இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 01-07-2024

Total Views: 1445

     கம்பெனியின் பின் சில வீடுகளும் கட்டியிருந்தனர்.  வெளியூர்களில் இருந்து வந்து பணி செய்பவர்கள் தங்கிக்கொள்ள மற்றும் கம்பெனி ஓனர்களும் அவர்கள் குடும்பம் சார்ந்தவர்கள் பிசினஸ் விசயமாக வருபவர்கள் தங்க நிறைய அடுக்குமாடி வீடுகள் கட்டி இருந்தனர்.  ஐஸ்வர்யாவும் அதில் ஒரு வீட்டில் தான் இருக்கிறாள்..  மும்பையில் இருந்து பணிமாற்றம் செய்து வந்தவர்களும் அங்கு தான் உள்ளனர் அவர்களுக்கும் உணவு சமைத்து கொடுக்க எப்போதும் கேன்டீனில் சிலர் இருக்குமாறு தான் அன்பழகன் ஆட்களை அமர்த்தி இருந்தான். 

   கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு வெளி வேலைகளை முடித்துக்கொண்டு கம்பெனிக்குத்தான் வந்திருந்தனர் முரளியும் கார்த்திகேயனும் நண்பனின் திருமண விசயம் கேட்டதும் அன்பழகனும் கிளம்பி வந்து கேன்டீனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 

    "ஏன்டா கயலை பார்த்து ஓடி ஒளிவியே இப்ப என்ன செய்யப்போற" என்று கிண்டல் குரலில் கேட்டான் அன்பு. 

    "என்னடா பண்ணுவான் கயல் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கப்போறான்"  என்றான் முரளி. 

   அன்பும் முரளியும் சிரிக்க கார்த்திகேயன் இருவரையும் பார்த்து முறைத்தான். 

   " எங்களை பார்த்து ஏன்டா முறைக்கிற நீ பண்ணதற்கு நீ தானே அனுபவிக்கனும்.  அப்பவே சொன்னேன் கேட்டியா தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு அவஸ்தை படப்போற" என்றான் அன்பு. 

    "டேய் திரும்பத்திரும்ப அதையே பேசாதடா நானே என்ன பண்ணுறது தெரியாமல் குழம்பிட்டு இருக்கேன்.  பிளான் பண்ணி கல்யாணத்துக்கு வர வச்சு லாக் பண்ணிட்டார் தாத்தா.  அதுவும் இரண்டு மாதம் கழித்து வச்சுக்கலாம் என்றால் அதுக்கும் என்ன காரணம் என்று சொல்லியாகனும் நான் எதை சொல்லுறது வேறு வழி இல்லாமல் தான் கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்."

     "இந்த கயலை எப்படி சமாளிக்கிறது என்பது தான் பிரச்சனை.  என்னை அந்த வீட்டுக்கு இழுத்துட்டு போகனும் என்று காத்திட்டு இருக்கா" என்று புலம்பிக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

     அந்த நேரத்தில் அவனின் போன் ஒலித்தது எடுத்து பார்த்த போது லலிதா அத்தை என்று இருந்தது.  ஆன் செய்து காதில் வைத்து "சொல்லுங்க அத்தை" என்றான் வெறுமையான குரலில். 

   அதை கேட்ட லலிதாவிற்கு மனம் வருந்தியது. 

    "கார்த்தி கண்ணா இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?..." என்றார். 

    "அத்தை என்ன பேசறீங்க நான் எப்ப  பிடிக்கவில்லை என்று சொன்னேன்" என்றான் சற்றே கோபக்குரலில். 

    " இல்லைப்பா உன் குரலே சரியில்லையே" என்றார். 

     "அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை இரண்டு மாதம் கழித்து வச்சு இருக்கலாம்  இப்படி சட்டுன்னு கல்யாணம் பத்தி பேசுவாங்க என்று நான் நினைக்கலை.  உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அத்தை" என்றான் கார்த்திகேயன். 

    "இல்லைப்பா தெரிந்து இருந்தா உன் கிட்ட சொல்லி இருப்பேன்.  இன்னும் இரண்டு மாசம் கழிச்சு கல்யாணம் வைக்கலாம் என்று பேசவா கார்த்தி கண்ணா" என்றார் லலிதா. 

