தீட்டி இருந்த மை கரைந்து கன்னத்தில் வழிந்தோட கலைந்த சித்திரமாக கலங்கிப் போய் நின்றாள்.

அழகு தேவதையாக தயாராகி நந்தனுக்காக காத்திருந்தவளை நந்தன் ஏமாற்றிவிட்டான்.

மீராவின் காத்திருப்பும் நந்தனுக்காக, நிலாவின் காத்திருப்பும் நந்தனுக்காக தான்.மீராவின் நந்தன் கடைசி வரைக்கும் வரவில்லை.நிலாவின் நந்தன் வருவானா என்பது கேள்விகுறி.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஜிக்குத் தலை வேதனையாக இருந்தது.

“அண்ணி, அவ ரூமுக்குப் போய்  கதவை சாத்திக்கிட்டா கொஞ்சம் என்னனு பாருங்க, மனசுடஞ்சி  எதாவது பண்ணிக்கப் போறா பயமா இருக்கு.”என பதற.

“அதுலாம் எதும் பண்ணிக்க மாட்டா நீ கண்டதையும் நினைக்காத,  நான் போய் பார்க்கறேன்”  என  நிலாவின் அறையை நோக்கிப் போனார்.

நிலாவின் அறைக் கதவை தட்டியவர்.

“நிலாக்குட்டி கதவை திறம்மா”

“அத்தை ப்ளீஸ் என்னைய கொஞ்சம் தனியா விடுங்க.. நீங்க அவங்க கல்யாணத்தைப் பண்ணுங்க, என்னால அவங்க கல்யாணம் நிற்க வேண்டாம்” என்றாள் அழுகையுடன்.

“அவங்க கல்யாணம் பண்றதை அப்புறம் பார்க்கலாம், இப்போ கதவை திறம்மா..”

வெளியே நின்று மணி கத்தவும், வேறு வழியின்றி கதவை திறந்தாள்.

அழுது வடிந்து ஒளி இழந்த  வைரம் போல் நின்றவளைப் பார்க்கும் போது மணியின் மனது பிசைந்தது 

“இப்போ எதுக்கு அழுற?.அவன் வராம எங்கப் போயிடுவான். இங்க பாரு கண்ணு மை கலஞ்சிடுச்சு வாட்டர் ப்ரூப் யூஸ் பண்ணலையா? போய் பேஸ்வாஸ் பண்ணிட்டு வா கண்ணுல மை போட்டு விடறேன் என இலகுவாக கண்ணை துடைத்து விட்டார்.

“இனி எதுக்காக ரெடியாகனும்?, யாருக்காக ரெடியாகனும், யுகி என்னால தான அத்தை குடிச்சான், எல்லாரையும்  தப்பானவீங்களா மாத்திட்டேன்.” என மீண்டும் அழுக ஆரம்பிக்க.

யுகியை நினைத்து அவருக்கும் வேதனை தான். மகனின் குணநலன்களில் சீர்கேடு நடக்க எந்த தாய் தான் அனுமதிப்பார். அவனிடம் பேசுனாலும் புரிந்துக் கொள்ளும் நிலை இல்லாதவனை அடித்தோ திட்டியோ  என்ன பிரயோஜனம் 

“யுகியைப் பத்தி கவலைப்படாத, அவன் உனக்கு கல்யாணம் ஆகுதேன்னு தான் இப்படி பண்ணிட்டான் இனி பண்ண மாட்டான். போய் மூஞ்சை கழுவிட்டு வா மண்டபத்துக்குப் போவோம் நந்தன் வந்துடுவான், மத்ததை பொறவு பேசிக்கலாம்.”

“இல்லத்தை llஅவர் இல்லாம நான் வரல.”

“அவன் வந்துடுவாம்மா”

“வரட்டும் அத்தை அதுக்கு அப்புறம் நான் வரேன். அவர் வரலைன்னா அண்ணாவுக்கு அண்ணிக்குமாவாது கல்யாணம் நடக்கும்.நான் மட்டும் தனியா வந்து நின்னு அவமானப்பட விரும்பல”

“அவனுக்கு கால் பண்ணிப் பார்த்தியா?”

“அது..”

“பண்ணியா? இல்லையா?

“இல்ல”

“இல்லையா.. ரெண்டு பேரும் விரும்பி தானே கல்யாணம் பண்ணிக்கிறிங்க?”

“ம்ம்

“பார்த்தா அப்படி தெரியலையே.”.

“அது அத்தை” .என்று இழுத்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது.

அவள் மட்டும் அழைப்பதற்கு ஒரு அலைபேசி எண் கொடுத்திருந்தான்.மார்த்தி அழைக்கும் போது சுவிட்ச் ஆப் என வந்தற்கு இதுக் கூட காரணமாக இருக்கும் என தோன்ற வேகமாக ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தாள்

“என்னாச்சி நிலா”

“அத்தை அவர் போன் பண்ணச் சொல்லி ஒரு நம்பர் குடுத்தாரு, நான்தான் மறந்துட்டேன் இருங்க கூப்பிட்டுப் பார்க்கறேன்”   என அவசர அவசரமாக அந்த எண்ணிற்கு அழைத்தாள்.