   " இல்லை அத்தை அதுக்கு என்ன காரணம் சொல்லுறது குறித்த முகூர்த்தத்தில் நடக்கட்டும் நான் பார்த்துக்கிறேன்" என்றான். 

   " சரிப்பா நாளைக்கு காஞ்சிபுரம் போய் பத்திரிகை அடிக்க கொடுத்திட்டு அப்படியே கல்யாணத்திற்கு தேவையான துணிகள் நகைகள் எடுத்துட்டு வந்திடலாம் என்று அண்ணன் சொன்னார் அதான் நீ வரியா என்று கேட்கத்தான் போன் செய்தேன்" என்றார் லலிதா. 

   " இல்லை அத்தை நான் வரலை நீங்களே பார்த்து வாங்கிடுங்க. பணம் நான் அன்புகிட்ட கொடுக்கச்சொல்லுறேன் அதிலே எனக்கும் விழிக்கும் வாங்க வேண்டியதை வாங்குங்க" என்றான். 

   " கார்த்தி கண்ணா"  என்றார். 

   " அத்தை பிளீஸ் நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்கள் எனக்கும் விழிக்கும் வாங்குறது எல்லாம் நான் கொடுக்கிற பணத்தில் வாங்குங்க. எதுவும் அவங்க பணத்தில் வாங்கக்கூடாது அப்படி வாங்குனா என்ன செய்வேன் என்று உங்களுக்கே தெரியும்."  

   " கார்த்தி கண்ணா என்னப்பா இப்படி பேசுற இன்னும் எவ்வளவு நாள் தான் அவங்க மேல கோபத்தில் இருப்பாய் எவ்வளவு ஆசையா பையன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று சந்தோஷப்பட்டுட்டு இருக்காங்க.  இப்ப நான் இதை சொன்னால் வறுத்தப்படுவாங்கப்பா" என்றார் லலிதா. 

    " அத்தை என் பொண்டாட்டியா வரப்போறவளுக்கு நான் வாங்கித்தரேன் என்று அவங்க கிட்ட சொல்லுங்க வேறு எதுவும் சொல்ல வேண்டாம்."

    "சரிப்பா" என்றார் லலிதா. 

   " சரி அத்தை  நான் வைக்கிறேன்" என்று போனை வைத்தான் கார்த்திகேயன். 

     மறுநாள் அதிகாலை எழுந்து இரண்டு காரில் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.  இவர்கள் சென்ற நேரம் வீரராகவரின் சித்தப்பா சித்தி அவர்கள் பிள்ளைகள் மருமகன்கள் என்று பத்து பேருக்கு வந்து இருந்தனர்.  பத்திரிகை அடிக்க கொடுத்து விட்டு மிகப்பெரிய பட்டு ஜவுளி கடைக்கு  அனைவரும் சென்றனர். கயல்விழி கார்த்திகேயன் வருவான் என்று எதிர்பார்த்தாள் ஆனால் கடைக்கு வந்து நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. 

    "அம்மா எங்க உங்க சொல்ல மாப்பிள்ளை" என்றாள். 

    அவரே விற்றேற்றியாக  "வரலை" என்றார். 

    "ஏம்மா இப்படி பேசுற அத்தானுக்கு விருப்பம் இல்லாமல் எதுக்கு இப்படி பிளாக் மெயில் பண்ணி இந்த கல்யாணம் நடக்கனும் பேசாமல் அண்ணனுக்கும் வள்ளிக்கு மட்டும் கல்யாணம் பண்ணுங்க எனக்கு வேண்டாம்" என்றாள் கலங்கிய கண்களுடன். 

    "ஏய் என்னடி பேசுற நல்ல காரியம் ஆரம்பிக்கும் போதே இப்படி தான் பேசுவியா" என்று திட்டினார். 

    " பின்ன என்னம்மா வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான விசேஷம் இது எல்லாம் வாழ்க்கை புல்லா நினைச்சு பார்க்கிற நிகழ்வுகள். அப்பா அம்மா மேல இருக்கிற கோபத்தை இதில் தான் காட்டுவாரா இந்த அத்தான்" என்று கூறியவளின் ஒற்றை கண்ணில் இருந்து நீர் வழிந்தது. 