நிலா நினைத்ததுப் போல் தான் நந்தன் செய்திருந்தான்.

நான்கு நாட்களாக நிலாவிடம் இருந்து அழைப்போ, குறுஞ்செய்தியோ எதுவுமே வராமல் போக,மனம் உடைந்து போய்விட்டான் நந்தன்

எவ்வளவு பெரிய திடமான மனிதனையும் இந்த காதல் சாய்த்துவிடுகிறது  என்பது  எவ்வளவு பெரிய உண்மை.

இரண்டு வாரமாக அவளுடன் இரவு பொழுதுகளை கழித்திருக்கிறான் அப்படி இருந்தும் அவள் மனதில் ஒரு சிறிய சலனத்தைக் கூட அவனால் ஏற்படுத்த முடியவில்லை என்றால்  அவளை திருமணம் செய்வது வீண் தானே.

அவளாக அழைத்து அவனை வர சொல்லும் வரைக்கும் போகக்கூடாது என வைராக்கியத்துடன் அவள் அழைப்புக்காக காத்திருந்தான்.

நேரமானதே தவிர நிலாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை..

“இன்னைக்கு நீயா நானான்னு பார்த்துடலாம்டி.. ஒரு போன்  போட்டு இருக்கானா செத்தான்னு கூட கேக்க மாட்டில,  பார்க்கலாம். என அவனும் வீம்பாக இருந்தான்.

“உன் வீம்பு அவகிட்ட செல்லுபடியாகாம போகப் போகுது பாரு,  நீ வரலைன்னா தப்பிச்சேன்டா சாமின்னு நிம்மதியா இருக்கப் போறா,நீயும் அவ போன் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டே இருக்கப் போற” என மனசாட்சி சொல்ல. “கண்டிப்பா பண்ணுவா, பண்ணலைன்ன என்னோட வேலையைக் காட்டிட்டுவேனு அவளுக்கு நல்லாவே தெரியும்”  என்றவன் அவள் அழைப்பாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான்.

நேரம் போய்க்கொண்டே இருக்க இப்போது தான் நிலாவின் மண்டையில் பல்பு எரிந்திருக்க 
வேகமாக அவன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தாள்.

முதலில் ரிங்க் போனது. இந்தப் பக்கம் நந்தன் அலைபேசி கையில் வைத்து நிலா  அழைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்

முதல் முறை முழு அழைப்பும் சென்று முடிந்திருக்க, அப்போதும் கூட நந்தன் எடுக்கவில்லை இந்த முறை தைரியமாகவே அழைத்திருந்தாள் நிலா.

அழைப்பு ஏற்றதும் எங்கிருந்து நிலாவிற்கு அவ்வளவு கோவம் வந்ததோ.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?. கம்னு இருந்தவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி எல்லா ஏற்பாட்டையும் பண்ண சொல்லிட்டு இப்போ ஆள் வராம இருந்து என்ன எங்களைய பழி வாங்கறீங்களா..?” நேரில்  இருந்திருந்தால் இந்த வார்த்தைகளில் பாதி வார்த்தைகள் தான் முழுமை பெற்றிருக்கும் மீதி பாதி காற்றில் தான் கரைந்திருக்கும்.

------அந்த பக்கம் மையான அமைதி.

“உங்ககிட்ட  தான் பேசிட்டு இருக்கேன் இப்போ வரிங்களா? இல்லையா? அதையாவது சொல்லுங்க.. எதுக்கு இப்போ  அமைதியா இருந்து உயிரை வாங்கறீங்க..?” 

“ஏண்டி மூனு நாளா போன் பண்ணல?” 

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்.” என நினைத்தவள் “நீங்க வரிங்களா இல்லையா?” என அவளும் அவள் பிடியில் உறுதியாக இருந்தாள்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அப்புறம் யோசிக்கறேன்”

“என்னது யோசிக்கிறீங்களா..?”

“நீ எதுக்கு மூனு நாளா கால் பண்ணல.?”

“நீங்க வந்துடுவீங்கன்னு தான் கால் பண்ணல.”

“இப்போவும் வராம இருக்கிறதால தான் கால் பண்ணியா?”

‘ஆமான்னு சொன்னா வராமலே இருந்துடுவானே..’   “அப்படிலாம் இல்லைங்க”

“அப்புறம்  ஏன் கால் பண்ணல.?”

“ஐயோ..!!!  முடியல” என மனதுக்குள்   வெந்து தணிந்தவள். “பண்ணிருக்கணும் என் தப்பு தான்  இப்போ வரீங்க தானே” என கெஞ்சலுடனும் ஏக்கத்துடன் கேட்டாள்.