    அப்போது அவள் பின்னிருந்து ஒரு குரல் " ஏன் அத்தை  அழறவங்களை அப்படி ஓரமாக போய் அழச்சொல்லுங்க  மத்தவங்களுக்கு  டிஸ்டர்ப்பா இப்படி தான் நடுக்கடையில் நின்னு அழுவாங்களா" என்று குரல் கேட்டதும் அந்த குரலில் முகம் புன்னகை பூசிக்கொள்ள திரும்பினாள் கயல்விழி அங்கு கார்த்திகேயன் நின்று இருந்தான். 

    "யார் இங்க அழுதாங்க" என்று கூறிக் கொண்டே தன் கண்களை துடைத்துக்கொண்டு அவன் கை பிடித்து அழைத்து சென்று புடவைகள் இருக்கும் இடத்தில் அமரவைத்தாள் கயல்விழி அவனும் எதுவும் சொல்லாமல் அவளுடன் சென்றான். 

    இவனை கண்டதும் அமிர்தவள்ளி வேகமாக வந்து அவன் கையை பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்தாள். 

   அதை கண்ட கயல்விழி  "ஏய் உனக்கு என்னடி இங்க வேலை அதான் என் அண்ணன் அங்க இருக்கான் இல்லையா எழுந்து போடி" என்றாள் கயல்விழி. 

     "ஏய் நான் ஏன் போகனும் இது என் அண்ணன்" என்று இன்னும் நெருங்கி வந்து அவன் தோள் சாய்ந்தாள் அமிர்தவள்ளி. 

    கார்த்திகேயனும் அவளை அணைத்துக்கொள்ள 

   "அத்தான்" என்று காலை உதைத்து கொண்டு சினுங்கினாள் கயல்விழி. 

    " ஏய் அவள் இருக்கிறதால் உனக்கு என்ன பிரச்சினை உனக்கு என்ன புடவை வேண்டும் என்று பார் எனக்கு வேலை இருக்கு கிளம்பனும்" என்றான் கார்த்திகேயன். 

     வேறு வழியில்லாமல் அமிர்தவள்ளியை முறைத்து விட்டு புடவையை பார்க்க ஆரம்பித்தாள்.  மற்றவர்கள் தனியாக உறவினருக்கு புடவை எடுக்க வேறு பகுதியில் இருந்தனர். 

    இங்கு லலிதா இளவரசன் அமிர்தவள்ளி கயல்விழி மட்டும் இருந்தனர். 

    இளவரசன் கார்த்திகேயனின் அருகில் வர எழுந்து அவனை அணைத்து விடுவித்தான்  "மாப்பிள்ளை எப்படி இருக்கிங்க?..." என்று மரியாதையாக பேசினான். 

   அதை கேட்ட இளவரசன் "அத்தான் என்ன இது வாங்க போங்க என்று பேசறீங்க.  நான் எப்பவும் உங்க அரசு தான்" என்றான் சற்று கோபக்குரலில். 

     "டேய் சும்மா உன் ரியாக்ஷன் எப்படி இருக்கு என்று பார்க்கத்தான்" என்று இளவரசனின் தோளை தட்டி அருகில் அமர்த்திக்கொண்டான். 

   ஒரு புறம் வள்ளியும் மறுபுறம் இளவரசனும் அமர்ந்து கொள்ள கயல்விழி மூவரையும் முரைத்தாள். 

   " அத்தான் இவள் பார்வையாலே என்னை எரிச்சிடுவா நீங்க இந்தப்பக்கம் வாங்க" என்று எழுந்து கொண்டான்  இளவரசன். 

   கார்த்திகேயன் எழுந்து மாற்றி அமர்ந்து கொள்ள இப்போது வள்ளி முறைத்தாள் இளவரசனை 

    அதை கண்டவள்  "நீயுமா" என்று கூறி எழுந்து கொள்ள வள்ளி கார்த்திகேயன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.  லலிதா கயல்விழி பக்கத்தில் அமர்ந்து இருந்தார். 

   புடவைகள் பார்க்க ஆரம்பித்தனர் கயல்விழி எடுப்பதை எல்லாம் நல்லா இல்லை என்று கூறிக் கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

    அதில் கடுப்பானவள் நீங்களே எடுத்து கொடுங்க என்று கூறிவிட்டு கை கட்டி அமைதியாக அமர்ந்துவிட்டாள் கயல்விழி. 