அவள் மனமும் அவன் வருகைக்காக தான் காத்துக்கிடக்கிறது.

நிலாவின் கெஞ்சல் வந்து சேர்ந்ததோ இல்லையோ,  ஏக்கக் குரல் அவன் நாடி நரம்பை வேரோடு அசைத்துப் பார்த்தது.

“ஐஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்  நீ காலை கட் பண்ணாம பேசிட்டே இரு..”

“நீங்க வண்டி.”

“என்ன வண்டி?”

“வண்டி ஓட்டும் போது எப்படி?”

“அதை நான் பார்த்துக்கறேன், யார் உன்னோட இருக்கா?”

“அத்தை”

“போகச் சொல்லு”

“ஏன்?”

“போகச் சொல்லுன்னு சொன்னேன்.” என அழுத்தமாக வர.

“ம்ம்” என்றாள் தயக்கத்துடன்

“அத்தை”  என அவள் ஆரம்பிக்கவே இல்லை அவராகவே.

“எனக்கு புரிஞ்சிடுச்சிம்மா நீ கிளம்பி கீழே  வந்து சேரு” என்று சென்று விட்டார்.

“போய்ட்டாங்களா?”

“ம்ம்”

“சரி கதவை திறந்து வை”

“நீங்க கீழே வாங்க, நான் கிளம்பி வந்துடுவேன்”.

“மூடிட்டு சொன்னதை செய்டி”. என அதட்ட  நந்தன் சொன்னது போல் கதவை திறந்து வைத்திருந்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் புயல் போல் உள்ளே நுழைந்தவன், நிலாவை வாரி சுருட்டிக் கொண்டான்.

“ஐயோ என்ன பண்றீங்க விடுங்க?”

“ஏண்டி மூனு நாளா கால் பண்ணல”.

“மறுபடியுமா..?” என தலையில் கை வைக்கப் போனவளை, வளைத்து படுக்கையில் அமர வைத்தவன் அவள் காலில் இருந்த கொலுசை கழட்டி தூக்கி எறிந்தான்.

“ஐயோ அதை எதுக்கு தூக்கிப் போடறீங்க?” . என வளவன் வாங்கிக் கொடுத்த கொலுசை எடுக்கப் போனவளின் கையில் ஓங்கி  ஒரு அடி வைத்தவன்.

“இனி நீ  இதை தான் போடணும்”  என புதுக் கொலுசை மாட்டிவிட்டான்

“அது..”

“எந்த எதுவா இருந்தாலும் இதுதான்.. போடணும்.”

“ம்ம்” என்றவளுக்கு மனம் பாரமாகியது,  வளவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து வாங்கிக் கொடுத்தது. இத்தனை வருஷத்தில் எத்தனையோ  கொலுசை மாற்றி இருக்கலாம் ஆனால் நிலா மாற்றவில்லை. வளவன் முதல் சம்பளத்தில் வாங்கிக் கொடுத்ததால் அருந்துப் போனாலும் பற்ற வைத்து அதையேப் போட்டுக் கொள்வாளே தவிர, வேற கொலுசு வாங்க வேண்டும் என அவள் நினைத்ததில்லை இன்று அதை நந்தன் சாதாரணமாக கழட்டி எறியவும் மனம்  பாரமாகிவிட்டது.

“கிஸ் பண்ணு”

“ஹா..”

“நாலு நாளா அலைய விட்டில கிஸ் பண்ணு.”

“அடப்பாவி... எதுக்கும் எதுக்கும் முடிச்சிப் போடறான்”. என எண்ணியவள்,   வேற எதையும் இழுத்து விட்டுடக் கூடாது என பயந்து அவளே முன் வந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள்.

“ச்சை இங்க யாரு கேட்டா..”

“கீழே எல்லோரும் நமக்காக வெயிட் பன்றாங்க எதா இருந்தாலும்.”

“இன்னிக்கு குடுக்க வேண்டியதுக்கும் சேர்த்து வெச்சி  மீட்டர் வட்டிப் போடுவேன், ஜாக்கிரதை” என்றவன் அவள் கண்ணில் வழிந்திருந்த மையை துடைத்துவிட்டு.. “ம்ம் வா போலாம்” என்றான்.

முகம் கூட கழுவவில்லை அழுது வடிந்ததில் அலங்காரங்கள் கலைந்து முகமே களையிழந்து போயிருக்க   தன்னை குனிந்துப் பார்த்தவள், அவனுடைய உடையையும் பார்த்தாள்.

அவள் உடை நிறத்திலையே கோர்ட் சூட்டுடன் தயாராகி  வந்திருந்தான்.

தயாராகி தான் அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறான் என  புரிய,  அவன் தலையிலியே ஓங்கி ஓங்கி நங்நங்கென்று கொட்ட வேண்டும்  போல் வெறியாக வந்தது..


Leave a comment


Comments


Related Post