    கார்த்திகேயன் அங்குயிருந்த சேல்ஸ் கேர்ள் இடம் சில கலர் டிசைன் எப்படி இருக்கவேண்டும் என்று கூறி அது மாதிரி எடுத்து வாருங்கள் என்று கூறினான்.  அவர்களும் சென்று இரண்டு பேராக இருபது சேலைகள் எடுத்து வந்து வைத்தனர். 

   அந்த புடவைகள் பார்த்ததும் கண்கள் விரிந்தன அங்கு இருந்தவர்களுக்கு அவ்வளவு அழகாக இருந்தது எதை எடுப்பது எதை வைப்பது என்று தெரியாமல் குழம்பினர். 

   ஒவ்வொருன்றாக கயல்விழி அமிர்தவள்ளி தங்கள் மீது வைத்து காட்ட கடைசியாக இரண்டு புடவைகளை கார்த்திகேயன் தேர்ந்தெடுத்தான். உடல் முழுவதும் கொடிகள் பூக்கள் என்று இருந்த அந்த புடவைகள் அவ்வளவு அழகாக இருந்தது.  இருவருக்கும் ஒரே டிசைனில் கலர் மட்டுமே வேறாக இருந்தது. பிரைட் ஆனியன் கலரில்  கயல்விழிக்கும் ஸ்கை ப்ளூ கலரில் அமிர்தவள்ளிக்கும் எடுத்தான். 

    இரு பெண்களுக்கு மிகவும் பிடித்து போயின.   இளவரசன் சேல்ஸ் கேர்ளிடம் விலையை கேட்க அவர்கள் சொல்வதற்குள் "உனக்கு எதற்கு அது இது என் தங்கைக்கு எடுத்தது நான் கொடுக்கிறேன் நீ வேண்டும் என்றால் தனியாக எடுத்து கொடு" என்று கூறிவிட்டான்.

   அங்கேயே பிளவுஸ் தைக்கும் ஆட்கள் இருப்பதால் அவர்களிடம் அழைத்து சென்று அவர்கள் வைத்து இருந்த டிசைன்களில் தங்களுக்கு பிடித்த மாதிரி தேர்வு செய்தனர் பெண்கள். 

    லலிதா மாப்பிள்ளை அழைப்பு முகூர்த்தத்திற்கு உடை எடுக்கலாம் என்ற போது  

    கார்த்திகேயன் அத்தை ரிஷப்ஷன் டிரஸ் எனக்கும் அரசுக்கும் நான் எடுத்திடுறேன் நீங்கள் முகூர்த்ததிற்கு மட்டும் எடுங்கள் என்று கூறிவிட்டான். 


    பின் மீண்டும் வந்து புடவைகள் பார்க்க கார்த்திகேயன் வேலை இருப்பதாகவும் நகை கடை செல்லும் போது அழைக்கும்படி சொல்லி சென்றுவிட்டான். 

     அனைவருக்கும் எடுத்துவிட்டு வந்தவர்கள் லலிதாவிடம் புடவை தேர்வு செய்தாகிவிட்டாதா என்று கேட்டார் சாந்தி. 

    கார்த்திகேயன் வந்து தேர்வு செய்து தைக்க கொடுத்து விட்டு சென்றதாக கூறவும் வீரராகவன் சாந்தி தம்பதியரின் முகம் வாடியது.  இருந்தும் அமிர்தவள்ளி கயல்விழி போனில் புடவையை எடுத்த போட்டோக்களை பார்த்து அனைவரும் நன்றாக இருப்பதாக கூறினர். 

    அனைத்தும் எடுத்து முடித்து விட்டு ஓட்டலில் உணவு உண்டு முடித்து மீண்டும் நகை கடை சென்றனர்.  கார்த்திகேயன் லலிதாவிற்கு போன் செய்து  நால்வரை மட்டும் மேலே வரச்சொன்னான்.  அங்கு சென்றவர்கள் அவன் மோதிரம் இருக்கும் பகுதியில் இருக்க அங்கு சென்றவர்களிடம் மோதிரம் சிலவற்றை காட்டி எடுக்கச்சொன்னான்.  



      


Leave a comment


Comments


Related Post